ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Wednesday, 10 August 2011

நா அப்புடி என்னத்த எழுதிட்டேன் நண்பர்களே? (இது ஒரு சுயசொறிதல்)

இந்த பதிவு ஒரு சுய சொறிதல். அதுவும் சந்சோஷமா சொறியிறேன்...என் சொறிதலை பார்த்து அருவருப்பு படுபவர்கள் ஓரமாக சென்று விடலாம்.
இந்த பதிவை படிக்காதீர்கள் என்று சொன்னாலும் கேட்ட மாட்டீர்கள். என் மீது பொறாமை படுபவர்கள் வழக்கம்போல நான் சொறிவதை
பார்த்துவிட்டு இறுதியில் காரி துப்பலாம்..

சரி இப்போ தலைப்புக்கே வர்றேன்.. ஆமா நா அப்புடி என்ன எழுதிட்டேன்
நண்பர்களே? ஏன் என் மீது இவ்வளவு பாசம் உங்களுக்கு? ஒரு பிட்டு பட
விமர்சகனுக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நினைக்கும் போது என்னை அறியாமலேயே சொறிந்து கொள்கிறேன்.

இத்தனைக்கும் நான் இதுவரை ஒரு பிட்டு புத்தகம் கூட வெளியிட்டதில்லை. ஒரு பிட்டு படம் கூட எடுத்ததில்லை. ஏதோ இண்டர்நெட்டில் தேடி பிடித்து சில கில்மா படங்களை பார்க்கிறேன். அதற்கு என் பானியில் விமர்சனம் எழுதுகிறேன். இதற்கா இவ்வளவு கோடான கோடி ரசிகர்கள்? இதற்கா இத்தனை ரசிகர் மன்றங்கள்?

பல நாள் நான் பிட்டு படம் பார்க்கும் போது யார் எது பேசினாலும் காதில் விழாதது போல படத்திலேயே கவனமாக இருந்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியா இது? பிட்டு ஓட்டும் தியேட்டர்களை தேடி வெயிலில் நாய் போல அலைந்திருக்கிறேன் அதுக்கு கிடைத்த வரவேற்பா இது?

சரி விஷயத்துக்கு வருகிறேன்.. இதை கண்டிப்பாக எழுத வேண்டும்.. என்னை காரி உமிழ இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பதிய வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். என்னதான் நான் காதலித்து இருந்தாலும், காதலியிடம் திட்டு வாங்கி இருந்தாலும், அடுத்தவன் காதலி தோலில் கை வைக்கும் போது சட்டென அவள் செருப்பை எடுத்து அடித்தால் ஏற்படும் எதிர்பாராத  அசிங்கம்... அந்த த்ரில்...அந்த பெருமை.. உணரப்படும் அல்லவா? அது போல தான் இதுவும்.. சில நேரங்களில் எழுதி தான் அந்த த்ரில்களை வெளிப்படுத்தி யிருக்கிறேன். அதற்காக எழுதுகிறேன். ஏனென்றால் நான் அசிங்கப்படுவதற்கு என்றுமே அசிங்கப்பட்டதேயில்லை.

"ஏண்டா எழுதுறேன் எழுதுறேன்னு சொல்ற பதிவே முடிய போகுது இன்னும் என்ன எழுத போறன்னு சொல்ல மாட்டேங்குறியேடா?" இப்படி சிலருக்கு தோணும்.. ஆனால் அவர்கள் என்னை பார்த்து பொறாமை படுபவர்கள். என் வளர்ச்சி பிடிக்காதவர்கள் அவர்கள் தயவு செய்து நான் எழுத போவதை படிக்க வேண்டாம். அனானிகளை நான் மதிப்பதில்லை என்று கி.மு30ல் என் தாத்தா அவர் தாத்தாவிடம் சத்தியம் செய்திருக்கிறார்.

நான் எழுத போவதை படித்து விட்டு நிறைய அனானிகள் பொறாமையில் பொங்கி  வழிவார்கள். ஆனால் அனானிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால் நானே ஒரு அனானி. நான் என்னுடைய பதிவில் அனானி ஆப்சனை தூக்கி விட்டேன். ஆனால் அனானி ஆப்ஷனை எடுக்காம இருப்பவர்கள் ப்ளாக்கிற்கு நிறைய முறை சென்று அசிங்க அசிங்கமாக கமெண்டு போட்டு இருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு ஐ.எஸ்.டி.

சரி இப்போது எழுதுகிறேன்..

நான் முன்னர் வலையில் வாசகர் கடித பற்றாகுறைய சொல்லியிருக்கிறேன் அல்லவா? அதற்காக ஒரு முறை நண்பர் "பன் தின்னி பண்டாரம்" அவர்கள் எனக்கு ஒரு வாசகர் கடிதத்தை கடனாக அனுப்பியிருந்தார். (நான் கெஞ்சி கேட்கவில்லை, அவராகவே அனுப்பினார்) நானும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை திருப்பி தருவதாக ஒப்புகொண்டேன். ஆனால் கடிதம் வாங்கி ஒரு வருடம் ஆகியும் என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதற்கு நான் பன் தின்னி பண்டாரத்திற்கு தாமததிற்கு வருந்தி ஒரு புறா அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அந்த வாசகர் கடிதத்தை அன்பளிப்பாக என்னையே வைத்து கொள்ள சொல்லிவிட்டார்

எங்களுக்குள் நடந்த கடித உரையாடல் இதோ. என் கடிதத்திற்கு பன் தின்னி பண்டாரம் அனுப்பிய பதில் இதோ

"அன்பின் மார்த்தாண்டன்,

தயவு செஞ்சி  எனக்கு நீ வாசகர் கடிதம்னு எதும் அனுப்பிறாத...
நான் என் ப்ளாக்க டீசண்டா வச்சிருக்கேன்.. 
நீ கடிதம் அனுப்பி அத நாறடிச்சிறாத.
வழக்கம் போல நீ உனக்கே வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு
அதை நீயே வெளியிட்டு நீயே படித்தும் பார்த்துக்கொள்.. உன்ன பாலோ
பண்ண பாவத்துக்கு ஒரு ஒட்டை போட்டுட்டு போறேன்.

நான் உனக்கு அனுப்பிய அந்த டீசண்டான வாசகர் கடிதத்தை என் அன்பளிப்பாக நீயே வைத்துக்கொள்

இப்படிக்கு

பன் தின்னி பண்டாரம்"

எவன்யா சொல்லுவான் இதுமாதிரி... அண்ணன், தம்பி, சித்தப்பா, கொழுந்தியா, கள்ளகாதலன்.. இப்ப விக்கிற விலைவாசில யாராவது வாசகர் கடிதம் வேணாம்னு சொல்லுவாங்களா? ஏற்கனவே என்னுடைய ஆப்பிரிக்கா நணபரும் வாசகர் கடிதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.உங்களுடைய இந்த பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.

திரும்பவும் கேக்குறேன்.. நா அப்புடி என்ன எழுதிட்டேன்? எனக்கு எதுக்கு பாராட்டு விழா?


நான் எப்போதும் உங்கள் அன்புக்கு குவளை சட்டியாகவே (பாத்திரமாக) இருக்க ஆசைப்படுகிறேன்.

என்றும் உங்களை ஓட்டு போடச்சொல்லி கெஞ்சும்,


சாம் மார்த்தாண்டன்.

16 comments:

Anonymous said...

mudiyala sam.....chanceaa illa....sure u r blog will be in top soon...hats off..next post expecting on the topic of "last warning for anony" vasagar virupam.

cheers

Anonymous said...

ha ha. I cant stop laughing. Keep going. Angatham ungalukku nanraaga varugirathu. In the mean time, I am a regular reader of Jakie sekar.

Anonymous said...

Jai Bakki

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
imsai said...

கலக்குரிங்க சாம்,ஜாக்கி படிச்சுட்டு பிரஷர் எறிமண்டை ஒடஞ்சி சாவப்போறான.

சாம் மார்த்தாண்டன் said...

ஜாக்கி சான் ஏன் சார் என் ப்ளாகை படிக்கப் போறாரு? :-(

Anonymous said...

Great Sam!

ராவணன் said...

சாம்...............ச்சூப்பர்...........கலக்குற மச்சி....

Mohamed Faaique said...

ராசா,.... உன் விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லைய....

சூப்பர்...

Anonymous said...

அருமை அருமை..... ஜாக்கிசான் செய்யும் சில அலப்பறைகள்

1. என்னமோ இவர்தான் வெகுஜன மக்களில் ஒருவர் போல பில்டப் தருவது.
2. என்னமோ இமெயில் இவருக்குமட்டும்தான் வருவது போல அலப்பறை பண்ணுவது.
3. திமுகவிடம் இருந்து காசு வாங்கிவிட்டு அதற்கு தகுந்த மாதிரி கூவாமால் கொடுத்த காசுக்கு மேலாக கூவுதல்.
4. லோக்கல் மொழியில் ங்கொத்தா என்று எழுதி என்னவோ இவர்தான் தமிழ்நாட்டின் மார்ட்டின் லூதர் கிங் போல சிலாகித்து கொள்வது.....

ராஜரத்தினம் said...

நான் இப்பதான் உங்க பதிவுகளை படித்தேன். சிரிச்சி வயிறு புண் பாஸ். ஆனால் மனத்தில் சந்தோஷம். Keep it up. அவன் கெஞ்சினாகூட நீங்க இதை நிறுத்தாதீங்க.

Anonymous said...

அண்மையில் பெங்களூர் செல்ல நேர்ந்தது சதாப்தியில். நான் கடைசி நேரத்தில் தான் ட்ரையின் பிடிப்பேன். ஓடிப்போய் ட்ரையினில் தொற்றிய போது, என் சீட்டுக்குப் போகும் வழியில் ஒரு வழுக்கைத் தலையன் போகும் வரும் பெண்களை பார்வையாலேயே கற்பழித்துக் கொண்டு உட்காந்திருந்தான். அருகிலேயே ஒரு ஆண்ட்டி, கைக்குழந்தையுடன்! அந்த ஆண்ட்டி பார்ப்பவர்களுக்கு எல்லாம் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தார். பாண்ட்ஸ் பவுடர் தான் உபயோகிப்பார் போல. நாயுடு ஹால் பிராண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சுடிதாரை மீறி வனப்பு தெரிந்தது. இன்னொன்றின் பிராண்டு என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை சேலை கட்டியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

இப்படி ஒரு ஃபிகரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு அந்த பக்கி ஏன் அடுத்த ஃபிகரை சைட் அடிக்கிறானோ!

Anonymous said...

//நான் அசிங்கப்படுவதற்கு என்றுமே அசிங்கப்பட்டதேயில்லை.//

நீ ரெம்ப லோக்கலப்பா... சாரி ஐ எஸ் டி.... கலக்கல்

Barath said...

"நல்லா இருக்கு கற்பனை"
இதே கமெண்டை உங்க மற்ற பதிவுக்கும் போட்டேன்

Katz said...

thala, innila irunthu ungalai kuruvaaka ethukiren.

ஜோதிஜி said...

இன்று தான் முதன் முதலாக உள்ளே வந்தேன். தனி நபர் தாக்குதல், அசிங்கமான பின்னூட்டங்கள் என்று எத்தனை முறை கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் உங்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு வியக்க வைத்துள்ளது. ஏறக்குறைய பல பழைய பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஏற்கனவே கேஆர்பி செந்தில் ஒரு பதிவில் சேகரை நீங்க கலாய்த்து எழுதுவது குறித்து எழுதியிருந்தார். இன்று தான் புரிந்தது. சேகர் சில பதிவுகளில் ஐபி அட்ரஸ், சைபர் கிரைம், கம்ப்ளைண்ட் போன்றவற்றைப் பற்றியும் எழுதியிருந்த அத்தனை விசயங்களும் இங்கே வந்து பல விசயங்களை படித்த பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது.

செந்தில் சொன்னது தான் உண்மை.

சில சமயங்களில் பல விசயங்களை ஈசியாக எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டியது தான்.

பல முறை வாய்விட்டு சிரித்தேன். சிரித்துக் கொண்டேஇருக்கின்றேன். ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி சிரித்து. உங்க டைமிங் சென்ஸ் வியக்க வைத்தது.

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி