ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday, 29 August 2011

சைபர் க்ரைம் ஆபீசில் ஜெட்லி-பகுதி1. கவுண்டர் vs ஜெட்லி


கவுண்டர் இளனி கடை வச்சி வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு...அப்போ தூரத்துலயாரோ ஒருத்தர் போற வர்ற ஆளுங்களையெல்லாம் புடிச்சி புடிச்சி பேசிகிட்டு இருக்காரு

அங்க உக்கார்ந்துருந்த பிச்சகாரன புடிச்சி

"டேய் நீ தான அனானி... டேஇ நீ தான அனானி... எனக்கு அப்பவே தெரியும் டா..
நீ தான் அனானி. வாடா சைபர் க்ரைம் ஆபீசுக்கு.. வாடா வாடா..."

அப்புடியே ஒவ்வொருத்தனா கேட்டுகிட்டே வந்து கடைசில இளனி கடையில உள்ள செந்தில புடிச்சிடுறாரு..

"டேய் நீ தான அனானி..."

கவுண்டர்: "டேய் அவன் அனானி இல்லடா.. அவன் ஒரு காட்டு பன்னி...ஆமா நானும்உன்ன அப்பத்துலருந்து பாத்துகிட்டு இருக்கேன்..
நாயே ஒவ்வொருத்தனையா பாத்து நீ அனானியா
நீ அனானியான்னு கேட்டுகிட்டு வர்ற... யாருடா நீ...

ஜெட்லி:
அண்ணேன் உங்கள பாத்த அனானி மாதிரி தெரியல... அதுனால சொல்றேன். நா ஒரு பிரபல பதிவரா இருக்கேன்.

(இத கேட்ட ஒடனே கடைக்கு பக்கத்துல படுத்துருந்த நாய் கடுப்பாயி எழுந்து ஜெட்லிய பாத்து படு பயங்கரமா கொலைக்கிது) 

கவுண்டர்: (நாய பாத்து...) டேய் புரூஸ்லீ.... விடு... விடு.. இத பாரு தம்பி இப்ப சொன்னது இதுவே கடைசி தடவையா இருக்கனும்... இன்னொரு தடவ இத என் புரூஸ்லி கேட்டான்.. உன் வாய்க்குள்ள வாந்தி எடுத்து வச்சிருவான்...

ஜெட்லி: என்னது நாய் பேரு புரூஸ்லியா?

கவுண்டர்:
ஏன் இருக்க கூடாதா.... என் நாய் புரூஸ்லி ரசிகண்டா.. ஆமா உன்பேரு என்ன?

ஜெட்லி: ஜெட்லி சேகர்

கவுண்டர்: இய்ய்ய்ய்ய்ய்.... ஆமா இதுல ஜெட்லி என்ன உங்க 'சர்' நேமுங்களா?

ஜெட்லி: நான் ஜெட்லி மீது கொண்ட தீராத பற்றினால் அந்த பேர என் பேருக்கு முன்னாடி சேத்துகிட்டேன்...

கவுண்டர்: இந்த விசயம் ஜெட்லிக்கு தெரியுமா?

ஜெட்லி:
தெரியாது.

கவுண்டர்:
மகனே... என்னிக்கு தெரியுதோ அன்னிக்கு தாண்டி உனக்கு க்ளைமாக்ஸு..சரி மேல சொல்லு...

ஜெட்லி:
பதிவுலகத்துல என் வளர்ச்சி புடிக்காம யாரோ அனானின்னு ஒருத்தன் எனக்கு கமெண்டு போடுறான்... எனக்கு எதிரா பதிவு எழுதுறான்.

கவுண்டர்: உன் வளர்ச்சி புடிக்காம?.... சரி அவன் பேரு என்ண்டா?

ஜெட்லி: என்னங்க லூசு மாதிரி கேக்குறீங்க? அதான் சொன்னேனே அவன் பேரு அனானின்னு..

கவுண்டர்:
இய்ய்யய்ய்ய்யி .... என்னது அனானின்னு ஒரு பேரா?

ஜெட்லி: ஆமா... ஜனனி, ரஜினி, கஜினி மாதிரி அனானி.... நா ஏற்கனவே அவன் மேலஎங்க ஊர் elementry  ஸ்கூல் ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ளைண்ட் குடுத்துட்டேன்.. அப்புடியேஇந்த சைபர் க்ரைம் ஆபீசுலயும் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன் ஆமா இந்த சைபர் க்ரைம் ஆபீஸ் எங்க்ண்னே இருக்கு?

கவுண்டர்: ஆமா நீ இப்ப என்ன வேல பாத்துகிட்டு இருக்க?

ஜெட்லி:
சில பல பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதுகிட்டு இருக்கேன்

கவுண்டர்:
அதயே இன்னும் கொஞ்ச நாள் பண்ணு...அவங்களே வந்து உன்ன கூட்டி  கிட்டு போவாங்க..

ஜெட்லி: நக்கல் அடிக்காதீங்கண்ணே.... இந்த விஷயத்த சி.எம் முக்கு நா பஸ்ல அனுப்பிருந்தேன் அவரும் அனானி எங்க இருந்தாலும் அவன் புடிச்சி காவல்ல வைக்கிறேன்னு சொல்லிருக்காரு...

கவுண்டர்: என்னது சி.எம் ah உனக்கு தெரியுமா?

ஜெட்லி: நல்லா  தெரியும்ங்க... அவரு என்னோட வாசகர் தான்..
ஒருதடவ மெரினா பீச்ல நடந்த பதிவர்கள் சந்திப்புல P.M தான் C.M ah எனக்கு
அறிமுகப்படுத்தி வச்சாரு.... அப்பலருந்து C.M என்னோட தீவிர ரசிகனாயிட்டாரு.. அதுவும் குறிப்பா அந்த "கு...ல வளையம் மாட்டிகிட்ட" சிறப்பு சிறுகதைய படிச்சி எனக்குபோன் பண்ணி வாழ்த்து சொன்னாருன்னா பாருங்களேன்... அதோட அந்த வளைய கதைய படமா எடுத்தா அதுக்கு வரி விலக்கும் தர்றதா சொல்லிருக்காரு..

கவுண்டர்
: ஏண்டா தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற படத்துக்கு தாண்டா வரி... விலக்கு எல்லாம் ... பிட்டு சைட்டுல ரிலீஸ் பண்ண போற படத்துக்கெல்லாம் எதுக்குடா வரி விலக்கு?

ஜெட்லி: இப்ப சொல்ல முடியுமா முடியாதா?

கவுண்டர்: டேய்... என் கடையிலயாவது ஒரே ஒரு புரூஸ்லி மட்டும் தான் இருக்கான்.. ஆனா அந்த ஆபீஸுல 5 ஜாக்கி இருக்கு... அங்க நீ போய் பேச தேவையில்ல  வாய தொறாந்தியன்னாவ்வே வாய கடிச்சி வச்சிரும்...

ஜெட்லி: அதெல்லாம் சைபர் க்ரைம் ஆபீசுல வெள்ளையடிக்கிற என் வாசகர் பாத்துக்குவாரு நீங்க அட்ரஸ் மட்டும் சொல்லுங்க.. பாத்த நல்லவரு மாதிரி இருக்கீங்க....

கவுண்டர்:
 ரொம்ம்ப சொரியிறியேடா... சரி இப்புடியே நேரா போயீ சோத்தாங்கை பக்கம் திரும்பி  அப்புறம் கொழம்பு கை பக்கம் திரும்புனா மூனாவது கட்டடம்.... அப்புறம் தம்பி ஒரு சின்ன அட்வைஸ்... கம்ப்ளைண்ட் கொடுக்கும் போது அவன்  அட்ரஸ் மட்டும் குடு.. தப்பி தவறி உன்னோட ப்ளாக் அட்ரஸ குடுத்து  தொலைச்சிறாத.. அத அவனுக படிச்சானுக அப்புறம் ஆயுசுக்கும் உனக்கு களி தான்....


ஜெட்லி: சரிண்ணே... ரொம்ப நன்றி.. அப்புடியே கடையூட  நின்னீங்கன்னா ஒரு போட்டோ  எடுத்துக்குவேன்...

கவுண்டர்: எதுக்குடா?

ஜெட்லி: இல்லண்னே.. நாளைக்கு என்னோட பதிவுல "என்னுடைய நீண்ட நாள்
வாசகர் இளனிக்கடை கவுண்டரை சந்தித்தேன்" ன்னு போட்டுக்குவேன்... அதுக்கு தான்

கவுண்டர்: (அருவாளையும் ஜெட்லியையும் மாறி மாறி பார்க்கிறார். ஜெட்லி ஓடுகிறார்)அடுத்து சைபர் க்ரைம் ஆபீசில் சந்திப்போம்!

Friday, 26 August 2011

இரண்டு நொடி தாமதமாக சனிக்கிழமை ஆண்வெஜ் பெண்வெஜ்:ஆல்பம்:

பெண்களூரில் இன்று நானும் சில வாசக நண்பர்களும் பேன்டா குடித்தோம். பேன்டா ஆரஞ்சு நிறத்தில் இருந்தது எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. யார் 'பேன்டா'லும் மஞ்சளாக தானே இருக்க வேண்டும்... ஏன் பேண்டா ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது என்று சிந்தித்தபடியே காசு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தேன்...
====================

ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆனதை ஒட்டி 'ஜெ' இன்று ட்விட்டரில் என்னை விருந்துக்கு அழைத்தார்.  என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு ஒரே முதல்வர் தான், அது முதல்வன் அர்ஜூன் தான் எனச் சொல்லிவிட்டேன்...
====================

'அன்னா'ஹஜாரே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 'தங்கச்சி'ஹஜாரே உண்ணாவிரதம் இருந்திருந்தால் எனக்கு உடன்பாடு இருந்திருக்கும்.
====================

சென்னையில் நேற்று நல்ல மழை பெய்ததால் பெண்களூரில் எல்லாரும் நன்றாக நனைந்தோம். ஆனால் பெண்களூரில் பயங்கர வெயில். ஐ லவ் யூ ரஸ்னா....
====================

அணு உலை பாதுகாப்பு பற்றி பிரதமர் பேசியிருந்தார். கோவை டிஎம்டி கம்பிகள் பயன்படுத்தி வேலி அமைத்து அணுஉலைகளை பாதுகாக்கலாம் என அவருக்கு கூகிள் பஸ்ஸில் செய்தி அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார் என பொருத்திருந்து பார்க்கலாம்.
====================

மிக்ஸர்: 


நேற்று ஈரோடுக்கு ஒரு காதுகுத்திற்கு சென்றிருந்தேன். குழந்தையின் காதில் அந்த ஆசாரி ஓங்கி குத்தியதை பார்க்க பாவமாக இருந்தது. உடனே கிளம்பிவிட்டேன். வழியில் ஒரு சிறுவன் குச்சியை வைத்து அடித்து அடித்து டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். டயர் பஞ்சர் ஆகியிருந்தது. பஞ்சர் ஆன இடத்தை படத்தில் குறியிட்டு காட்டியுள்ளேன். அவனிடம் "நான் பஞ்சர் ஓட்டித் தருகிறேன் தம்பி" என்று கூறினேன். "உன் மொகரைய பாத்தா சரி இல்ல. நீ திருடிட்டு ஓடிருவ" என்றான். அந்தப் பையனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. பின் அவனிடன் என் ஈமெயில் ஐடியையும், பால்கார்டு நம்பரையும் கொடுத்துவிட்டு உன் அப்பாவை விட்டு எனக்கு போன் செய்யச் சொல் எனக் கூறிவிட்டு அவனிடம் டயர் வண்டியை பிடிங்கி படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். ஒருவழியாக பெண்களூர் வந்து சேர்ந்தேன்.  

====================

பல வாசகர்கள் லோக்பால் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என கேட்கிறார்கள். நான் லோக்கல் பால் குடிப்பதில்லை. ஆவின் பால் மட்டுமே..அதுவும் வேறு யாராவது வாங்கி கொடுத்தால் தான் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டேன்..
====================


வாசகர் கடிதம்:

அன்புள்ள மகன் முருகேசனுக்கு உன் அம்மா எழுதுவது. நல்லா இருக்கியா? காசு அனுப்ப சொன்னெனெ ஏன் அனுப்பல? இங்க உன் மனைவி மகள் எல்லாம் நல்லா இருக்காங்க. நீ எப்ப வர்ற? எம்.ஜி.ஆரு செத்துப் போயிட்டாருனு சொல்றாங்களே உண்மையா? அவரு நமக்கு தெய்வம் மாதிரி. உடம்ப பாத்துக்க... அடிக்கடி எழுது..

இப்படிக்கு,
உன் அம்மா,
கருப்பாயியம்மாள்,
19/2/1985
.........................................
அன்பின் முருகேசன். நன்றி. எம்.ஜி.ஆரை நான் சந்தித்தபோது அவர் முதல்வராக இருந்தார். என்னை சந்திக்கவேண்டும் என டிவிட் அனுப்பியிருந்தார். பின் பல வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் போய் பார்த்தேன். சாண்வெஜ் நாண்வெஜ் பற்றி பலநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவிடம் "இவர் தான் சாம். பிரபல பிட்டு எழுத்தாளர்" என அறிமுகபடுத்தினார். அப்போதுதான் தெரிந்தது அவர் பக்குவப்பட்டவர் என்று. பின் அவரை நான் பார்க்கவில்லை. அவரை அடுத்தமுறை பார்த்தால் கேளுங்கள் அவர் ஏன் கலர் படங்களில் அதிகமாக நடிக்கமாட்டேன் என்கிறார் என்று. இன்னும் ஜெயாடிவியில் ப்ளாக் அண்ட் வைட் படங்களையே தான் போடுகிறார்கள். அவரை இனியாவது கலர் படங்களில் நடிக்க சொல்லுங்கள்... ஜெயலலிதாவுடன் மட்டுமே நடிக்காமல் த்ரிஷா, அசின் என ஹீரோயின்களை மாற்றி நடித்தால் படம் இன்னும் நன்றாக ஓடும்....
மறந்து போய் கடிதத்தின் முடிவில் உங்கள் அம்மாவின் கையெழுத்தை போட்டுவிட்டீர்கள்... பரவாயில்லை.. நன்றி...

 ====================
பிலாசபி ஆண்டி:
செருப்படியில் நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. நமக்கு செருப்படி தான் முக்கியம்.
 ====================

இந்த வார நிழற்படம்:


                                     
இவர்கள் சொந்த காசில் டீ குடித்தது காமடியாக இருந்தது. உடனே க்ளிக்கிவிட்டேன். இந்த படம் என் கைவண்ணம்.

 ==================== ====================


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...


Wednesday, 24 August 2011

பாட்சா-நக்மா அஜால்- ரகுவரன் குஜால்- விமர்சனம்.இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் இன்று ஆபிஸ் சென்ற உடன் வயிற்று போக்கு என்று சொல்லி மேனேஜரை ஏமாற்றி விட்டு கிளம்பி விட்டேன். (எண்டா உனக்கு வெக்கமா இல்லையானு கேக்க கூடாது). ஈரோடு பதிவர் நண்பர் வெட்டி வீலாயுதமும் அவரது ஆபீசில் காலில் தலைவலி என்று பொய் சொல்லி அவரது மேனேஜரை ஏமாற்றிவிட்டு வந்திருந்தார். பிறகு இருவரும் படம் பார்க்க கிளம்பினோம்.

 ரஜினிக்கு ஜனா அஜித் போல் ஒரு ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தப்பு இல்லை. அதற்கு ஸ்க்ரிப்ட் நன்றாக அமைந்தால் மட்டும் பத்தாது. அதற்கு விஜயின் அர்பணிப்பு, பாடி மேயிண்டனன்சில் விஜய டி ராஜேந்தரின் உழைப்பு, நகுலனனைப்போல் பல வருட அனுபவம் இதெல்லாம் தேவை.  
        
ஜனா படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து வந்திருக்கும் படம் தான் பாட்ஷா. (என் டீ அடிக்கவில்லை என்று கேட்க கூடாது)  படத்தில் ஹீரோ முதல் பாதியில் மிக அமைதியாக இருக்கிறார் (ஏன் அவரு ஊமையான்னு கேக்க கூடாது) பின்னர் இடைவேளையில் தங்கச்சியை வில்லன் ரேப் செய்ய ட்ரை பண்ணும் போது ஹீரோவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து சண்டை போடுகிறார். பின்னர் பிளாஷ் பேக்கில் ஹீரோ ஒரு பெரிய நல்லது செய்யும் தாதா என்பது தெரிய வருகிறது. (ரொம்ப புது ஸ்டோரி ). அட போங்கப்பா எத்தனை படம் இதே மாதிரி பாக்குறது? இந்த படம் ஜனா, பகவதி, அரசு போன்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதை அப்பொழுதே கண்டுபிடித்து விட்டேன்.

    நான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு அசிஸ்டன்ட் ஆகா ட்ரை செய்து கொண்டு இருப்பதால் இது போன்ற விஷயங்களை உடனே கண்டுபிடித்து விடுவேன்.( பல வருசமா நீ ட்ரை மட்டும் தானடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேக்கக் கூடாது) 

       படத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் நக்மா.. கும் என்று இருக்கிறார். அவருக்காக மட்டுமே குடுத்த காசு தகும். அதுவும் ஸ்டைலு ஸ்டைலுதான் பாட்டில் அவரது costume   மிக பிரமாதம். நான் ரசித்து ரசித்து பார்த்தேன். இன்னும் ஒரு ஹீரோயினை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

 ரகுவரன் சுமாரான வில்லனாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவரை பார்த்தல் வில்லன் போன்றே தோன்ற வில்லை. அவரும் படத்தில் டபுள் ஆஷனில் நடித்து இருக்கிறார். அவர் நக்மாமை ரேப் செய்வது போல் ஒரு சீனை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.


படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்: 

1 . மாணிக்கம் அண்ணன் இந்த பணத்த குடுத்துட்டு வர சொன்னாரு

2  தங்கசிக்கு கண்ணாலம் வச்சிருக்கேன் கண்டிப்பா வந்துருங்க

3 .  ரஜினி: "come" ya

      நக்மா:  coming ya

4. எனக்கு சண்டைன்னாலே பயம்

 5 . யாருடா இந்த   இந்திரனுக்கு அரஸ்டு வாரண்டு குடுத்த ஆம்புள?

6 . இனிமேயும் எங்களால பொறுக்க முடியாது 

7 . நாம வச்ச bomb ah பாட்ஷா எடுத்துட்டான்

8 . ரகுவரன் : "சலாம் அலைக்கும்" பாட்ஷா பாய் 

      ரஜினி : "அலைக்கும் அஸ்ஸலாமு" ஆண்டனி 

 9 . சொல்லுங்க ... சொல்லுங்க.. சொல்லுங்க.... நீங்க யாரு... நீங்க யாரு... நீங்க யாரு? 

 10 . "என் பொண்டாட்டி புள்ளைய கொன்னது யாரு? " 


டைரக்டர் கைதட்டல் பெறும் இடங்கள்: 

1 . டைட்டில் போடும் பொது தமிழிலும் இங்கிலீசிலும் மாற்றி மாற்றி போட்டது புதுமை .

 2 . ரஜினியின் தங்கச்சியையும் அழகான பெண்களாக தெரிவு செய்ததற்கு ஸ்பெசல் கைதட்டல்

3 . கோயிலில் இருந்து எடுத்த பாமை ரஜினியை கரைக்டாக தண்ணிக்குள் தூக்கி வீச செய்ததற்கு 

 4 . படத்தில் ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நக்மாவுக்கு கொடுத்ததற்கு 

  .5  ரஜினியின் நண்பன் சிங்கை கொன்று sentimentilum பூந்து விளையாடியதற்கு 


இயக்குனரிடம் சில கேள்விகள்: 

 1 . இந்த படத்துக்கு ரஜினிய என் ஹீரோவா போட்டீங்க? 

2 . நக்மா மொத சீன்ல எதுக்கு செகப்பு கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வராங்க? 

 3 . யுவரானிய ஆனதராஜ் தள்ளிவிடும் பொது ஏன் யுவராணி விழுகுறாங்க?

4. உங்க வீட்டுல இன்னிக்கு என்ன கொழம்பு? 

5. ரஜினி பாம்பெயிலருந்து சென்னைக்கு டிரைன்ல வந்தாரா இல்ல ப்ளைட்ல வந்தாரான்னு படத்துல நீங்க காமிக்கவே இல்ல.


6 . இன்டர்வல் சீனில் ரஜினி கட்டையை தூக்கி போட்டு எல்லா லைட்டையும் உடைத்த பின்பு இருட்டியிருக்குமே உங்களுக்கு பயமாக இல்லையா?

7. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?

                                       

இந்தப் படம் எல்லா சென்டர்களிலும் தியேட்டரில் ஓடும்.  மற்ற அனைத்து சென்டர்களிலும் இரண்டரை மணி நேரம் ஓடும். இந்தப் படத்தை நான் KTV தியேட்டரில் பார்த்தேன்.

 இந்த படம் A  சென்டரில் 2 .30 மணி நேரம் ஓடும் 

 B  மற்றும் C  சென்டர்களிலும் 2 .30 மணி நேரமே ஓட வேண்டும். ஒரு பாடலை கட் செய்தால்  2 .25  மணி நேரம் ஓடும்

எதிர்பார்கபடும் CNN  டாப் 10  ரேட்டிங் -11
எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் - அஃக்மார்க்
கே.பி கமெண்ட் - பாரத் மாதா கீ ஜே.  


Sunday, 21 August 2011

ஜெட்லி சேகர்- ஆசிரியர் குறிப்பு. (ஒரு வரலாற்றின் கதை)ஜெட்லி சேகர் என கோடானுகோடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஆசிரியர் அவர்கள் 1867ல் பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சேகர் என்பதாகும். மிகவும் இளவயதிலேயே அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் திறன் கொண்டிருந்ததால் இவர் எட்டயபுரம் அரண்மணையில் ஆஸ்தான கெட்டவார்த்தைக் கவிஞராக பணியாற்றினார். பின் பள்ளிபருவத்தில் தனக்குத் தானே வாசகர் கடிதங்கள் எழுதி பலர் முன்னிலையில் வாசித்துக்காட்டும் வல்லமை பெற்றிருந்ததால் இவரை "வாசகக் கவிஞர்" என்று "தானே புகழ்ந்த தானே கவிஞர்" எனப் போற்றுவோரும் உளர். இவர் எழுதிய கெட்டவார்த்தை அகராதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிநூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்நாட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது.

பின் ஷகிலா என்னும் வீராங்கனையின் பால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை ஷகிலாதாசன் என மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்டக்காலங்களில் தன் கடலூர் வீட்டில் இருந்தபடியே "சாண்வெஜ் நாண்வெஜ்" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் இடம்பெற்ற கட்டுரைகள் ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கின. துவண்டு கிடந்த இளைஞர்கள் மத்தியில் இவரது 'ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்' பகுதி தேசபக்தி அனலை மூட்டியது. இவரது பத்திரிக்கையில் வரும் விளம்பரங்கள் உலக வியாபார சந்தையை இவர்பக்கம் திருப்புவதாக அமைந்தது. அமெரிக்க வெள்ளை மாளிகை இவர் வாங்கி கொடுத்த காலிமனையில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்தாற்றலைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவர்மேல் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. கைது ஆணையை எடுத்துக்கொண்டு பெரும்படையுடன் தன் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையிடம் "உன் ரேஷன் கார்டு எங்கே? உன் பால்கார்டு அங்கே? உன் atm கார்டு எங்கே? எனக்கு இண்ட்லியில் ஓட்டுப்போட்டாயா? தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாயா? இல்லை நான் எழுதும் காவியங்களுக்கு "மீ த ஃபர்ஸ்ட்" எனக் கமண்ட் போட்டாயா? எனக்கு ஒரு வாசகர் கடிதம் தான் எழுதினாயா? அனானியா? யுனானியா?" என இவர் பேசிய வசனம் சரித்திரப் புகழ் வாழ்ந்தது. இவர்தம் வீரத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு கடலூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது.

அடிக்கடி இவர் பத்திரிக்கையில் அடிக்கடி இவர் எழுதிய அறிக்கைகளும், அனானிகளால் அவர் எப்படியெல்லாம் பாதிக்கட்டார் என்ற அறிவுப்பும் பல பெண்களின் கண்ணில் கண்ணீர் வரவழைப்பதாய் அமைந்திருந்து. பெண்களால் இவர் 'அழுவாச்சி கவிஞர்' என அன்புடன் அழைக்கபெற்றார். 1957ஆம் ஆண்டு தமிழறிஞர் கூட்டமைப்பில், 'இவர் எழுத்துக்களை சிறுவர்கள் படித்தால் அவர்களுக்கு தமிழ் மறந்து போகும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக் கண்டு கடும்கோபம் கொண்ட இவர் "அனானிகளுக்கு எச்சரிக்கை", "அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை", "அனானிகளுக்கு கடைசி இறுதி எச்சரிக்கை" என வரிசையாக தொடர் கட்டுரைகள் எழுதினார்.  பின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அந்த கட்டுரைகள் 'சாந்தி' என்ற பெயரில்,  மந்த்ரா பேடி நடிப்பில் மெகாதொடராக ஒளிபரப்பப்பட்டு பெருவெற்றி பெற்றது.

1989ல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கக்கூஸில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட டம்ளரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உலகெங்கும் இவர் வாசகர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாகவும் இவரது தோழர் ஜார்ஜ் புஷ்ஷின் நேரடி தலையீட்டின் காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டார். பின் தன் வாழ்க்கை வரலாற்றை 'பக்கிராம் வயது 139' என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டார். youtubeல் அந்த படத்தைப் பார்த்து உலகமே ஒருநாள் அமைதியாக இருந்தது. அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அந்தப் படத்தை இயக்கிய ஜெட்லிசேகருக்கு வழங்கப்பட்டது.

இவர் எழுத்துலகுக்கு ஆற்றிய பங்கினை அடையாளப்படுத்தும் பொருட்டு நியூயார்க் பல்கலைக்கழகம் தனது கக்கூஸிற்கு, ஜெட்லி கக்கூஸ் எனப் பெயரிட்டு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் இவர் சிலையை நிறுவுவதற்காக கடலுக்கு நடுவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடல் வற்றுவதற்காக அரசு காத்திருக்கிறது. சிலையை நீங்கள் படத்தில் காணலாம். விரைவில் சிலை நிறுவப்படும்.

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...
Thursday, 18 August 2011

செவ்வாய் கிரக பெண் பதிவரின் வாழ்க்கையில் நடந்த திடுக் சோகம். (பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு)
  செவ்வாய் என்றால் திங்களுக்கு அடுத்து வருவது. அதனால் பொதுவாகவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காது. அங்கு தண்ணி இல்லை என்ற ஆச்சரியமான விஷயத்தை கேட்டு 'திடுக்' என ஆடிப்போனேன். என்னடா சாம் இது செவ்வாயில் 'வாய்' இருந்தும் தண்ணி இல்லையே. இதைத்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ என எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் அந்த செவ்வாய் கிரக பதிவர் எனக்கு ஃபோன் செய்து அழுதார்.

அந்த செவ்வாய் கிரக பதிவரின் பெயர் ரீமாசென் (கீதா என்ற உண்மையான பெயரை அவர் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் ரீமாசென் என பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரீமாசென் ஒரு ஐ.டி கம்பனி இருக்கும் எட்டு மாடி கட்டிடத்தில் வேலை செய்யவில்லை. அதற்கு அருகில் இருக்கும் ஒரு டீ கடையில் 'டீ லீடர்' (Tea leader)ஆக வேலை செய்கிறார். அவரது கணவர் அடிக்கடி வேலை விஷயமாக புதன் கிரகம் சென்றுவிடுவதால் பெரும்பாலும் பெண்பதிவர் ரீமாசென் டீ கடையே கதி என இருந்திருக்கிறார். 

இந்நிலையில் அந்த டீ கடைக்கு அருகில் இருக்கும் இட்லி கடையில் வேலை செய்யும் சேதுபதியின் (அவர் மிகவும் கொடுமையானவர் என்பதால் அவர் பெயர் மாற்றபடவில்லை) வீடு ரீமாசென்னின் வீட்டுக்கு அருகிலேயே இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ரீமாசென்னை டீ கடையில் ட்ராப் செய்துவிட்டு ரீமாசென்னின் கணக்கில் ஓசி டீ குடிப்பதை சேதுபதி தன் வழக்கமாக வைத்துள்ளார். சரி சேதுபதியும் இட்லி லீடராக பணிபுரிவதால் டீசண்டானவர் தானே என நினைத்து ரீமாசென்னும் இதை அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் ரீமாசென்னின் பிராஜக்ட் மானேஜர் விஷால் (கோவிந்தனின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் விஷால் என மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் ரீமாசென்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். முதலில் கண்டிக்க நினைத்த ரீமாசென் பின் தன் டீ-லீடர் பதவி பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்திருக்கிறார்.

சில நாட்கள் கழித்து விஷால் ஒருபடி மேலே சென்று ரீமாசென்னின் வீட்டுக்கே சென்றுவிட்டார். ஆனால் அன்று செவ்வாய்கிழமை என்பதால் புதன் கிரகத்துக்கு செல்லாமல் செவ்வாய் கிரகத்திலேயே இருந்திருக்கிறார் ரீமாசென்னின் கணவர் சுரேஷ். ஆனால் இது விஷாலுக்கு தெரியாது. ஆனால் இது ரீமாசென்னுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்துவிட்டது.

விஷால் மெல்ல படியேறியிருக்கிறார். டக் டக் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருக்கிறார். கதவு அருகில் வந்து தட்ட போகும்போதுதான் 'அதை' பார்த்திருக்கிறார் விஷால். பின் (அதை) காலிங் பெல்லை அமுக்கியிருக்கிறார். நிமிடங்கள் ஓடின. மீண்டும் அமுக்கினார். நிசப்தம்.

கதவு திறக்கப்பட்டது. பார்த்தால் ரீமாசென்னின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரீமாசென் ஓடிவந்து அழுதுகொண்டே கணவரை கட்டிக்கொண்டு பேசினார், "இவர் தாங்க என் பிராஜக்ட் மாஸ்டர். என்கிட்ட எப்பவுமே தவறா நடந்துக்குறாரு" என சொல்லி கதறியிருக்கிறார். ஏன் சாம் இப்படிலாம் கூட நடக்குமா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

ஒருநிமிடம் சுரேஷ் கண்ணிமைக்காமல் விஷாலை பார்த்திருக்கிறார். பின், "ஏம்பா விஷால். பாக்க வாட்டசாட்டமா இருக்கியே தவறா நடக்காம நேரா நடக்க கூடாதாப்பா?" எனக்கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு மனம் திருந்திய விஷால் பின் சனி கிரகத்துக்கு மாற்றல் ஆகிபோய்விட்டாராம்.

ஆனால் சனி கிரகத்தில் இன்னும் விஷால் தவறாக தான் நடக்கிறாராம். ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தை சேர்ந்த அந்த பெண்பதிவர் நிம்மதியாக தன் குழந்தைகளுடன் வசிக்கிறாராம்.நாம் கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள்:

1) பதிவின் பெயர் சீரியசா இருக்கேனு உள்ள வந்து பாத்துரக்கூடாது. பாத்தவன் வாழ்க்கைல தான் 'திடுக்' சோகம் வந்துரும்!

2)இதில் வந்த சேதுபதிக்கும் இந்த பதிவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சும்மா ஒரு பத்தி எக்ஸ்ட்ரா ஆகட்டுமே என சேர்த்துவிட்டேன்.

3)இதே கதையை நான் திருப்பியும் பதிவா போட்டா நீங்க கண்டுக்க கூடாது. ஒருநாளைக்கு முப்பது பதிவு போடுறதுனால தவறு நடக்குறது இயல்பு.

4) இதே செய்தியை நீங்க ஜூ.வி, ஆ.வி, குமுதம் ரிப்போர்ட்டர்ல படிச்சிருக்கலாம். ஆனா அப்படி காசு கொடுத்து மூணு புக்கு வாங்குறதுக்கு பதிலா இங்க வந்தீங்கன்னா அதே செய்திய இலவசமா படிச்சுக்கலாம்.

டிஸ்கி:   நடுவில் வரும் படங்களுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் பதிவுக்கும் பதிவுக்குமே சம்பந்தமில்லை!

Wednesday, 17 August 2011

யார் சாம் மார்த்தாண்டன்? (சாம் காட் வெரி ஏங்க்ரி!)

சார். சாம் மார்த்தாண்டன் ஒரு தனிநபர் இல்ல சார். இது ஒரு நாலு பேர் கொண்ட குழு சார். ஜெட்லிசேகர் கொடுத்த கெட்டவார்த்தை டார்ச்சர் தாங்காம நேத்து புதுசா மூணு பேரு எங்க குழுல சேர்ந்திருக்காங்க சார்.  Moral Police பண்றதுக்காக நாங்க எழுதலீங்க சார்.  எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார். அப்படி எழுதுறது மூலமா மக்களை சிரிக்க வைக்கிறது சார். மக்களும் கடந்த ஒருவாரமா நல்லாவே சிரிச்சாங்க சார்.

Spoof பண்றப்ப பிரபலமா இருக்குறதை தான் சார் இன்ஸ்பிரேஷன் எடுத்துக்க முடியும். ஓடாத ப்ளாகை எல்லாம் இன்ஸ்பிரேசன் எடுத்தா மக்களுக்கு காமடி புரியாது சார். உதாரணத்துக்கு 'தமிழ்படம்' பாத்தீங்கன்னா பிரபல படங்களை தான் கிண்டல் பண்ணிருப்பாங்க. ஓடாத படத்தை கிண்டல் பண்ணா 'தமிழ்ப்படம்' ஓடிருக்காது.

பக்கி-லீக்ஸ் என்னைக்குமே கெட்டவார்த்தைகளையும் மற்றவர்களை தரக்குறைவா விமர்சிப்பதையும் அலோ பண்ணாது சார். இங்க வெறும் சிரிப்புக்குதான் முக்கியத்துவம். ஜெட்லியை தினமும் படிக்கிற வாசகர்கள் கூட எங்களை பாராட்டிருக்காங்க சார். அந்த அளவுக்கு ஆரோக்கியமா தான் நாங்க எழுதுறோம். தனிமனித தாக்குதல் பண்ணவே மாட்டோம்.
சில பிரபல பதிவர்களே "எங்க போஸ்ட்டையும் கலாய்ங்க சாம். படிக்க ஆவலா இருக்கோம்"னு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாங்க சார். இதுக்கு மேல பக்கி-லீக்ஸ் தரத்தை பத்தி என்ன சார் சொல்லனும்?

ஆனா ஜெட்லி இன்னைக்கு வழக்கம்போல அவரோட பாணில எங்களை திட்டிருக்காரு சார்.கெட்ட கெட்ட வார்த்தையா போட்டு. ஏற்கனவே எங்க முதல் பதிவுல இருந்து கெட்ட வார்த்தையா, வெளியிட முடியாத அளவுக்கு கமண்ட் போட்டுட்டு இருந்தாரு சார். நேத்து உச்சகட்டமா யாரையோ மூணூ பேரை அவர் பயங்கரமா திட்டி எங்களுக்கு கமண்ட் போட்டிருந்தாரு சார். அது வெளியாகிருச்சு. அப்புறம் அந்த மூணு பேரும் எங்களை தொடர்பு கொண்டு கமண்ட் டெலிட் பண்ண சொன்னாங்க சார். பதறியடிச்சு போய் பாத்தா அவ்வளவு அசிங்கம் சார். அப்புறம் உக்காந்து எல்லாத்தையும் அழிச்சோம்.  நாங்க ஜெட்லி மேல கொஞ்சம் மரியாத வச்சிருந்தோம். அவரே கெடுத்துக்கிட்டாரு சார். இன்னைக்கு அவர் ப்ளாக்ல எங்களை திட்டிருக்காரு. அவர் பதிவுகளை எவ்வளவு அழகா spoof பண்ணிருக்கோம் அதுக்கு நல்ல மனசு உள்ளவங்கள் எல்லாம் பாராட்டுவாங்க ஆனா இவரு சும்மாவாச்சும் இருக்கலாம்ல சார். அதவிட்டுட்டு அசிங்கமா பேசி  கேவலமா நடந்துக்குறாரு.

சரி விடுங்க. புதுசா இணைந்திருக்கும் மூன்று நண்பர்களை வரவேற்கிறோம். அவங்க ஏற்கனவே கலாய்ச்சவங்கதான். இந்த தடவ தனிமனித தாக்குதல் இல்லாம எழுதி கொடுக்க சொல்லிருக்கோம். நல்ல ஆரோக்கியமான நகைச்சுவையை ரசிக்கும் வாசகர்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும்.

ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. அதைவிட்டுட்டு அசிங்கமா பேசுனா என்ன சார் அர்த்தம்? அதே வார்த்தைய நாங்க சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் சொல்லுங்க... 


உண்மையான பேரை சொல்லி எழுதலாமேனு கேக்குறாங்க. அப்படி சொன்னா எங்க மேல முன்முடிவு எடுத்துருவீங்க. அது வந்துருச்சுன்னா நகைச்சுவை எடுபடாது. அதான் சாம் மார்த்தாண்டன் மூலமா எழுதுறோம். எங்க ஆல்டர் ஈகோ தான் மார்த்தாண்டன். இனி முழு வேகத்தில் செயல்படுவான்.

(வாசகர்களுக்கு வேண்டுகோள்: கெட்ட வார்த்தை பின்னூட்டம் போடாதீங்க பாஸ். நேத்து ரொம்ப ஆயிருச்சு. அதான் மட்டுப்படுத்துதல் வச்சுட்டோம். புரிஞ்சுக்கோங்க. எங்களுக்கு கமண்ட் தேவையில்ல. நீங்க சிரிச்சாலே போதும். ஆரம்பிச்ச ஒரே வாரத்துல தினம் 3000 பேருக்கும் மேல படிக்குறீங்க, சிரிக்கிறீங்க. அது போதும் பாஸ். மிக்கநன்றி வாசகாஸ்!)

எழுதிக்கிழிப்பது மட்டுமல்ல நீ.. சிரிக்கத்தெரிந்தால் தான் நீ.... 


EVER YOURS...   

Monday, 15 August 2011

மிக தாமதமாக 1947ன் ஆண்வெஜ் அண்ட் பெண்வெஜ்ஆல்பம்:
ஆல்பம் என்பது ஆர்யன் ராஜேஷ் மற்றும் ஷ்ருதிகா நடித்த ஒரு மொக்கை திரைப்படம்.இந்த படத்தை நேற்று கே டி வியில் போட்டார்கள். நான் அதை சன் டிவியில் பார்த்தேன்.படத்தில் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. இசை கார்த்திக் ராஜா என்று டைட்டிலில் போட்டார்கள். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது இந்த படத்துக்கு இசைஅமைத்தவர் கார்த்திக் ராஜா என்று.  


படத்துக்கு இடையே பசித்ததால் சாப்பிட சென்று விட்டேன். சாப்பிட்டு வந்து திரும்பவும் படம் பார்த்தேன். அதே படம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. டி.வி யை ஆப் செய்து விட்டேன்.அதனால் இந்த படத்தை டகால்டி வரிசையில் சேர்க்கிறேன்.

=================
இன்று காலையில் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கால் வந்தது. இந்த நூற்றாண்டிற்கான சிறந்த இயக்குனர் விருது எனக்கு வழங்கவிருப்பதாக சொன்னார்கள். நான் இன்னும் படம் எடுக்கவில்லை. அதனால் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று பதில் அளித்து விட்டேன்.=================

மிக்சர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க எம்.எல்.ஏ ஆபிரகாம் லிங்கனும் தமிழ்நாட்டு முதல்வர் ஜவர்கர்லால் நேருவும் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் "செஸ்" போட்டிகளை கண்டு ரசித்தனர். பிறகு இருவரும், அங்கிருந்து சென்று விட்டனர். ஆபிரகாம் லிங்கன் நல்ல மனிதர். ஜவர்கர்லால் நேரும் மிக நேர்மையானவர். ரோட்டில் நேராக நடப்பதால் நேரு என பேர் வந்திருக்கலாம். நான் லோக்கல் என்பதால் எனக்கு இதுபற்றி அவ்வளவாக தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் நான் குடும்பத்துடன் சென்று திருட்டு டிவிடியில் பார்ப்பேன்.


==============================

மண்களூர் அடுப்பை போல சூடாக இருக்கின்றது. சூடாக என்றால் சுடும் என அர்த்தம். மண்களூர் சூடாக இருந்தாலும் எனக்கு சூடு சொரணை இருப்பதில்லை. இங்கு வாசக நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் சொந்த செலவில் டீ சாப்பிடுவது புதுமையான அனுபவமாக இருக்கிறது. கடைசியாய் சொந்த செலவில் நான் டீ குடித்தது எனக்கு நினைவில் இல்லை. வாசகர்கள் யாருக்காவது நினைவில் இருந்தால் கூகில் பஸ்ஸில் ட்வீட் செய்யுங்கள். 
==============================


இங்கு வந்ததில் இருந்து பெண்களை ஆபாசமாய் பேசுவதும், பின் அறை வாங்கி அழுவதுமாக ஜாலியாய் பொழுது போகின்றது...  இன்று மண்களுர் லால்பார்க் ஊர்வசியில் 3 மணிக்காட்சியில் 3டியில் குலேபகாவலி பார்த்துவிட்டேன.. எம்.ஜி.ஆர் என்ற புதுமுக நடிகர் நன்றாக நடித்துள்ளார். என் வாசகராக ஆவதற்கு எல்லா தகுதியும் அவரிடம் உண்டு என நினைக்கிறேன். விமர்சனம் விரைவில்..


இந்த வார நிழற்படம்; 
                                                                

                       
   நிழல் இருப்பதால் இதுதான் நிழற்படம். இது என் கைவண்ணம்.

|
வாசகர் கடிதம்:

Dear aitel customer. You have not paid your bill for the months of january, february, march, april, may, june, july to december. Please pay the bill immediately. Or else your services will be disconnected. Thank you
==============================
அன்பின் கஸ்டமர்.
உங்கள் வீட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை தங்க அழைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இந்த வருடம் முடிகிறதா பார்க்கலாம். ஆம் ஆண்வெஜ் நாண்வெஜ் பகுதி எழுதுவதை நான் ஒரு செர்வீசாகத்தான் செய்கிறேன்.


இந்த வார சலனப்படம்;

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.  நடன அசைவுகள் மிகவும் அழகு. கண்ணை மூடிக்கொண்டு,காதைப் பொத்தி கொண்டு காரில் போகும் போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். எழுந்து ஆடுவீர்கள்.  
நான்வெஜ்(18+):

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கொஞ்சம் சக்தி இட்லிபொடி வாங்கி அதை சிக்கனில் தடவி ஊற வைக்கவும். பின் சமூக விலங்குகள் பொறித்தும், காட்டு விலங்குகள் பச்சையாகவும் சாப்பிடலாம்.


========

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...
(அடுத்து வருவது 'சைபர் கிரைம் ஆபீசில் சாம் மார்த்தாண்டன்')

Saturday, 13 August 2011

பிரபல பதிவர் ஜெட்லி சேகருடன் ஒரு சந்திப்பு.


நம் வலைப்பூவிற்கு பிரபல பதிவர் ஜெட்லி சேகர் வந்திருக்கிறார். ஏராளமான வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதால் வரமுடியாது என சொன்னவரை, ஒரு பிட்டு டிவிடி இனாமாகத் தருவதாய் சொல்லி பேட்டிக்கு இழுத்து வந்தோம்.

சாம்: வணக்கம் ஜெட்லி சேகர்.
ஜெட்லி: பிரபல பதிவர் ஜெட்லி சேகர்னு சொல்லுடா பரதேசி. அரசு கெஜெட்லயே என் பேரை 'பிரபல பதிவர் ஜெட்லி சேகர்'னு மாத்திட்டேன்டா. பிரபல பதிவர்னு சொல்லலேனா சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்டா...டாய்ய்ய்ய்.. வுடமாட்டேன் டா டாய்ய்ய்ய்ய்....

சாம்: வணக்கம் பிரபல பதிவர் ஜெட்லி சேகர். நீங்க பதிவு எழுத வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க. பிரபல பதிவர் ஆனது முடிவு பண்ணி நடந்த விஷயமா அல்லது விபத்தா.?
ஜெட்லி: ....த்தா அப்படிலாம் இல்லடா பண்ணாடை. பிரபல பதிவர் ஆவலேனா டாக்டர் பிரகாஷ் மாதிரி ஆயிருப்பேன். இப்ப ட்ரெயின்ல பாக்குற பொண்ணோட பின்புறம், வயிறு  வர்ணிச்சு எழுதுறதுனால நான் பிரபல பதிவர். அதே விஷயத்தை படம் புடிச்சு வித்தா டாக்டர் பிரகாஷ். அவ்ளோதான் வித்தியாசம்...

சாம்: வாசகர் கடிதம் உங்களுக்கு எப்படி தினமும் இத்தனை வருது? நீங்களே எழுதி வெளியிடுறதா சொல்றாங்களே...
ஜெட்லி: டேய்ய்ய்.. நீ அனானி தான? ங்கோ... வாடா டேய்.. உன் இடுப்பு அளவு சொல்லுடா.. உன் வாக்காளர் அடையாள அட்டை ரெண்டு காப்பியும், ஒரிஜினலை வெரிஃபிகேஷனுக்கும் கொடுடா. அப்பயும் நான் பதில் சொல்லுவேனு நினைக்காத. அது என் இஷ்டம் டா.. ஏன்னா நான் லோக்கல் டா டேய்ய்ய்ய்...

சாம்: இந்த அனானி அனானிங்குறீங்களே. அது என்ன யுனானி மாதிரி எதும் மருத்துவமா?
ஜெட்லி: டேய்... சு.... பண்ணாடை.. அனானினா நம்மளை கேள்வி கேக்குறவனுங்கடா.. சும்மா வாயமூடிட்டு "நல்லாருக்கு ஜெட்லி" "கலக்குங்க ஜெட்லி" "மீ தி ஃபர்ஸ்ட்"னு கமண்ட் போட்டுட்டு போக மாட்டானுங்க.... ஏன் எதுக்குனு ஆயிரம் கேள்வி கேப்பானுங்க. நேத்து ஒருத்தன் "இப்படி போறபோக்குல ஒரு பொண்ணோட வயிறப் பத்தி எழுதிருக்கியே அந்த ட்ரெயின்ல பொண்ணை அனுப்புன எதோ ஒரு அப்பா அம்மாவோ அண்ணனோ இதைப் படிச்சாங்கன்னா அவங்க பொண்ண பத்திதான் எழுதிருக்கியோனு தோணுமே.. எவ்வளவு வருத்தப்படுவாங்க? நீயெல்லாம் மனுஷனா?"னு இன்டீசன்ட்டா கேட்டிருந்தான். இவன் தான் அனானி.

சாம்: உங்களுக்கு பெரிய பெரிய இடத்துலேல்லாம் வாசகர்கள் இருக்காங்களாமே. சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கீங்களாமே?
ஜெட்லி: ஆமா. டெண்டுல்கர்ல இருந்து ஒபாமா வரைக்கும் என் வாசகர்கள் தான். ஆண்வெஜ் பெண்வெஜ் ரெண்டுநாள் எழுதலேனா ட்விட்டர்ல டெண்டுல்கர் கோச்சுக்குவாரு. அவருக்கு என் நன்றிகள்.

சாம்: சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தீங்களாமே. அதுக்கு அவங்க "நீயே ரோட்டுல போற வர்ற பொம்பளையப்பட்தி எழுதுற நாயி. Blogger 18+ enable பண்ணாம பிட்டு எழுதுறதுக்கு உன்னதான் நாயே புடிச்சு உள்ள போடனும்"னு சொல்லிட்டாங்களாமே... உண்மையா ஜெட்லி?.
ஜெட்லி: எந்த பண்ணாடை நாயி சொன்னுச்சு? இது சுத்த பொய்.. சைபர் கிரைம் கமிஷனர் சுஷ்மா ஸ்வராஜ் என் வாசகி தான். நான் கொடுத்த டீட்டெயில்ஸ் பத்தாது.. அனானிகளோட ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ், இன்ஷூரன்ஸ் ஜெராக்ஸ், கடைசியா சலவைக்கு துணி போட்ட ரசீது, கரண்ட் பில், மளிகை லிஸ்ட் எல்லாம் கேட்ருக்காங்க. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்."

சாம்: நீங்க ரொம்ப லோக்கல். அசிங்கமாதான் பேசுவீங்க... ஆபாசமாதான் எழுதுவீங்க... பொம்பளை பொறுக்கி... குழைவான வயிறு அது இதுனு அப்பாவி பெண்களைப் பத்தி எழுதுவீங்க............
ஜெட்லி: எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் அப்படி சொன்னான்? எந்த ங்கோ.....பையன் அப்படி சொன்னான்?

சாம்: நீங்கதான் சார் சொன்னீங்க.
ஜெட்லி: ஓ நான் தான் சொன்னேனா? அப்ப உண்மையாதான் இருக்கும். நான் கூட அனானி சொன்னானுங்கனு நினைச்சுட்டேன்.

சாம்: உங்க கூட ட்ரெயின்ல பஸ்ல கூட வர்ற பெண்கள் என்ன கலர்ல உள்ளாடை போட்டிருந்தாங்க. என்ன சோப் போட்டிருந்தாங்கனுலாம் சொல்றீங்களே. உங்களை பாக்க வரும் வாசகர்களின் குடும்ப பெண்களையும் இப்படி தான சார் பாப்பீங்க?
சந்துரு: ஹிஹி! பாப்பேன்... ஆனா அதைப் பத்தி எழுதமாட்டேன். அவன் பாட்டுக்கு அன் ஜாயின் பண்ணிட்டான்ன ஃபாலோயர் குறையும்ல.. ஹிஹி...


சாம்: நீங்க உண்மைலயே நல்ல எழுத்தாளர்னும், சுஜாதா மாதிரி எழுதுறீங்கன்னும் சொல்றாங்களே?

ஜெட்லி: ஆமா. சுஜாதாவா? என் வாசகர் தாம்பா. அடிக்கடி வாசகர் கடிதம் எழுதுவாங்க. வேலை வாங்கி கொடுனு கெஞ்சுனாங்க. அப்புறம் நான் தான் நம்ம வாசகி பிரதீபாகிட்ட சொல்லி ஜனாதிபதி மாளிகைல வேலை வாங்கி கொடுத்தேன். பிரதீபாக்கு என் நன்றிகள்.


சாம்: திடீர்னு அம்மா மேல் ஆணை, அக்கா மேல் பானைனு எழுதுறீங்களே... ஏன் சார்?
ஜெட்லி: சிலசமயம் ஓவர் சரக்குல இருக்கப்ப ஆபாசம் ரொம்ப ஓவரா  எழுதிருவேன். வாசகிகள் சில பேரு கோச்சுட்டு ஓட்டு போட மாட்டாங்க. இப்படி சென்டிமென்ட்டா எழுதுனா அழுதுட்டே திரும்பி வந்துருவாங்க. அதுக்குத்தான்.....

தொடரும்...............


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A MENTAL, BUT FOR SOME MENTAL YOU ARE THE WORLD)
EVER YOURS...  (இந்த பதிவு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தான்.)

Friday, 12 August 2011

சென்னை to சைனா இந்தியன் பொலிடிகல் மேப்பில் ஒரு பயணம்..


நானும் என் மகனும் சைனா மட்டுமல்ல, துபாய், அமெரிக்கா, என் வாசகர் அதிகம் பேர் இருக்கும் ஆப்ரிக்கா என எல்லா நாட்டுக்கும் அடிக்கடி செல்வோம். அனைத்து நாட்டு எம்பசிகளிலும் என் ரசிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் நான் விசா, டிக்கெட் எல்லாம் வாங்குவதே இல்லை. பைசா செலவில்லாமல் போய்விடுவோம். அப்படி செல்கின்றோம் என்றால் மதியம் பண்ணிரண்டரை மணிக்கு என் மகனை இரண்டு மேப் வாங்கி வரச் சொல்லிவிடுவேன்...

எந்த ஊருக்கு போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு ஆளுக்கொரு மேப்பில் பிடித்த ஊரின் மேல் உட்கார்ந்து கொள்வோம். பின் ஸ்டேசன் வந்தவுடன் இறங்கி செல்வோம். இப்படிதான் எப்போதுமே செல்வோம். நேற்று கூட சீனா போய் வந்தோம். அதைப் பற்றிதான் இந்த கட்டுரை.


மேப்பை வழக்கம் போல் சீட்டுக்கடியில்,(எங்கள் சீட்டுக்கு அடியில்) போட்டு விட்டு, அயர்ந்து தூங்கிவிட்டொம். பின் இமயமலை அடிவாரத்தில் இறங்கி என் வாசகர் பாபாஜியை சந்தித்தோம். சென்ற முறை அவர் எழுதிய வாசகர் கடிதத்தில் கண்டிப்பாக அவர் குகைக்கு வருமாறு கூறியிருந்தார். அங்கு அவரும் அவர் துணைவியாரும் நன்கு உபசரித்தார்கள். பின் என் கையெழுத்து போட்ட ஒரு மேப்பை அவர்கள் பயணங்களுக்கு பயன்படுத்த சொல்லி அன்பளிப்பாக கொடுத்துவிட்டு கண்டிப்பாக இண்ட்லியில் ரெண்டு வாக்கு போடுமாறு காலில் விழுந்து கதறிவிட்டு அங்கிருந்து தொடர்ந்தோம்.

இப்பொது எவெரெஸ்ட் சிகரம் மேல் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். நல்ல குளிர். அங்கே சகபதிவர் 'மசாலாபால் மகாதேவன்' கடை போட்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தால் தான் மசாலாபால் கொடுப்பார் என்பதால் ஜோதி தியேட்டரில் இப்போதெல்லாம் பிட்டுப்படங்கள் திரையிடாததைப் பத்தி அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன். நாங்கள் வந்த நோக்கத்தை புரிந்துகொண்டு மசாலா பால் ஒருவழியாய் கொடுத்துவிட்டார். குடித்துக்கொண்டே மீண்டும் பயணத்தை தொடங்கினோம். பின் அவரை போனில் அழைத்து "காசு கொடுக்க மற்ந்துட்டேன், அடுத்ததடவ தந்துடறேன்" என்றேன். "நீ இந்த பக்கமே இனிமே வராத. அந்த மசால பாலை நாய் நக்கிருச்சுனு நான் நினைச்சுக்குறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தார் மசாலாபால் மகாதேவன். இந்த வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வாசகர் ஓசிக்குடி ஓலவாயன் எழுதியிருந்தார். அவருக்கு என் நன்றிகள்

காலை எட்டு மணிக்கு பர்மாவில் இறங்கி அங்கிருக்கும் பிரதமருடன் "ப்ளாகில் விளம்பரம் செய்வது எப்படி?" என்பது குறித்த ஒரு கருத்தாய்வில் கலந்துகொள்வதாய் ப்ளான். ஆனால் திடீரென சீட்டில் ஈரத்துடன் சேர்ந்த நல்ல குளிர். பேண்ட் ஈரமாகியிருந்தது. மேப் நனைந்துவிட்டதால் வேறூவழி இல்லாமல் நானும் என் மகன் மேப்பில் உக்காந்து பயணப்பட்டேன்.

இப்படி எத்தனை நாளைக்குதான் மேப்பில் சுகமாக பயணம் செய்வது என நினைத்து கடவுள் நேற்று என்னை மேப்பில் மூச்சா போக வைத்துவிட்டார். மூச்சா போனதற்கு வாசகர்கள் ட்விட்டரில் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. ஒரு வாசகர் உணர்ச்சிவசப்பட்டு ஹக்கீஸ் நேப்கின் அனுப்பியிருந்தார். நெகிழ்ந்துபோய் மறுபடியும் மூச்சா போய்விட்டேன். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இமயமலை நல்ல குளிர் என்பதால் மூச்சாவை அடக்க முடியாததால் நிறைய காம்பரமைஸ் செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது..

யார் சொன்னது மேப் மேல் பலமணி நேரன் உக்காந்தால் சீட்டு வலிக்கும் என்று?  சொறி வரும் என்று..? பிளாடி பெக்கர் பீப்பிள்களுக்கு மட்டும் தான் அது என்று ???? ஒருமுறை உக்காந்து பாருங்கள். பைசா செலவில்லாமல் உலகம் சுற்றலாம்.  ஏன் சாம் நீங்கள் ரயிலில் போகாமல் மேப் பயணம் மட்டுமே செய்கிறீர்கள் என சென்றமுறை மம்தா பேனர்ஜி வாசகர் கடிதத்தில் கேட்டிருந்தார்.

வழக்கமாக சாதாரண ரயிலில் இந்தியா சுதந்திரம் பெற்றும் சுதந்திரம் பெறாமல் சங்கிலியால் இணைக்கபட்ட எவர்சில்வர் மக்குகள் இருக்கும்.. ஒருமுறை ஒரு வாசகர் ஓசி டீ வாங்கி கொடுத்தார். ஆனால் ஒரு டம்ளர் தான் இருந்தது. அவசரத்துக்காக அந்த எவர்சில்வர் செயின் மாட்டிய டம்ளரை பிடுங்கி அதில் டீயை ஊற்றி குடித்துவிட்டேன்... அதற்காக டிடிஆர் ஆபாசமாக பேசி என்னை வழியில் கீழே தள்ளி விட்டார். தலைக்குப்புற விழுந்து மண்டை பிலாக்காய் போல் பிளந்துவிட்டது. (அதற்காக எனக்கு கூகிள் பஸ்ஸிலும், டவுன் பஸ்ஸீலும் துக்கம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி...) ஆனாலும் டீயை காப்பாற்றிவிட்டேன். அந்த நாளில் இருந்து நான் ரயிலில் பயணம் செல்வதில்லையென என் ஒன்றுவிட்ட அண்ணன் மகனின் மாமியாரிடம் சத்தியம் செய்துகொடுத்துள்ளேன்.

எங்கள் முன்னால் இருந்த மேப்பின் மேல் ஆங்கில காமிக்ஸ் புத்தகம் வைத்துக்கொண்டு ஒரு ஆண்ட்டி உட்கார்ந்து இருந்தார். மிக பிரமாண்டமாய் ஒரு பையன் முன் பக்கம் உட்கார்ந்து அந்த ஆண்டியிடம்  பேசிக்கொண்டு இருந்தான்.... அந்த ஆண்டியை சரியாக பார்க்கவிடாமல் அந்த பையன் மறைத்துக்கொண்டே இருந்தான்.... அவனிடம் நேரடியாகவே "கொஞ்சம் தள்ளுப்பா. ஆண்டியை பாக்கனும். நான் ஐ.எஸ்.டி" என்றேன். எழுந்து வந்து முகரையை குத்தி உடைத்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் ஆந்த ஆண்டி என்மேல் காறித்துப்பி விட்டு வேற மேப்பில் ஏறிக்கொண்டார். சும்மா சொல்லக்கூடாது துப்பினாலும் அந்த ஆண்டி நச்சென இருந்தார்.

 பாதைக்கு பக்கத்தில் என் மேப் இருந்தாகாரணத்தால் இடம் பிடிக்க வந்த அவசரத்தில் என் பக்கத்தில் வந்து நின்ற பெண்ணின் முதுகு பக்கம் வியற்வையில் ஹமாம் சோப் இல்லாமல் குளித்து இருந்தது...சட்டை பேண்ட் அணிந்து இருந்தாள்.. (இதையெல்லாம் பார்த்து வெக்கமில்லாமல் எழுதுகிறாயே என கேட்பீர்கள். ஆனால் அனானிகளுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை.) அவளுக்கு பின்னால் நின்று காவாளித்தனமாய் நான் பார்த்துக்கொண்டு இருந்ததால் அவள் வெகுவேகமாய் தன் உடைமைகளை லக்கேஜ் பிளேசில் வைத்துக்கொண்டு இருந்தாள்... மின்னல் வெட்டாய் குழைவான அவளின் இடுப்பு வெளிப்பட்டதாலும் பின்னால் காமகொடூரன் நான் நின்று இருந்தகாரணத்தால் உடை நகரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக இழுத்து விட்டாள்.. இப்படி முகம் தெரியாத ஒரு அப்பாவிப்பெண்ணை வர்ணித்து அசிங்கமாக எழுதுகிறாயே என கேட்காதீர்கள். நான் அனானிகளுக்கு பதில் சொல்லமாட்டேன்.

ஒரு இளம் அம்மா இரண்டு வயது பையனோடு பயணம் செய்ய வந்து இருந்தார்.. பின் அந்த அம்மாவைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். இபடியே நான் பார்த்துக்கொண்டே இருப்பதை என் பையன் பார்த்துக்கொண்டே இருந்தான். காறி காறி மூஞ்சியில் துப்பினான். வழக்காம்போல் அதை துடைத்துப்போட்டுவிட்டு பார்ப்பதை கன்டினியூ செய்தேன்....

தொடரும்.....

 ============ ============
பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்


பார்ப்பது அல்ல நீ
பெண்களைப் பார்த்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS....

Thursday, 11 August 2011

அனானிகளுக்கு எச்சரிக்கை. (எ சாம் மார்த்தாண்டன் வார்னிங்!)


இரண்டு நாட்களாக வாசகர் கடிதம் எழுதவில்லை...வக்கீல் ஆலோசனை, இன்டெர்போல் ஆலோசனை, செக்ஸ் டாக்டர் ஆலோசனை, போன்ற விஷயங்களுக்கு அலைந்த காரணத்தால் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கவில்லை...
ஆனால் இப்படி ஒரு விஷயத்துக்கு பயணப்பட்ட போது பல அனுபவங்கள் பெற்று இருக்கின்றேன்..அந்த அனுபவங்கள் போதுமானது...
நானாக வலிய போய் எவரையும் நோண்டியதில்லை.... ஆனால் நோண்டியவர்கள் எவரையும் மன்னிக்கும் பரமபிதா அல்ல நான்... நான் ஒரு ஐ.எஸ்.டி.

எனக்கு நான்கு பொறம்போக்குகளை தெரியும்.. அவர்கள் ஐபி அட்ரஸ் என்வசம்..உங்களுக்கே தெரியும் அதில் முதல் பொறம்போக்கு நான் தான்.... மிச்சம் மூன்று பேர் என் ஃபேக் ஐடிகள்...

ஏதோ சாம் மார்தாண்டனை திட்டி விட்டோம்.. ஜாக்கி ஜட்டி போட்டு விட்டோம்.. ஆனால் அவன் சைடில் இருந்து எதிர்ப்பே வரவில்லை... அதனால் இன்னும் நாம் இன்னும் ஆடுவோம் என்று பலர் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்...அந்த ஆட்டம் ரொம்ப முக்கியம் அப்படியே இருங்கள்.... மானாட மயிலாட நீதிபதி கலா மாஸ்டர் என் வாசகர் தான். அவரிடம் சொல்லி உங்களை போட்டியில் இருந்து வெளியேற்ற சொல்கிறேன். அப்போது தெரியும் சாம் யாரென்று. ஆனால் என்னைப் போல தலையில் முக்காடு போட்டுகிட்டு வந்து உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.... அட்லிஸ்ட் உங்கள் ஜட்டி சைசையாவது கொடுத்து விட்டு பொங்குங்கள்.. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன்...

நான் சாதாரண மனிதன்.. கலா மாஸ்டரிடம் கம்ப்ளைண்ட் செய்வது மட்டுமே எனக்கு வேலை இல்லை.. தினம் ஆயிரம் வாசகர் கடிதம் எழுதுகிறென். அதில் குலுக்கல் முறையில் ஒன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டு என் வாசகர்களை சந்தோசப்படுத்துகிறேன். அதனால் உடனடி தீர்வு எல்லாம் உடனே கொடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறேன்.. தலைமை நீதிபதி என் வாசகர் தான். சீக்கிரம் தீர்ப்பதாக ட்விட்டரில் தகவல் அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. ஆனால் காத்திருந்து எதிரி மூக்கில் குச்சி விட்டு ஆட்ட முடியும்...அதுக்காக நிறைய குச்சி உடைப்பேன்.. அதுக்காக கிபி4000 வரை காத்து இருப்பேன்...


நான் எச்சரிக்கை கொடுப்பேன். கேக்கவில்லை என்றால் பின்னாலயே சென்று பின்புறத்தை கடித்துவிடுவேன். பின் நோ காம்ப்ரமைஸ். நான் ஒரு ஐ.எஸ்.டி.

என்ன செய்தாலும் என்னிடத்தில் ஆதாரங்கள் இருக்கின்றன... நேற்று மதியம் ஒரு மணிக்கு அனானிகள் ஒன்னுக்கு போனதை பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது அதை FBIயில் கொடுத்து சோதிக்க சொல்லி நிரூபிப்பேன்... இன்னும் என் வெள்ளைமாளிகை நண்பர்களிடம் பேசும் போது... நேஸ்கேம், வீடியோகேம், வாட்டர் ஹீட்டர், வீடியோகான் சிம் கார்டு என என்னன்னமோ சொன்னார்கள். அதில் 'பிட்டு தெரியுமா?' எனக் கேட்டேன். விரட்டிவிட்டார்கள்.


நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்று எதிர்த்த வீட்டுகாரனே தீர்மானிக்கிறான்... (ஏனென்றால் அவன் கொடியில் காயப்போடும் ட்ரெஸ்ஸை தான் திருடிப்போடுவேன்)


நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போதுதான் நாம் மீது எத்தனை பேர் நேசம் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது....
ஒபாமா,ரஜினிகாந்த்,ஜாக்கிசேகர், மன்மோகன் சின், சாருக்கான், சச்சின் டெண்டுல்கர், அம்மம்மா, அப்பப்பா, மாமா, த்ரிஷா, ஏஞ்சலீனா ஜோலீ, சானி டெப், ராஜபக்சே, எம்.என்.நம்பியார், தியாகராஜ பாகவதர், தெனாலி ராமன், பீர்பால், போன்றவர்களுக்கு என் நன்றிகள்... இவர்கள் எல்லாம் என் வாசகர்கள்.

மிக முக்கியமாக பல மட்டங்களில் மட்டமான ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது என்னைப் போல் நிறைய பேர் இருப்பது சந்தோஷமாக இருக்கின்றது...


நண்பரி ரமேஷின் விசாரிப்பு கடிதம்
============================================
Respected sir, iam your student ramesh. iam studying in 3rd standard b section. As iam suffering from fever please grant me two days leave.
yours sincerely,
Ramesh.
============================================
அன்பின் ரமேஷ். உங்கள் அன்புக்கு நன்றி. எதிரிகள் என்னதான் செய்துவிடுவார்கள் என பார்க்கலாம். எத்தனையோ பேரை என் வாழ்க்கையில் சந்தித்துவிட்டேன். போர்க்களத்தில் காயங்கள் சகஜம் தானே. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரமேஷ்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A MENTAL, BUT FOR SOME MENTAL YOU ARE THE WORLD)
EVER YOURS...Wednesday, 10 August 2011

மனித குரங்குகளின் புரட்சி. ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ!


போன வாரம் 2001ல் வந்த 'ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படம் பாத்துட்டிருந்தேன் சார். அப்ப ஃபேஸ்புக்ல யாரோ இப்ப வந்திருக்க "ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்" படத்தோட ட்ரெயிலர் ஷேர் பண்ணிருந்தாங்க. அது இந்த சீரிஸோட ரீபூட்டாம் (Series reboot). அதாவது தொடர்ச்சியா ஒரு தீம் வச்சு வரும் படங்கள் ஒரு கட்டத்துல முடிஞ்சிரும். அதை ஒரு பத்து வருஷம் கழிச்சு எதாச்சும் இயக்குனர் திருப்பி ஆரம்பிச்சு வைப்பாரு. அது பேருதான் சார் ரீபூட்(Reboot). உதாரணத்துக்கு சொல்லனும்னா முன்னாடி பேட்மேன் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இப்போ திரும்பி அதை க்ரிஸ்டோஃபர் நொலன் தனது பேட்மேன் பிகின்ஸ் படம் மூலமா திருப்பி ஆரம்பிச்சு வச்சாருல, அது மாதிரிங்க சார்.   

2001ல வந்த ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் படம் 1968ல வந்த ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தின் மறு உருவாக்கம் (ரீமேக் என்பதுக்கு நல்ல தமிழ் வார்த்தையை கண்டுபுடிச்சுட்டேன்).  2001 படம் சுமார் தான். அதைப் பார்த்துட்டு கண்டிப்பா ஒர்ஜினலையும் பாக்கனும்னு முடிவு பண்ணி 1968 படத்தையும் பாத்தேன். செம படம் சார் அது. அந்த காலத்துலயே என்ன மாதிரி மேக் அப் போட்ருக்கானுங்க? இப்ப கூட நம்ம ஊருல அப்படி போட முடியாது. அல்டிமேட்! படம் ரொம்ப நல்லா இருந்துச்சு! கதை என்னனு சொல்ல விருப்பம் இல்ல. முடிஞ்சா கீழ டாரண்ட் லின்க் தந்திருக்கேன். தரவிறக்கம் செஞ்சு பாருங்க.

1968க்கு அப்புறம் வரிசையா அந்த கதையின் தொடர்ச்சியாக மேலும் நாலு பாகங்கள் வந்துச்சு. முறையே Beneath the planet of the apes, Escape from planet of the apes, Conquest of planet of the apes மற்றும் Battle for the planet of the apes. இதுல இப்போ மூணாவது படத்தை பாதி பாத்திருக்கேன். நல்லாருக்கு.

 இப்போ 2011ல வந்திருக்க 'ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்துக்கும் மேல இருக்க பழைய படத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அதாவது 2011 படம் 'Conquest of the planet of the apes' படத்தோட கதைய தழுவி வந்திருக்கு. 2011ல வந்திருக்கும் படத்தையும் பார்த்துட்டேன். ரொம்ப ரொம்ப நல்லா இல்லேனாலும், ரொம்ப நல்லாருக்கு!

ஒரு முழுமையான சீரீஸ்க்கு ப்ளான் பண்ணிருக்குறதுனால Rise of the planet of the apes படம் ஒரு தொடக்கம் தான். இதுக்கு அடுத்து வரும் படம் நிச்சயம் இதைவிட அருமையா இருக்கும். Batman begins படத்தை விட Dark Knight நல்லா இருந்த மாதிரி.

இதுதான் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படங்களின் முழு விவரம். எனக்கு இந்த தீம் புடிச்சிருக்கு. மனுஷனை மிருகம் எல்லாம் சேர்ந்து மிருகம் மாதிரி நடத்த ஆரம்பிச்சா என்ன ஆகும் என்பதுதான் 1968ல் ஆரம்பிச்ச சீரீஸோட மூலக்கரு. இப்ப ஆரம்பிச்சிருக்கு series இதுல இருந்து மாறுபடும்னு நினைக்கிறேன். பாப்போம். ஆனா ஒன்னு சார். எனக்கு இந்த படங்கள் எல்லாமே புடிச்சிருக்கு. எனக்கு குரங்கு புத்திங்குறதுனால புடிச்சிருக்கோ என்னவோ! நீங்களும் பாருங்க சார்!


நா அப்புடி என்னத்த எழுதிட்டேன் நண்பர்களே? (இது ஒரு சுயசொறிதல்)

இந்த பதிவு ஒரு சுய சொறிதல். அதுவும் சந்சோஷமா சொறியிறேன்...என் சொறிதலை பார்த்து அருவருப்பு படுபவர்கள் ஓரமாக சென்று விடலாம்.
இந்த பதிவை படிக்காதீர்கள் என்று சொன்னாலும் கேட்ட மாட்டீர்கள். என் மீது பொறாமை படுபவர்கள் வழக்கம்போல நான் சொறிவதை
பார்த்துவிட்டு இறுதியில் காரி துப்பலாம்..

சரி இப்போ தலைப்புக்கே வர்றேன்.. ஆமா நா அப்புடி என்ன எழுதிட்டேன்
நண்பர்களே? ஏன் என் மீது இவ்வளவு பாசம் உங்களுக்கு? ஒரு பிட்டு பட
விமர்சகனுக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நினைக்கும் போது என்னை அறியாமலேயே சொறிந்து கொள்கிறேன்.

இத்தனைக்கும் நான் இதுவரை ஒரு பிட்டு புத்தகம் கூட வெளியிட்டதில்லை. ஒரு பிட்டு படம் கூட எடுத்ததில்லை. ஏதோ இண்டர்நெட்டில் தேடி பிடித்து சில கில்மா படங்களை பார்க்கிறேன். அதற்கு என் பானியில் விமர்சனம் எழுதுகிறேன். இதற்கா இவ்வளவு கோடான கோடி ரசிகர்கள்? இதற்கா இத்தனை ரசிகர் மன்றங்கள்?

பல நாள் நான் பிட்டு படம் பார்க்கும் போது யார் எது பேசினாலும் காதில் விழாதது போல படத்திலேயே கவனமாக இருந்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியா இது? பிட்டு ஓட்டும் தியேட்டர்களை தேடி வெயிலில் நாய் போல அலைந்திருக்கிறேன் அதுக்கு கிடைத்த வரவேற்பா இது?

சரி விஷயத்துக்கு வருகிறேன்.. இதை கண்டிப்பாக எழுத வேண்டும்.. என்னை காரி உமிழ இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பதிய வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். என்னதான் நான் காதலித்து இருந்தாலும், காதலியிடம் திட்டு வாங்கி இருந்தாலும், அடுத்தவன் காதலி தோலில் கை வைக்கும் போது சட்டென அவள் செருப்பை எடுத்து அடித்தால் ஏற்படும் எதிர்பாராத  அசிங்கம்... அந்த த்ரில்...அந்த பெருமை.. உணரப்படும் அல்லவா? அது போல தான் இதுவும்.. சில நேரங்களில் எழுதி தான் அந்த த்ரில்களை வெளிப்படுத்தி யிருக்கிறேன். அதற்காக எழுதுகிறேன். ஏனென்றால் நான் அசிங்கப்படுவதற்கு என்றுமே அசிங்கப்பட்டதேயில்லை.

"ஏண்டா எழுதுறேன் எழுதுறேன்னு சொல்ற பதிவே முடிய போகுது இன்னும் என்ன எழுத போறன்னு சொல்ல மாட்டேங்குறியேடா?" இப்படி சிலருக்கு தோணும்.. ஆனால் அவர்கள் என்னை பார்த்து பொறாமை படுபவர்கள். என் வளர்ச்சி பிடிக்காதவர்கள் அவர்கள் தயவு செய்து நான் எழுத போவதை படிக்க வேண்டாம். அனானிகளை நான் மதிப்பதில்லை என்று கி.மு30ல் என் தாத்தா அவர் தாத்தாவிடம் சத்தியம் செய்திருக்கிறார்.

நான் எழுத போவதை படித்து விட்டு நிறைய அனானிகள் பொறாமையில் பொங்கி  வழிவார்கள். ஆனால் அனானிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால் நானே ஒரு அனானி. நான் என்னுடைய பதிவில் அனானி ஆப்சனை தூக்கி விட்டேன். ஆனால் அனானி ஆப்ஷனை எடுக்காம இருப்பவர்கள் ப்ளாக்கிற்கு நிறைய முறை சென்று அசிங்க அசிங்கமாக கமெண்டு போட்டு இருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு ஐ.எஸ்.டி.

சரி இப்போது எழுதுகிறேன்..

நான் முன்னர் வலையில் வாசகர் கடித பற்றாகுறைய சொல்லியிருக்கிறேன் அல்லவா? அதற்காக ஒரு முறை நண்பர் "பன் தின்னி பண்டாரம்" அவர்கள் எனக்கு ஒரு வாசகர் கடிதத்தை கடனாக அனுப்பியிருந்தார். (நான் கெஞ்சி கேட்கவில்லை, அவராகவே அனுப்பினார்) நானும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை திருப்பி தருவதாக ஒப்புகொண்டேன். ஆனால் கடிதம் வாங்கி ஒரு வருடம் ஆகியும் என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதற்கு நான் பன் தின்னி பண்டாரத்திற்கு தாமததிற்கு வருந்தி ஒரு புறா அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அந்த வாசகர் கடிதத்தை அன்பளிப்பாக என்னையே வைத்து கொள்ள சொல்லிவிட்டார்

எங்களுக்குள் நடந்த கடித உரையாடல் இதோ. என் கடிதத்திற்கு பன் தின்னி பண்டாரம் அனுப்பிய பதில் இதோ

"அன்பின் மார்த்தாண்டன்,

தயவு செஞ்சி  எனக்கு நீ வாசகர் கடிதம்னு எதும் அனுப்பிறாத...
நான் என் ப்ளாக்க டீசண்டா வச்சிருக்கேன்.. 
நீ கடிதம் அனுப்பி அத நாறடிச்சிறாத.
வழக்கம் போல நீ உனக்கே வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு
அதை நீயே வெளியிட்டு நீயே படித்தும் பார்த்துக்கொள்.. உன்ன பாலோ
பண்ண பாவத்துக்கு ஒரு ஒட்டை போட்டுட்டு போறேன்.

நான் உனக்கு அனுப்பிய அந்த டீசண்டான வாசகர் கடிதத்தை என் அன்பளிப்பாக நீயே வைத்துக்கொள்

இப்படிக்கு

பன் தின்னி பண்டாரம்"

எவன்யா சொல்லுவான் இதுமாதிரி... அண்ணன், தம்பி, சித்தப்பா, கொழுந்தியா, கள்ளகாதலன்.. இப்ப விக்கிற விலைவாசில யாராவது வாசகர் கடிதம் வேணாம்னு சொல்லுவாங்களா? ஏற்கனவே என்னுடைய ஆப்பிரிக்கா நணபரும் வாசகர் கடிதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.உங்களுடைய இந்த பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.

திரும்பவும் கேக்குறேன்.. நா அப்புடி என்ன எழுதிட்டேன்? எனக்கு எதுக்கு பாராட்டு விழா?


நான் எப்போதும் உங்கள் அன்புக்கு குவளை சட்டியாகவே (பாத்திரமாக) இருக்க ஆசைப்படுகிறேன்.

என்றும் உங்களை ஓட்டு போடச்சொல்லி கெஞ்சும்,


சாம் மார்த்தாண்டன்.

Tuesday, 9 August 2011

ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ் /18 ப்ளஸ் or மைனஸ்

ஆல்பம்

வருகிற 1945ம் வருடம் ஜப்பானின் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல்  நடத்த இருப்பதாக, நாஸாவிலிருந்து என்னுடைய பதிவுலக நண்பர் போன் செய்திருந்தார். அணுகுண்டு என்பது குண்டாக இருக்கும். அதற்குள் அணு இருக்கும். அது வெடித்தால் "டொம்" என்று சத்தம் வரும், நாம் தீபாவளிக்கு அணுகுண்டு வெடிக்கும் போது வரும் சத்ததை போல. என் பக்கத்து வீட்டில் ஒரு பெண் இருந்தாள். 'கும்' என்று இருப்பாள். அவள் பெயர் அணு. அவள் குண்டாக இருப்பாள். எனவே நான் அவளை அணுகுண்டு என்றே கூப்பிடுவேன்.

----------------------------------------------------------------------------------------------மிக்சர்: 

சென்னையும் டெல்லியும் நாளை IPL  போட்டியில் மோத உள்ளன.. இந்த போட்டியில் முதலில் பேட் செய்பவர்களுக்கு பிட்ச் சாதகமாகவும், இரண்டாவது  பவுளிங் செய்பவர்களுக்கு பால் சாதகமாகவும் இருக்கும் என கிரவுண்டில் புல் வெட்டுபவர் எனக்கு டிவிட்டரில் அனுப்பியிருந்தார். மேலும், கிரவுண்டுக்கு வெளியில் உள்ள மரத்தில் ஏறி கிரிக்கெட் பார்க்க ஒரு டிக்கெட் இருப்பதாகவும், என்னை அந்த டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனக்கு மொகாலி சென்று கிரிக்கெட் பார்க்க நேரம் இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். மன்னிக்க வேண்டும் நண்பரே.
---------------------------------------------------------------------------- இந்த வார கடிதம்:

பிரியமுள்ள சாம் அவர்களுக்கு,

என் பெயர் ராமச்சந்திரன்..நான் உங்களது வலைப்பதிவை கடந்த நூற்றி நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக படித்து வருகிறேன். பதிவுலகுக்கு தாங்கள் ஆற்றும் பணி மகத்தானது. பல தவறுகளை செய்து கொண்டு இருந்த நான் தங்கள் வலைப்பதிவுகளை படித்த பின்னர் மனிதனாக மாறி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதற்கு முன்னர் காண்டாமிருகமாக அலைந்தேன்.

தினமும் தங்கள் பதிவுகளை படித்து விட்டு தான் உறங்கச் செல்வேன். காலையில் உங்கள் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் பார்த்துவிட்டுத்தான் கக்கூஸ் போவேன். என் நண்பர்கள் பலரும் தங்கள் பதிவுகளை படித்து திருந்தி மனிதனாக வாழ்ந்து வருகின்றனர். எங்களை மனிதர்களாக மாற்றியமைக்கு நன்றி.

நீங்கள் ஒரு வாந்தி..சீ..காந்தி.

தொடரட்டும் உங்கள் சனி.. வாழ்த்துக்கள்.

-----------------------------------------------------------
நன்றி ராமச்சந்திரன். நானும் ஒரு காண்டாமிருகமாக இருக்கவே விரும்புகிறேன்
ஏனென்றால் அதில்தான் 'காண்டம்' வருகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------இந்த வார சலனப்படம்;

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.  நடன அசைவுகள் மிகவும் அழகு. கண்ணை மூடிக்கொண்டு,காதைப் பொத்தி கொண்டு இந்தப் பாட்டைக் கேளுங்கள். ரசிப்பீர்கள்.

டிஸ்கி:
எனது வலைத்தளத்தை போலவே போலி வலைத்தளங்கள் உலவுவதாக என் வலையுலகநணபர்கள் போன் செய்தார்கள். நான் அதை பற்றி கவலை பட போவதில்லை. அவர்களுக்கு என் வளர்ச்சி பதில் சொல்லும். இப்போது நான் 5அடி 6அங்குலம் உள்ளேன். விரைவில் மேலும் வளர்வேன்.

இந்த வலைத்தளம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்.
மறக்காமல் ஓட்டு போட்டு என்னை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். ஓட்டுப் போடுவதைப் பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

பிரியங்காவுடன்,

சாம் மார்த்தாண்டன்.

மினி ஆண்வெஜ் அண்ட் பெண்வெஜ்/ செவ்வாய்/ 18ப்ளஸ்,மைனஸ்

ஆல்பம்

இன்று காலை இந்திரா காந்தி அவர்கள் ஆகாய மார்கமாக மெட்ராஸ் வருவதாக ரேடியாவில் சொன்னார்கள். கண்டிப்பாக அவர் மெட்ராஸ் வருவார் என்பது என்னுடைய கருத்து. அவரும், ஜவர்கர்லால் நேருவும் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, நேபாள் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி.
---------------------------------------------------------------------------------------------------------

மிக்சர்: 


நான் தரை மார்கமாக போருரிலிருந்து கிண்டிக்கு வண்டியில் சென்றேன்.அப்போது எதிரே வந்த சைக்கிளில் மோதி கீழே விழுந்து விட்டேன். அதற்கு எனக்கு கூகிள் பஸ்ஸிலும், டவுன் பஸ்ஸிலும் நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருந்தனர். வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார கடிதம்:
Dear marathaandan,

I am sundi mothiram from aappirica. I like your blog very much. As i am suffering
from chicken kooniyaa, i am unable to read your blog for the last 3 days.
Kindly forgive me and grant me leave.

I'll read ur blog after my recovery. I like all your philosophys. especially

(a+b)^2= a^2+ 2ab+b^2.....  this is really true.

If you come to aappirica please visit my home. It will be very beautiful when u r
here. I'll prepare food and we can eat together.

if u publish this letter, i'll read it and i'll be happy.....

Thank you....

-------------------------------------------------------------------------------------------------
நன்றி சுண்டி மோதிரம். என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம்.........

-----------------------------------------------------------------------------------
 இந்த வார நிழற்படம்;
சேவிங் செய்த குரங்கு என்று சொல்வார்களே அது இது தான். இந்த போட்டோ என் கை வண்ணம், சேவிங் அல்ல!
-------------------------------------------------------------------------------------------------------

நான் "வெஜ்":

ஆம்.. நான் இந்த வாரத்திலிருந்து வெஜ்ஜுக்கு மாறிவிட்டேன். சிக்கன் மற்றும் மட்டன் இரண்டையும் நேற்றிலிருந்து வெஜ் வகேராவில் சேர்த்துவிட்டனர். எனவே நானும் வெஜ்ஜுக்கு மாறிவிட்டேன். இனிமேல் சாப்பிட்டால் வெஜ் சிக்கனும், வெஜ் மட்டனும் மட்டுமே சாப்பிடுவதென உறுதி எடுத்துள்ளேன்.--------------------------------------------------------

இந்த வலைத்தளம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்.
மறக்காமல் ஓட்டு போட்டு என்னை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். ஓட்டுப் போடுவதைப் பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

பிரியங்காவுடன்,
சாம் மார்த்தாண்டன்.

Monday, 8 August 2011

பரசுராம் வயது 55- உலகை உலுக்கிய குறும்படம் (விமர்சனம்)


பரசுராம் வயது 55: 


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு: ஜாக்கிசேகர் (எ) தனசேகரன்
இசை: ஏ.ஆர்.ரெஹ்மான். 

கீழே படம் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த குறும்படத்தின் கதையை ஒற்றைவரியில் சொல்லி விடலாம். இப்போது நடக்கும் இந்த விலையேற்றம் அயல்நாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் இதனால் பாதிக்கப்பட்டு வீட்டு வாடகை தரமுடியாத ஒரு மிடில் க்ளாஸ் 55 வயதான ஒரு மனிதர் மனைவியை கண்கலங்க விட வேண்டாம் என நினைப்பவர். அதற்காக எதையும் செய்ய துணிபவர். "எதையும் என்றால் கொலை கூட" என்ற இயக்குனரின் முன்னுரையுடன் தொடங்குது. கதை என்னன்னா அந்த 55வயது மனிதர் பலர் வயிற்றில் அடித்து, நகையைப் பிடிங்கி ஏமாற்றி தன் குடும்பத்தை காத்துக்கொள்கிறார். கடைசில அதுக்கு விளக்கமும் கொடுக்குறார். இக்குறும்படத்தில் நடித்துள்ள பரசுராம் எதோ சந்தர்ப்பத்துனால வேறவழியில்லாம திருட்டுத்தனம் பண்றாருனு நினைச்சா பரம்பரை பரம்பரையாக  தொழில் செய்பவர்களை ஒத்து இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்ய கூடாத காரியத்தை பரசுராம் செய்வதாக காண்பித்து இதை நடுத்தர குடும்பத்திற்கு சமர்ப்பணம் வேறு செய்கிறார் இயக்குனர்.

எல்லாவற்றுக்கும் மேல் பரசுராம் நம் ஆக்ஷன் கிங் அர்ஜூனை விட பலசாலி என்ற கருத்தை இயக்குனர் ஊன்றி சொல்லியிருக்கிறார். வேகாத வெயில், மழைனு பாக்காம பரசுராம் நடந்துட்டே இருக்காரு. அப்பப்ப பேசுவாரு. கை கொடுப்பாரு. திருடிட்டு ஓடுவாரு. இந்த மாதிரி பல அற்புத காட்சிகள் உண்டு.

இது ஒரு குறும்படம் என்றாலும் ஒரு முழு நீள திரைப்படத்தை பார்த்த ஒரு
உணர்வை தருகிறது. 20 நிமிஷ படத்தில் 15நிமிடம் பரசுராம் நடக்கிறார். 4நிமிடம் பெயர் போடப்படுகிறது. 20நிமிடபடம் 200நிமிஷ படம் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பது...சாரி.. நடந்துகொண்டே இருப்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு. சரி கருமத்தை ஆஃப் பண்ணிரலாம் எனத் தோணும் போது படம் டக்கென முடிந்துவிடுவது கண்டிப்பாக இயக்குனரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும்.

மேலும் இதில் நடித்திருக்கும் நடிகர்களை எப்படி இப்படி இயல்பாக நடிக்க வைத்தார் இயக்குனர் என்பது உண்மையிலேயே வியப்பை
தருகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் மாரடைப்பு வந்து துடிக்கும் ஒருவரை பிடித்து உலுக்கி "சார் ஆட்டோ காசு தாங்க சார். ஆட்டோ காசு தாங்க சார்" என சிரித்துக்கொண்டே பதற்றத்துடன் சொல்கிறார். இயக்கனரின் டச் அந்த இடத்தில் தெரிந்தது.  கதாநாயகர் பரசுராமின் கண்களில் கதையில் இழையோடியிருக்கும் சோகம் காண்பிக்கபட்டு இருக்கிறது. அதை மறைக்கவே இறுதி காட்சியில் அவர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொள்கிறார். நாடி நரம்பு சதை ரத்தம் புத்தி கை கால் ஈரல் கல்லீரல் என அனைத்திலும் சினிமாவெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும்.


வழக்கமாக குறும்படங்களில் கேமரா கோணங்களுக்கு அதிக முக்கியதுவம் இருக்காது ஆனால் இதில் கேமரா கோணங்கள் அனைத்திலும் ஒரு தேர்ச்சி தெரிகிறது. "என்னப்பா காமிரா கோணமாணலா இருக்கு?"னு யாருமே சொல்ல முடியாது! 20நிமிடம் ஒருவரின் வாக்கிங்கை (walking) இந்தனை கோணங்களில் காட்ட முடியுமா என நானே வியந்து விட்டேன். NDTVயில் நடந்துகொண்டே பேட்டி கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று வரும். அதையெல்லாம் மிஞ்சிவிட்டது இந்த குறும்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஒரிஜினல் படத்தை விட இந்த படத்திற்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது எனலாம். ரஹ்மானுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தன் சொந்த செலவில் படம் தயாரித்து இந்த இயக்குனரை இயக்க சொல்லி தானே 'நடந்தும்' கொடுப்பார்.

படம் முடிந்த பின்பு வரும் behind the scenes பழைய ஜாக்கிசான் படங்களை
நினைவு படுத்துகின்றன. இயக்குனர் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சிகளில் "இயக்குனரே நடித்திருக்கலாமே" என நமக்குத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் காமிராவை தூக்கி நடந்துகொண்டே நடிக்க முடியாது என்பதால் நடிகர் பரசுராமை 'நடக்க' வைத்துவிட்டார் போல! படத்தின் மொத்த செலவு 850ரூபாய் என இயக்குனர் குறிப்பிட்டிருந்தார். ஐயோடெக்ஸ் மற்றும் ஜண்டூபாம்க்கு அவ்வளவு செலவு ஆயிருக்கலாம்.

இது உலகை உலுக்கப் போகும் குறும்படம். காலை வாக்கிங் செல்வொர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளைப் பற்றி சொல்லும் ஒரு infotainment movie எனவும் சொல்லலால். தமிழ் குறும்பட உலகம் இரண்டு கிலோமிட்டர் முன்னேறியுள்ளது.

என்றென்றும் நன்றியுடன்

மார்த்தாண்டன்.