ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Thursday, 15 December 2011

வாசகர் கடிதப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்


"என்னபா எவ்ளோ சிக்கலான விதிமுறைங்கள வச்சிருக்கீங்க... இதுக்கு ஒரு 10 வாசகர் கடிதம் வந்தாலே உங்க முயற்சி வெற்றின்னு நெனச்சிக்கோங்க"

வாசகர் கடிதப் போட்டி அறிவித்த உடனேயே சாம் மார்த்தாண்டனுக்கு ட்வீட்டரில் வந்த போன் கால்கள் இந்த செய்தியைத்தான் தந்தன.

ஆனால் அவ்வாறு கேட்டவர்கள் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கிறது ரசிகர்கள் இந்தவாசகர்  கடிதப்போட்டிக்கு தந்த ஆதரவு. இதுவரை சுமார் இரண்டு லட்சத்து இருபத்து எழாயிரத்து ஐநூற்று நாற்பது (2,27,540) வாசகர் கடிதங்கள் வந்து குவிந்துள்ளன.

இவை அனைத்தும் போட்டி விதிமுறைக்கு உட்பட்டு சரியான நேரத்தில் அனுப்பப்பட்ட கடிதங்கள். இது தவிற விதிமுறையை தாண்டி ஜெட்லியை கயிவி கயிவி ஊற்றி எழுதப்பட்ட சுமார் மூன்று லட்சம் கடிதங்களும், நேற்று 12 மணிக்கு பிறகு 2 மைக்ரோ செகண்டுகள் தாண்டி வந்த சுமார் எழுபத்தைந்தாயிரம் கடிதங்களும் போட்டியிலிருந்து நிராகரிக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெட்லிக்கு உள்ளூர் ரசிகர்களை விட அயல்நாட்டு ரசிகர்களிடமிருந்தே அதிக கடிதங்கள் வந்துள்ளன. குறிப்பாக உகாண்டா, ரவாண்டா, எத்யோப்பியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டிஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் கடிதங்கள் மட்டும் ஒரு லட்சத்தை தாண்டும்.

இதோடு மட்டுமல்லாமல், திருவள்ளுவர், கம்பர், ஒட்டக்கூத்தர், போதி தர்மர், ஆப்ரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, சதாம் உசேன், சாலமன் பாப்பையா, கலைஞர் போன்றோரும் இந்த வாசகர் கடித போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது காலம் கடந்து ஜெட்லியின் எழுத்தாற்றலுக்கு இருக்கும் சக்தியை நிரூபித்து காட்டுகிறது.

எனவே கடிதங்களை அலசி ஆராய்ந்து பரிசு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தால் அடுத்த ஆண்டு மட்டுமே முடிவுகளை வெளியிட முடியும் என்ற காரணத்தால், குலுக்கல் முறையில் மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. பதிவின் நீளம் கருதி மூன்றாம் பரிசு பெற்ற கடிதம் தற்பொழுது உங்களுக்காக. முதல் இரண்டு கடிதங்கள் அடுத்த பதிவில்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் சாம் மார்த்தாண்டன் சார்பாகவும், உடான்ஸ் வரட்டி ச்ச திரட்டி சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் வெற்றி பெறாதவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் சென்று விட வேண்டாம். அடுத்த வருடமும் உங்களுக்காக போட்டி நிச்சயம் உண்டு.

மூண்றாம் பரிசு:

கடிதத்தை எழுதியவர் : திரு பாண பத்திர ஓணாண்டி


ஜெட்லி! மா ஜெட்லி!! நீ ஒரு மாமா ஜெட்லி!!!

பூ மாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாறி!!

பதிவுலகில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி !!

தேடிவரும் பதிவர்களுக்கு நீ மூடா!!

நெடும் பதிவு உன் பதிவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் அனானிகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாக்கு !!

இந்த பதிவுலகை அடை காக்கும் அண்டங்காக்கையே !!

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியே.!!

நீர் வாழ்க! உன் பதிவுகள் வாழ்க!!!

Tuesday, 13 December 2011

பிருந்தாவனமும் பிட்டுகுமாரனும் - சாம் உருவான கதை

மருதமலையில வர்ற இந்த காமெடி சீன் யாருக்காவது ஞாபகம் இல்லைன்னா ஒரு முறை இந்த காணொளியை பாத்துட்டு பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்வது உங்கள் சாம்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு: த ப்ளாஸ் பேக்

இங்க வடிவேலு கேரக்டர்ல நம்ம ஜெட்லி, மகாநதி சங்கர் கேரக்டர்ல சாம்.

ஜெட்லி ஒரு திருட்டு விசிடி கடையில நின்னு

"ஏன்பா... டக்குன்னு குடுப்பா.... நேத்து குடுத்தா மாதிரி எதுவும் குடுத்துராத.. அதுல ஒரு பிட்டு கூட இல்ல.. நல்ல பேமிலியோட உக்காந்து பாக்குற மாதிரி பிட்டு படம் எதாவதுஇருந்தா குடு"

அப்போ சாம் ஆட்டோலருந்து எறங்கி வர்றாரு.

சாம்: இந்தாங்கஜெட்லி  தொட்டு கும்புட்டுக்குங்க...

ஜெட்லி : ஆமா என்னப்பா இது...

சாம்: சகிலா பட சிடிண்ணே

ஜெட்லி : அப்புடியா... சகீலா...சகிலா... சகிலா... (கண்ணுல ஒத்திக்கிறாரு) ஆமா யாரு ராஜா நீ?

சாம்: என்னண்ணே என்னை தெரியலையா... நா உங்கள அடிச்சிருக்கேனே...

ஜெட்லி : அடிச்சிருக்கியா... எப்பம்மா....

சாம் : நல்லா யோசிச்சி பாருங்க...

ஜெட்லி : இந்த ஈரோடு பதிவர் சந்திப்புல ஒரு புள்ளைய இடுப்ப புடிச்சி கிள்ளுனதுக்காக மொத்த பயலுகலும் சேந்து கும்மி எடுத்தீங்களே அந்த குரூப்பா..
..
சாம்: இல்லைண்ணே...

ஜெட்லி : இந்த பேங்களூரு ட்ரெயின்ல போகும் போது ஒரு எதுக்க உக்காந்துருந்த புள்ளைய வெறிக்க வெறிக்க பாத்ததுக்காக கக்கூசுக்குள்ளயே வச்சி வெறித்தனமா மிதிச்சீங்களே,,, அந்த
குரூப்பா...

சாம் : அட இல்லைண்ணே...

ஜெட்லி : என்னடா இதுவும் இல்லைங்குற... ஒரு எடம் ரெண்டு எடமா இருந்தா ஞாபகம் இருக்கும்ஒராயிரம் எடத்துல வாங்கிருக்கோம்...ஆஆஆங்.. இந்த இந்திய வரைபடத்துல
இங்கிலாந்துக்கு போகும் போது ஒரு பிள்ளை குளிச்சத லைட்டா எட்டி பாத்ததுக்கு ஒரு 15 பேரு என்ன ஒரு மூத்தர சந்துக்குள்ள வச்சி கொன்னு எடுத்துதீங்களே அந்த குருப்பு தான நீயி....

சாம்: ஹா ஹா... கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்கண்ணே...

ஜெட்லி : டேய் நீங்க அடிச்சப்புறம் வேற எவன் அடிச்சாலும் அத தாங்குற சக்தி வந்துருச்சிடா எனக்கு.. அப்புடி ஒரு அடி

சாம் : ஆமாணே... அவள அடியையும் வாங்க்கிட்டு நீங்க இப்புடி உசுரோட நடமாடுரீங்கன்னா அது எவ்வளவு ஆச்சர்யம்...

ஜெட்லி : அதுனால தானடா என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாய்ங்க. ஆமாநீ எப்புடி ராஜா இருக்க...

சாம் : நா அப்புடியே தான்னே இருக்கேன்.. ஆனா என்னோட சேந்து உங்கள அடிச்சானுங்களே ஒயர் சங்கரு.. ஒயின்சாப் ப்ரபா அவனுங்க ரெண்டு பேரும் இப்ப பெரிய பதிவரா ஆயிட்டானுங்க

ஜெட்லி : (ஹை பிட்ச்) நான்சென்ஸ்.. எப்புடிடா பதிவர் ஆனானுங்க... எப்புடி ஆனானுங்க அம்புட்டு பயலும் என்னைய தூக்கி போட்டு அடிச்சதாலதாண்டா பெரியாளா ஆனானுங்க. ஒயரு சங்கருன்னு சொன்னியே... அவன் கதைய சொல்றேன் கேளு. அவன் ஒரு நாளைக்கு 10 ரோலு ஒயரு விப்பான்... அப்ப கூட அவனுக்கு ஒயரு சங்கருன்னு பேரு வரல.. ஒரு நாளூ ஒரு பிட்டு படம் பாத்தப்ப டிஸ்டப் பண்ணிட்டான்னு அவன கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... அஞ்சு வார்த்தை தாண்டா சொன்னேன்.... படக்குன்னு கைல வச்சிருந்த ஒயர கழுத்துல போட்டு இறுக்கிட்டான்....

சாம் : அய்யோ அப்புறம்...

ஜெட்லி : கண்ணு முழி ரெண்டும் பிதுங்கி வெளில வந்துருச்சி... அப்புறம் அவன் கால புடிச்சி கெஞ்சுன அப்புறம் தான் விட்டான்... ஜெட்லி கழுத்துலயே ஒயர போட்டு நெறிச்சிட்டான்னு அன்னையிலருந்து அவன் ஒயரு சங்கரு ஒயரு சங்கருன்னு ஊருக்குள்ள பேமஸ் ஆயிட்டான்

அப்புறம் இந்த ஒயின்சாப் ப்ரபா... ஒயரு சங்கர மாதிரியே இவனையும் ஒருநாளு ஒயின்சாப்புல பாத்தேன்... எதோ போதையில லைட்டா கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... ரெண்டு வார்த்தை தாண்டா திட்டுனேன். அவன் என்ன கோவத்துல இருந்தான்னு தெரியல பொசுக்குன்னு கைல இருந்த பாட்டில ஒடச்சி மூஞ்சி முன்னாடி நீட்டிடான்...

சாம் :அய்யோ அப்புறம்...

ஜெட்லி : நா அப்புடியே சாக் ஆயிட்டேன்.. அப்புறம் விட்டேன் பாரு ஒட்டம்.. பேண்டு அவுந்து விழுந்தத கூட நா கண்டுக்கலயே...அப்புடி ஒரு ஓட்டம்... அப்புடி இருந்தும் சாட் ரூட்டுல வந்து விட்டான் பாரு  மண்டையில.. மண்டை ரெண்டா பொளந்துருச்சி....

சாம்: அப்புறம் என்னாச்சி..

ஜெட்லி : அப்புறம் என்ன... ரத்தத தொடைச்சிகிட்டு திரும்பவும் ஓட்டம்தான்... அன்னையிலந்துதான் ஜெட்லியையே மண்டைய ஒடச்சி மாவலக்கு போட்டுட்டான்னு ஒயின்சாப் ப்ரபா ஒயின் சாப் ப்ரபான்னு ஒரே பேரு... ஆனா ரெண்டு பேரும் விசுவாசிடா... ஒயர் சங்கர் இருக்கான் பாரு நா எப்ப போஸ்டு போட்டாலும் உன்னால தான் பெரிய பதிவர் ஆனேன்னு சொல்லி ஒரு ஓட்டும் கமெண்டும் போட்டுட்டு போவான்.. இந்த ஒயின்சாப் பையன் இன்னும் ஒரு படி மேலடா... வாரம் ஒரு வாசகர் கடிதம் கேக்காமையே அனுப்பிருவான்.. சரித்திரம்  இப்புடி இருக்கும் போது என்கிட்டயே வந்து பெரிய பதிவர் ஆயிட்டான் பெரிய பதிவர் ஆயிட்டான்னுபெருசா பீத்திக்கிற....சரி நீ இப்ப என் இங்க வந்த.. உன் பொழப்பெல்லாம் எப்புடி போகுது....

சாம் : என்னத்த ஜெட்லிண்ணே... பதிவருங்க எண்ணிக்கை வேற அதிகமாயிருச்சி.. காலம் மாறி போச்சில்ல.. படிச்சவன் புக்குல படிக்கிறத போஸ்டா போட்டு ஹிட்டு வாங்குறான்.நா படிக்காதவன்... பதிவுலகதுல நிக்க முடியலையே... என்னதான் தமிழ்மணம், இன்ட்லினு நல்ல போஸ்டு போட்டாலும் யாரும் படிக்க மாட்டேங்குறாங்க... அதுனால தான்
நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.

ஜெட்லி : என்னான்னு...

சாம் :நானும் பெரிய பதிவரா மாறி ப்ளாக் நெறைய ஹிட்ஸ் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஜெட்லி : வாங்கணும்டா வாங்கனும்..

சாம் : நா இப்ப என்ன பண்ண போறேன்னா உங்க மூக்குலயே நச்சுன்னு குத்துவேணாம்..பொல பொலன்னு ரத்தம் வரும்...அத அப்புடியே போட்டோ எடுத்து என் ப்ளாக்ல போட்டு சென்டி மெண்ட் பதிவு எழுதி நானும் பெரிய பதிவரா ஆயிருவேண்ல...

ஜெட்லி : டேய் அப்ப நீயும் என்ன அடிச்சி பேமஸ் ஆகலாம்னு பாக்குற.

சாம் : நீங்க ரொம்ப ராசியான ஆளு ஜெட்லிண்ணே

ஜெட்லி : சரி நா உன்கிட்ட அடி வாங்குனா ஜெட்லிக்கு அண்ணனுக்கு நீ என்ன செய்வ?

சாம் : என்னண்ணே இப்புடி கேட்டுட்டீங்க... ஒரு வருஷத்துக்கு உள்ள வாசகர் கடிதத்தஒண்ணா எழுதி குடுத்தறேன்

ஜெட்லி : ஹி ஹி நல்லவண்டா நீ... சரி அப்ப நா சொல்றத செய்... நல்ல கூட்டமா உள்ள பிட்டு படம் ஓடுற தியேட்டருக்கு என்ன கூட்டிட்டு போயி அத்தன பேருக்கு முன்னாடியும் என்ன கும்மி எடு.. அப்பதான் பிட்டு பட தியேட்டர் முன்னாலயே ஜெட்லி அடிச்சிட்டான்னு நீ வேல்டு புல்லா ரீச் ஆவ

அவரு சொன்ன மாதிரியே அவர கும்மி எடுத்து, ஜெட்லியின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்க பட்டதுதான் இந்த சாம் மார்த்தாண்டன் பதிவுகள்.


EVER EVERSSaturday, 3 December 2011

ஜெட்லி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் வாசகர் கடிதப்போட்டி-2011

சென்ற நூற்றாண்டில் நான் யாருக்கோ அலை பேசிய போது "நான் உங்கள் வாசகன்" என்னும் பொறி காதில் விழ, வாசகர் கடிதம் என்ற ஒரு பகுதியை என் பதிவில் ஒதுக்கி, அதற்கு  நேரமும் ஒதுக்கி இடைவிடாமல் நானே எழுதி வருகிறேன்.

அது போக 75 வருடங்களுக்கு முன்னால் நான் எங்கள் வீட்டு வெஸ்டர்ன் டாய்லெட்டில் உக்காந்து கன நேரம் யோசித்த போது, தோன்றிய ஐடியாதான் வாசகர் கடித போட்டி.நமக்கு நாமே வாசகர் கடிதம் எழுதி களைத்து போவதை விட, இதை ஒரு போட்டியாக வைத்து பரிசும் வழங்கினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததன் விளைவுதான் இந்த வாசகர் கடிதப்போட்டி. இதற்காக ஒவ்வொரு வருடமும் தாங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி.

சென்ற வருட போட்டி பதிவுலகில் சிறு சலசலப்பை உண்டு பண்ணியது என்றே கூறலாம்.  வந்து சேர்ந்த வாசகர் கடிதங்களின் எண்ணிக்கையில், முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுப்பதே பெரும் பாடாகிவிட்டது. ஏனென்றால் மொத்தம் இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுக்க நடுவர்கள் கிட்ட தட்ட திணறிப் போய்விட்டனர் என்றே கூறலாம். கடைசியில் அந்த இரண்டு கடிதங்களை எழுதிய எனக்கே மூன்று பரிசுகளையும்  தந்துவிட்டார்கள்

சென்ற முறை போட்டியின் விதி முறைகள் கடுமையாக இருந்தது எனவும், அவை இந்த  முறை எளிமையாக்கப்பட வேண்டும் எனவும் பலர் டிவீட்டரில் எனக்கு போன் செய்தனர்.அடுத்த கடிதப்போட்டி எப்போது எப்போது எனவும் சில நண்பர்கள் ஆவலுடன் என்னிடம் பஸ்ஸில் (MTC) கேட்டிருந்தனர்.

எனவே வருடம் ஒரு முறை இந்த வாசகர் கடித போட்டி வைக்க வேண்டும் என முடிவு  செய்தேன். இதோ 125 ம் ஆண்டு வாசகர் கடித போட்டியின் அறிவிப்பு..

முன்னதாக ஒரு கூடுதல் தகவல். சமீபத்தில் "டுபாகூர்களால் டுபாகூர்களுக்காக" என்ற கேப்சனுடன் இயங்கி வரும் உடான்ஸ் (www.odanz.com) என்னும் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியைஅறிவீர்கள். அதன் உரிமையாளர் DTH சங்கரும் முனைப்போடு இந்த வாசகர் கடித போட்டியை  உடான்ஸுடன் இணைந்து நடத்தும் படி கேட்டுக்கொண்டார்.அதன்படி உடான்ஸ் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியுடன் இணைந்து இந்த வாசகர் கடித போட்டியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஆங்காங்கே இருக்கும் பொது மக்களும், பக்த கோடிகளும் பெருந்திரளாக வந்து  விழாவை சிறப்பித்து தருமாறு தங்கள் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்

-ஜெட்லிஇதோ வாசகர் கடிதப்போட்டிக்கான விதிமுறைகள்:


1. வாசகர் கடிதம் எழுதும் நபர் குறைந்த பட்சம் 45 ஆண்டுகளாவது ஜெட்லியின் வாசகராக இருந்திருக்க வேண்டும்.

2.உங்கள் கடிதத்தை வெளியிடுமாறு நீங்கள் கெஞ்சுவது போன்ற வரிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

3. முக்கியமான ப்ரச்சனைகளுக்கு உதாரணமாக, முல்லை பெரியாறு அணை ப்ரச்சனை, கூடங்குளம் உலை ப்ரச்சனை போன்றவற்றை பற்றி ஜெட்லி எழுதிய பதிவுகளை அரசு பின்பற்றினால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்பது போலான வரிகள் இருப்பின் 15 மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்படும்.

4.அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றுவர தங்களிடம் ஒரு டிக்கெட் extra வாக இருக்கின்றது (இல்லாவிட்டாலும்) எனவும், அதில் பயணம் செய்ய  ஜெட்லியை நீங்கள் அழைப்பது போலவும் எழுதியிருக்க வேண்டும். (கவலை வேண்டாம் ஜெட்லி கண்டிப்பாக அதை மறுத்து விடுவார்)

5. ஜெட்லியின் செண்டிமெண்ட் பதிவுகளை படித்துவிட்டு தாங்கள் கதறி கதறி அழுபவராக இருக்க வேண்டும். ஒருவேளை போலியாக தாங்கள் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்று விட்டால், பரிசளிக்கும் போது அந்த செண்டிமெண்ட் பதிவுகளை படித்துக் காட்டி தங்களுக்கு அழுகை வருகிறதா என்பது சோதிக்கப்படும்.

6. அனானிகளை திட்டி, ஜெட்லியை ஊக்கப்படுத்தும் விதமான வரிகள் கண்டிப்பாக இரண்டாவது இடம்பெற வேண்டும்.

7. வாசர் கடிதத்தின் களம் நகைச்சுவை செண்டிமெண்ட் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் வாசகர் கடிதம் நகைச்சுவையாக இருக்கவேண்டும்.

8. வலைப்பூ  வைத்திருக்கும் பதிவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, குஷ்பூ போன்றவற்றை வைத்திருக்கும் நபர்கள் கூட பங்குபெறலாம்.

9. நீங்கள் எழுதும் வாசகர் கடித்ததிற்கு மேல் "வாசகர் கடிதப்போட்டி-2011" என்று அடைப்பு குறிக்குள் இட வேண்டும். அடைப்புக்குறி இல்லாத கடிதங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள பட மாட்டாது.

10. வாசகர் கடித போட்டி-2011ற்கான புகைப்படத்தை தங்கள் வலைப்பதிவின் எதாவது ஒரு ஓரத்தில் போட்டுக்கொள்ளுதல் உசிதம். அதற்கு தனியாக மதிப்பெண்கள் உண்டு

11.ஒருவர் அதிக பட்சமாக 3020 வாசகர் கடிதங்கள் எழுதலாம்.

12. இந்த வாசகர் கடிதம் உங்கள் கற்பனையில் உருவானது அல்ல எனவும், உண்மையின் வெளிப்பாடே எனவும், வேறு எந்த பதிவருக்கும் இந்த வாசகர் கடிதம் அனுப்பப்பட வில்லைஎன்ற உறுதிமொழியையும் mydearmarthaandan@rediffmail.com க்கு speed courier இல் அனுப்பி விடவும்

13.மேலும் உங்கள் கடிததின் தொடுப்பை உடான்ஸ் திரட்டியில் உள்ள வாசகர் கடிதப்போட்டி 2011 என்ற வகையீட்டில் இணைக்கப்படல் வேண்டும். ஒருவேளை உடான்ஸில் "வாசகர் கடித போட்டி-2011" என்ற வகையீடு இல்லாவிட்டால் ,அந்த பெயரில் ஒரு வகையீட்டினை உருவாக்கி பின் அதில் இணைக்க வேண்டும்

14. வெற்றி பெறும் கடிதங்கள் பக்கி லீக்ஸில் வெளியிடப்படுவதோடு அல்லாமல் தின கரன், தின தந்தி, தினமலர், ராணி, குமுதம் போன்ற இதழ்களிலிலும் வெளியிடப்படும்.

15. கடிதங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 15. அண்டார்டிகா நேரப்படி இரவு 12 மணி.


வாழ்த்துக்கள்.