ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday, 15 August 2011

மிக தாமதமாக 1947ன் ஆண்வெஜ் அண்ட் பெண்வெஜ்ஆல்பம்:
ஆல்பம் என்பது ஆர்யன் ராஜேஷ் மற்றும் ஷ்ருதிகா நடித்த ஒரு மொக்கை திரைப்படம்.இந்த படத்தை நேற்று கே டி வியில் போட்டார்கள். நான் அதை சன் டிவியில் பார்த்தேன்.படத்தில் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. இசை கார்த்திக் ராஜா என்று டைட்டிலில் போட்டார்கள். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது இந்த படத்துக்கு இசைஅமைத்தவர் கார்த்திக் ராஜா என்று.  


படத்துக்கு இடையே பசித்ததால் சாப்பிட சென்று விட்டேன். சாப்பிட்டு வந்து திரும்பவும் படம் பார்த்தேன். அதே படம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. டி.வி யை ஆப் செய்து விட்டேன்.அதனால் இந்த படத்தை டகால்டி வரிசையில் சேர்க்கிறேன்.

=================
இன்று காலையில் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கால் வந்தது. இந்த நூற்றாண்டிற்கான சிறந்த இயக்குனர் விருது எனக்கு வழங்கவிருப்பதாக சொன்னார்கள். நான் இன்னும் படம் எடுக்கவில்லை. அதனால் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று பதில் அளித்து விட்டேன்.=================

மிக்சர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க எம்.எல்.ஏ ஆபிரகாம் லிங்கனும் தமிழ்நாட்டு முதல்வர் ஜவர்கர்லால் நேருவும் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் "செஸ்" போட்டிகளை கண்டு ரசித்தனர். பிறகு இருவரும், அங்கிருந்து சென்று விட்டனர். ஆபிரகாம் லிங்கன் நல்ல மனிதர். ஜவர்கர்லால் நேரும் மிக நேர்மையானவர். ரோட்டில் நேராக நடப்பதால் நேரு என பேர் வந்திருக்கலாம். நான் லோக்கல் என்பதால் எனக்கு இதுபற்றி அவ்வளவாக தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் நான் குடும்பத்துடன் சென்று திருட்டு டிவிடியில் பார்ப்பேன்.


==============================

மண்களூர் அடுப்பை போல சூடாக இருக்கின்றது. சூடாக என்றால் சுடும் என அர்த்தம். மண்களூர் சூடாக இருந்தாலும் எனக்கு சூடு சொரணை இருப்பதில்லை. இங்கு வாசக நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் சொந்த செலவில் டீ சாப்பிடுவது புதுமையான அனுபவமாக இருக்கிறது. கடைசியாய் சொந்த செலவில் நான் டீ குடித்தது எனக்கு நினைவில் இல்லை. வாசகர்கள் யாருக்காவது நினைவில் இருந்தால் கூகில் பஸ்ஸில் ட்வீட் செய்யுங்கள். 
==============================


இங்கு வந்ததில் இருந்து பெண்களை ஆபாசமாய் பேசுவதும், பின் அறை வாங்கி அழுவதுமாக ஜாலியாய் பொழுது போகின்றது...  இன்று மண்களுர் லால்பார்க் ஊர்வசியில் 3 மணிக்காட்சியில் 3டியில் குலேபகாவலி பார்த்துவிட்டேன.. எம்.ஜி.ஆர் என்ற புதுமுக நடிகர் நன்றாக நடித்துள்ளார். என் வாசகராக ஆவதற்கு எல்லா தகுதியும் அவரிடம் உண்டு என நினைக்கிறேன். விமர்சனம் விரைவில்..


இந்த வார நிழற்படம்; 
                                                                

                       
   நிழல் இருப்பதால் இதுதான் நிழற்படம். இது என் கைவண்ணம்.

|
வாசகர் கடிதம்:

Dear aitel customer. You have not paid your bill for the months of january, february, march, april, may, june, july to december. Please pay the bill immediately. Or else your services will be disconnected. Thank you
==============================
அன்பின் கஸ்டமர்.
உங்கள் வீட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை தங்க அழைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இந்த வருடம் முடிகிறதா பார்க்கலாம். ஆம் ஆண்வெஜ் நாண்வெஜ் பகுதி எழுதுவதை நான் ஒரு செர்வீசாகத்தான் செய்கிறேன்.


இந்த வார சலனப்படம்;

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.  நடன அசைவுகள் மிகவும் அழகு. கண்ணை மூடிக்கொண்டு,காதைப் பொத்தி கொண்டு காரில் போகும் போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். எழுந்து ஆடுவீர்கள்.  
நான்வெஜ்(18+):

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கொஞ்சம் சக்தி இட்லிபொடி வாங்கி அதை சிக்கனில் தடவி ஊற வைக்கவும். பின் சமூக விலங்குகள் பொறித்தும், காட்டு விலங்குகள் பச்சையாகவும் சாப்பிடலாம்.


========

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...
(அடுத்து வருவது 'சைபர் கிரைம் ஆபீசில் சாம் மார்த்தாண்டன்')

18 comments:

Mohamed Faaique said...

///மண்களூர் சூடாக இருந்தாலும் எனக்கு சூடு சொரணை இருப்பதில்லை////

ஏனுங்க.. ஏன்?????

கஸ்டமர் கடிதம் அசத்தலோ அசத்தல்...

இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்..

சார்வாகன் said...

Superrrrrrrrrrrrrrrrrrr

Anonymous said...

Karki -

Kalakura po.. Antha aramandaiyan mela erukira kovatha nalla theerthukara pola..

போடாங்கோ said...

சும்மா இப்படி பதிவர்களே கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே. தண்ணி வாங்கி புரட்சி பண்ணியிருக்குற கேபிள் சங்கர் மாதிரி நீங்க ஏதாவது புரட்சி பண்ணியிருக்கீங்களா.

http://cablesankar.blogspot.com/2011/07/blog-post_22.html
http://www.surekaa.com/2011/07/blog-post.html

நீங்களும் ஏதாவது ஒரு புரட்சி பண்ணியிருந்தா அத பத்தி எழுதுங்க. இல்லைன்னா கேட்டால் கிடைக்கும் புரட்சிகர முன்னணி இயக்கத்துல சேந்து தண்ணி அடிங்க ச்சே தண்ணி வாங்கி குடிங்க.

RAJ said...

சூப்பர் ......செம காமெடி....
Expecting more on:
1)எண்கணித ஜோதிட ஆச்சர்யங்கள் - ஆர்.கே
2)உலக சினிமா மா மேதை....கூகிள் விருது பெற்ற சிறந்த தமிழ் விமர்சகர் ...கேபிள் அவர்களின் கொத்து பரோட்டா ....

Anonymous said...

அருமையா இருக்குது... அப்படியே தமிழ்நாட்டில் வாழ பழகன்னு ஒரு பதிவு வேண்டும். ஏன்னா நாங்கள் எல்லாம் எப்படி கக்குஸ் போன கழுவறதுன்னு தெரியாம அழுக்கு குண்டியோட இருக்கோம்

பிரசன்னா கண்ணன் said...

This one is tooo good.. You have a good writing skills..
சத்தியமா முடியல தலைவரே.. வரிக்கு வரி விழுந்து விழுந்து சிரிச்சேன்.. :-)
Expecting more Spoofs & other (your own) stuffs..

Anonymous said...

podaaangaa

Anonymous said...

http://mokkaiblog.blogspot.com/2011/08/blog-post_13.html?showComment=1313477846911#c5602486747532101410

Anonymous said...

இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி

naan said...

சூப்பர் நல்ல இருக்கு இன்னும் நிறைய செய்யணும் அப்படியே சேகர போப்பி பண்ணிய மாதிரி இருக்கு

Anonymous said...

தில் இருப்பவர்கள் உங்கள் ஜட்டி சைசையும், செருப்பு சைசையும், பால் கார்டி நம்பரையும் கொடுத்து விட்டு என்னை பற்றி எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

Anonymous said...

ultimate thala...kalakunga...

Anonymous said...

This week comedy..

http://abiprabhu.blogspot.com/2011/06/blog-post.html

ஜாக்கி அண்ணனுக்கு ஒரு மடல்...
வகை : கடிதம்... | author: பிரபாகர்

எவ்வளவு நாள் பழகியிருக்கிறோம் என்பதில் நட்பல்ல, எப்படி பழகியிருக்கிறோம் என்பதில்தான்... இதற்கு ஒரு நல்ல உதாரணம் என் அன்பு அண்ணன், பங்காளி நீங்கள்தான்...

சிலரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது, அண்ணா உங்களிடம் எதிர்ப்பார்க்கவே முடியாது, பதிலாய் ஏகமாய் பாசத்தினை, உண்மையான் நட்பினை. ஆம், உங்களுக்கு குழந்தை மனசு அண்ணா, அதனால்தான் மனதில் உள்ளதைப் பட்டென பேசுகிறீர்கள்.

முதல் நாள் சந்தித்த நாம் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினோம், உணவகத்தில் மதிய உணவு உண்டவாறு. எவ்வளவு எதார்த்தமாய் பேசினீர்கள், அதில் நான் உங்கள்பால் ஈர்க்கப்பட்டு 'அண்ணன் ஒருத்தன் நமக்கு இருக்காண்டா' (பார்த்தீர்களா, உங்களைப்பற்றி எழுதும்போதே எனக்கும் வார்த்தைகள் தடுமாறுகின்றன)எனத் தோன்றியது.

அண்ணா, கதிர் என்னிடம் சிரித்தபடி விளையாட்டாய் கேட்டார் 'பிரபா, என்ன அண்ணன் அண்ணன்னு பாசத்தைப் பொழியுறீங்க, உங்களைவிட ரொம்ப சின்னவர் தெரியுமா?' என.

'வயதில் தம்பியாயிருக்கலாம், அனுபவத்தில் எனக்கு அவர் அண்ணன்'என பதில் சொன்னதும், 'அப்பா சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை' எனச் சிரித்தார்.

உலகப்படவிழாவில் சந்தித்த நாம் ஒன்றாய் படங்கள் சில பார்த்தோம். மன்மதன் அம்பு படத்தினை பரங்கிமலை ஜோதியில் பார்த்தபோது படம் பார்த்து ரசித்ததைவிட உங்களின் அளப்பரைகளைதான் அதிகம் ரசித்தேன். ஜெய் ஜாக்கி.

ஈரோடு பதிவர் சந்திப்பு நமது மறு சந்திப்புக்கு அடிகோல, இன்னும் உங்களைப்பற்றி தெரிந்து, அறிந்துகொள்ள வாய்ப்பாய் அமைந்தது.

என்று அழைத்தாலும் 'ம்... சொல்லுடா' என அன்பாய் விளிப்பீரே அதற்காகவே போன் செய்துகொண்டே இருக்கலாமா எனத் தோன்றும்.

சமீபத்தில் ஈக்காடுத்தாங்கலில் இருக்கிறேன் என உங்களிடம் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் வந்து சந்தித்து, செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச்சென்று கோயம்பேடு வரை வந்து வழியனுப்பிவைத்தீரே, இதை நான் மறக்கவா முடியும்?

அண்ணா எல்லோருக்கும் கடிதம் எழுதிகிறீர்கள், உங்களுக்கு நான் எழுதப்போகிறேன் என விளையாட்டுக்காய் உங்களிடம் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது.

அண்ணா உங்களின் அன்புத் தம்பி என்பதில் இறுமாப்பு கொள்கிறேன், பெருமையடைகிறேன். ஜெய் ஜாக்கி...

உங்கள் அன்புத் தம்பி,

பிரபாகர்...

Anonymous said...

Very Nice...

Arun Kumar said...

some one from 122.179.98.221 posting vulgar comments. linking your name. dont know why these peoples are doing like this? dont worry plz continue your good work.

Padmanaban said...

superb

Katz said...

what to say? simply superb. addicted to ur aanveg and penveg.

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி