ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Sunday, 21 August 2011

ஜெட்லி சேகர்- ஆசிரியர் குறிப்பு. (ஒரு வரலாற்றின் கதை)ஜெட்லி சேகர் என கோடானுகோடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஆசிரியர் அவர்கள் 1867ல் பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சேகர் என்பதாகும். மிகவும் இளவயதிலேயே அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் திறன் கொண்டிருந்ததால் இவர் எட்டயபுரம் அரண்மணையில் ஆஸ்தான கெட்டவார்த்தைக் கவிஞராக பணியாற்றினார். பின் பள்ளிபருவத்தில் தனக்குத் தானே வாசகர் கடிதங்கள் எழுதி பலர் முன்னிலையில் வாசித்துக்காட்டும் வல்லமை பெற்றிருந்ததால் இவரை "வாசகக் கவிஞர்" என்று "தானே புகழ்ந்த தானே கவிஞர்" எனப் போற்றுவோரும் உளர். இவர் எழுதிய கெட்டவார்த்தை அகராதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிநூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்நாட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது.

பின் ஷகிலா என்னும் வீராங்கனையின் பால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை ஷகிலாதாசன் என மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்டக்காலங்களில் தன் கடலூர் வீட்டில் இருந்தபடியே "சாண்வெஜ் நாண்வெஜ்" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் இடம்பெற்ற கட்டுரைகள் ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கின. துவண்டு கிடந்த இளைஞர்கள் மத்தியில் இவரது 'ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்' பகுதி தேசபக்தி அனலை மூட்டியது. இவரது பத்திரிக்கையில் வரும் விளம்பரங்கள் உலக வியாபார சந்தையை இவர்பக்கம் திருப்புவதாக அமைந்தது. அமெரிக்க வெள்ளை மாளிகை இவர் வாங்கி கொடுத்த காலிமனையில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்தாற்றலைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவர்மேல் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. கைது ஆணையை எடுத்துக்கொண்டு பெரும்படையுடன் தன் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையிடம் "உன் ரேஷன் கார்டு எங்கே? உன் பால்கார்டு அங்கே? உன் atm கார்டு எங்கே? எனக்கு இண்ட்லியில் ஓட்டுப்போட்டாயா? தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாயா? இல்லை நான் எழுதும் காவியங்களுக்கு "மீ த ஃபர்ஸ்ட்" எனக் கமண்ட் போட்டாயா? எனக்கு ஒரு வாசகர் கடிதம் தான் எழுதினாயா? அனானியா? யுனானியா?" என இவர் பேசிய வசனம் சரித்திரப் புகழ் வாழ்ந்தது. இவர்தம் வீரத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு கடலூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது.

அடிக்கடி இவர் பத்திரிக்கையில் அடிக்கடி இவர் எழுதிய அறிக்கைகளும், அனானிகளால் அவர் எப்படியெல்லாம் பாதிக்கட்டார் என்ற அறிவுப்பும் பல பெண்களின் கண்ணில் கண்ணீர் வரவழைப்பதாய் அமைந்திருந்து. பெண்களால் இவர் 'அழுவாச்சி கவிஞர்' என அன்புடன் அழைக்கபெற்றார். 1957ஆம் ஆண்டு தமிழறிஞர் கூட்டமைப்பில், 'இவர் எழுத்துக்களை சிறுவர்கள் படித்தால் அவர்களுக்கு தமிழ் மறந்து போகும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக் கண்டு கடும்கோபம் கொண்ட இவர் "அனானிகளுக்கு எச்சரிக்கை", "அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை", "அனானிகளுக்கு கடைசி இறுதி எச்சரிக்கை" என வரிசையாக தொடர் கட்டுரைகள் எழுதினார்.  பின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அந்த கட்டுரைகள் 'சாந்தி' என்ற பெயரில்,  மந்த்ரா பேடி நடிப்பில் மெகாதொடராக ஒளிபரப்பப்பட்டு பெருவெற்றி பெற்றது.

1989ல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கக்கூஸில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட டம்ளரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உலகெங்கும் இவர் வாசகர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாகவும் இவரது தோழர் ஜார்ஜ் புஷ்ஷின் நேரடி தலையீட்டின் காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டார். பின் தன் வாழ்க்கை வரலாற்றை 'பக்கிராம் வயது 139' என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டார். youtubeல் அந்த படத்தைப் பார்த்து உலகமே ஒருநாள் அமைதியாக இருந்தது. அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அந்தப் படத்தை இயக்கிய ஜெட்லிசேகருக்கு வழங்கப்பட்டது.

இவர் எழுத்துலகுக்கு ஆற்றிய பங்கினை அடையாளப்படுத்தும் பொருட்டு நியூயார்க் பல்கலைக்கழகம் தனது கக்கூஸிற்கு, ஜெட்லி கக்கூஸ் எனப் பெயரிட்டு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் இவர் சிலையை நிறுவுவதற்காக கடலுக்கு நடுவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடல் வற்றுவதற்காக அரசு காத்திருக்கிறது. சிலையை நீங்கள் படத்தில் காணலாம். விரைவில் சிலை நிறுவப்படும்.

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...
32 comments:

Arun Kumar said...

சானேஸே இல்லை.. சூப்பராக இருக்கு

Arun Kumar said...

கடலில் சிலை வைக்குற இடத்துக்கு பக்கதுல ஏதாச்சும் மனை காலியாக இருந்தால் சொல்லுங்க.நான் வாங்கிகிறேன்.

jaisankar jaganathan said...

சாம். உங்க பதிவுல கமெண்ட் போட்டா ஒரு நாய் அசிங்கமா வந்து என் ப்லொக்ல கமெண்ட் போடுது

jaisankar jaganathan said...

//Arun Kumar said...
சானேஸே இல்லை.. சூப்பராக இருக்கு//

repeatu

Mohamed Faaique said...

////அந்த படத்தைப் பார்த்து உலகமே ஒருநாள் அமைதியாக இருந்தது. அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அந்தப் படத்தை இயக்கிய ஜெட்லிசேகருக்கு வழங்கப்பட்டது.////
he he he he....

ithu matter...
kalakkalo kalakkal...

Senthil said...

Kalakkal

carthickeyan said...

சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணா போச்சு... எத்தன தடவ சொன்னாலும் நம்ம ஜெட்லி சேகர் திருந்த மாட்டார் போல‌

Karthikeyan From Bangalore
carthickeyan@gmail.com

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really super comedy post . .

சேக்காளி said...

//சாம். உங்க பதிவுல கமெண்ட் போட்டா ஒரு நாய் அசிங்கமா வந்து என் ப்லொக்ல கமெண்ட் போடுது//
கமெண்டுக்கே இப்படி பயந்தீங்கன்னா, காலைத்தூக்கி அசிங்கமெல்லாம் பண்ணுனா என்ன பண்ண போறியளோ தெரியலையே.

NAAI-NAKKS said...

சூப்பரோ சூப்பர்

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Soopperappu............

jaisankar jaganathan said...

சேக்காளி அந்த ஆள் தொல்லை தாங்க முடியலை

Anonymous said...

//கடல் வற்றுவதற்காக அரசு காத்திருக்கிறது// அய்யோ,அய்யோ,சிரிப்பு தாங்க முடியலைப்பா,எப்பிடிதான் உங்களுக்கு இப்படி காமடி தோணுதோ:))))))))))

Anonymous said...

கேரிசன் கல்லறைகள்..(1800-1860)ஸ்ரீரங்கப்பட்டினம்(பெங்களூர்)

1800லிருந்து 1860 வரை இந்தியாவில் பணியாற்றிய முன்னனி படை வீரர்கள்.. மற்றும் அதிகாரிகளின் கல்லறைகள் இன்றும் பேணிகாக்கப்பட்டு வருகின்றது...........

மச்சான் இந்த கெரிசன் கல்லறையை பற்றி சொன்னான்.. ஆனால் பலர் அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு...ஆனால் எனக்கு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. காரணம்1800 ஆண்டுகளுக்கு முன்..... அதுதான் ஆர்வத்தை தூண்ட் காரணம்....

See this mistake he says it belong to 1800 ago... IF i say this mistake in his comment. section..donkey sekar will correct the mistake without publishing the comment ( thats fine) but at the same time he shout at me using bad words... for this exact reason, readers hate him..murugan,saravanakumar,simmakal should know this before supporting him...
He will rectify this error after reading my comments here....At the time of me posting this comment here the error still exist...

Cheers,

Anonymous said...

U r wrong. In his sapthapati post, I hav commented that he s not writing Tamil correctly. I have pointed out a particular word in the post also. He had written: பெண் நண்பி. I asked him: Can there be ஆண் நண்பி ? நண்பி itself s sufficient: it refers to the sex also. He acknowledged the error and replied to me: பெண் என்ற சொல்லை நீக்கிவிட்டேன்.

He published my adverse comments: u can go there to verify my statement. He also said he s more interested in his matters and not his Tamil. He s correct. Ppl read him for the matter only.

He has a point in that only a very few bloggers write Tamil w/o errors. All of us want to write Tamil as it s spoken, only. Even profs of Tamil who writes blogs, commit silly errors in Tamil writing. U can find out my comments there also. They didn't get angry, except a lady blogger. For e.g. in a Tamil prof blog, he wrote

In on Tamil prof's blog he wrote செல்லுலர் ஜெயில். I commented: "ஏன் தமிழில் எழுதவில்லை ? தமிழ் வாத்தியாரே எழுதவில்லையென்றால் ?" அஃதை அவர் வெளியிட்டார். ஆனால் அவருக்குத் பொருத்தமான தமிழ்ச் சொல் தெரியவில்லை. பின்னூட்டம் போட்ட ஒரு தமிழாசிரியர்: 'கூண்டுச்சிறை' என்று திருத்தினார். தமிழ் ஆசிரியரின் அந்தமான் சுற்றுலா என்ற பதிவில் என் பின்னூட்டத்தைப்பார்க்கவும். தமிழாசிர்யர்களே தடுமாறும்poothu பிற பதிவாளர்களை நாம் எப்படி எகிற முடியும் ?

So, it s wrong to conclude he s against all negative comments. Still he does not release comments if they r motivated, and the commenter is in the list of Sam marthandan's friends like u.

--Simmakkal

Anonymous said...

We ought to ack a fact that all writers have mega sized egos. Bloggers may follow their examples. It s rare to see a blogger w/o ego. If a blogger becomes popular, his ego increases proportionately. Even u can see it in diplay.

The more the followers, the more the ego. Their followers always write favorably. Even unfavourable comments r written mildly: Like as follows: I have enjoyed reading all ur blogs; but this particular blog s not to my liking.

I hav bitter experiences with them. No one will want u to qn them. Once a view is put up, they r rooted in that; and wont budge an inch.

U can notice this in blogs on controversial topics: Like caste, anti brahminism, Hazaree, Tamil political issues and so on.

Therefore, certain bloggers restrict their readership only within their ardent fans. Like Jemo. U cant write any thing that differs from his view.

Against this general nature of bloggers, it s too much to expect anything else from ur adversary J Sekar. Understand the world and adjust to it. If not, u will go on complaining.

---Simmakkal

"ராஜா" said...

// youtubeல் அந்த படத்தைப் பார்த்து உலகமே ஒருநாள் அமைதியாக இருந்தது. அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அந்தப் படத்தை இயக்கிய ஜெட்லிசேகருக்கு வழங்கப்பட்டது.


உலகமகா நக்கல் ....

Anonymous said...

ஹா...ஹா...ஹா..ஹா...ஐயோ சாமி, சிரிச்சு முடியலே. இந்த வாரத்துக்கு இந்த பதிவே போதும்.

நன்றி.

Anonymous said...

சிம்மக்கல் என்ற பெயரில் எழுதுபவரையும் நக்கலடித்துப் பதிவு போடுங்கள். நல்லா சிரிப்பா இருக்கும்.

Anonymous said...

I hav just read his post on Garrison cemetery. Considering his level of looking at things - he s not an intellectual and he admits that - it s a great post.

One of the many helps a blogger can give his readers s to write and tell abt unknown and obscure places of interest.

I hav gone to Srirangappattinam but I missed the spot he s talking abt. The Garrison Cemetery. Interesting esp to those who has historical sense. We must thank him for that.

Another imp feature of the post s to connect such thoughts abt the cemetery with his own mother's demise and the pains a son goes thro.

Anonymous, I too hav posted my comments there. Wait and watch whether he uploads it.

--Simmakkal

சாம் மார்த்தாண்டன் said...

சிம்மக்கல் என்ற பெயரில் எழுதுபவரையும் நக்கலடித்துப் பதிவு போடுங்கள். நல்லா சிரிப்பா இருக்கும்.///

அவரை அவரே கிண்டல் அடிச்சுக்குவாரு! நம்ம எதுக்கு போடனும்? :-))

Anonymous said...

@ simmakal..

This blog started recently....But I have been reading JS blog quite some time and mentioning the errors in the polite way and i constructive criticism as well as the appreciation...but never been published..The fun part is he rectify's error but never agree's it..yes he agrees only if they person is known to him and in their friends list....btw exceptions are not examples like the one you mentioned ...he may did in your case but at same time he never did for several others....

Once when I rectified the error for the first time in my comments where he discussed about scientifc stuff... I myself is scientist i found his words are misleading and it is completely wrong on .. I am aware he is not scientist or highly educated person, so i wrote what is the fact and explained how things works without any ugle or harsh words, i was strictly explaining things in simple form,..science has only one side....
He wrote back shouting like mad...till date i dont know how to call him.. His ego or his complex

PPl like you support him beccoz he accept ur your comment and might be a good buddy of him..but others agaisnt him....You may say you are not regular reader of Js and he did not follow him..but he knows you are going to speak for him like crying here every day...so he will accept your comments..

I am just a reader and have no idea who is JS or sam etc.. I have no prejuidice or preconceived notion.. As every other blog i read sam's post...
On what basis you say I am in sam's friend list..this shows you are ignorant and biased.. I comment every other blog as well...

smart said...

செம காமெடி! நல்லாகீதுபா

smart said...

நான் கூட நீங்க கமெண்டை வெளியிட மாட்டேங்களோ என்று பயந்துவிட்டேன். உங்க பதிவெல்லாம் காரமாகீது

Elango K said...

besh besh romba nanna irukku

Ponchandar said...

"உன் ரேஷன் கார்டு எங்கே? உன் பால்கார்டு அங்கே? உன் atm கார்டு எங்கே? எனக்கு இண்ட்லியில் ஓட்டுப்போட்டாயா? தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாயா? இல்லை நான் எழுதும் காவியங்களுக்கு "மீ த ஃபர்ஸ்ட்" எனக் கமண்ட் போட்டாயா? எனக்கு ஒரு வாசகர் கடிதம் தான் எழுதினாயா? அனானியா? யுனானியா?" என இவர் பேசிய வசனம் சரித்திரப் புகழ் வாழ்ந்தது.

ஹ..ஹ...ஹ...ஹ.....ஹா......... சிரித்துக் கொண்டே இருக்கிறேன்..

Anonymous said...

me the last...ஹா..ஹா..ஹா..ஹா..

வால்பையன் said...

ரொம்ப நாளாகிவிட்டது இது போன்ற பகடிகளை படித்து, பதிவர்கள் மத்தியில் தாம் பெரிய எழுத்தாளன் என்ற் மமதை பகடியை ஏற்று கொள்ளும் பக்குவத்தை தடுக்கிறது.

இலக்கிய ஜாம்பவான்கள் ஜட்டி நிவேதிதாவும், பருப்பு மோகனுமே ஒருவரை ஒருவர் மாறி மாறி பகடி செய்து கொள்ளூம் போது ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்.

www.poomagan.com said...

பதிவுலக சூப்பர்ஸ்டார் சாம் மார்த்தாண்டன் அவர்களுக்கு,
நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் , கடந்த இரண்டு வருடங்களாக ப்ளாக் படிக்கிறேன். ஆனால் முதல் தடவை இப்பதான் கமென்ட் போடுறேன். பிரசரான வேலைக்கு நடுவுலே இதை படிச்சா டென்ஷன் பறந்து போகுது சார்.

ராஜன் said...

ஹா ஹா ஹா! அட்றா அட்றா!

Barath said...

"நல்லா இருக்கு கற்பனை"
இதே கமெண்டை உங்க மற்ற பதிவுக்கும் போட்டேன்

Anbazhagan Ramalingam said...

ஹா ஹா ஹா!

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி