ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Thursday 9 June 2016

இறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்!!!




கார்த்திக் சுப்பராஜ் சிறு வயதிலிருந்தே என்னுடைய சீரிய எழுத்துக்களின் வாசகர் என்பதாலும், நான் உதவி கேட்டு அக்கவுண்ட் நம்பரை பதிவிலிடும் போதெல்லாம் பத்து ரூபாய் ரீசார்ஜ் கார்டு வாங்கி போஸ்டில் எனக்கு இரண்டு மூன்று முறை அனுப்பியிருக்கிறார் என்ற காரணத்தினாலும் இறைவி வந்த முதல் நாளே பத்து ரூவாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு முதல் ரோவில் அமரச்  சென்றேன்.
ஒரே கும்மிருட்டு. எதோ ஒரு நாதாரி என்னுடைய சீட்டில் டிஸ்ஷு பேப்பரை வைத்து இடம் போட்டிருந்தான். ”த்தா.. துண்டு போட்டு இடம் பிடிக்க இது என்ன டவுன் பஸ்ஸாடா” என மனசுக்குள் திட்டியபடி அந்த டிஸ்ஷூ பேப்பரை எடுத்தெரிந்து விட்டு அந்த சீட்டில் அமர்ந்தேன். படம் ஆரம்பித்தது. பத்து நிமிடம் கூட ஆகவில்லை. எதோ கையையும் காலையும் கட்டி செப்டிக் டாங்க் உள்ளே போட்டது போல் இருந்தது. போன வாரம்தான் டாய்லெட்டில் அமர்ந்து பிட்டு பார்த்து கொண்டிருந்த போது தவறுதலாக என்னுடைய மொபைல் தவறி சிங்க்கிற்குள் விழுந்து செப்டிக் டேங்கிற்குள் சென்றுவிட்டது. விடுவேனா.. உள்ளே இறங்கி அரை நாள் செலவழித்தாலும் கிண்டி ஃபோனை எடுத்துவிட்டேன். என்ன ஒன்று, வெள்ளைக் கலரில் இருந்த என்னுடைய மொபைல் அன்றிலிருந்து தங்கக் கலரில் மாறிவிட்டது.
ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் செப்டிக் டேங்கில் ஒருவரை கட்டிப்போட்டால் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். படம் ஆரம்பித்ததிலிருந்து அதே உணர்வு. இருபுறமும் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவர்களும் மூக்கில் கைவைத்து மூடியபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் படம் மலக்கிடங்கு எஃபெக்ட்டைத்தான் கொடுத்திருந்திருக்கிறது. சற்று நேரத்தில் லைட் அடித்தபடி தியேட்டர் ஊழியர் ஒருவர் அந்தப்பக்கம் வர, “ஏன்பா.. படம் என்ன இவ்வளவு கேவலமா இருக்கு.. மலக்கிடங்குல இருக்க மாதிரி இருக்கு” என்றேன்.
மேலிருந்து கீழ் வரை ஒரு முறை டார்ச் அடித்து என்னை உற்றுப் பார்த்த அவன், “மலக்கிடங்கு மாதிரி இல்லை நாயே… மலக்கிடங்கு தான்.. போன ஷோவுல கொழந்தை ஒண்ணு இந்த சீட்டுல ஆயி போயி வச்சிருந்துச்சி… அதக் கழுவி விடுறதுக்குள்ள நஜக்குன்னு இந்த சீட்டுல வந்து உக்காந்து தேச்சிட்டு இப்ப மலக்கிடங்கு, செப்டிக் டேங்குன்னு சீனப்போட்டுக்கிட்டு இருக்கியா? நாதாரி உன் பத்துரூவாய வேணா தர்றேன்… வாங்கிட்டு கிளம்பு.. சீட்ட கழுவனும்” என்றான்.
டக்கென்று சுதாரித்துக்கொண்டு “அப்டியா.. அப்டி எதுவும் இல்லையே.. இட்ஸ் நைஸ் சுமல்… படம் சூப்பரா இருக்கு.. நீங்க போங்க..” என சமாளித்தபடி சீட்டில நன்றாக சாய்ந்து உட்கார்ந்தேன்.
கார்த்திக் சுப்பராஜ்ஜிகிர்தண்டாவித்தியாசமான கமர்ஷியல் சினிமா. ஆனால் இறைவி ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம்ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறதுஇறைவி’. (நான்கு மாதமாக கார்த்திக் சுப்பராஜிடமிருந்து ரீசார்ஜ் கார்டுகள் எதுவும் வருவதில்லை)
அருள் (எஸ்.ஜே. சூர்யா)  ஒரு சினிமா இயக்குனர்அவருடைய படம் ஒன்று வெளிவராமல் கிடக்கிறதுநமது எக்ஸைலைப் போன்ற உலக மகா காவியம்என்னைப்போல அவரே அதைப் பலமுறை சொல்லிக் கொள்கிறார்முழுநேரமும்காலையில் ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரைகுடித்துக் கொண்டு கிடக்கிறார்ஆனால் நம்மைப் போல ஓசிகுடியில்லாமல் சொந்தக் காசிலேயே குடிக்கிறார். அருளின் தம்பி ஜெகனும் (பாபி சிம்ஹா) நண்பன் மைக்கேலும் (விஜய் சேதுபதி) சேர்ந்து குடிக்கிறார்கள்குடி, குடி, குடியோ குடிபேசிக்கொண்டே இருக்கிறார்கள்.எந்த டீச்சர் எந்த பையனுடன் ஓடிப்போனாள், பக்கத்து வீட்டு ஆண்டிக்கும் எதிர்வீட்டு அங்கிளுக்கும் என்ன லிங்கு” என்பது போல   ஏதாவது அர்த்தபூர்வமாகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லைஎப்பப் பார்த்தாலும் அவர் எடுத்த சினிமாவைப் பற்றியே பேசுகிறார்கள். 
நண்பன் மைக்கேலுக்கு ஒரு காதலிஅவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லைநடந்து கொண்டிருப்பது என்ன 1960இப்போதெல்லாம்திருமணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்தல்என்பது சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் அது பற்றி ஏன் மைக்கேல் யோசிக்கவில்லைநான் கூட நிறைய பெண்களை என்னுடைய வசியப்பேச்சின் மூலமாக facebook chat இல் கவர்ந்திழுத்து ஃபேஸ்புக்கிலேயே லிவிங் டுகெதராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அட்லீஸ்ட் என்னிடமாவது யோசனை கேட்டிருக்கலாம். யோசனை என்ற விஷயத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  
என்னபோரடிக்கிறதா?  உண்மையைச் சொன்னால் பத்து நிமிடத்திலேயே நான் தியேட்டரை விட்டு வெளியே ஓடியிருப்பேன்.  அப்படிச் சென்றிருந்தால் குழந்தையின் ஆய் இல் உட்கார்ந்ததை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் எதுவும் நடக்காதது போல் கொஞ்சநேரம் சமாளித்து விட்டு இடைவேளையைப் பார்த்த பிறகு எழுந்து சென்றேன்.
சிலைத் திருட்டு பற்றி சினிமாவில் வரக் கூடாது என்று சொல்லவில்லை.  ஏதோ கடையில் போய் சிகரெட் வாங்குவதைப் போல சிலை திருடுவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதுதான் பிரச்சினை.  அட்லீஸ் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது போல கஷ்டம் என்பதை காண்பித்திருக்க வேண்டும்.  
தெளிவான மனநிலையில் இருக்கும் ஒருவனை திடீரென்று யாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் சேர்ந்து விட்டால அவனுக்கு எப்படி கிருக்கு பிடிப்பது போல இருக்குமோ அதே போல இருந்தது எனக்கும்.  இடைவேளை வந்தது.  மெல்ல எழுந்து கூட்டத்தில் அங்குமிங்கும் தேடினேன். முன்பு வந்து என் முகத்தில் லைட் அடித்து ”டிக்கெட் பணத்தை திருப்பி தருகிறேன்.. ஓடிவிடு” என்று கூறிய தியேட்டர் ஊழியனைக் கண்டுபிடித்து “இடைவேளையுடன் செல்கிறேன்.. அஞ்சு ரூவாய திருப்பிக் குடு” என்றேன். ஏற இறங்கப் பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் “டங்” என்று என் தலையில் ஒன்று வைத்தான். தலை பனியாரம் போல் வீங்கியது. இருந்தாலும் நான் விடுவதாக இல்லை. அவன் பின்னாலயே சென்றேன். என் மேலிருந்து வீசிய மலக்கிடங்கு செண்ட் சுமல் அவனுக்குப் பிடிக்கவில்லை போலும். மூக்கைப் பொத்திக்கொண்டு பாக்கெட்டிலிருந்த 5 ரூவாய் நாணயத்தை எடுத்து தூக்கி வீசினான். அதைக் கவ்விக்கொண்டே ”ஓடுற பஸ்லருந்து ஒரு ரூவா விழுந்தா கூட ஓடிவந்து எடுப்பாண்டா இந்த யாரு நிவேதிதா” என மனதில் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தேன்.
நானும் மிஷ்கினும் ஆறாவது ரவுண்டில் இலக்கியம் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பதை கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் மண்டையில் திடீரென்று கட்டையால் ஒரு போடு போட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? டபுள் நரகமல்லவா.. அப்படித்தான் இருந்தது எனக்கும்.
இறைவி பற்றி நான் எழுதியதைப் பலரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லைஏனென்றால் நான் எழுதியது எனக்கே புரியவில்லை. எழுதும்போது ஏழாவது ரவுண்டு. இரண்டாவது பாதியில் எந்தக் காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லை; எதுவுமே நம்பும்படியாக இல்லை என நினைத்த பொழுதுஏன்னா நீ ரெண்டாவது பாதியே பார்க்க வில்லை”  என என் மனசாட்சி  என் முகரையில் காரித் துப்பியது. 
fetish என்பதற்கு முழு உதாரணம்இறைவி.  யாரும் fetish படம் எடுப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை.  ஆனால் எடுக்கும்போது நல்லதா நான்கைந்து பிட்டு இருப்பது போல் எடுங்கள் என்றே கூறுகிறேன். சன்னி லியோன்களும், ராதிகா ஆப்டேக்களும் பெண்மைக்கு பெருமை சேர்க்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் பெண்ணியம்பெண்களைப் பெருமைப்படுத்தும் படம் என்று சொல்லப்படுவதுதான் கலாச்சார சீரழவின் அடையாளம்.

பின்குறிப்பு:  இறைவியை கடுமையாக விமர்சிப்பதால் பல கண்டனங்கள் வந்தனநேற்றுகூட பால் வாங்கப் போகும்போது தெருமுக்கில் இருந்த நாய் ஓடிவந்து பம்மில் கடித்து வைத்துவிட்டது.  ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நான் சூர்யா நடித்த 24 என்ற குப்பைக்கு விமர்சனம் எழுதவில்லை.  மாதா மாதம் 10 ரூவாய் ரீசார்ஜ் கார்டு வாங்கிக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் நான்கு மாதங்களாக என்னை கண்டுகொள்ளவே இல்லாததால் ஏற்பட்ட ஆதங்கத்திலேயே இந்த விமர்சனத்தை எழுதினேன். 


Comments are closed
Working time 9am - 7pm

Sunday holiday