ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Wednesday 25 July 2012

yaarukku Yaaro-2012 /யாருக்கு யாரோ..தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.

சமிபத்தில் யாருக்கு யாரோ என்ற படம் வந்தபோது ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்..அதே படத்தை என் ரசனை அலைவரிசையில் ஓரளவு ஒத்துபோகும்  (அது என்ன ஓரளவு என்கிறிர்களா?? என் போன்ற பன்முக பதிவாளர்க்கு நிகராக சிந்திக்க யாராலும் முடியாது என்பது உலகம் அறிந்தது தானே ) christopher Nolan,  மணிரத்னம், ராஜமவுலி, அணில் கும்ப்ளே போன்ற இயக்குனர்கள் மிக வற்புறுத்தி, நீங்கள் கண்டிப்பாக அந்த படத்தை பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் அது அந்த வளரும் கலைஞர்களுக்கு சிறந்த  விருதாகவும், விமர்சனமாகவும் அமையும் எனக் கேட்டுக்கொண்டனர். 

 இப்படி தான் சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ஒரு புதுமுக இயக்குனர் "ஒரு படம் இயற்றினேன்  அந்த படத்திற்கு அங்கு போதுமான வரவேற்ப்பு இல்லை நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று என்னிடம் உதவி கேட்டு வந்தார். அந்த படத்தை பார்க்காமலே வெறுமனே அந்த இயக்குனரின் முகத்தை மட்டுமே பார்த்து அந்த படம் எப்படி இருக்கும் என்ற கணிப்பில் நான் ஒரு விமர்சனம் எழுதி வெள்ளை மாளிகைக்கு போஸ்ட் செய்தேன். இத்தனைக்கும் அப்போது நான் பிரபலபதிவர் கூட இல்லை வெறும் லோக்கலாகத்தான் இருந்தேன். அப்புறம் என்ன அந்த படம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. ஹ்ம்ம்ம்.... அந்த படம் பெயர் Terminator,  இயக்குனர் பெயர் ஜேம்ஸ் காமிராமேன். நான்கூட கேட்டேன் காமிராமேன் என பெயர் வைத்துகொண்டு ஏன் இயக்குனராக ஆன அப்பாவியான இளைஞர் அவர். அதனால்தான் இன்றுவரை அவர் எந்த படம் எடுத்தாலும் அந்த படத்தின் முதல் ஷோக்கு டிக்கெட் அனுப்பி வைத்துவிடுவார். நான்தான் படம் பார்பதற்காக பாரின் போகனுமா என்று இருந்துவிட்டேன். இப்படி நிறைய பேர் என்னால் முன்னேறி இருக்கின்றனர்.  பிரபல பதிவரான எனக்கு இதெல்லாம் என்ன பெருமையா...கடமை.. சரி.. கழுதைய பத்தோட பதினொன்னா போயிட்டு போது என அந்த யாருக்கு யாரோ படத்தை பார்க்க முடிவு செய்தேன்.

ஒரு நாள் என்னை நானே free ஆக்கிக்கொண்டு தியேட்டர்க்கு சென்றேன். அங்கே வேறு எதோ போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். நான் வாட்ச்மேனை அழைத்து "என்னப்பா , யாருக்கு யாரோ படம் போஸ்டர் ஒட்டாம வேற எதோ ஒட்டிருகிங்க." என கேட்டேன் அதற்க்கு அந்த வாட்ச்மேன்," இல்ல சார் அந்த படம் ஓடல,அதான் வேற படம் போட்ருக்கோம் என்றார். எனக்கு செம டென்ஷன் ஆயிருச்சு, "த்தா.. என்னடா நெனச்சிருக்கிங்க.. நல்ல படம் ஓடலன்னு நீங்க எப்படிடா சொல்லலாம். நான் நெனச்சா என் எழுத்து மூலம் ஓடாத படத்தை ஓட வைப்பேன் , ஓடுற படத்தை உக்கார வைப்பேன்"என்றேன். வாட்ச்மேன் குழப்பமாக, "அது இல்ல சார், அந்த படம் இந்த தியட்டரில் ஓடல, வேற தியேட்டர்ல ஓடுமா இருக்கும். நல்ல பாருங்க"ன்னு சொன்னார். எனக்கு இது மேலும் கடுப்பை கெலப்பியது. ''ம்மா.. அது எப்படிடா அந்த தியேட்டர்ல ஓடுற படம் உங்க தியேட்டர்ல மட்டும் ஓடாதா.. த்தா மரியாதையா உங்க மேனேஜரை கூப்பிடு நான் பேசிக்கிறேன்'' என்றேன். மேனேஜர் என்னைபார்த்து முறைச்சபடி, "த்தா கிறுக்கு நாயே ஓடி போயிரு, எங்க அந்த படம் ஓடுதோ அங்க போய் பாரு" என்று சொல்லி கன்னத்தில் பளார் என்று ஒன்னு விட்டார். நான் கன்னத்தை தடவியபடியே அந்த படம் ஓடும் தியேட்டர்க்கு வந்து சேர்ந்தேன். வரவர இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது.

ஒருவழியாக அந்த திரைப்படத்தை இன்று காலை பத்து மணி ஷோவில் எஸ்டர்டே நைட் பார்த்தேன். படம் முடிந்த பின் என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். எப்படி இப்படிபட்ட ஒரு அற்புதமான படைப்பு  மக்களுக்கு பிடிக்காமல் தோல்வியை சந்தித்தது என்று. எந்த திரைப்படத்தையும் நான் அவ்வளவு எளிதாக பாராட்டிவிட மாட்டேன். உதரனத்திற்க்கு இப்போது வெளிவந்த நான் ஈ திரைப்படத்தை எல்லாரும் ஆஹா ஒஹோ என புகழ்கின்றனர்.ஆனால் எனக்கென்னவோ அது புடிக்கவில்லை.அது எப்படி அவ்வளவு பெரிய மனிதனின் உயிர் ஈ முட்டைக்குள் போகும். முட்டையை சுற்றி ஒரு ஓட்டை கூட இல்லையே. படத்தில் இப்படி நிறைய ஓட்டைகள். ஆனால் இந்த யாருக்கு யாரோ படம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. I just enjoyed it..!! யாருக்கு யாரோவை ஒன்றி பார்த்தபோது ஒன்பாத்ரூம் வந்தது. இதைவிட என்னவேண்டும் ஒரு நல்ல படத்தில்?

யாருக்குயாரோ ஒன்லைன்:


சாம் ஆண்டர்சன் என்ற அழகான, அறிவான  கார் விஞ்ஞானிக்கு காதல் வந்தால் என்ன ஆகும்? இதுதான் ஒன்லைன்.

யாருக்கு யாரோ கதை:
வாவ்.. அசத்தி இருக்கிறார்கள். பின்னி இருக்கிறார்கள். புதுமுகங்கள் அவ்வளவு அனுபவசாலிகளாக நடித்திருக்கிறார்கள். சாம் ஆண்டர்சன் டான்ஸில் பின்னி எடுக்கிறார். அதுவும் "ராசாத்தி" என அவர் உருகி பாடி ஆடும் போது என் காதல் காலங்கள் நினைவுக்கு வந்தன.

                                                     

சாம் ஒரு கார் விஞ்ஞானி. அவரை இரண்டு பிகர்கள் காதலிக்கிறார்கள். ஆனால் காரில் ஏற்கனவே மூன்று பேர் இருப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. பின் காதலர்கள் இணைந்தார்களா? காரில் இடம் கிடைத்ததா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


சுவாரசியங்களில் சில:
டிக்கெட் வாங்கமல் வழக்கமாக கூட்டத்தோடு கூட்டமாக தியேட்டருக்குள் நுழையும் நான் இந்த படத்துக்கு கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கவேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். உலகசினிமா பலவற்றை கரைத்துகுடித்த எனக்கே தமிழகத்தில் இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது. முதல்முறையாக டிக்கெட் எடுத்து படம் பார்த்தது சுவாரசியமாக இருந்தது. சரி இந்த படத்தை இப்போது எழுத என்ன காரணம்? எனக்கும் வேலை இல்லை உங்களுக்கும் வேலை இல்லை. அதைவிட என்ன பெரிய காரணம் இருந்துவிட போகிறது? படத்தில் அங்கங்கே சில சொதப்பல்கள் இருந்தாலும் டைட்டிலில் யாருக்கு யாரோ என போட்டது புதுமையாக இருந்தது. வழக்கமாக ஆங்கில படங்களில் மட்டுமே சாம், ஹேரி என பெயர்கள் இருக்கும். முதல்முறையாக தமிழ்படத்தில் அப்படி பெயரை பார்த்தவுடன் இயக்குனரின் திறமையை நினைத்து பிரமித்துவிட்டேன். ஹீரோயின் இரண்டுபேரும் த்ரிஷாவுக்கும், டாப்ஸிக்கும் டப் பைட் கொடுப்பார்கள். என் கண்டுபிடிப்பான ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டில் அவர்கள் இடம்பெறப்போகும் காலம் வெகுதூரம் இல்லை. யெஸ் தே டிசர்வ் இட்!


                                           


பைனல் கிக்:
இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். முதல் 20நிமிடம் போனதே தெரியவில்லை. ஏனெனில் நானே இருபது நிமிடம் கழித்துதான் போனேன். இந்த சக்கையான படத்தை மொக்கையான படம் என சிலர் சொன்னார்கள்.  அவர்கள் அறிவு அவ்வளவுதான். ஓரு நாயகன் உதயமாகிறான்..!! கண் கலங்கிவிட்டது

Thursday 19 July 2012

வெயில் - இது ஒரு சாம் மார்த்தாண்டன் சிறுகதை


நான் யார்..?? அதை ஏன்டா எங்ககிட்ட கேக்குற நாதாரி என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.. இருந்தாலும் ஒரு பிரபல பதிவாளராக உங்கள் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் கடமை என்னுடையது.தினமும் உங்கள் வாழ்க்கையில் லட்சக்கணக்கான நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களிடம் சென்று என்மேல் உள்ள பாசத்தின் காரணத்தினால் நீங்கதானா அவர்... அவர் நீங்கதான என்று கேட்டு தொந்தரவு செய்வதாக உளவுத்துறையிலிருந்து நம்பகமான செய்தி கிடைத்தது. என்னை காண விரும்புவோர் சென்னை கலெக்டர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உண்ட கட்டி வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் common man தான் நான். நான் உங்களோடு கலந்து தான் இருக்கிறேன். என்னை வெளியே தேடி அலைய வேண்டாம். நானே எங்காவது அலைந்து கொண்டுதான் இருப்பேன்.

சென்னை காசிமேட்டில் உள்ள ஜல்சா டாஸ்மாக்கில் தான் கணக்கு வைத்திருந்தேன்.அந்த ஏரியாவில் எனக்கு தீவிரவாத அச்சுரத்தல் இருந்த காரணத்தால் மிக பத்திரமாக, பாதுகாப்பாக கூடுவான்ச்சேரி ஏரியாக்கு 'குடி' பெயர்ந்தோம். இங்கே வந்தவுடன் எனக்கு quarter மேட்டர் problem இருந்தது. நான் account வைத்திருந்த ஜல்சா டாஸ்மாக்கில் எல்லோருக்கும் என்னமோ James Bond படத்தில் வரும் Casinoவில் வேலை செய்வதாக நினைப்பு. நான் கையில் காலி டம்பளருடன் எவ்வளவு நேரம் தொன்னாந்து நின்றாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நீண்ட நேரம் கழித்து கடையில் வேலைசெய்யும் சிறுவன்,ஓனரிடம்  'ண்ணா.. இந்த பெருச பாருண்ணா இன்னும் போகாம நிக்கிது என்று சொல்லுவான், ஓனர், "த்து.. சாவுகிராக்கி.. சனியன் இன்னைக்கும் ஒசி குடிக்கு glass ah  தூக்கிட்டு வந்து நிக்கிது பார்... த்தா.. சொரனையே இருக்காது போல இதுக்கு என்று சொல்லி கிளாஸ் கழுவுன தண்ணிரை மூஞ்சியில் ஊற்றுவார். mixing கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் சரி என்று adjust பண்ணிக்கொண்டு, அதை நக்கியபடியே வீட்டுக்கு போய் மட்டை ஆய்விடுவேன்.

இப்படியே நாளுக்கு நாள் அந்த கடையில் ஓசிகுடி குடித்தபடி என் வாழ்கை சென்றது. இப்போது புது ஏரியாக்கு குடி பெயர்ந்தாலும், குடிக்கு பழைய ஜல்சா டாஸ்மாக்கிற்கு தான் செல்ல வேண்டியிருந்தது.அதனால் இந்த ஏரியாவில் உள்ள புஸ் புஸ் ஒயின்ஸில் வைத்து கொள்ளலாம் என்று விசாரித்தேன். அந்த ஒயின்ஸ் ஓனர் . ' அது ஒன்னும் பிரச்சனை இல்ல சார் பழைய கடைல போய் account clearence லெட்டர் ஒன்னு வாங்கிட்டு வந்துருங்க பாத்து பண்ணிக்கலாம்ன்னு சொன்னார். நான் மனதுக்குள் நாசமா போச்சு.. இனி குடிச்சமாதிரிதான் என அலுத்துக்கொண்டே ரோட்டில் நடந்து சென்றேன். மணி பதினொன்றுதான் இருக்கும்,ஆனால் வெயில் போட்டு வாங்கியது. வரவர நம்ம ஊரு ரொம்ப கேட்டு போச்சு பகல்லயே வெயில் இந்த போடு போட்டால் ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் என்ன ஆட்டம் போடும்.பேசாமல் எல்லாத்தையும்  பகல்ல தூங்கிட்டு, ராத்திரில வேலைக்கு போக சொல்லணும்.

சிக்னலில் நின்று ரோட்டை பெராக்கு பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு கருப்பு நிற மாருதி ஆம்னி அமரர் ஊர்தி நின்று கொண்டு இருந்தது. உள்ளே வாழ வேண்டிய வயதுடைய ஒரு 85 வயது முதியவர் படுத்திருந்தார். பக்கத்தில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். நான் அந்த இறுதி ஊர்வலத்தில் இருந்த ஒருவரிடம், ' என்னங்க அநியாயம் இது, செத்தவன் ஒய்யாரமா படுத்துட்டு வரன் உயிருள்ளவன் வெளிய வெயிலில் நடந்து வரான். என்ன கொடுமை சார் இது என்றேன்.  

ஆம்னி வேனில் பின்னாடி கதவு இல்லாததால் அந்த வயதான பையனின் முகம் எனக்கு தெரிந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் விசிறி விட்டுக்கொண்டு இருந்தான். 'செத்தவனுக்கு என்ன வேர்க்கவா போகுது'..த்தா..லூசு பய புள்ளைகன்னு மனசுக்குள் சொல்லிக்கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றேன். வண்டிக்கு முன்னாடி ஒருவர் தீச்சட்டியுடன் சென்று கொண்டிருந்தார். ஏண்டா இங்க என்னா மாரியாத்தா திருவிழாவா நடக்குது, தீச்சட்டியோட வந்து நிக்கிற.. என்று கேட்க்க துடித்தது மனது.. ஆனால் ஒருவேளை திருவிழாவில் இருந்தவர் செய்தி கேட்டு அவசரமாக தீச்சட்டியோடு வந்துவிட்டாரோ எனவும் எண்ணம் தோன்றியது. ஒரு வேலை படைப்பாளியாக இருப்பதால் இப்படி பல்வேறு கோணங்களில் யோசிக்க தோன்றியது.

திடீரென்று ஒருவர் மாலையோடு ஓடிவந்தார்.. நானும் என் ரசிகராக இருப்பார், எனக்குதான் மாலையை போடா வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால் அந்த நபர் மாலையை வேனில் படுத்திருந்த வயதான இளைஞருக்கு போட்டார். என்ன உலகமடா இது.. ஒரு திறமையான பதிவாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இப்படி ஒரு பொனத்துக்கு கிடைத்ததை எண்ணி வியந்தேன். ம்மா..என்னடா மரியாதை தெரியாத பயலுகலா இருகிஙக.

ஆம்னி வேன் பக்கம் ஊர்வலமாக சென்றவர்கள் கூட்டம் அவ்வளவு ஒன்னும் இல்லை. சுமாராக தான் இருந்தது. ஒருவேளை ஞாயிற்றுகிழமை என்பதால் இருக்குமோ.??ஒருவேளை எல்லாரும் நம்ம 'தல' படத்துக்கு போய்விட்டார்களா. இல்லை இறந்ததை யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டார்களா.சரி அதனால் என்ன..நாமாவது கூட செல்லலாம் என்று பின்னாடியே சென்றேன். எனக்குள் பல கேள்விகள். என் ஆழ்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

அப்படியே நடந்துக்கொண்டு,யோசித்துக்கொண்டு போனதில் பழைய ஒயின்ஷாப் வாசலில் சென்றடைந்தேன். அவர் என்னை கண்டுபிடித்துவிட கூடாது என்ற காரணத்தால் வழக்கமாக நான் கடைக்கு செல்லுபோது எடுத்து செல்லும் கிளாசோடு செல்லாமல் use and throw glassodu சென்றேன். இருந்தும் அவர் என்னுடைய காந்த பார்வையை வைத்து நான்தான் என்று கண்டுபிடித்து , செம காண்டாயிட்டார்.. டேய். தம்பி..எடுடா அந்த வென்னீர.. இன்னைக்கு இவனை விடக்கூடாது என துரத்த ஆரம்பித்தார். நானும் ஓட்டம் பிடித்தேன். கடைசியில் ஒரு டீக்கடையில் இளைப்பாறினேன்.

தம்பி, ஒரு டீ போடுப்பா என்றேன். கடைகாரர்,' சாரி சார். கடை ஓனரோட அப்பா இறந்துட்டாரு அதுனால கடைய எடுத்து வைக்கிறோம் என்றார். பிறகுதான் எனக்கு தெரிந்தது வழியில் பார்த்த அந்த இறந்து போன முதிய இளைஞன் தான் அவர் என்பது. ஆகா.. இதைதான் உலகநாயகன் Chaos Theory என்று தசாவதாரம் படத்தில் என்று சொல்லி இருப்பார். உலகம் எவ்வளவு சிறியது என எண்ணி கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  



பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS

 

Monday 9 July 2012

5 ஸ்டார் ஹோட்டலில் ஜெட்லி சேகர்



மீண்டும் ஒருமுறை என்னுடைய இனிமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை இன்னும் சுவாரஸ்யமாக 5 star ஹோட்டலில். 5 star hotel என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இரவில் கூட light போடாத கஞ்சத்தனம், சமையல் செய்யும் போது கரை பிடிக்குமே என்ற அறிவு இல்லாமல் வெள்ளை உடை அணிந்திருக்கும் சமையல் கார்கள், கல்யாண வரவேற்பில் மாப்பிள்ளை அணிந்திருப்பது போல கோட் அணிந்து திரியும் சப்ளையர்கள். பாடல் கேசட் வாங்க வசதி இல்லாமல் வெறும் இசை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் டேப்ரெகார்டர்... இது போல் முகம் சுளிக்க வைக்கும் பல விஷயங்கள் ஹோட்டலில் உள்ளது..

அதனால் தான் எப்பவும் நான் அங்கு செல்வதே இல்லை. மேலும் அங்கு எவ்வளவு நேர்மையான ஆட்களாக இருந்தாலும் அக்கௌன்ட் வைக்க விட மாட்டார்கள். தள்ளு வண்டி கடை, ஆயா கடை, தட்டி விலாஸ் போன்றவை தான் எப்பவுமே என் சாய்ஸ்.அதுவும் என் வீட்டருகில் உள்ள ஒரு வண்டிக்கடை அண்ணன் வேர்க்க விருவிருக்க சுடும் தோசையின் சுவை அலாதி...பழைய பாக்கியை அவர் கேட்க்கும் விதம் அதை கண்டுக்கொல்லாத மாதிரி நின்று கொண்டு சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு முறை என் வாசகர் ஒருவர் என்னை காணவந்தார். எப்போதும் என்னை பார்க்க வருபவர்களுடன் ஒரு வேலை உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. அதற்கு காரணம் அவ்வளவு தூரத்திலிருந்து என்னை காண வந்தவர்களுக்கு என்னுடன் சாப்பிடும் பாக்கியத்தை அளிக்க விரும்புவேன். பில்லை கூட அவர்களையே தர சொல்லுவேன், அப்போது தான் அவர்களுக்கு என்னை தொந்த்தரவு செய்தததாக தோனாது. இப்படி தொலைநோக்கு பார்வையோடு நான் செயல்படுவதால் தான் உலகநாயகன் முதல் ஒபாமா வரை என்னுடன் பழக ஆசை படுகிறார்கள்.

வழக்கம்போல் என்னை சந்திக்க வந்த வாசகருக்கு அடப்பு போட்டு சாப்பிட அழைத்து செல்லுமாறு கூறினேன்.தற்கு மேல் நடந்ததை கட்சியாக கூற விரும்பிக்றேன். படித்து ரசியுங்கள்
வாசகர்:  'சார் பக்கதுல buffet சாப்பிட போவோம 

நான் : அப்படினா பூங்கொத்து தான?? என்ன சார்  அத போய் யாரவது சாப்பிடுவாங்களா? நம்ம ஆய கடை பக்கத்துல இருக்கு வாங்க ஆளுக்கு ரெண்டு இட்லியும் நாலு ஆப்பாயிலும் சாப்ட்டு கெளம்புவோம். அப்படியே வீட்டுக்கு நாலு இட்லி பார்சல் வாங்கிக்கிறேன்.

வாசகர்: ஐயோ சார் அது boque நான் சொல்றது buffe ஹோட்டல்ல போடுவாங்களே அது.

5 star ஹோட்டலில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் ஆசைக்காக சென்றேன்.

star ஹோட்டலில்

( வாசகர் தன் விருந்தாளி ஒருவரை சந்தித்து அவருடன் பேச சென்று விட்டார் )
நமக்கு தான் ஆகாதே. சரி எதோ வந்துவிட்டோமே சாபிடாவிட்டால் அவர் மனது சங்கட படுமே என்று மனதை திடபடுத்திகொண்டு ஆரம்பித்தேன்.

நான்: (டை கட்டிய சர்வரிடம்) : ஏன் தம்பி buffe nu எதோ சொல்றங்களே அப்படினா என்ன?

சர்வர்: சாப்பாடு எவ்வளவு வேணாலும் எடுத்தக்கலாம். கட்டுப்பாடு கிடையாது.

நான்: அட தக்காளி.. நல்லா இருக்கே. சரி அப்போ ரெண்டு buffet பார்சல் பண்ணி கொண்டு வா.. தயிர் பச்சடி மறந்துறாத.. ஓடு..

சர்வர்(கோவமாக): சார்.. அதெல்லாம் பார்சல் பண்ண முடியாது. இங்கேயே சாப்பிட மட்டும் தான்.

என்னாங்கடா உங்க சட்டம் என்று அலுத்து கொண்டு தட்டை ஏந்திக்கொண்டு சென்றேன்.

நான்: டேய்.. த்தா... என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. என் மேல ஒருத்தன் கை வச்சிட்டான். கூப்பிடுடா மொதலாளிய.

மானேஜர்: என்ன சார்.. என்ன பிரச்சனை?

நான்: உங்க ஆளுதானடா எவ்வளவு வேணாலும் எடுத்துக்க சொன்னான். அப்புறம் ஏன்டா இந்த மொட்ட என்ன அடிச்சான்?

மானேஜர்: (விசாரித்துவிட்டு):(என்னிடம்): டேய் எவ்வளவு வேணா எடுத்துக்கனு சொன்ன நீ அவன் தட்டுல இருந்து எடுப்பியா? மரியாதையா பாத்திரத்தில இருந்து மட்டும் எடுத்துக்க.

(தண்ணி குடித்து உடலை குலுக்கி சரி செய்துவிட்டு மீண்டும் பிரியாணி பக்கம் சென்றேன்.)
வந்து பார்த்தால் டேபளில் நான் விட்டு சென்ற தட்டை காணவில்லை.

நான்: என்னடா ஹோட்டல் நடத்துறீங்க.? வச்சிட்டு போன தட்ட அதுக்குள்ளே எவனோ திருடிட்டான். அதுல நான் பாதி சாபிட்டு வச்சிருந்த 'நல்லி'ய காணோம்.
மறியாதைய கதவை மூடி எல்லாரையும் செக் பண்ணு,இல்ல செம காண்டு ஆயிருவேன்...

மானேஜர்: சாரி சார்.. நீங்க சாபிட்டு வச்சிட்டு போனத பாத்துட்டு தெரியாம மிச்சம் வச்சிடிங்கன்னு கிளீன் பண்ணிட்டு போய்டாங்க. வேணும்னா இன்னொரு ப்ளேட்ல கொண்டு வர சொல்லவா சார்?

நான்: யோவ்.. என்ன பாத்தா என்ன அடுத்தவன் மென்னு போட்டாத தின்கிற மாதிரி இருக்கா? ம்மா.. யாரு கிட்ட உங்க வேலைய காட்டுறிங்க?

மானேஜர்: ஐயோ.. இல்ல சார். புதுசாதான் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்..

நான்: ஒஹ்.. அப்படியா? சரி சரி... நல்லா பெரிய 'நல்லி'யா அள்ளி போட்டு கொண்டு வா..



சாப்பிட்டுவிட்டு கப்போடு  போனபோது..

சர்வர்: சார்.. deserts அந்த பக்கம்.

நான்: யோவ் என்னைய என்ன கேனப்பையனு நெனச்சியா? நம்ம ஊர்ல ஏதுயா desert ?

சர்வர்: அந்த desert இல்ல சார்.. ஐஸ்கிரீம் , சாலட் அந்த மாதிரி.

நான்: அடிங்...  ம்மா.. ஏன் அத ஐஸ்கிரீம்னு தமிழ்ல சொல்ல மாட்டியா? சரி..சரி.. மனிச்சிடேன். போ..

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக சாபிட்டு முடித்துவிட்டேன்.
(இன்னும் என்னுடன் வந்த வாசகர் உள்ளே வரவில்லை)

சர்வர்: சார்..செக்.

நான் : யோவ்..இது என்ன பேங்க்கா செக் கேக்குற ? என்னையா ஹோட்டல் நடத்துற ? நான் நெனச்சா உங்க ஹோட்டல் தலையெழுத்தையே மாத்திருவேன்.

மானேஜர்: சார். அவரு பில் கேட்டாரு.

நான்: என்கிட்டயே பில் கேக்குறியா? நான் பிரபல ப்ளாக் பதிவாளர்.

மானேஜர் (கடுப்பாக) : நீ சார் பதிவாளரா இருந்தாலும் பில் கொடுத்துதான் ஆகணும்.. மரியாதைய பணத்த எடு.
 (ஒரு வழியாக வாசகர் வந்து பில் கொடுத்து என்னை காப்பற்றி விட்டார்)


(வெளியே செல்லும் போது)

வாசலில் கதவு திறந்து விடுபவர்(தலை சொறிந்தபடி): சார்.. டிப்ஸ்??

நான்: உங்க ஹோட்டல் எனக்கு சுத்தமா புடிக்கல... இருந்தாலும் உனக்காக டிப்ஸ் தரேன்.
            கருவேப்பில்லை, மருதாணி , கொஞ்சம் களிமண் சேர்த்து அரைத்து தலைல தடவி மொட்டை மாடில படு. இப்படி ஒரு வாரம் செஞ்சா முடி காடு மாதிரி வளரும்.


வாசலில் கதவு திறந்து விடுபவர் : டேய்.. உனக்கு டிப்ஸ்னா என்னான்னு தெரியலைனா கூட பரவாயில்ல.. ஆனா நீயெல்லாம் முடி வளர டிப்ஸ் கொடுத்தா பாதிய அதைதான் என்னால தாங்க முடியல.. ஓடி போயிரு இனிமே இந்த பக்கம் எட்டி கூட பாக்காத. ஓடிரு...



Friday 6 July 2012

ஆண்வெஜ் பெண்வெஜ் /ராமாபுரம்/சென்னை/06/07/2012

ஆல்பம்:

திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே திமுக வினரை பயமுறுத்த ஆரம்பிக்க எனக்கு காலராவே வந்துவிட்டது. எனக்கு சிறை செல்லும் ஆசை இல்லாவிட்டாலும் அங்கு களி மிகவும் ருசியாக இருப்பதாகவும், காசுகூட வாங்வில்லை எனவும் சென்ற முறை அண்டா திருடிய வழக்கில் உள்ளே சென்று வந்த என் நண்பர் ஒருவர் கூறியதும் எனக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து  கொண்டு கைது செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? முன்கூட்டியே ஜாமீன் வாங்கி வைத்துவிடுவோம் என்று சைபர் கிரைம் ஆபீஸில் இருந்த என் நண்பரை அழைத்துக் கொண்டு மீன் மார்க்கெட்டுக்கு விடிய காலமே சென்றேன். இரவு எட்டு மணி வரை தேடியும் ஜாமீன் கிடைக்கவில்லை. வாழை மீன் இருக்குங்குறான், வஞ்சரமீன் இருக்குங்குறான் ஆன ஜாமீன் மட்டும் கடல்லயே இல்லையாம். வேறு வழியின்றி வீடு திரும்பி விட்டோம். நேற்று முன் தினம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற என்னை ஏனோ போலீஸ்காரர்கள் கைது  செய்யவே இல்லை. நான் பிரபல பதிவர் என்பதால் பயந்து விட்டுவிட்டார்கள் என்று என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்  "போராட்டத்துல கலந்துக்குற மூஞ்சயும் மொகரக்கட்டையும் பாரு" என்று கூறிக்கொண்டே PC ஒருவர் பலத்த வேகத்துடன் லத்தியால் பட்டக்ஸில் இரண்டு வைத்தார் வலி தாங்கமுடியாமல் பின்புறம் தடவிக்கொண்டே மெல்ல வீடு வந்து சேர்ந்தேன். ஒத்தடம்  கொடுக்க வெண்ணீர் அடுப்பில் காய்ந்து கொண்டு இருக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------

அது என்னவென்றே தெரியவில்லை சொல்லிவைத்தார் போல எல்லா டீ கடைகளிலும் டீ குடித்த பின்பு காசு கேட்கின்றனர். உலக ஃபேமஸான ஒரு பதிவருக்கு  நீங்க கொடுக்கும் மரியாதை இதானாடே?

--------------------------------------------------------------------------------------------------

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்ததற்கு காரணம் ஓட்டுனர் செல் பேசியில் பேசியது தான் என சொல்லுகிறார்கள்.. அப்படியே தான் பத்திரிக்கைகளிலும் சொல்லுகின்றனர். ஏன் பாடியிருந்தால் விழுந்திருக்காதா? ஆனால் பஸ்  மேம்பாலத்தில் மோதும் போது பாலம் உடைந்ததால் தான் கீழே விழுந்தது என்பது என் கருத்து. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐடியா கொடுத்த ஐடியா மணியை இழுத்து நாலு  சாத்து சாத்த வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------
மிக்சர்

ஓட போன் ரேட் ஏற்றிய விஷயம் எனக்கு தெரியாது. எப்போதும் ரேட் ஏற்றும் போது எனக்கு மறக்காமல் போன் செய்து சொல்லும் வோடபோன் ஓனர் இந்த முறை ஏனோ மறந்துவிட்டார். நேற்று வழக்கம் போல கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு ரீசார்ச்சும் 2 ரூபாய்க்கு ரேட் கட்டரும் போட சொன்னேன்.  கடைக்காரர் என்னுடைய  போனை தூக்கி வெளியில் வீசிவிட்டு செருப்பை எடுத்து காட்டினார். இவருக்கு இதே வேலையாக போய்விட்டது இனிமேலும் விடக்கூடாது என்று கஸ்டமர் கேருக்கு கால்செய்து விஷயத்தை கூறினேன். "Please check the number you have dialed" என்று கடைக்காரர் செய்த தவறுக்கு கஸ்டமர் கேரிலிருந்து மன்னிப்பு கேட்டார்கள்
---------------------------------------------------------------------------------------------------
அண்ணா மேம்பாலத்தை சரிசெய்து கொண்டிருந்தனர். நான் அந்த வழியே போகும் போது அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் "...த்தா மேம்பாலம் கட்டிருக்கதாலதான பஸ் மேலருந்து கீழ விழுந்துச்சி... திரும்ப அதயே கட்டிகிட்டு இருக்கீங்க.. இடிச்சிட்டு பஸ் எல்லாத்தையும் கீழயே விடுங்கடா அப்பதான் ஆக்ஸிடண்ட் நடக்காது" என்று என் யோசனையை கூறினேன். பாலம் கட்ட வைத்திருந்த சிமெண்ட் கலவையை அள்ளி மூஞ்சில் அடித்து விட்டனர். வீட்டுக்கு வந்து அதை சுரண்டி எடுக்க மூண்று நாள் ஆனது.

------------------------------------------------------------
"dei unakku vekkame illaiyaa.. soru thingiriya illa vera ethayavathu thingiriya" என்று எனக்கு கடந்த ஜூன் 27 ம் தேதி சரியாக மாலை 3 மணி 30 நிமிடம் 20 நொடிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. நாய் முழுத்தேங்காயை உருட்டுவது போல அதை வத்து உருட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு தமிழே இப்பொழுதுதான் ஓரளவுக்கு படிக்கத் தெரிகிறது. அப்படியிருக்க எனக்கு தெலுங்கில்  எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தால் எப்படி புரியும்? நானும் எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் அனைவரும் "டேய் உனக்கு வெக்கமே இல்லையா? சோறு திங்கிறியா இல்ல வேற எதையாவது திங்கிறியா?" என்று ஒரே மாதிரியாக திட்டுகின்றனர். எஸ் எம் எஸ்ஸை காண்பித்தற்கே  இந்த திட்டு என்றால் அதில் அநேகமாக மிக மோசமான கெட்ட வார்த்தை எதாவது இருக்கும்னு நெனைக்கிறேன். த்தா.. யாராவது அதுக்கு அர்த்தம் என்னனு சொல்லுங்கடா...

---------------------------------------------------
இந்த வார வாசகர் கடிதம்:

میرے حساب کی طرف سے، ان کا احترام کرنے کے لئے درکار فنڈز کے اپنے اکاؤنٹ میں چیک اور آمد جمع کرنے کے درمیان تین گزر ضروری ہے. میں کورس کا حوالہ دیتے ہیں، میری معمولی بچت اکاؤنٹ، ایک انتظام کون سا، میں مانتا  صرف تیس ایک سال کے لئے جگہ میں کیا گیا ہے سے خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.

خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.






அன்பின் வாசகர்... மன்னிக்கவும் எனக்கு ஹிந்தி தெரியாது.

பிலாசபி பாண்டி:

லவ் பண்றதுங்கறது ஓடுற பஸ்ஸில் நின்று ஒண்ணுக்கு அடிப்பதை போல... பொறுமையா அடிச்சா ரோட்டுல அடிக்கலாம்.. அவசரப்பட்டு பரக்காவெட்டி மாதிரி அடிச்சா நம்ம மேலையே தான் அடிச்சிக்கனும். இப்படிக்கு பஸ் படிக்கட்டில் நின்று ஒண்ணுக்கு அடிக்கலாமா வேண்டாமா என யோசிப்போர் சங்கம்.  தம்பி கோச்சிக்கிறாதீங்க..
--------------------------------------------------------------------------------------
நாண்வெஜ் 18+ :
நேற்று முன் தினம் எனக்கும் பக்கத்து வீட்டு நாய்க்கும் யாருக்கு லெக் பீஸ் என்பதில் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. அது என் பட்டக்ஸை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வந்த நேரம் "சேகர் செத்துருவான் ப்ரால்லயா... " என்று  முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு சொன்னேன். முகத்தில் காரிதுப்பிவிட்டு லெக்பீசை எனக்கே விட்டுச்சென்றது... '


பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  





நனைப்பது அல்ல நீ!!!

துவைத்து காயப்போடுவதே நீ!!!



EVER EVERS