ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 9 August 2014

சாப்பாட்டுக் கடை - "மொத்து" மெஸ்!!!ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடையில் அடி வாங்கி. வழக்கமாய் காலை உணவு உண்ணும்போது  மட்டுமே வீட்டில் பூரிக் கட்டையால் அடி விழும். மதியம் அலுவலகத்தில் எவனிடமாவது உரண்டை இழுப்பதைப் பொறுத்தும் , இரவில் வீட்டிற்கு சரக்கை போட்டுவிட்டு லேட்டாக வருவதைப் பொறுத்தும் பூரிக்கட்டை, தோசைக்கரண்டி, ஈய்ய குண்டான் என விதவிதமான இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் அடி விழும்.  அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை அடி விழுவதை தவிர்ப்பதற்காக குடும்பத்துடன்  இருப்பதில்லை. சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், நான் என் வீட்டுக்கு பக்கத்திலுருக்கும் மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் போலவோ அல்லது பெண் வீட்டுக்காரர்  போலவோ சென்று சாப்பிட்டு சில சமயம் வசமாக மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அப்படி ஒரு  நாள் வீட்டில் எல்லோரும் வெளியே சென்ற போது , மதிய சாப்பாட்டிற்கு யாரை உசார் செய்யலாம் என்று  நினைத்துக் கொண்டே தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ்.

சைதாப்பேட்டை காவாயை தாண்டி, அந்த  தெரு முக்கில் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. நான் சிறு வயதில் குழந்தை  நட்சத்திரமாக அங்கு நிறைய முறை கூட்டத்தோடு கூட்டமாக சென்று சாப்பிட்டுவிட்டு நைஸாக சந்தில் பூந்து  எஸ்கேப்பாகி வந்திருக்கிறேன். கால மாற்றத்தில் சிக்கென்று சிறுத்தை குட்டியாக இருந்த உடம்பு, கருத்து  பெருத்த குட்டியாகிவிட்டதால், சந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் அவ்வளவு சுலபமாக பூந்து எஸ்கேப்  ஆக முடிவதில்லை. அப்படியே எஸ்கேப் ஆனாலும் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் என்னால்  ஓடவும் முடிவதில்லை. நூறு மீட்டர் தாண்டுவதற்குள் விரட்டிப் பிடித்து விடுகிறார்கள். இப்படி மதிய உணவை  பாதிக்கும் இத்தகைய காரணிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது மண்டபத்திற்கு அருகிலுள்ள மொத்து மெஸ்.


யாராவது சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஏமாற்றும் பட்சத்தில் மெஸ்ஸில் இருக்கும் அனைவரும் ஒன்றாய்  கூடி நன்றாக மொத்து மொத்து என மொத்தி அனுப்புவார்களாம். அதனாலேயே முத்து மெஸ் என்ற பெயர்  மாறி காலப் போக்கில் மொத்து மெஸ் என்றானது. நாம் வாங்காத அடியா. வழக்கம் போல நாம  போய்த்தான் பார்ப்போமே என்று அன்றைய காலையை ஆரம்பித்தேன். ஓப்பன் கிச்சன். உள்ளே விசாலமான  இடம். சின்னச் சின்ன டேபிள்களோடு சுத்தமாய் இருந்தது. இட்லி வடை, ஆர்டர் செய்தேன். இட்லிக்கு  ரெண்டு சட்னி, சாம்பார் என சைட் டிஷ். "வடகறி" கேட்டேன் காலியாகிவிட்டது என்றார்கள். வடகறி  இல்லையென்றால் என்ன? "சுப்ரமணியபுரம்" இருந்தால் கொடுங்கள் என்று என் சினிமா அறிவை வைத்து ஒரு  மொக்கை காமெடி செய்தேன். கல்லாவிலிருந்தவர் கடுப்பாகி போன வாரம் போட்ட மசால் வடையை என்  மண்டையை குறி வைத்து எறிய, வலது புற நெற்றியில் பட்டு மசால் வடை சைஸுக்கு புடைத்துவிட்டது.

இட்லி மிக மிருதுவாக  இருந்தது. வடை சைசில் சின்னதாய் இருந்தாலும் கிரிஸ்பி. அடுத்ததாய் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த  போது அந்தக் குரல் கேட்டது "டேய் நாயே உன் தட்டுல சாப்புடுறதா நெனைச்சி என் தட்டுல இருந்த  வடையையும் இட்லியையும் திண்ணுட்டடா சனியனே" என்று. லைட்டாக அசடு வழிந்துகொண்டே பக்கத்து  டேபிளுக்கு நகர்ந்தேன்.  உப்பலான பூரியை பக்கத்திலிருந்தவர் ஆர்டர் செய்திருக்க, நானும் பூரியென்றேன்.  கெட்டியான கிழங்காய் இல்லாமல், வெங்காயம் அதிகம் போட்டு கிழங்கோடு, கொஞ்சம் தளர இருக்கும்  கிழங்கு, காந்தல் இல்லாத எண்ணையில் பொரிக்கப்பட்டு  கிழங்கோடு சாப்பிடும்போது........ "உவ்வே" என்று  பக்கத்திலுருப்பவர் வாந்தி எடுத்துவிட்டு "த்தா... சாப்படாடா இது இத மனுசன் சாப்புடுவானா" என  கூறிவிட்டு கோபமாக எழுந்து சென்றார். ஆனால் நான் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அந்த  பூரியையும் கிழங்கையும் ரசித்து விமுங்கிக் கொண்டிருந்தேன். டிவைன்


மற்றொரு நாள் இரவு தோசையும், தோசை மாவு புளிக்காமல், நல்ல நைஸாக போட்டுக் கொடுத்தார்கள்.  அதை சாப்பிட்டுவிட்டு நைஸாக எஸ்கேப் ஆகப் பார்க்கும்போது சப்ளையர் பிடித்து விட்டான். வேறு  வழியில்லாமல் கொஞ்ச நேரம் மறுநாள் தோசைக்கு மாவாட்டிக் கொடுத்துவிட்டு வந்தேன்.  சப்பாத்தி, சென்னா சாப்பிட்டேன். சப்பாத்தி கொஞ்சம் ட்ரையாக இருந்தது. "ஏன் சப்பாத்தி ட்ரையா இருக்கு? ட்ரை வாஷ் பண்ணீங்களா?" என மாஸ்டரிடம் ஒரு காமெடியை அவிழ்த்து விட்டேன். பரோட்டா திருப்பிப் போட வைத்திருந்த சூடான கரண்டியை என் மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டார்.  மற்ற கடைகளில் மதியம் லஞ்ச் தான் இருக்கும் ஆனால் இங்கு மதிய நேரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஒரு நாள் ட்ரை செய்து பார்க்க வேண்டும். மிக முக்கியமான விஷயம். நல்ல விசாலமான இடம். காசு கொடுப்பவர்களுக்கு ஒரு பகுதி, காசு கொடுக்காமல் சாப்பிடுபவர்களை பிளந்து எடுக்க இன்னொரு தனிப் பகுதி என தர வாரியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். எவ்வளவு அடி விழுந்தாலும் வெளியில் தெரியாது. நாம் எப்பவும் போல டீசண்டாகவே திரியலாம். 

Wednesday, 6 August 2014

ஜிகிர்தண்டா- A review by யாரு நிவேதிதா!!!

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தாகமாக இருந்ததால் படக்கென்று குடித்துவிட்டென். இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. வாலிப வயதில் சகிலா படங்களுக்கு சென்றது. அதன் பிறகு அவ்வளவாக செல்வதில்லை.  எழுத நேரம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்  எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட பகுதி தவிற வெள்ளையாக இருந்த அனைத்து இடத்திலும் எழுதி வைத்து விட்டேன். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மண்டையில் நருக்கென்று கொட்டி விட்டு பேப்பரை வாங்கிச் சென்று விட்டார். தமிள் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும். எழுத்துக்கூட்டி படிக்க கொஞ்சம் நேரம் ஆகுமல்லவா?  ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்குள் முடித்து விடுவேன். ஏனென்றால்   ஆங்கிலக் கட்டுரைகளில் படத்தை மட்டும் பார்த்து விட்டு ஸ்கிப் செய்துவிடுவேன்

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அங்கயவது எதாவது வேலை இருக்குமா என பார்ப்பதற்காகவே செல்கிறேன், அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி ஒருசில வார்த்தைகள்.  அந்தப் படம் பற்றி விரிவாக இன்னுமொரு ஆங்கிலப் பத்திரிக்கை கையில் கிடைக்கும் போது  மேற்கூறியது போல் எழுத இருக்கிறேன்.  என்ன விஷயம் என்றால், www.nandhimazhai.com இணைய இதழில் ஆகஸ்ட் 15 முதல் கேள்வி பதில் பகுதி தொடங்க உள்ளது.  வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் அளிக்கிறேன். த்தா, ங்கொம்மா என்று ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: q2yaaru@nndhimazhai.com


மற்றபடி ஜிகிர்தண்டா தமிழில் நான் பார்த்த மிகச் சிறந்த  இரண்டு படங்களில் மூன்றாவதாக வருகிறது.  முதல் ஆரண்ய காண்டம், இரண்டவது கோஹினூர் காண்டம்.  ஆனால் ஆரண்ய காண்டம் என்னைப்போன்ற மங்கினிகளுக்கான படமாக ஆகி விட்டது.  மக்கள் ரசிக்கவில்லை.  ஜிகிர்தண்டா  எல்லோரையும் வசீகரித்து விட்டது.  சினிமா பற்றிய என் கட்டுரைகள் ஒன்றை கூட படித்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால் தான் அவரால் இப்படிப்பட்ட சினிமா எடுக்க முடிந்திருக்கிறது.  ஜென் நவீனத்துவ சினிமா என்றால் இதுதான்.  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.  விரிவாக தினகரன்  பேப்பர் வந்ததும் அதில் எழுதுவேன்.  நண்பர்கள் தவற விடாமல் இந்தப் படத்தைப் பார்த்து விடும் படி  சிபாரிசு செய்கிறேன்.  நாயகன் வந்த போது மணி ரத்னம் ஒரு மகத்தான இயக்குனராக இந்திய அளவில்  தெரிய வந்தார்.  அதற்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்டாக கார்த்திக் சுப்புராஜ் தான் என்று மேஜர் சுந்தர்ராஜன்  சொன்னார்.  படம் பார்த்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் மேஜர் சுந்தர்ராஜனும் நானும் ஒரே செட்டு.

கேள்விகளை அனுப்புங்கள்.  கேள்வி பதில் தொடரின் தலைப்பு: அடி உதை கம்பம்.  முதல் கேள்வியே  அதகளமாக இருக்கிறது.  நந்திமழையில் விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் நாக்கை பிடிங்கிக் கொள்ளும் படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நம்ப முடியவில்லை.   மற்றவை நந்திமழையில்..Comments are closed
Working time 9am - 7pm
Sunday holiday

Saturday, 5 April 2014

Oru panniyum Moonu pannadaiyum / 2014 ஒரு பன்னியும் மூணு பண்ணாடையும் சினிமா விமர்சனம்!!!

ஜெர்மன் இயக்குனர்  dooma goli அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல் (ஆமா கேரியலு, மட் கார்டு, சைக்கிள் ரிம்முன்னுட்டு) முத்தான நான்கு பிட்டுப் பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல்.  போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...  இதுல  ஹேவன் மற்றும் இன்டர்நேஷனல் படத்தை பத்தி நம்ம பிட்டு பட விமர்சன  தளத்திலேயே எற்கனவே நான்   எழுதி இருக்கின்றேன்..


ரைட் ....Dooma goli  இயக்கி பல பிட்டு படங்கள்  தமிழ் நாட்டில்  பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆகாத கால காட்டமான ,1998 லேயே திருட்டு வீடியோ கேசட் வாங்கி அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.  அவர் இயக்கத்தில் வெளி வந்த  திரைப்படதான் ரன் லோ ரன்... புல் பெக்குல   அகிராவோட ரோஷமன் படத்தை  பத்தி ரொம்ப   யோசிக்கும் பொழுது இந்த படத்தின் நாட்டை பிடித்து  அவர்  பிடித்து இருக்கலாம் என்பது என் அனுமானம்... (ஃபுல் பெக்குலயா – பக்கி.. இத மாதிரியே எல்லாரையும் நெனைச்சிகிட்டு இருக்கும் போல)

 ரன் லோலா ரன்  படத்தின் கதை ....  நிறைய முறை படத்தை பார்த்துவிட்டேன். ஆனால் கதை என்னவென்று இன்று வரை தெரியவில்லை. மியூட் செய்து கூட வைத்து பார்த்தேன். சத்தியமாக புரியவில்லை. ஆனால் பட்த்தின் குமால்டி காட்சிகள் மட்டும் இன்னும் கண்முன்னேயே வந்து வந்து செல்கின்றன.

இந்த பிளாட்டை தமிழில் யாரும் தொட்டுப்பார்க்கவில்லை...  ஏனென்றால் இந்த பிளாட் 35 வது மாடியில் இருக்கிறது. ஆனால் அதை சிம்புதேவன் தொட்டு இருக்கின்றார்... லிஃப்டில் வந்திருப்பார் என ஊகிக்கிறேன். அதற்காகவே  அவரை  பாராட்டலாம்.. ஆனால் அதை எக்சிபிட் பண்ண விதத்தில், ஆர்ட்டிஸ்டுகளை தேர்ந்து எடுத்த விதத்தில் கோட்டை விட்டு இருக்கின்றார். நானாக இருந்தால் கோட்டை நன்றாக கிழித்திருப்பேன்.


பார்ன் இன் சில்வர் சட்டி நடிகர் அருள் நிதியை  வைத்து இந்தஅளவுக்கு வேலை வாங்கியதே  பெரிய விஷயம்தான்...  ஆனால் ஒரு பரபரப்பான பிளாட் கதையில் பிளாக் ஹீயுமரையும் (பிளாட் கதையில பிளாக் ஹீயுமரா – ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்) சேர்த்து விட்டதால் பரபரப்பு இல்லாமல் சுவாரஸ்யமற்று அர்த்த நாரிஸ்வரராக (டேய் நாதாரி.. அர்த்த நாரிஸ்வரர் பேர இப்புடி நாரடிக்குதே இது)  இருக்கின்றது என்பதே உண்மை....


ஆனால் இதில்  பெண்ணை சார்ச்சில் கடத்த போகின்றோம் என்று டைம் குறித்து  விட்டு,  கேஷுவலாக ஆஸ்பிட்டல் போவது... அப்பார்ட்மென்ட்டில் இருந்து   கிளம்பும் போது எதிர்படும் ஆட்களிடம்  சாவகாசமாக பேசி விட்டு செல்வது என்பதுதான்  படத்தின் பலவீனம்.. இப்படித்தான் சாவகாசமாக ரிலாக்சாக (ஆமா சாவகாசமாக ரிலாக்ஸாக கூலாக மெதுவாக இன்னும் நாலஞ்சி வார்த்தைய கூட சேத்துக்குங்க)  போக போகின்றார்கள் என்றால் அப்புறம் எதுக்கும் அப்பார்ட்மென்ட்டில் இருந்து ஓட வேண்டும்... நடராஜின் பின்னனி இசைக்கு ஒரு டெம்பான ஷாட் வேண்டும் என்பதற்காக எடுத்தது போல இருக்கின்றது... (டெம்பான ஷாட்டா? தோணி அடிக்கிற ஷாட்டா இருக்கும் போல)

பட் சந்திக்கும் அத்தனை கேரகடர்களும் முத்திரை பதிக்கின்றார்கள்... சொர சொர வென நகரும் கதையை எடுத்துக்கொண்டு அதில் பிளாக் ஹீயுமர் மற்றும் சிவன் நாராதர் என்று ஜல்லி அடித்து இருக்க வேண்டாம்... ஜல்லிக்கு பதிலாக கொஞ்சம் மணலும் செங்கலும் அடித்திருக்கலாம். அது எல்லாமே டெம்போவை கெடுக்கின்றது என்பதுதான் உண்மை... டெம்போவுக்கு பதிலாக ஒரு ஜீப்பை வாங்கி விட்டிருக்கலாம்.

ஒரு அவசரமான காரியம்... திருச்சிக்கு போக வேண்டும்... போயே ஆக வேண்டும் ... அவசரம்னா சனியனே இங்கயே போகவேண்டியது தானே.. திருச்சிக்கு போயிதான் போவியா என நீங்கள் என்னை வசை பாடக்கூடாது


விரைவு பேருந்து  என்று அழைக்கப்படும் பாயின்ட்  டூ பாயிண்ட் ( விரைவு பேருந்து என அழைக்ப்படும் பாயிண்ட் டூ பாயிண்டா – சூப்பரு.. ஒரு பய சொன்னதில்லை) பேருந்தில்  ஏறி உட்கார்ந்தும் விடுகின்றீர்கள்... இந்தனைக்கு ஐந்தரை மணி நேரம்  பயண நேரம் என்று கொட்டை எழுத்தில் பேருந்தில் எழுதி இருக்கின்றார்கள்..... அப்படி என்றால் அந்த பேருந்து 100 இல் பறக்க வேண்டும் அல்லவா? ( ஆமா எந்த பேருந்துல பயண நேரத்த கொட்டை எழுத்துல எழுதிருக்காய்ங்க.. அது சரி பேருந்து எந்த ஊர்லடா பறந்துச்சி)

பேருந்து அரைக்கி அரைக்கி மெதுவாக செல்கின்றது.. தாம்பரம் தாண்டுவதற்க்குள் ஒரு மணி  நேரம் காலி....  பெருங்களத்தூர் தாண்டி கட்டங்கொளத்தூர் எஸ்ஆர்எம் காலேஜை தொடும் போது,இரண்டரை மணி நேரம் காலி.. சரி இதுக்கு  அப்புறம் வேகம் எடுப்பான்னு பார்த்தா... மாமன்டூர்ல போய் வண்டியை போட்டு விட்டு டீ காப்பி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்ன்னு சொன்னா?- எப்படி இருக்கும்?-?? (எப்புடி இருக்கும்? நீ எவனாவது டிபன் வாங்கித்தருவாய்ங்களான்னு தேடிகிட்டு இருப்ப)

ஒரு மாதிரி கடுப்பா ஆயிடாது... (ஆமா வாங்கித் தர யாரும் இல்லைன்னா கடுப்பாதான் ஆவும்) அதைதான் படத்துல வரும் காட்சிகள் ஏற்படுத்துகின்றன...

  முதல்  காட்சியில் பெண்ணை  தூக்க திட்டம் போடுவது எல்லாம் அருமை.. அருள்நிதி மிளிர்கின்றார்... ஓட்டமும் ஓகே... நடையும் ஓக்கே…  (இது படம் பாக்க போனிச்சா இல்லை மாப்ள பாக்க போனிச்சா? மிளிருதாம் ஓட்டம் சூப்பராம்.)  எந்த அளவுக்கு பதட்டம் மூஞ்சியில இருக்கனும் அது எதுவுமே   பெரிசா இல்லை.. பைக் எப்படி பறக்கனும் அதுவும் இல்லை...( மறுபடியும் பார்ரா.. பைக் எப்டிடா பறக்கும்? அநேகமா ஃபுல் மப்புல படம் பாத்துருக்கும்னு நெனைக்கிறேன்)


வித்தியாசப்படுத்தறேன்னு ஏகப்பட்ட கேரக்டர்களை இன்வால்வ் பண்ணியது படத்தோட டெப்ட்டை குறைத்து ரசிகர்களை சத்தம் போட வைக்கின்றது...  (டெப்ட்டா? நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா… இந்த வார்த்தையெல்லாம் இனிமேயாது இங்கிலீஸ் டிக்சனரில சேத்துவிடுங்கடா)  பட் படத்தை கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது.. மியூசிக் டைரக்டர் நட்ராஜ்  மற்றும் வசனங்கள்...


 மூன்று டைப்  காலங்கள்.... அதே ஆட்கள் அதே  சூழ்நிலைகள்  ஆனால் வித்தியாசப்படுத்த வேண்டும்.. அதை மிகசிறப்பாக செய்து இருக்கின்றார்.  வசனங்கள் அருமை.. ஆனா வசனங்கள் எதுவுமே புரியவில்லை

பொறுப்பை எடுத்துக்காம நல்லவனா இருந்து என்ன புரயோஜனம்...
மூன்று லவ்சிக்வென்ஸ்களில்  முதல்   சிக்வென்ஸ் ஆன பாத்ரூமுக்கு காதலி அழைத்து செல்லும் காட்சி செம டச்சிங்காம இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது பின் சீட்டில் இருந்தவர் என் பின் மண்டையில் காலை வைத்து டச்சிங் செய்தார் என்று.  


=======
பைனல்கிக்..  (ஃபைனல் கிக் உன்ன நிக்கவெச்சி உன் பின்னால தான்டா விடனும்)

பிந்து மாதவி மட்டும் இல்லையென்றால் இன்னமும் போர் அடித்து இருக்கும்...  பிரேமுக்கு பிரேம் ஓடி உற்சாகபடுத்துகின்றார். (என்னடா இன்னுமும் காணுமேன்னு பாத்தேன்.. நீ பல்ல காட்டிக்கிட்டு போனதே அதுக்கு தான)

 படத்தை சமயங்களில் தூக்கி நிறுத்துவது தியேட்டர் வாசலில் இருந்த நான்கு செக்கிரூட்டிகள் தான். கீழே விழுந்த படத்தை நான்கு பேராக சேர்ந்து தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
 அருள்நிதி  நடித்த இரண்டு படங்கள்.... ஓகே ஓகே , மற்றும் கதிர்வேலன் காதல்.... இரண்டுமே அசத்தல்  திரைப்படங்கள்... பெட்டர் லக்  நெக்ஸ்டைம் அருள் மற்றும் சிம்புத்தேவன்..,.

 பட்  ஒரு விஷயம் குறிப்பிடனும்.. 

இப்படி ஒரு விஷயத்தை தமிழ் சினிமாவுல டிரை பண்ணதுக்கு சிம்புதேவனுக்கு ஒரு பூங்கொத்து….. வாங்கிக்குடுக்க என்கிட்ட காசு இல்லை.. யாராவது வாங்கிக்குடுங்க ப்ளீஸ்

எறும்பு கேக்கை தின்று மீதம்  எடுத்துக்கொண்டு  திரும்புவது.

டூட்டி நர்ஸ் நாறி இருப்பது...

முதல் காட்சியில் இடிக்கும்  டாக்டருடைய   கோட்....  அடுத்த டைம் லைன்  காட்சியில் பெட்டி மேல் வைத்து ரிசப்ஷனில்  பேசும் போது அந்த டாக்டர் கோட்டை லபக்குவது.. மரத்தின் மீதான  காக்கைகள்.... என்று நிறைய காட்சிகளில் அட  பொட வைக்கின்றார்கள்... (இதெல்லாம் யாருக்கு புரியும்னு இது எழுதுது? இது லூசா இல்லை நம்ம லூசா? )


ஒரு முறை சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம்...  சினிமாவை ரசிக்காதவர்கள் one time பார்க்கலாம்.  நான் சினிமா ரசிகன் என்பதற்காக ஒரு முறை பார்த்தேன்.


குறிப்பு : நான் ஒரு ஆங்கிலோ இந்தியனாக மாறிக்கொண்டிருக்கின்றேன். அதனால் தான் என்னுடைய பதிவுகளில் ஆங்கில வடை ( வடை இல்லை நாயே வாடை) வீசுகிறது. நண்பர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். எதேனும் வார்த்தைகள் புரியவில்லை என்றால் வாசகர் கடிதம் எழுதவும்
Monday, 10 February 2014

சாம் மார்த்தாண்டன் பதில்கள் - கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!!!


வாசகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. ஏன் சாண்வெஜ் வரவில்லை ஏன் அது வரவில்லை இது வரவில்லை என்று  அடிக்கடி ட்விட்டரில் போன் செய்கிறார்கள். அதனால் இடைவிடாத வாசகர் கடிதம் எழுதும் பணி இருப்பினும் என் எழுத்தை மூச்சாக சுவாசிக்கும் வாசகர்களுடன் பேச சிறிது நேரம் ஒதுக்கலாம்  என்று நினைத்திருக்கின்றேன். அதற்காக சாம் மார்த்தாண்டன் பதில்கள் என்னும் புதிய பகுதியை ஆரம்பித்து வாராவாரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு என்னிடத்தில் எதேனும் கேட்கவேண்டும் என்றால் கேளுங்கள் அதற்காக நான் கேட்பது போல் த்தா..ங்கொம்மா என்று கேட்டுவிடாதீர்கள்.. டீசண்டான கேள்விகளுக்கு சாம் மார்த்தாண்டன் பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை mydearmarthaandan@rediffmail.com முக்கோ இல்லை கமெண்டிலோ தெரிவிக்கவும்.

நாக்கை புடிங்கிக் கொள்வது போல் சிறந்த கேள்வி கேட்பவருக்கு என்னுடைய வாசகர் கடிதங்கள் அடங்கிய ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.  மேலும் உங்கள் செலவிலேயே எனக்கும் சேர்த்து டீ நகர் சலீம் பாய் கையேந்தி பவனில் ஒரு ட்ரீட்டும் கொடுக்கப்படும்.


EVER EVERS

சாம்  மார்த்தாண்டன்

கப்புக்காத்து /30- கூரை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

மயிலாப்பூருக்கும் மந்தவெளிக்கும் இடைப்பட்ட இடத்தில் பணக்காரர்கள் மட்டுமே போக முழுத்தகுதியும் பெற்ற இடத்தில் இருக்கிறது அந்த பப்ளிக் டாய்லெட்.

டாய்லெட் என்று சொன்னால் அவர்கள் மனது காயப்படும் என்பதால் செமி இண்டிபெண்டண்ட் கக்கூஸ் அது. செக்யூரிட்டி, லிஃப்ட் கண்கானிப்பு கேமராக்கள், காற்று வருவதற்கு சுற்றிலும் ஓட்டைகள் என்று சகல வசதிகளும் இருக்கின்றது. அங்கே கக்கா போகும் பிள்ளைகள் அத்தனை பேரும் தண்ணி வரவில்லை என்றால் கூட வெளியே சொல்லாமல் “ஷிட்” என்று சொல்லிவிட்டு பேப்பரில் துடைத்துப் போட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.


மாதம் மெயிண்டனன்ஸ் மட்டும் எப்படியும் 50 ரூபாய் நிச்சயம் இருக்கும். உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டால் எதிர் கக்கூசில் தண்ணி வராமல் “தண்ணி தண்ணி “ என்று கதறினால் கூட கதவை வெடுக்கென்று சாத்திவிட்டு கேனில் தண்ணி போடும் அண்ணனுக்கு போன் செய்வார்கள். நாற்றத்தில் மயக்கமானவனை தண்ணி போடும் அண்ணன் வந்து தூக்கும் போது தண்ணிக்கு போன் செய்ததே நாந்தான் என்று பெருமையாக பீத்திக் கொள்வார்கள்.


அப்படிப்பட்ட இடத்தில் தான் அந்த பெண்மணியை சந்தித்தேன். அவருக்கு அறுபது வயது ஆக இன்னும் 1,95,210 நாட்கள் தேவையாக இருக்கின்றது. தனியாய் இருக்கிறார். அவர் எப்போதும் போகும் கக்கூஸ் உள்பக்கம் படி இருப்பது போன்ற டூயூ ப்ளக்ஸ் கக்கூஸ். ஒரு 5000 ஸ்கொயர்பீட்டாவது இருக்கும்.  ஒரு வெஸ்டர்ன் சிஸ்டம் ஒரு இண்டியன் சிஸ்டம், ஒரு பண்டில் டிஸ்சு பேப்பர் என்று அசத்தலாய் இருக்கின்றது. உள்ளேயே ஓவன், ப்ரட் டோஸ்டர், ஏசி, டபுள் டோர் ஃப்ரிட்ஜ் என்று ஒரு ஹைடெக் கக்கூஸுக்கு தேவையான அனைத்தையும் அங்கே காண முடிந்தது.

அப்படிப்பட்ட கக்கூசையும் அந்த முதிய பெண்மணியையும் என் ஊர்காரர்கள் பார்த்து இருந்தால் ”கட்டையில போற வயசில த்தா… கிழவி எப்புடி அனுபவிக்குது பாரு.. “ என்று சர்வ நிச்சயமாக சொல்லியிருப்பார்கள்.


இந்து பத்திரிக்கையை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கிழித்து யூஸ் செய்வதால் சரோஜா தேவி அவர் நாக்கில் அராபியில் பூந்து விளையாட கட்டளை இட்டுவிட்டார் போல. பின்னி பெடலெடுக்கின்றார். ஆனால் கடைசியில் போகும் போது தான் தெரிந்தது அவர் பேசியது அராபி இல்லையாம். ஆங்கிலமாம்.

 நான்கு பிள்ளைகள் ஆனாலும் அனாதையாக இந்த டூப்ளக்ஸ் கக்கூசில்  அவர் இருக்கின்றார் என்ற தகவல்  என்னை வியப்பில் ஆழ்த்தியது... அவர் பேச பிரியபடுகின்றார் என்பது என்னிடம்  பேசிய சில வினாடிகளில் என்னால் உணர முடிந்தது...


என்னிடம் பெண்கள் அதிகம்  பேசிக்கொண்டு இருக்க பிரியப்படுவார்கள்... காரணம் நான் பேசும்போது அடிக்கடி “த்தா” “ங்கொம்மா” என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவது அவர்கட்கு மிகவும் பிடிக்கும். மேலும் என்னுடைய கர்லிங் ஹேர்ஸ்டைல் பொதுவாகவே ஆண்டிகளுக்கு மிகவும் விருப்பம்.   மேலும் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு எதுவும் தெரியாது.

 முக்கியமாக அவர் தனிமை அவரை  நிறைய பேச வைக்க துடித்தது... அது கண்களில் தெரிந்தது... வெளியில் வேலை எதுவும் இல்லாததால் கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்து ஆண்டியை கரெக்ட் செய்து லஞ்ச்சை ஆண்டி வீட்டிலேயே முடித்து விட முடிவு செய்தேன்.

 எவரிடமாவது கொட்டி விட கிடைத்த சந்தர்ப்பமாய் அந்த பெண்மனி என்னிடத்தில் கொட்டத் துவங்கினார். பிறகென்ன நடுமண்டையில் கொட்டியதால் மண்டையில் கொய்யாப்பழம் வைத்ததைப் போல வீங்கி விட்டது.


வலியைப் பொறுத்துக் கொண்டு நல விசாரிப்புகளை துவங்க அவர் குஜாலானார்

தென் மாவட்டத்து பக்கம் சொந்த ஊர்.... வயசுக்கு வரும் முன்னே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க....14 வயசுல வயசுக்கு வந்தேன் 23வயசுக்குள்ள பத்துக்குழந்தை... என்று சொன்னதும் எனக்கு கடுப்பு தலைக்கேறியது.. த்தா… உனக்கு மட்டும் வயசுக்கு வர்றதுக்கு முன்னாலயே கல்யாணமா… எனக்கெல்லாம் வயசுக்கு வந்து 30 வருஷம் கழிச்சி தான் கல்யாணம் பண்ணி வச்சாய்ங்க” என்று மனதிற்குள்ளேயே என் பாதரை திட்டிக் கொண்டேன்.   

எங்க வீட்டுக்காரர் தங்கம்... என்னை கையில வச்சி ஏந்திக்குவார்.... கல்யாணத்துக்கு பிறகும் படிக்க சொன்னார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்” என்றவுடன் டக்கென்று “ஏன் படிச்சிருக்க வேண்டியது தானே?” என்று கேட்டேன் அதற்கு அந்த ஆண்டி ” டேய் மெண்டல் நான் தான் கல்யாணத்துக்கு முன்னாலயே படிக்கலையே.. கல்யாணம் பண்ணப்புறம் எந்த ஸ்கூல்லடா சேத்துக்குவாய்ங்க… “ என்று அன்போடு பதிலளித்தார்.

”வீட்டுக்காரருக்கு மத்திய அரசு உத்தியோகம்...  காசை எப்படி செலவழிக்கலாம்ன்னு தெரியாத அளவுக்கு  பணம்...”  என்றார். ”என்னது காசை எப்படி செலவழிக்கலாம்னு தெரியலையா.. த்தா.. டெய்லி ரெண்டு பிட்டு சிடி கடையில காசு குடுத்து வாங்குனா காசு தானா செலவழிஞ்சிட்டு போகுது” என்றேன் . கையில் வைத்திருந்த சப்பாத்தி கட்டையால் ஏற்கனவே வீங்கிப்போயிருக்கும் என் நடுமண்டையில் நறுக்கென்று ஒண்று வைத்தார்… நான் காமெடிக்காக சொன்னேன் என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்தேன்.

அவரு ஆராயச்சியாளர்  நிறைய படிச்சிக்கிட்டே இருப்பாரு.. ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட்டுல வேலை... சென்னையிலதான் வேலை இருந்தாலும் இந்தியா முழுக்க சுத்துவார் என்றார்.  அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இடையிடையே நானும் பேச வேண்டும் என்பதற்காக “உங்க ஹஸ்பண்ட் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்டுல தான் வேலை பாத்தாரா ஆண்டி.. நான் கூட பன்னெண்டாவதுல ஆர்க்கியாலஜி குரூப் தான் எடுத்து படிச்சேன்.. “ என்றவுடன் அசிங்கமாக தெருநாயைப் பார்ப்பது போல கேவலமாக என்னை ஒரு பார்வை பார்த்தார்.  

 டெல்லிக்கு மாத்தலாகி  போனோம்   ஆத்துக்காரருக்கு பெரிய பொசிஷன். 15வது மாடில வேலை..  தனி வீடு தனி காரு தனி கக்கூஸ்னு டெல்லி வாழ்க்கை நல்லாவே போச்சு....  
நிறைய  பொஸ்தகம் எழுதி இருக்கார்....பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து நீங்க எழுதிய புத்தம் எல்லாம் இந்தியாவோட சொத்துன்னு சொல்லி கை குலுக்கி வாழ்த்தும் போது... ரொம்ப பெருமையா இருக்கும்... ” என்றவுடன் நானும் காலரை நிமித்திக் கொண்டு ”நான் கூட நிறைய பொஸ்தகம் எழுதிருக்கிறேன்” என்றேன். அவர்கள் ஆர்வமாக என்ன புஸ்தகம் ? என்றார். லைட்டாக தலையை சாய்த்து ஒரு பக்கம் கண்ணடித்து “இஸ்ஸ்க்… அந்த புத்தகம் தான் அனைத்து பஸ் ஸாண்டு கடையிலயும் கிடைக்கும்… ஜெட்லி கதைகள்னு கேளுங்க” என்றேன். அவர் முகம் ரத்த சிவப்பாக மாற, மறுபடி மண்டையை பிளக்கப் போகிறார் என்று இரண்டு கையாலும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். ஆனால் இந்த முறை தலையை குறிவைக்காமல் என் மூக்கில் சப்பாத்திக்கட்டை பாய்ந்து குபுக்கென்று ரத்தம் பீறிட்டு அடித்தது.


எனக்கு எங்க வீட்டுக்காரர் பென்ஷன் மட்டுமே 35 ஆயிரம் ரூபாய் மாசம் வருது.. என்று அவர் பேச்சைத் தொடர “ஆண்டி ரொம்ப பசிக்குது சாப்டுகிட்டே பேசுவோமே… என்ன லஞ்ச் இன்னிக்கு நம்மாத்துல” என்றேன். வேகமாக உள்ளே போனவர் அலுமினிய குண்டான் ஒன்றில் எதையோ எடுத்து என் முன்னர் டொங் என வைத்தார். உள்ளே பார்த்தால் குண்டான் நிறைய பழைய சோறு. ”த்தா.. கஷ்டப்பட்டு கதை கேட்டது பழையது தானா” என்று கடுப்பாகிவிட்டேன். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொண்டால் இதுவும் போய் விடுமே என்று ருசித்து சாப்பிடுவது போல் குண்டானை மல்லாத்தினேன்.

ரொம்ப நன்றி உங்க கிட்ட பேசினதுல.. என் வீட்டுல இருந்த பாரமே இறங்கிருச்சி. ஒரு வாரமா அந்த பழியத யார்ட்ட கொட்டுறதுன்னு தவிச்சிகிட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க… ரொம்ப சந்தோஷம் என்றார்.  அப்படியே ஒரு ஃபில்டர் காப்பி கிடைக்குமா என்று கேட்டேன். வாசலில் இருக்கும் செருப்பை அவர் ஓரக்கண்ணால் பார்க்க நான் உசாராகிக் கொண்டு விடை பெற்றேன்.

செருப்பு போடும் போது அங்குள்ள சவுண்டு சிஸ்டத்தில் “ ஏ நாயே நாயே… நீ எந்த ஊரு நாயே.. தெரு முனையில் இருக்கும் பேயே..” என்ற பாடல் துல்லியமாகக் கேட்க அந்த ஆண்டி இந்த பாடலை வேண்டுமென்றே எனக்காக தேடிப்பிடித்து போட்டிருக்கிறார் என்பதை தெரிந்தும் தெரியாதது போல்


பிரியங்காவுடன்,

ஜெட்லி


நனைப்பது அல்ல நீ!!

துவைத்து காயப்போடுவதே நீ!!!
comments


//அப்படிப்பட்ட கக்கூசையும் அந்த முதிய பெண்மணியையும் என் ஊர்காரர்கள் பார்த்து இருந்தால் ”கட்டையில போற வயசில த்தா… கிழவி எப்புடி அனுபவிக்குது பாரு.. “ என்று சர்வ நிச்சயமாக சொல்லியிருப்பார்கள்.//

மிகவும் அருமையான வரிகள்.. எங்கள் ஊரில் கூட இப்படி மிகவும் டீசண்டாகத் தான் பேசுவோம். ரொம்ப நாளுக்கு பிறகு இது போன்ற டீசண்டான வார்த்தைகளை கேட்கிறேன்


It’s a beautiful awesome wonderful article.

Someone please explain what he has written… I don’t know tamil

Regards,
Somu

 I dont have words to express this... 

த்தா.. செமயா இருக்கு


மிகவும் நெகிழ வைத்த பதிவு..  இருங்க படிச்சிட்டு வர்றேன்.


Hard to digest..  I ate one unlimited meals with two tantoori chicken.


உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

மேலும் விபரங்களுக்கு பூஜ்ஜியத்தை அமுக்கவும்


Jetli,

Inspiring act. You are service minded. That palayasoru eating was mind  blowing