ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday 18 June 2013

தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/



ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்லை. ஏன்?

 காரணத்தை நான் இங்கு விளக்கியாக வேண்டும். தியேட்டர் கார்ர்கள் முன்பு போல் இருப்பதில்லை. முன்பெல்லாம் முன்வரிசையில் இருப்பவருக்கு டிக்கெட் கிழிக்கும் போதே அவருக்கு தெரியாமல் சந்தில் புகுந்து ஓடிவிடுவேன். ஆனால் இப்பொழுது அனைத்து டிக்கெட்டுகளையும் செக் செய்தே அனுப்புகின்றனர். போன வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் பார்க்க நைசாக தியேட்டருக்குள் நுழைகயில் இரண்டு ஜிம் பாய்ஸ் அலேக்காக தூக்கி வெளியில் போட்டு விட்டனர். "த்தா... இத்தனை பேரு டிக்கெட் எடுத்துருக்கானுகள்ள... ஒருத்தன மட்டும் டிக்கெட் இல்லாம விடமாட்டியா" ன்னு நாக்கை பிடிங்கிக் கொள்ளும்படி ஒரு கேள்விதான் கேட்டேன். எங்கிருந்தோ வந்த அந்த கரளாக்கட்டை கை என் மூக்கை பதம் பார்க்க குபுக் என்று ரத்தம் பீரிட்டு வந்தது. சரி இது வேலைக்கு ஆகாது என்று எண்ணி அன்றுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன்.

பிறகெதற்கு இந்தப் படத்தை பார்த்தேன்?  பொதுவாக என் அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் சொல்லும் படங்களைத்தான் நான் தியேட்டரில் பார்ப்பேன். சென்ற வாரம் கூட “மாயக்கோட்டை வேட்டைக்காரி” என்ற ஒரு படத்தை பார்க்கச் சொன்னார்கள்.. படம் கும்ம்ம் என்று இருந்த்து. சென்றவாரம் எனக்கு வந்த ஒரு வாசகர் கடித்தில் தில்லு முல்லுவில் பிட்டுகள் அதிகம் இருப்பதாகவும், தீயா வேலை செய்யனும் குமாரில் அந்த அளவுக்கு எதுவும் இல்லை என்றும் எழுதியிருந்தார். அந்த வாசகர் கடிதமே எனக்கு இந்த பட்த்தை பார்க்க தூண்டுதலாக இருந்தது. உடனே வாயை பிளந்து கொண்டு தில்லு முல்லுவிற்கு போனேன். த்தா... புதுசா பிட்டு பார்ப்பவனை நம்பக்கூடாது என்று அப்போது தான் புரிந்து கொண்டேன். நேற்று உலக பிட்டு பாஸ்கர் தன் தளத்தில் படத்தில் எதிர்பார்த்த தெல்லாம் இருக்கின்றது என்று எழுதியிருந்தார்.

 உடனே அதயே ஆயுதமாக உபயோகித்து “அப்போ உங்க செலவிலேயே என்னை படத்துக்கு அழைச்சிட்டு  போங்க” என்று ஒரு ட்வீட்டரில் ஒரு MMS அனுப்பினேன். அதற்கு பலனும் இருந்தது. அசிங்கமாக என்னை திட்டினாலும், அவரே கைக்காசை போட்டு என்னை படத்திற்கு அழைத்து சென்றார். நல்ல வேளை சுந்தர்.சி ஏமாற்றவில்லை. ஹன்சிகாவை நிறைய ஆங்கிளில் விதவிதமாக எடுத்திருந்தார். இந்த படத்தில் என்னுடைய “பரசுராம் வயது 55” படத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்த்து. இது சுந்தர்.சி என்னிடன் அசிஸ்டண்டாக அந்த படத்தில் பணியாற்றியதால் ஏற்பட்ட பாதிப்பாக கூட இருக்கலாம். ஆனால் பரசுராமை காட்டிலும் வசன்ங்களிலும் கேமரா ஆங்கிள்களிலும் நிறைய வித்யாசம் காட்டியிருந்தனர்.

(கீழ்கண்ட கேள்விகளுக்கு இரண்டு பத்திகளுக்கு மிகாமல் விடையளிக்கவும். ஒவ்வொரு பதிலுக்கும் 5 மதிப்பெண்கள்)

தீயா வேலை செய்யனும் குமாரு பட்த்தின் ஒண் லைன் என்ன? 





புகைப்பழக்கம் கேன்சரை
விளைவிக்கும்
குடிப்பழக்கம் உயிரைக்
கொல்லும்.....

என்று நான் எழுதிய முதல் கவிதையை சொன்னேன். ஆனால் படத்தின் வந்த ஒண் லைன் இதுதான்.

தீயா வேலைசெய்யனும் குமாரு பட்த்தின் கதை என்ன?


முகேஷ் என்ற வாலிபரின் வாழ்க்கையில் குட்கா சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை கண்ணீருடன் கூறும் படமே இந்த தீயா வேலை செய்யனும் குமாரு.

“என் பேரு முகேஷ்... நா ஒரு வருஷமா குட்கா சாப்புடுறேன்... அதனால எனக்கு வாய் கேன்சர் வந்துருச்சி... இதனால எனக்கு பேச்சு வராம கூட போகலாம்” என்று வசன்ங்களை உணர்ச்சி பூர்வமாக பேசுகையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. சித்தார்த் செமையாக கெட்டப்பை மாற்றியிருக்கிறார். கடைசியில் ஆப்ரேசன் செய்யப்பட்ட முகேஷ் பிழைக்கிறாரா இல்லையா ? என்பது தான் மீதி கதை. அஸ்கு புஸ்கு அத நா சொல்ல மாட்டேன் நீங்களே பட்த்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.

படத்தை மிகவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எடுத்திருந்தார். இது முடிந்த்தும் என்னை அழைத்து வந்தவரிடம் ஐஸ் கிரீம் வாங்கி கேட்டேன். உடனே அவர் காலில் போட்டிருந்த செருப்பை பார்க்க, “லொக் லொக்” என்று இருமி எனக்கு கோல்ட் இருப்பது போல நடித்து எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதன் பிறகு இலவச இணைப்பாக இன்னொரு படமும் ஓடியது. அப்போது தான் தெரிந்த்து இதுவரை பார்த்த்து விழிப்புணர்வு விளம்பரம் என்று. தியேட்டருக்கு வந்து நாளாகிறதல்லவா.. அதான் சிறு கன்பீசன்.

படத்தின் சுவாரஸ்யங்கள் சில:

ஹாலிவுட்டில் யூ டிவி எடுக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான். ஆனால் தமிழில் எடுக்கும் படங்கள் மட்டும் ஏனோ தோல்வியிலேயே முடிஞ்சிருக்கு. பரசுராம் வயது 55 க்கு பிறகு யூ டிவிக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.


முதல் முறையாக சுந்தர்.சி படம் மிகவும் ஸ்டைலிஷாகவும் ரிச்சாகவும் இருக்கிறது. இதற்கு முன் அவர் டைரக்ட் செய்த காதல், வழக்கு எண் போன்ற படங்கள் மிக லோ பட்ஜெட்டில் எடுத்த்து போல இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு ஃப்ரஷ் பீலிங்கை தருகிறது என்று என் அருகில் இருப்பவரிடம் கூறினேன். ஏண்டா நாயே... மத்த எல்லா படத்தையும் திருட்டு டிவிடில பாத்துட்டு இந்த படத்த மட்டும் தியேட்டர்ல போய் பாத்தா ப்ரஷ் பீலிங்கா தான் இருக்கும். மூடிக்கிட்டு பாரு.. இல்லைன்னா டிக்கெட் காச வச்சிட்டு ஓடிரு என்றார். அதன் பிறகு நான் அதிகம் பேசவில்லை.

எப்போ சுந்தர்.சி படம் நடிக்க போனாரோ அப்பவே அவர் டவுன் ஆக ஆரம்பிச்சிட்டார்னு சொன்னாங்க. ஆனா மினிம்ம் கேரண்டிக்கு உத்தரவாதம் கொடுத்த இயக்குனர். ஒரு முறை அவர் பட டிவிடிக்கள் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டது என்று சென்று கடையில் ஃப்ரீ ரீப்ளேஸ்மெண்ட் கேட்டேன். டிவிடியை இரண்டாக உடைத்து முகத்தில் வீசிவிட்டனர். அப்போதுதான் தெரிநது அந்த கேரண்டி வேறு இந்த கேரண்டி வேறு என்று.

சித்தார்த் முதல் பாதியில் எலும்புருக்கி நோய் வந்த்தை போல் காட்சி தருகிறார். சில காட்சிகளில் என்முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வருகிற அளவு சகிக்க முடியாமல் தோன்றினார். பீட்டி பார்லர் சென்று வந்த பிறகுதான் ஓரளவு பார்ப்பது போல் தோற்றமளித்தார்.

ஹன்சிகா என்று எழுதுவதற்கு பதில் சின்ன ஷகிலா என்று எழுதலாம். கும்மென்று இருக்கிறார். “படம் நெடுக காஸ்டியும் அளவெடுத்த டைலர் ஓவர் ஷார்ப்பா ஸ்கர்ட் மிடிகளை தைத்து வைத்து ,அவர் வரும் இடங்களில் டயலாக்கை கூட கவனிக்க விடாமல் ஒரே இடத்தை நிலைக்குத்தி பார்க்க வைத்து இருக்கின்றார் என்றேன்” என் நண்பரிடம். நாயே நீ வந்ததே அதுக்கு தான.. பாத்து தொல... என்றவுடன் ஜாலியாக மறுபடியும் அளவெடுக்க ஆரம்பித்தேன்

சந்தானம் ரொம்ப நாள் கழித்து இந்த படத்தில் பார்மில் இருக்கிறார். இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று தோண்றுகிறது.

“ஏன் லூஸ் மோசன் மாதிரி பின்னாடி போற... யூரின் மாதிரி முன்னாடி போ” என்ற வசனம் என்னை மிகவும் கவர்ந்த்து. படம் முடிந்து வெளியில் வந்த போது ஒரு ஆண்டி ஹோண்டா சிட்டியை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்த்து. “ஏன் லூஸ் மோசன் மாதிரி பின்னாடி போறீங்க... யூரின் மாதிரி முன்னாடி போங்க” என்றேன் சிரித்துக் கொண்டே. பொளிச் என்று காரி துப்பிவிட்டு காரை நகர்த்தி சென்றது.

 ""நான் வில்லனா-? டேய் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை... கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ.... கசமுசா பண்ணிட்டு  கல்யாணம்  பண்ணா வில்லன்"" என்ற டயலாக்கும் அருமை. அதே மாதிரிதான் “படம் பாத்துட்டு ரிவியூ எழுதுனா அவன் பதிவர்... ரிவியூ எழுதிட்டு படத்த பாத்தா அவன் பிரபல பதிவன்....” எப்புடி ....

அதே போல ஹன்சிகா தங்கி இருக்கும் லேடிஸ்  ஹாஸ்ட்டலில் பேபிஜெனிபர் ஹன்சிகா அந்த குண்டு பெண் பேசும் டயலாக்குகள் பிலாசிபியாக பேசுகின்றார்கள்.... டயலாக் வெரி வெரி இன்டரஸ்டிங்..  டயலாக் ரைட்டர் வெங்கட்  அவர்களுக்கு ஒரு பொக்கே பார்சல்... ஆனா காச மட்டும் யாராவது போகும் போது குடுத்துருங்க.


கேமராமேன் கோபி அமர்நாத்.... சந்தானத்தை  ஹண்ஷிகா கத்தியால்  குத்த தொள தொள  மினி ஸ்கார்ட்டில் ஓடிவர கேமராமேன் சந்தானத்தின் ஆங்கிளில் ஹன்சிகாவை காட்ட, பரவசத்தில் சீட்டின் மேல் ஏறி நின்று விசிலடித்தேன்...  “சொத்” தென தலையின் பின் ஒரு செருப்பு வந்து அடித்தது. நல்ல புது Bata செருப்பு. இன்னும் கொஞ்ச நேரம் நின்று கத்தினால் இன்னொரு செருப்பும் வரும். 500 ரூபாய் தேத்திடலாம் என்று சீட்டிலேயே நின்று கத்தினேன். அடுத்த முறை வந்த்து ஒரு லேடீஸ் செருப்பு. அதனால் பொத்தினாற் போல் கீழிறங்கிவிட்டேன். 

பாடல்கள் ஆஹா ஓஹா என்று இல்லை என்றாலும் எதோ ஓக்கே... ரொம்ப டீசண்டாக இருப்பதால் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

என் அருகில் இருந்தவர் மனோபாலாவின் போர்ஷன் சூப்பர்ல என்றார் என்னிடம். உடனே நான் “மேல் போர்ஷனா கீழ் போர்ஷனா?” என்றேன்... உடனே என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இரண்டடி தள்ளி நடந்தார். ஏன் என்று புரியவில்லை.


போங்கையா எழுதி கை வலிக்குது... இதுக்கு மேல நீங்களே போய் பாத்து தெரிஞ்சுக்கோங்க... ( இதுக்கு மேல படத்துல மிச்சம் இருக்கது டைட்டில் கார்டு மட்டும் தான்)






அதயும் விட மாட்டியா






படக்குழுவினர் விபரம்.
Directed by Sundar C.
Produced by Ronnie Screwvala
Siddharth Roy Kapur
Khushboo Sundar
Written by Sundar C. (Screenplay)
Venkat (Dialogues)
Screenplay by Nalan Kumarasamy
Story by Sundar C.
Starring
Siddharth
Hansika Motwani
Santhanam
Ganesh Venkatraman
Music by C. Sathya
Cinematography Gopi Amarnath
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio UTV Motion Pictures
Avni Cinemax
Release date(s)
June 14, 2013[1]
Country India
Language Tamil
ஃபைனல் கிக்:

படம் முடிந்து வெளியில் வந்ததும், "த்தா ஹன்சிகா ஓடி வர்ற சீன்ல முன் சீட்டுல ஒருத்தன் எழுந்து நின்னு மறைச்சிட்டாண்ணே... " என்று நான் ஆரம்பிக்க 
"அதுக்கு?" என்றார் அவர்
"அப்புடியே படத்தோட டிவிடி வாங்கி குடுத்தீங்கன்னா வீட்டுல உக்காந்து சாவுகாசமா பாப்பேன்" என்றேன். மறுபடியும் அவர் காலில் இருந்த செருப்பை பார்க்க  பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.