ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday 8 August 2011

பரசுராம் வயது 55- உலகை உலுக்கிய குறும்படம் (விமர்சனம்)






பரசுராம் வயது 55: 


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு: ஜாக்கிசேகர் (எ) தனசேகரன்
இசை: ஏ.ஆர்.ரெஹ்மான். 

கீழே படம் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த குறும்படத்தின் கதையை ஒற்றைவரியில் சொல்லி விடலாம். இப்போது நடக்கும் இந்த விலையேற்றம் அயல்நாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் இதனால் பாதிக்கப்பட்டு வீட்டு வாடகை தரமுடியாத ஒரு மிடில் க்ளாஸ் 55 வயதான ஒரு மனிதர் மனைவியை கண்கலங்க விட வேண்டாம் என நினைப்பவர். அதற்காக எதையும் செய்ய துணிபவர். "எதையும் என்றால் கொலை கூட" என்ற இயக்குனரின் முன்னுரையுடன் தொடங்குது. கதை என்னன்னா அந்த 55வயது மனிதர் பலர் வயிற்றில் அடித்து, நகையைப் பிடிங்கி ஏமாற்றி தன் குடும்பத்தை காத்துக்கொள்கிறார். கடைசில அதுக்கு விளக்கமும் கொடுக்குறார். இக்குறும்படத்தில் நடித்துள்ள பரசுராம் எதோ சந்தர்ப்பத்துனால வேறவழியில்லாம திருட்டுத்தனம் பண்றாருனு நினைச்சா பரம்பரை பரம்பரையாக  தொழில் செய்பவர்களை ஒத்து இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்ய கூடாத காரியத்தை பரசுராம் செய்வதாக காண்பித்து இதை நடுத்தர குடும்பத்திற்கு சமர்ப்பணம் வேறு செய்கிறார் இயக்குனர்.

எல்லாவற்றுக்கும் மேல் பரசுராம் நம் ஆக்ஷன் கிங் அர்ஜூனை விட பலசாலி என்ற கருத்தை இயக்குனர் ஊன்றி சொல்லியிருக்கிறார். வேகாத வெயில், மழைனு பாக்காம பரசுராம் நடந்துட்டே இருக்காரு. அப்பப்ப பேசுவாரு. கை கொடுப்பாரு. திருடிட்டு ஓடுவாரு. இந்த மாதிரி பல அற்புத காட்சிகள் உண்டு.

இது ஒரு குறும்படம் என்றாலும் ஒரு முழு நீள திரைப்படத்தை பார்த்த ஒரு
உணர்வை தருகிறது. 20 நிமிஷ படத்தில் 15நிமிடம் பரசுராம் நடக்கிறார். 4நிமிடம் பெயர் போடப்படுகிறது. 20நிமிடபடம் 200நிமிஷ படம் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பது...சாரி.. நடந்துகொண்டே இருப்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு. சரி கருமத்தை ஆஃப் பண்ணிரலாம் எனத் தோணும் போது படம் டக்கென முடிந்துவிடுவது கண்டிப்பாக இயக்குனரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும்.

மேலும் இதில் நடித்திருக்கும் நடிகர்களை எப்படி இப்படி இயல்பாக நடிக்க வைத்தார் இயக்குனர் என்பது உண்மையிலேயே வியப்பை
தருகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் மாரடைப்பு வந்து துடிக்கும் ஒருவரை பிடித்து உலுக்கி "சார் ஆட்டோ காசு தாங்க சார். ஆட்டோ காசு தாங்க சார்" என சிரித்துக்கொண்டே பதற்றத்துடன் சொல்கிறார். இயக்கனரின் டச் அந்த இடத்தில் தெரிந்தது.  கதாநாயகர் பரசுராமின் கண்களில் கதையில் இழையோடியிருக்கும் சோகம் காண்பிக்கபட்டு இருக்கிறது. அதை மறைக்கவே இறுதி காட்சியில் அவர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொள்கிறார். நாடி நரம்பு சதை ரத்தம் புத்தி கை கால் ஈரல் கல்லீரல் என அனைத்திலும் சினிமாவெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும்.


வழக்கமாக குறும்படங்களில் கேமரா கோணங்களுக்கு அதிக முக்கியதுவம் இருக்காது ஆனால் இதில் கேமரா கோணங்கள் அனைத்திலும் ஒரு தேர்ச்சி தெரிகிறது. "என்னப்பா காமிரா கோணமாணலா இருக்கு?"னு யாருமே சொல்ல முடியாது! 20நிமிடம் ஒருவரின் வாக்கிங்கை (walking) இந்தனை கோணங்களில் காட்ட முடியுமா என நானே வியந்து விட்டேன். NDTVயில் நடந்துகொண்டே பேட்டி கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று வரும். அதையெல்லாம் மிஞ்சிவிட்டது இந்த குறும்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஒரிஜினல் படத்தை விட இந்த படத்திற்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது எனலாம். ரஹ்மானுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தன் சொந்த செலவில் படம் தயாரித்து இந்த இயக்குனரை இயக்க சொல்லி தானே 'நடந்தும்' கொடுப்பார்.

படம் முடிந்த பின்பு வரும் behind the scenes பழைய ஜாக்கிசான் படங்களை
நினைவு படுத்துகின்றன. இயக்குனர் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சிகளில் "இயக்குனரே நடித்திருக்கலாமே" என நமக்குத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் காமிராவை தூக்கி நடந்துகொண்டே நடிக்க முடியாது என்பதால் நடிகர் பரசுராமை 'நடக்க' வைத்துவிட்டார் போல! படத்தின் மொத்த செலவு 850ரூபாய் என இயக்குனர் குறிப்பிட்டிருந்தார். ஐயோடெக்ஸ் மற்றும் ஜண்டூபாம்க்கு அவ்வளவு செலவு ஆயிருக்கலாம்.

இது உலகை உலுக்கப் போகும் குறும்படம். காலை வாக்கிங் செல்வொர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளைப் பற்றி சொல்லும் ஒரு infotainment movie எனவும் சொல்லலால். தமிழ் குறும்பட உலகம் இரண்டு கிலோமிட்டர் முன்னேறியுள்ளது.

என்றென்றும் நன்றியுடன்

மார்த்தாண்டன்.





6 comments:

Anonymous said...

Good parody.

Anonymous said...

Three MonthEs Later... :)

Anonymous said...

ங்கோத்தா அந்த ஓத்தா நடந்துகினேகீறான், என்னாடா படம் எடுத்துக்கீறான் அந்தா ப்பாடு?

வால்பையன் said...

அந்த நடிகருக்கும், இயக்குனருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா!?

சாம் மார்த்தாண்டன் said...

அந்த நடிகருக்கும், இயக்குனருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா!?///

தெரிலயே சார்.. :-(

Anonymous said...

வர்ணிக்க வார்த்தைகளற்ற திரைப்படம். உண்மையில் உலகை குலுக்கிய குறும்படம் தான்.

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி