ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 5 November 2011

அன்புள்ள கடாஃபிக்கு சாம் எழுதுவதுஅன்புள்ள கடாஃபிக்கு கடலூர்க்காரன் எழுதுவது. 

அன்புள்ள லேட் கறிக்கடை சேட் அப்துல்ரகீம் அவர்களின் மகன் லேட் கடாஃபி அவர்களுக்கு,


வணக்கம் வாலிய நலம்...


லிபியாவில் நீங்கள் முதல் முறையாக சாகின்றீர்கள்.. வாழ்த்துகள்..


நான் கரகாட்டக்காரன்.... ....சீ.... கடலூர்க்காரன்..


இப்போதைக்கு செத்துப் போனதன் காரணமாக ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1932ல் எங்கள் ஊர் கடலூரில் சதாம் உசேன் தலைமையில் நடந்த 'சாண்வெஜ் நாண்வெஜ்' மாநாட்டில் கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்... 

அன்றைய தினம் நீங்கள் பச்சை பேண்டும் பச்சை சட்டையும் அணிந்திருந்தீர்கள். கருப்பு நிற பெல்ட் அணிந்திருந்தீர்கள். பின் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... உங்கள் கார் 'டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என சத்தம் எழுப்பியவாறே ஓடியது. அப்போதும் அனானிகளுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்.. நான் சிறுவன் என்பதாலும் நான் சின்னப்பையன் என்பதாலும் நான் சிறுபையன் என்பதாலும் அன்று வானம் அடர்த்தியுடன் காணப்பட்டதாலும், சென்னையில் மழை பெய்ததாலும், மும்பையில் மழை பெய்ததாலும், நான் முதலில் அன்று குளித்ததாலும்  எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. ஆனால் அந்த இடத்தில் நான் விளக்குமாற்று குச்சி வைத்து மார்க் செய்திருக்கிறேன். நான் அப்போது உற்சாகமாக கையசைத்து உங்களை வழி அனுப்பி வைத்ததுதான் உங்கள் அரசியல் வெற்றிக்கு காரணம் என ட்விட்டரில் சொல்லியிருந்தீர்கள்... 


அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்.. அதே மாநாட்டுக்கு உங்கள் ஆயாவை நீங்கள் அழைத்து போகாததால் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்காக பலநாட்கள் நான் வருந்தியிருக்கிறேன். கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் பாடினீர்கள்.. நானும் அப்போது ஆடினேன். ஆனால் என்னை அடித்து விரட்டிவிட்டார்கள். 


நீங்கள் கடாபி. நான் சாதாரணமானவன். ஒரு லோக்கல். நான் அறிவுரை சொல்கிரேன் என நினைக்காதீர்கள். ஓடிப்பிடித்து விளையாடும்போது கண்டிப்பாக அவுட் ஆக்கிவிடுவார்கள் என தெரிந்தும் லிபியாவில் ஏன் ஒளிந்தீர்கள்? துபாய், ஜப்பான், இஸ்லாமாபாத் போன்ற தென்னிந்திய நாடுகளில் ஒளிந்திருந்தால் நீங்கள் ஜெயித்திருக்கலாம்.

ஆனால் யூடியூபில் நீங்கள் அவுட் ஆகும் காட்சி பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்த்தால் ஒருமுறையாவது தப்பிப்பீர்கள் என நினைத்து மறுபடியும் பார்த்தேன். ஆனால் அவுட் ஆகி கொண்டே இருந்தீர்கள். மன்சாட்சி உள்ளவர்கள் யாரும் அப்படி செய்யமாட்டார்கள்.

நீங்கள் என்ன கட்டினீர்கள்? பெயர் சொல்லி சொல்லுங்கள். மேலுரில் ஒன்று, அரேபியாவில் ஒன்று, புதுக்கோட்டையில் ஒன்று என்று சொல்லாதீர்கள். பெயர் சொல்லுங்கள். கமலாவா, விமலாவா, மாலாவா, கோலாவா? சொல்லமுடியாது. ஏனென்றால் இன்று செவ்வாய்க்கிழமை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் ஒரு லோக்கல். ஆனால் நான் 
கடலூரில் இருந்து விமான மார்கமாக சென்னை வந்து பிரபல எழுத்தாளன் ஆகிவிட்டேன். "தமிளில் பிலையின்றி எலுதுவது எப்பீடி" என ஒரு புத்தகம் எழுதி பெரிய ஆல் ஆகிவிட்டேன். இன்று நான் கையசைத்தால் ஓடிவர வலையுலகில் ஏராளமான தம்பிகள் உண்டு. ஆனால் நீங்களோ செத்துப்போய்விட்டீர்கள். பரவாயில்லை. இந்த் கடிதத்தை படிங்கள்.
நீங்கள் பனகல் பார்க்கில் மெத்தை விற்பவர். நான் அப்படி அல்ல. ஜூராசிக் பார்க்கில் சுண்டல் விற்பவன். எதோ எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.
மனதில் வையுங்கள். 


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....

EVER YOURS...
ஆங்கிலப் கற்கலாம் வாங்க: 
             

Man is man. man is not woman. heman is cartoon. superman is good. batman is not superman. thats all man. hanuman. we cook they eat. they cook we not eat. but anniversary silk saree forgot. very bad. they love we love. human nature.
 

Tuesday, 1 November 2011

ரிட்டர்ன் ஆஃப் தி சாம்: "ஏன் ஆங்கிலம்?" மனம் திறக்கிறார் சாம் மார்த்தாண்டன்.

வணக்கம் நண்பர்களே. என் இங்கிலாந்து டூரை முடித்துவிட்டு நேற்றுதான் சென்னை வந்தேன். சென்னையில் மழை பெய்கிறது. அதை நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் சுவாரசியம். ரோடெல்லாம் ஈரமாக இருந்தது, அதை வைத்து கண்டுபுடித்தேன். இதை அறிந்த கோவில்பட்டு வாசகர் கோக்குமாக்கு ரவி என்னை வெகுநேரம் ட்விட்டரில் புகழ்ந்தார். அவருக்கு நன்றி.
 
ஆங்கில ப்ளாக் ஒன்று ஆரம்பிக்கலாம் என இருந்தேன். ஆனால் உங்களுக்கே தெரியும் நான் ஒரு எஸ்.டி.டி. அதனால் என்னிடம் வசதி இல்லை. இப்போது இதே ப்ளாக்கில் ஆங்கில சேவையும் செய்யப்போகிறேன். 

இன்றைய நாளில் ஆங்கிலம் வெகுவாக வளர்ந்துவிட்டது. முன்பெல்லாம் நாங்கள் படிக்கும் போது "abcd" தான் இருந்தது. இப்போது A முதல் Zவரை இருக்கிறதாம். என்ன கொடுமை பாருங்கள். அதனால் நானும் ஆங்கில சேவை செய்ய இறங்கிவிட்டேன். என் தாய்மொழி தமிழ்தான். ஆனால் என் முகத்தை இரண்டு நிமிடம் தொடர்ந்து ஊடுருவி நீங்கள் பார்த்தால் அதில் ஒரு ஆங்கிலேயக் கலை ஓடும். ஆம்! என் தந்தை ஒரு ஆங்கிலேயர். 1900களில் கட்டப்பஞ்சாயத்து செய்த வந்த வீரபாண்டிய ஆங்கிலேயர் அவர். அவருக்கு வெகுநாட்களாகவே நான் ஆங்கிலத்தில் எழுதாது குறித்து வருத்தம்.  ஹி க்ரை. ஐ க்ரை. சோ ப்ளாக் ஸ்டார்ட். இங்கிலிஸ் இன் மய் ப்ளட். அமெரிக்கன் இங்லிஷ். ப்ரிட்டைன் இங்கிலிஸ் போத் ஐ னோ.

ஒருவகையில் ஆங்கில எழுத்தாளர்கள் ஷாக்ஸ்பியர், அர்னால்டு, ஜெட்லி சேகர் எல்லாம் எங்கள் தூரத்து சொந்தம். ஷாக்ஸ்பியர் தவறமால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வார். ஹி இஸ் எ க்ரேட் மேன்.

என் முதல் ஆங்கிலப் பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 
Heading: SORRY

After long long ago once upon a time in irunda  aaprica i had one prend. he was very taal. very old boy he was. when we all very small he bite my dicky. very pain i cry mummy come. he no maturity. bad boy bad boy. very bad boy that boy. mummy apply medicine in dicky. pain pain go away little sam want to play. then pain go.. prend come. he tel sorry. i tell ok. we again prends.
 
 

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...