ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Wednesday 25 July 2012

yaarukku Yaaro-2012 /யாருக்கு யாரோ..தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.

சமிபத்தில் யாருக்கு யாரோ என்ற படம் வந்தபோது ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்..அதே படத்தை என் ரசனை அலைவரிசையில் ஓரளவு ஒத்துபோகும்  (அது என்ன ஓரளவு என்கிறிர்களா?? என் போன்ற பன்முக பதிவாளர்க்கு நிகராக சிந்திக்க யாராலும் முடியாது என்பது உலகம் அறிந்தது தானே ) christopher Nolan,  மணிரத்னம், ராஜமவுலி, அணில் கும்ப்ளே போன்ற இயக்குனர்கள் மிக வற்புறுத்தி, நீங்கள் கண்டிப்பாக அந்த படத்தை பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் அது அந்த வளரும் கலைஞர்களுக்கு சிறந்த  விருதாகவும், விமர்சனமாகவும் அமையும் எனக் கேட்டுக்கொண்டனர். 

 இப்படி தான் சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ஒரு புதுமுக இயக்குனர் "ஒரு படம் இயற்றினேன்  அந்த படத்திற்கு அங்கு போதுமான வரவேற்ப்பு இல்லை நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று என்னிடம் உதவி கேட்டு வந்தார். அந்த படத்தை பார்க்காமலே வெறுமனே அந்த இயக்குனரின் முகத்தை மட்டுமே பார்த்து அந்த படம் எப்படி இருக்கும் என்ற கணிப்பில் நான் ஒரு விமர்சனம் எழுதி வெள்ளை மாளிகைக்கு போஸ்ட் செய்தேன். இத்தனைக்கும் அப்போது நான் பிரபலபதிவர் கூட இல்லை வெறும் லோக்கலாகத்தான் இருந்தேன். அப்புறம் என்ன அந்த படம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. ஹ்ம்ம்ம்.... அந்த படம் பெயர் Terminator,  இயக்குனர் பெயர் ஜேம்ஸ் காமிராமேன். நான்கூட கேட்டேன் காமிராமேன் என பெயர் வைத்துகொண்டு ஏன் இயக்குனராக ஆன அப்பாவியான இளைஞர் அவர். அதனால்தான் இன்றுவரை அவர் எந்த படம் எடுத்தாலும் அந்த படத்தின் முதல் ஷோக்கு டிக்கெட் அனுப்பி வைத்துவிடுவார். நான்தான் படம் பார்பதற்காக பாரின் போகனுமா என்று இருந்துவிட்டேன். இப்படி நிறைய பேர் என்னால் முன்னேறி இருக்கின்றனர்.  பிரபல பதிவரான எனக்கு இதெல்லாம் என்ன பெருமையா...கடமை.. சரி.. கழுதைய பத்தோட பதினொன்னா போயிட்டு போது என அந்த யாருக்கு யாரோ படத்தை பார்க்க முடிவு செய்தேன்.

ஒரு நாள் என்னை நானே free ஆக்கிக்கொண்டு தியேட்டர்க்கு சென்றேன். அங்கே வேறு எதோ போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். நான் வாட்ச்மேனை அழைத்து "என்னப்பா , யாருக்கு யாரோ படம் போஸ்டர் ஒட்டாம வேற எதோ ஒட்டிருகிங்க." என கேட்டேன் அதற்க்கு அந்த வாட்ச்மேன்," இல்ல சார் அந்த படம் ஓடல,அதான் வேற படம் போட்ருக்கோம் என்றார். எனக்கு செம டென்ஷன் ஆயிருச்சு, "த்தா.. என்னடா நெனச்சிருக்கிங்க.. நல்ல படம் ஓடலன்னு நீங்க எப்படிடா சொல்லலாம். நான் நெனச்சா என் எழுத்து மூலம் ஓடாத படத்தை ஓட வைப்பேன் , ஓடுற படத்தை உக்கார வைப்பேன்"என்றேன். வாட்ச்மேன் குழப்பமாக, "அது இல்ல சார், அந்த படம் இந்த தியட்டரில் ஓடல, வேற தியேட்டர்ல ஓடுமா இருக்கும். நல்ல பாருங்க"ன்னு சொன்னார். எனக்கு இது மேலும் கடுப்பை கெலப்பியது. ''ம்மா.. அது எப்படிடா அந்த தியேட்டர்ல ஓடுற படம் உங்க தியேட்டர்ல மட்டும் ஓடாதா.. த்தா மரியாதையா உங்க மேனேஜரை கூப்பிடு நான் பேசிக்கிறேன்'' என்றேன். மேனேஜர் என்னைபார்த்து முறைச்சபடி, "த்தா கிறுக்கு நாயே ஓடி போயிரு, எங்க அந்த படம் ஓடுதோ அங்க போய் பாரு" என்று சொல்லி கன்னத்தில் பளார் என்று ஒன்னு விட்டார். நான் கன்னத்தை தடவியபடியே அந்த படம் ஓடும் தியேட்டர்க்கு வந்து சேர்ந்தேன். வரவர இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது.

ஒருவழியாக அந்த திரைப்படத்தை இன்று காலை பத்து மணி ஷோவில் எஸ்டர்டே நைட் பார்த்தேன். படம் முடிந்த பின் என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். எப்படி இப்படிபட்ட ஒரு அற்புதமான படைப்பு  மக்களுக்கு பிடிக்காமல் தோல்வியை சந்தித்தது என்று. எந்த திரைப்படத்தையும் நான் அவ்வளவு எளிதாக பாராட்டிவிட மாட்டேன். உதரனத்திற்க்கு இப்போது வெளிவந்த நான் ஈ திரைப்படத்தை எல்லாரும் ஆஹா ஒஹோ என புகழ்கின்றனர்.ஆனால் எனக்கென்னவோ அது புடிக்கவில்லை.அது எப்படி அவ்வளவு பெரிய மனிதனின் உயிர் ஈ முட்டைக்குள் போகும். முட்டையை சுற்றி ஒரு ஓட்டை கூட இல்லையே. படத்தில் இப்படி நிறைய ஓட்டைகள். ஆனால் இந்த யாருக்கு யாரோ படம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. I just enjoyed it..!! யாருக்கு யாரோவை ஒன்றி பார்த்தபோது ஒன்பாத்ரூம் வந்தது. இதைவிட என்னவேண்டும் ஒரு நல்ல படத்தில்?

யாருக்குயாரோ ஒன்லைன்:


சாம் ஆண்டர்சன் என்ற அழகான, அறிவான  கார் விஞ்ஞானிக்கு காதல் வந்தால் என்ன ஆகும்? இதுதான் ஒன்லைன்.

யாருக்கு யாரோ கதை:
வாவ்.. அசத்தி இருக்கிறார்கள். பின்னி இருக்கிறார்கள். புதுமுகங்கள் அவ்வளவு அனுபவசாலிகளாக நடித்திருக்கிறார்கள். சாம் ஆண்டர்சன் டான்ஸில் பின்னி எடுக்கிறார். அதுவும் "ராசாத்தி" என அவர் உருகி பாடி ஆடும் போது என் காதல் காலங்கள் நினைவுக்கு வந்தன.

                                                     

சாம் ஒரு கார் விஞ்ஞானி. அவரை இரண்டு பிகர்கள் காதலிக்கிறார்கள். ஆனால் காரில் ஏற்கனவே மூன்று பேர் இருப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. பின் காதலர்கள் இணைந்தார்களா? காரில் இடம் கிடைத்ததா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


சுவாரசியங்களில் சில:
டிக்கெட் வாங்கமல் வழக்கமாக கூட்டத்தோடு கூட்டமாக தியேட்டருக்குள் நுழையும் நான் இந்த படத்துக்கு கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கவேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். உலகசினிமா பலவற்றை கரைத்துகுடித்த எனக்கே தமிழகத்தில் இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது. முதல்முறையாக டிக்கெட் எடுத்து படம் பார்த்தது சுவாரசியமாக இருந்தது. சரி இந்த படத்தை இப்போது எழுத என்ன காரணம்? எனக்கும் வேலை இல்லை உங்களுக்கும் வேலை இல்லை. அதைவிட என்ன பெரிய காரணம் இருந்துவிட போகிறது? படத்தில் அங்கங்கே சில சொதப்பல்கள் இருந்தாலும் டைட்டிலில் யாருக்கு யாரோ என போட்டது புதுமையாக இருந்தது. வழக்கமாக ஆங்கில படங்களில் மட்டுமே சாம், ஹேரி என பெயர்கள் இருக்கும். முதல்முறையாக தமிழ்படத்தில் அப்படி பெயரை பார்த்தவுடன் இயக்குனரின் திறமையை நினைத்து பிரமித்துவிட்டேன். ஹீரோயின் இரண்டுபேரும் த்ரிஷாவுக்கும், டாப்ஸிக்கும் டப் பைட் கொடுப்பார்கள். என் கண்டுபிடிப்பான ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டில் அவர்கள் இடம்பெறப்போகும் காலம் வெகுதூரம் இல்லை. யெஸ் தே டிசர்வ் இட்!


                                           


பைனல் கிக்:
இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். முதல் 20நிமிடம் போனதே தெரியவில்லை. ஏனெனில் நானே இருபது நிமிடம் கழித்துதான் போனேன். இந்த சக்கையான படத்தை மொக்கையான படம் என சிலர் சொன்னார்கள்.  அவர்கள் அறிவு அவ்வளவுதான். ஓரு நாயகன் உதயமாகிறான்..!! கண் கலங்கிவிட்டது

Thursday 19 July 2012

வெயில் - இது ஒரு சாம் மார்த்தாண்டன் சிறுகதை


நான் யார்..?? அதை ஏன்டா எங்ககிட்ட கேக்குற நாதாரி என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.. இருந்தாலும் ஒரு பிரபல பதிவாளராக உங்கள் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் கடமை என்னுடையது.தினமும் உங்கள் வாழ்க்கையில் லட்சக்கணக்கான நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களிடம் சென்று என்மேல் உள்ள பாசத்தின் காரணத்தினால் நீங்கதானா அவர்... அவர் நீங்கதான என்று கேட்டு தொந்தரவு செய்வதாக உளவுத்துறையிலிருந்து நம்பகமான செய்தி கிடைத்தது. என்னை காண விரும்புவோர் சென்னை கலெக்டர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உண்ட கட்டி வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் common man தான் நான். நான் உங்களோடு கலந்து தான் இருக்கிறேன். என்னை வெளியே தேடி அலைய வேண்டாம். நானே எங்காவது அலைந்து கொண்டுதான் இருப்பேன்.

சென்னை காசிமேட்டில் உள்ள ஜல்சா டாஸ்மாக்கில் தான் கணக்கு வைத்திருந்தேன்.அந்த ஏரியாவில் எனக்கு தீவிரவாத அச்சுரத்தல் இருந்த காரணத்தால் மிக பத்திரமாக, பாதுகாப்பாக கூடுவான்ச்சேரி ஏரியாக்கு 'குடி' பெயர்ந்தோம். இங்கே வந்தவுடன் எனக்கு quarter மேட்டர் problem இருந்தது. நான் account வைத்திருந்த ஜல்சா டாஸ்மாக்கில் எல்லோருக்கும் என்னமோ James Bond படத்தில் வரும் Casinoவில் வேலை செய்வதாக நினைப்பு. நான் கையில் காலி டம்பளருடன் எவ்வளவு நேரம் தொன்னாந்து நின்றாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நீண்ட நேரம் கழித்து கடையில் வேலைசெய்யும் சிறுவன்,ஓனரிடம்  'ண்ணா.. இந்த பெருச பாருண்ணா இன்னும் போகாம நிக்கிது என்று சொல்லுவான், ஓனர், "த்து.. சாவுகிராக்கி.. சனியன் இன்னைக்கும் ஒசி குடிக்கு glass ah  தூக்கிட்டு வந்து நிக்கிது பார்... த்தா.. சொரனையே இருக்காது போல இதுக்கு என்று சொல்லி கிளாஸ் கழுவுன தண்ணிரை மூஞ்சியில் ஊற்றுவார். mixing கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் சரி என்று adjust பண்ணிக்கொண்டு, அதை நக்கியபடியே வீட்டுக்கு போய் மட்டை ஆய்விடுவேன்.

இப்படியே நாளுக்கு நாள் அந்த கடையில் ஓசிகுடி குடித்தபடி என் வாழ்கை சென்றது. இப்போது புது ஏரியாக்கு குடி பெயர்ந்தாலும், குடிக்கு பழைய ஜல்சா டாஸ்மாக்கிற்கு தான் செல்ல வேண்டியிருந்தது.அதனால் இந்த ஏரியாவில் உள்ள புஸ் புஸ் ஒயின்ஸில் வைத்து கொள்ளலாம் என்று விசாரித்தேன். அந்த ஒயின்ஸ் ஓனர் . ' அது ஒன்னும் பிரச்சனை இல்ல சார் பழைய கடைல போய் account clearence லெட்டர் ஒன்னு வாங்கிட்டு வந்துருங்க பாத்து பண்ணிக்கலாம்ன்னு சொன்னார். நான் மனதுக்குள் நாசமா போச்சு.. இனி குடிச்சமாதிரிதான் என அலுத்துக்கொண்டே ரோட்டில் நடந்து சென்றேன். மணி பதினொன்றுதான் இருக்கும்,ஆனால் வெயில் போட்டு வாங்கியது. வரவர நம்ம ஊரு ரொம்ப கேட்டு போச்சு பகல்லயே வெயில் இந்த போடு போட்டால் ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் என்ன ஆட்டம் போடும்.பேசாமல் எல்லாத்தையும்  பகல்ல தூங்கிட்டு, ராத்திரில வேலைக்கு போக சொல்லணும்.

சிக்னலில் நின்று ரோட்டை பெராக்கு பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு கருப்பு நிற மாருதி ஆம்னி அமரர் ஊர்தி நின்று கொண்டு இருந்தது. உள்ளே வாழ வேண்டிய வயதுடைய ஒரு 85 வயது முதியவர் படுத்திருந்தார். பக்கத்தில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். நான் அந்த இறுதி ஊர்வலத்தில் இருந்த ஒருவரிடம், ' என்னங்க அநியாயம் இது, செத்தவன் ஒய்யாரமா படுத்துட்டு வரன் உயிருள்ளவன் வெளிய வெயிலில் நடந்து வரான். என்ன கொடுமை சார் இது என்றேன்.  

ஆம்னி வேனில் பின்னாடி கதவு இல்லாததால் அந்த வயதான பையனின் முகம் எனக்கு தெரிந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் விசிறி விட்டுக்கொண்டு இருந்தான். 'செத்தவனுக்கு என்ன வேர்க்கவா போகுது'..த்தா..லூசு பய புள்ளைகன்னு மனசுக்குள் சொல்லிக்கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றேன். வண்டிக்கு முன்னாடி ஒருவர் தீச்சட்டியுடன் சென்று கொண்டிருந்தார். ஏண்டா இங்க என்னா மாரியாத்தா திருவிழாவா நடக்குது, தீச்சட்டியோட வந்து நிக்கிற.. என்று கேட்க்க துடித்தது மனது.. ஆனால் ஒருவேளை திருவிழாவில் இருந்தவர் செய்தி கேட்டு அவசரமாக தீச்சட்டியோடு வந்துவிட்டாரோ எனவும் எண்ணம் தோன்றியது. ஒரு வேலை படைப்பாளியாக இருப்பதால் இப்படி பல்வேறு கோணங்களில் யோசிக்க தோன்றியது.

திடீரென்று ஒருவர் மாலையோடு ஓடிவந்தார்.. நானும் என் ரசிகராக இருப்பார், எனக்குதான் மாலையை போடா வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால் அந்த நபர் மாலையை வேனில் படுத்திருந்த வயதான இளைஞருக்கு போட்டார். என்ன உலகமடா இது.. ஒரு திறமையான பதிவாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இப்படி ஒரு பொனத்துக்கு கிடைத்ததை எண்ணி வியந்தேன். ம்மா..என்னடா மரியாதை தெரியாத பயலுகலா இருகிஙக.

ஆம்னி வேன் பக்கம் ஊர்வலமாக சென்றவர்கள் கூட்டம் அவ்வளவு ஒன்னும் இல்லை. சுமாராக தான் இருந்தது. ஒருவேளை ஞாயிற்றுகிழமை என்பதால் இருக்குமோ.??ஒருவேளை எல்லாரும் நம்ம 'தல' படத்துக்கு போய்விட்டார்களா. இல்லை இறந்ததை யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டார்களா.சரி அதனால் என்ன..நாமாவது கூட செல்லலாம் என்று பின்னாடியே சென்றேன். எனக்குள் பல கேள்விகள். என் ஆழ்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

அப்படியே நடந்துக்கொண்டு,யோசித்துக்கொண்டு போனதில் பழைய ஒயின்ஷாப் வாசலில் சென்றடைந்தேன். அவர் என்னை கண்டுபிடித்துவிட கூடாது என்ற காரணத்தால் வழக்கமாக நான் கடைக்கு செல்லுபோது எடுத்து செல்லும் கிளாசோடு செல்லாமல் use and throw glassodu சென்றேன். இருந்தும் அவர் என்னுடைய காந்த பார்வையை வைத்து நான்தான் என்று கண்டுபிடித்து , செம காண்டாயிட்டார்.. டேய். தம்பி..எடுடா அந்த வென்னீர.. இன்னைக்கு இவனை விடக்கூடாது என துரத்த ஆரம்பித்தார். நானும் ஓட்டம் பிடித்தேன். கடைசியில் ஒரு டீக்கடையில் இளைப்பாறினேன்.

தம்பி, ஒரு டீ போடுப்பா என்றேன். கடைகாரர்,' சாரி சார். கடை ஓனரோட அப்பா இறந்துட்டாரு அதுனால கடைய எடுத்து வைக்கிறோம் என்றார். பிறகுதான் எனக்கு தெரிந்தது வழியில் பார்த்த அந்த இறந்து போன முதிய இளைஞன் தான் அவர் என்பது. ஆகா.. இதைதான் உலகநாயகன் Chaos Theory என்று தசாவதாரம் படத்தில் என்று சொல்லி இருப்பார். உலகம் எவ்வளவு சிறியது என எண்ணி கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  



பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS

 

Monday 9 July 2012

5 ஸ்டார் ஹோட்டலில் ஜெட்லி சேகர்



மீண்டும் ஒருமுறை என்னுடைய இனிமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை இன்னும் சுவாரஸ்யமாக 5 star ஹோட்டலில். 5 star hotel என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இரவில் கூட light போடாத கஞ்சத்தனம், சமையல் செய்யும் போது கரை பிடிக்குமே என்ற அறிவு இல்லாமல் வெள்ளை உடை அணிந்திருக்கும் சமையல் கார்கள், கல்யாண வரவேற்பில் மாப்பிள்ளை அணிந்திருப்பது போல கோட் அணிந்து திரியும் சப்ளையர்கள். பாடல் கேசட் வாங்க வசதி இல்லாமல் வெறும் இசை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் டேப்ரெகார்டர்... இது போல் முகம் சுளிக்க வைக்கும் பல விஷயங்கள் ஹோட்டலில் உள்ளது..

அதனால் தான் எப்பவும் நான் அங்கு செல்வதே இல்லை. மேலும் அங்கு எவ்வளவு நேர்மையான ஆட்களாக இருந்தாலும் அக்கௌன்ட் வைக்க விட மாட்டார்கள். தள்ளு வண்டி கடை, ஆயா கடை, தட்டி விலாஸ் போன்றவை தான் எப்பவுமே என் சாய்ஸ்.அதுவும் என் வீட்டருகில் உள்ள ஒரு வண்டிக்கடை அண்ணன் வேர்க்க விருவிருக்க சுடும் தோசையின் சுவை அலாதி...பழைய பாக்கியை அவர் கேட்க்கும் விதம் அதை கண்டுக்கொல்லாத மாதிரி நின்று கொண்டு சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு முறை என் வாசகர் ஒருவர் என்னை காணவந்தார். எப்போதும் என்னை பார்க்க வருபவர்களுடன் ஒரு வேலை உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. அதற்கு காரணம் அவ்வளவு தூரத்திலிருந்து என்னை காண வந்தவர்களுக்கு என்னுடன் சாப்பிடும் பாக்கியத்தை அளிக்க விரும்புவேன். பில்லை கூட அவர்களையே தர சொல்லுவேன், அப்போது தான் அவர்களுக்கு என்னை தொந்த்தரவு செய்தததாக தோனாது. இப்படி தொலைநோக்கு பார்வையோடு நான் செயல்படுவதால் தான் உலகநாயகன் முதல் ஒபாமா வரை என்னுடன் பழக ஆசை படுகிறார்கள்.

வழக்கம்போல் என்னை சந்திக்க வந்த வாசகருக்கு அடப்பு போட்டு சாப்பிட அழைத்து செல்லுமாறு கூறினேன்.தற்கு மேல் நடந்ததை கட்சியாக கூற விரும்பிக்றேன். படித்து ரசியுங்கள்
வாசகர்:  'சார் பக்கதுல buffet சாப்பிட போவோம 

நான் : அப்படினா பூங்கொத்து தான?? என்ன சார்  அத போய் யாரவது சாப்பிடுவாங்களா? நம்ம ஆய கடை பக்கத்துல இருக்கு வாங்க ஆளுக்கு ரெண்டு இட்லியும் நாலு ஆப்பாயிலும் சாப்ட்டு கெளம்புவோம். அப்படியே வீட்டுக்கு நாலு இட்லி பார்சல் வாங்கிக்கிறேன்.

வாசகர்: ஐயோ சார் அது boque நான் சொல்றது buffe ஹோட்டல்ல போடுவாங்களே அது.

5 star ஹோட்டலில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் ஆசைக்காக சென்றேன்.

star ஹோட்டலில்

( வாசகர் தன் விருந்தாளி ஒருவரை சந்தித்து அவருடன் பேச சென்று விட்டார் )
நமக்கு தான் ஆகாதே. சரி எதோ வந்துவிட்டோமே சாபிடாவிட்டால் அவர் மனது சங்கட படுமே என்று மனதை திடபடுத்திகொண்டு ஆரம்பித்தேன்.

நான்: (டை கட்டிய சர்வரிடம்) : ஏன் தம்பி buffe nu எதோ சொல்றங்களே அப்படினா என்ன?

சர்வர்: சாப்பாடு எவ்வளவு வேணாலும் எடுத்தக்கலாம். கட்டுப்பாடு கிடையாது.

நான்: அட தக்காளி.. நல்லா இருக்கே. சரி அப்போ ரெண்டு buffet பார்சல் பண்ணி கொண்டு வா.. தயிர் பச்சடி மறந்துறாத.. ஓடு..

சர்வர்(கோவமாக): சார்.. அதெல்லாம் பார்சல் பண்ண முடியாது. இங்கேயே சாப்பிட மட்டும் தான்.

என்னாங்கடா உங்க சட்டம் என்று அலுத்து கொண்டு தட்டை ஏந்திக்கொண்டு சென்றேன்.

நான்: டேய்.. த்தா... என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. என் மேல ஒருத்தன் கை வச்சிட்டான். கூப்பிடுடா மொதலாளிய.

மானேஜர்: என்ன சார்.. என்ன பிரச்சனை?

நான்: உங்க ஆளுதானடா எவ்வளவு வேணாலும் எடுத்துக்க சொன்னான். அப்புறம் ஏன்டா இந்த மொட்ட என்ன அடிச்சான்?

மானேஜர்: (விசாரித்துவிட்டு):(என்னிடம்): டேய் எவ்வளவு வேணா எடுத்துக்கனு சொன்ன நீ அவன் தட்டுல இருந்து எடுப்பியா? மரியாதையா பாத்திரத்தில இருந்து மட்டும் எடுத்துக்க.

(தண்ணி குடித்து உடலை குலுக்கி சரி செய்துவிட்டு மீண்டும் பிரியாணி பக்கம் சென்றேன்.)
வந்து பார்த்தால் டேபளில் நான் விட்டு சென்ற தட்டை காணவில்லை.

நான்: என்னடா ஹோட்டல் நடத்துறீங்க.? வச்சிட்டு போன தட்ட அதுக்குள்ளே எவனோ திருடிட்டான். அதுல நான் பாதி சாபிட்டு வச்சிருந்த 'நல்லி'ய காணோம்.
மறியாதைய கதவை மூடி எல்லாரையும் செக் பண்ணு,இல்ல செம காண்டு ஆயிருவேன்...

மானேஜர்: சாரி சார்.. நீங்க சாபிட்டு வச்சிட்டு போனத பாத்துட்டு தெரியாம மிச்சம் வச்சிடிங்கன்னு கிளீன் பண்ணிட்டு போய்டாங்க. வேணும்னா இன்னொரு ப்ளேட்ல கொண்டு வர சொல்லவா சார்?

நான்: யோவ்.. என்ன பாத்தா என்ன அடுத்தவன் மென்னு போட்டாத தின்கிற மாதிரி இருக்கா? ம்மா.. யாரு கிட்ட உங்க வேலைய காட்டுறிங்க?

மானேஜர்: ஐயோ.. இல்ல சார். புதுசாதான் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்..

நான்: ஒஹ்.. அப்படியா? சரி சரி... நல்லா பெரிய 'நல்லி'யா அள்ளி போட்டு கொண்டு வா..



சாப்பிட்டுவிட்டு கப்போடு  போனபோது..

சர்வர்: சார்.. deserts அந்த பக்கம்.

நான்: யோவ் என்னைய என்ன கேனப்பையனு நெனச்சியா? நம்ம ஊர்ல ஏதுயா desert ?

சர்வர்: அந்த desert இல்ல சார்.. ஐஸ்கிரீம் , சாலட் அந்த மாதிரி.

நான்: அடிங்...  ம்மா.. ஏன் அத ஐஸ்கிரீம்னு தமிழ்ல சொல்ல மாட்டியா? சரி..சரி.. மனிச்சிடேன். போ..

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக சாபிட்டு முடித்துவிட்டேன்.
(இன்னும் என்னுடன் வந்த வாசகர் உள்ளே வரவில்லை)

சர்வர்: சார்..செக்.

நான் : யோவ்..இது என்ன பேங்க்கா செக் கேக்குற ? என்னையா ஹோட்டல் நடத்துற ? நான் நெனச்சா உங்க ஹோட்டல் தலையெழுத்தையே மாத்திருவேன்.

மானேஜர்: சார். அவரு பில் கேட்டாரு.

நான்: என்கிட்டயே பில் கேக்குறியா? நான் பிரபல ப்ளாக் பதிவாளர்.

மானேஜர் (கடுப்பாக) : நீ சார் பதிவாளரா இருந்தாலும் பில் கொடுத்துதான் ஆகணும்.. மரியாதைய பணத்த எடு.
 (ஒரு வழியாக வாசகர் வந்து பில் கொடுத்து என்னை காப்பற்றி விட்டார்)


(வெளியே செல்லும் போது)

வாசலில் கதவு திறந்து விடுபவர்(தலை சொறிந்தபடி): சார்.. டிப்ஸ்??

நான்: உங்க ஹோட்டல் எனக்கு சுத்தமா புடிக்கல... இருந்தாலும் உனக்காக டிப்ஸ் தரேன்.
            கருவேப்பில்லை, மருதாணி , கொஞ்சம் களிமண் சேர்த்து அரைத்து தலைல தடவி மொட்டை மாடில படு. இப்படி ஒரு வாரம் செஞ்சா முடி காடு மாதிரி வளரும்.


வாசலில் கதவு திறந்து விடுபவர் : டேய்.. உனக்கு டிப்ஸ்னா என்னான்னு தெரியலைனா கூட பரவாயில்ல.. ஆனா நீயெல்லாம் முடி வளர டிப்ஸ் கொடுத்தா பாதிய அதைதான் என்னால தாங்க முடியல.. ஓடி போயிரு இனிமே இந்த பக்கம் எட்டி கூட பாக்காத. ஓடிரு...



Friday 6 July 2012

ஆண்வெஜ் பெண்வெஜ் /ராமாபுரம்/சென்னை/06/07/2012

ஆல்பம்:

திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே திமுக வினரை பயமுறுத்த ஆரம்பிக்க எனக்கு காலராவே வந்துவிட்டது. எனக்கு சிறை செல்லும் ஆசை இல்லாவிட்டாலும் அங்கு களி மிகவும் ருசியாக இருப்பதாகவும், காசுகூட வாங்வில்லை எனவும் சென்ற முறை அண்டா திருடிய வழக்கில் உள்ளே சென்று வந்த என் நண்பர் ஒருவர் கூறியதும் எனக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து  கொண்டு கைது செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? முன்கூட்டியே ஜாமீன் வாங்கி வைத்துவிடுவோம் என்று சைபர் கிரைம் ஆபீஸில் இருந்த என் நண்பரை அழைத்துக் கொண்டு மீன் மார்க்கெட்டுக்கு விடிய காலமே சென்றேன். இரவு எட்டு மணி வரை தேடியும் ஜாமீன் கிடைக்கவில்லை. வாழை மீன் இருக்குங்குறான், வஞ்சரமீன் இருக்குங்குறான் ஆன ஜாமீன் மட்டும் கடல்லயே இல்லையாம். வேறு வழியின்றி வீடு திரும்பி விட்டோம். நேற்று முன் தினம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற என்னை ஏனோ போலீஸ்காரர்கள் கைது  செய்யவே இல்லை. நான் பிரபல பதிவர் என்பதால் பயந்து விட்டுவிட்டார்கள் என்று என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்  "போராட்டத்துல கலந்துக்குற மூஞ்சயும் மொகரக்கட்டையும் பாரு" என்று கூறிக்கொண்டே PC ஒருவர் பலத்த வேகத்துடன் லத்தியால் பட்டக்ஸில் இரண்டு வைத்தார் வலி தாங்கமுடியாமல் பின்புறம் தடவிக்கொண்டே மெல்ல வீடு வந்து சேர்ந்தேன். ஒத்தடம்  கொடுக்க வெண்ணீர் அடுப்பில் காய்ந்து கொண்டு இருக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------

அது என்னவென்றே தெரியவில்லை சொல்லிவைத்தார் போல எல்லா டீ கடைகளிலும் டீ குடித்த பின்பு காசு கேட்கின்றனர். உலக ஃபேமஸான ஒரு பதிவருக்கு  நீங்க கொடுக்கும் மரியாதை இதானாடே?

--------------------------------------------------------------------------------------------------

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்ததற்கு காரணம் ஓட்டுனர் செல் பேசியில் பேசியது தான் என சொல்லுகிறார்கள்.. அப்படியே தான் பத்திரிக்கைகளிலும் சொல்லுகின்றனர். ஏன் பாடியிருந்தால் விழுந்திருக்காதா? ஆனால் பஸ்  மேம்பாலத்தில் மோதும் போது பாலம் உடைந்ததால் தான் கீழே விழுந்தது என்பது என் கருத்து. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐடியா கொடுத்த ஐடியா மணியை இழுத்து நாலு  சாத்து சாத்த வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------
மிக்சர்

ஓட போன் ரேட் ஏற்றிய விஷயம் எனக்கு தெரியாது. எப்போதும் ரேட் ஏற்றும் போது எனக்கு மறக்காமல் போன் செய்து சொல்லும் வோடபோன் ஓனர் இந்த முறை ஏனோ மறந்துவிட்டார். நேற்று வழக்கம் போல கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு ரீசார்ச்சும் 2 ரூபாய்க்கு ரேட் கட்டரும் போட சொன்னேன்.  கடைக்காரர் என்னுடைய  போனை தூக்கி வெளியில் வீசிவிட்டு செருப்பை எடுத்து காட்டினார். இவருக்கு இதே வேலையாக போய்விட்டது இனிமேலும் விடக்கூடாது என்று கஸ்டமர் கேருக்கு கால்செய்து விஷயத்தை கூறினேன். "Please check the number you have dialed" என்று கடைக்காரர் செய்த தவறுக்கு கஸ்டமர் கேரிலிருந்து மன்னிப்பு கேட்டார்கள்
---------------------------------------------------------------------------------------------------
அண்ணா மேம்பாலத்தை சரிசெய்து கொண்டிருந்தனர். நான் அந்த வழியே போகும் போது அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் "...த்தா மேம்பாலம் கட்டிருக்கதாலதான பஸ் மேலருந்து கீழ விழுந்துச்சி... திரும்ப அதயே கட்டிகிட்டு இருக்கீங்க.. இடிச்சிட்டு பஸ் எல்லாத்தையும் கீழயே விடுங்கடா அப்பதான் ஆக்ஸிடண்ட் நடக்காது" என்று என் யோசனையை கூறினேன். பாலம் கட்ட வைத்திருந்த சிமெண்ட் கலவையை அள்ளி மூஞ்சில் அடித்து விட்டனர். வீட்டுக்கு வந்து அதை சுரண்டி எடுக்க மூண்று நாள் ஆனது.

------------------------------------------------------------
"dei unakku vekkame illaiyaa.. soru thingiriya illa vera ethayavathu thingiriya" என்று எனக்கு கடந்த ஜூன் 27 ம் தேதி சரியாக மாலை 3 மணி 30 நிமிடம் 20 நொடிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. நாய் முழுத்தேங்காயை உருட்டுவது போல அதை வத்து உருட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு தமிழே இப்பொழுதுதான் ஓரளவுக்கு படிக்கத் தெரிகிறது. அப்படியிருக்க எனக்கு தெலுங்கில்  எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தால் எப்படி புரியும்? நானும் எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் அனைவரும் "டேய் உனக்கு வெக்கமே இல்லையா? சோறு திங்கிறியா இல்ல வேற எதையாவது திங்கிறியா?" என்று ஒரே மாதிரியாக திட்டுகின்றனர். எஸ் எம் எஸ்ஸை காண்பித்தற்கே  இந்த திட்டு என்றால் அதில் அநேகமாக மிக மோசமான கெட்ட வார்த்தை எதாவது இருக்கும்னு நெனைக்கிறேன். த்தா.. யாராவது அதுக்கு அர்த்தம் என்னனு சொல்லுங்கடா...

---------------------------------------------------
இந்த வார வாசகர் கடிதம்:

میرے حساب کی طرف سے، ان کا احترام کرنے کے لئے درکار فنڈز کے اپنے اکاؤنٹ میں چیک اور آمد جمع کرنے کے درمیان تین گزر ضروری ہے. میں کورس کا حوالہ دیتے ہیں، میری معمولی بچت اکاؤنٹ، ایک انتظام کون سا، میں مانتا  صرف تیس ایک سال کے لئے جگہ میں کیا گیا ہے سے خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.

خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.






அன்பின் வாசகர்... மன்னிக்கவும் எனக்கு ஹிந்தி தெரியாது.

பிலாசபி பாண்டி:

லவ் பண்றதுங்கறது ஓடுற பஸ்ஸில் நின்று ஒண்ணுக்கு அடிப்பதை போல... பொறுமையா அடிச்சா ரோட்டுல அடிக்கலாம்.. அவசரப்பட்டு பரக்காவெட்டி மாதிரி அடிச்சா நம்ம மேலையே தான் அடிச்சிக்கனும். இப்படிக்கு பஸ் படிக்கட்டில் நின்று ஒண்ணுக்கு அடிக்கலாமா வேண்டாமா என யோசிப்போர் சங்கம்.  தம்பி கோச்சிக்கிறாதீங்க..
--------------------------------------------------------------------------------------
நாண்வெஜ் 18+ :
நேற்று முன் தினம் எனக்கும் பக்கத்து வீட்டு நாய்க்கும் யாருக்கு லெக் பீஸ் என்பதில் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. அது என் பட்டக்ஸை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வந்த நேரம் "சேகர் செத்துருவான் ப்ரால்லயா... " என்று  முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு சொன்னேன். முகத்தில் காரிதுப்பிவிட்டு லெக்பீசை எனக்கே விட்டுச்சென்றது... '


பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  





நனைப்பது அல்ல நீ!!!

துவைத்து காயப்போடுவதே நீ!!!



EVER EVERS

Monday 21 May 2012

கஹானி-2012/ உலக சினிமா/ இந்தியா/ தமிழ்நாடு/கடலூர்/ பின் கோடு 607001

 கஹானி... இந்த படத்தை பற்றி எல்லாரும் விமர்சனம் செய்து விட முடியாது. இந்த படத்தை புரிந்து கொள்ளவதற்கும், விமர்சிப்பதற்கும் என்னை போல் சிலருக்குதான் திறமை உள்ளது பலபேர் கேட்டுக் கொண்டதால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எழுதுகிறேன். என்னது கஹானி படத்தை இப்போதான் பார்த்தீர்களா என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது? என்ன செய்வது இடையிரா எழுத்து பணியால் நேரமே இல்லை. ஷாருக்கான் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் , பக்கத்துக்கு வீட்டு LKG பையனுக்கு ஹோம்ஒர்க் , போன்ற கடமைகள் என் கற்பனையை கட்டி போட்டு விட்டன.

கஹானி படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் அந்த படத்தின் போஸ்டர் என்னை ஒன்னும் ஈர்க்கவில்லை. படம் வெளியான நாள் முதல் ஒரே போஸ்டரை ஒட்டி இருந்தார்கள். இருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் sujoy ghosh, நான் குறும்படம் எடுத்த பொது இயக்குனர் மணிரத்னம் சிபாரிசுடன் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த பையன். இருந்தாலும் நான் அப்போது இருந்த ஆக்சன் மூட் காரணமாக அந்த பையனை நிராகரித்து விட்டேன். அதனாலேயே அவன் இன்று பாலிவுட் படம் எடுக்க முடிந்தது. (என்னிடம் பணியாற்றி இருந்தால் ஹாலிவுட் படம் கூட எடுத்திருக்கலாம்).

படம் வெளியானவுடன் sujoy ghosh என்னிடம் வந்து நீங்கள் படம் பார்த்து விமர்சனம் எழுதினால் தான் அது தரமாக இருக்கும். மற்ற மீடியா விமர்சனங்களை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தார். சரி கழுதைய... ஒரு விமர்சனம் எழுதி தொலைவோம் என்று முடிவு செய்தேன்.

அதுமட்டும் இல்லாமல் படத்தில் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. அவன் இவன் படத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் ஆடியதற்கே கஷ்டபட்டார் என்ற போது , கஹானி படத்தில் வித்யா பாலன் படம் முழுக்க பெண்ணாக நடித்திருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. சான்சே இல்லை. வித்யா பாலன் அசத்தியிருக்கிறார்.அவ்வை ஷண்முகி படத்தில், ஷன்முகியாக நடித்தவரை விட இவர் சிறப்பாக ஜொலிக்கவில்லை என்றாலும் வித்யா பாலனுக்கு இது ஒரு நல்ல முயற்சி.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் ஒன்லைன் :

கஹானி ஒரு முழு நீள ஹிந்தி படம்.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் கதை என்ன??


கல்கத்தா ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்தில் காணமல் போன கணவரை தேடி வருகிறார் vidhya bhagci (வித்யா பாலன்). அது என்ன பேரு வித்யா பஜ்ஜி?? மிளகாய் பஜ்ஜி , அப்பள பஜ்ஜி என்று? இப்படி எல்லாமா பெயர் வைப்பார்கள்? பஜ்ஜி என்றவுடன் நினைவுக்கு வருகிறது , நான் தினமும் ஆபிசில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு ஆயா பஜ்ஜி சுட்டு விப்பார்கள். ஒரு நாள் பஜ்ஜி வாங்க சென்றேன் , காசு கொண்டு செல்ல மறந்துவிட்டேன். கடைசியில் ஆயா காலை பிடித்து , கையை பிடித்து கெஞ்சியும் பார்த்தேன்.. பாட்டி மசியவில்லை... கிழவி அசந்த நேரம் பார்த்து ஒரு பஜ்ஜியை லபக் என்று கவ்விக்கொண்டு ஓடினேன்.. உடனே பாட்டி, பஜ்ஜி சுடும் எண்ணையில் ஒரு கரண்டியை மோண்டு மொகரையில் ஊற்றிவிட்டார்..அன்றைக்கு பஜ்ஜி திண்ணும் பழக்கத்தை விட்டவன் இன்றும் தொடர்கிறேன்.

எங்கேயோ போய்டேன் பாருங்க. எங்க விட்டேன் ? ஆங்..

கணவனை தேடி வரும் வித்யா பாலன் அப்படியே பெண் வேடத்தில் அசத்தியிருக்கிறார். கணவன் தங்கியிருந்த இடம், சாப்பிட்ட உணவங்கம் போன்ற இடங்களில் தேடுகிறார். இந்த இடங்களில் அவர் தேடியதற்கு பதில் அவர் தொலைந்த இடத்தில் தேடி இருந்தால் படம் முடிந்திருக்கும். படத்தை இழுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்திருக்கிறார் அனுபவம் இல்லாத இயக்குனர்.

படத்தின் சுவாரசியங்களில் சில:



வித்யா பாலன் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார்.. ஒரு சில இடங்களில் ஓரிரு தமிழ் வார்த்தைகளை பேசி டச் செய்கிறார். எனக்கு புரிந்த அந்த ஓரிரு வார்த்தைகளை வைத்தே குத்துமதிப்பாக கதை இதுவாகத்தான் இருக்கும் என கணித்துவிட்டு விமர்சனமும் எழுதிவிட்டேன்.

லண்டனில் இருந்து தொலைபேசியில் கணவனிடம் பேசிய வித்யா , தங்கியிருந்த இடம் , பொம்மை போன்றவற்றை பற்றி பேசியிருக்கிறார். அனால் முக்கியமான விஷயமான அவர் தொலைந்த இடத்தை கேட்கவில்லை , கேட்டிருந்தால் தேடல் சுலபமாக முடிந்திருக்கும்.

அதே போல் படத்தில் ஆங்காங்கே சிறு நெருடல்கள் உள்ளன. வித்யா பாலனுக்கு உதவும் போலிஸ் அதிகாரி வெள்ளை நிறத்தில் யுனிபார்ம் அணிந்திருக்கிறார். அவர் மட்டும் அல்ல ஒட்டுமொத்த காவல்துறையே அப்படிதான் யுனிபார்ம் அணிந்திருகிரார்கள். இது காவல் துறைக்கே ஏற்பட்ட கலங்கம்.

மேலும் வித்யா தங்கி இருக்கும் விடுதியில் ஹீட்டர் வேலை செய்யவில்லை , கேப் வசதி , இண்டர்காம் வசதி இல்லை. இது போன்ற ஒரு விடுதியில் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் நடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களை கூட அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக க்ளைமாக்ஸில் திருவிழா கூட்டத்தில் மூணாவது வரிசையில் நாலாவதாக நின்றிருந்த பெண்மணியின் அசத்தலான நடிப்பு... வரே வா




பேக்கு போல கொலைசெய்ய வரும் கொலைக்காரனை பார்க்கும் போது செம காமெடியாக இருந்தது... ஒரு நிமிடம் என்னை நானே திரையில் பார்ப்பது போன்ற உணர்வு. அருமையான செலெக்ஷன்.
                                                                                                                                                                 
கிளைமாக்ஸீல் கற்பிணி வித்யாபாலன் வில்லனை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது  அவசரமாக ஒண்ணுக்கு முட்டியாதால் பாத்ரூமுக்கு சென்று விட்டேன்..  திரும்பி வரும்போது வித்யாபாலன் flat ஆன வயிறுடன் இருந்தார்.. வேகமாக ஓடியதால் வழியிலேயே ப்ரசவம் ஆகியிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.. பிரசவம் ஆன கையோடு வித்யாபாலன் மறுபடியும் எழுந்து ஓடினார். பிரசவமான பெண்ணால் எப்படி உடனே ஓட முடியும்இவ்வளவு அருமையான படம் எடுத்த டைரக்டர் இவ்வளவு பெரிய  லாஜிக் மிஸ்டேக்கை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.  கடைசிவரை குழந்தையை காட்டுவார்கள் என்று காத்திருந்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.


படக்குழுவினர் விபரம்.

Music by : Music director
Produced by : Producer
Directed by  : Director
Edited by  : Editor
Written by : Writer
Acted by  : Actors 
             &
Distributed by : Distributors


படத்தை திருட்டு டிவிடி யில் பார்த்தவர்கள்   : ஜெட்லி சேகர் & கோ
திருட்டு விசிடியை வாடகைக்கு ஓசியில் தந்தவர்  :  பஜன்லால் சேட், பர்மா பஜார்
சவுண்ட் எபெக்ட் : கலைஞர் அரசின்     வண்ண  தொலைக்காட்சி



பைனல் கிக் :


எப்பாடு பட்டாவது படத்தை பார்த்து விட வேண்டும் என்ற காரணத்தால் நிறைய வாசகர் கடிதம் எழுதி அதில் வந்த வருமானத்தின் மூலம் சென்னை மூலக்கடை பஜன்லால் சேட் வைத்திருக்கும் பஹுத் குஷி திருட்டு சிடி கடையில் வாங்கி குடும்பத்தோடு பார்த்தோம். நீங்களும் வாங்கி பாருங்கள்.படம் பார்த்து நான் பஜன்லால் இடம் சென்று சிடியை தூக்கி எரிந்து, "என்னையா படம் முழுக்க ஹிந்தியில் பேசுகிறார்கள்" என்று கேட்டேன் அதற்க்கு பஜன்லால் சேட் வாயிலிருந்த பீடாவோடு என் மூஞ்சியில் புளிச்சென துப்பினார். அதுவே பினால் கிக்காக அமைந்தது.

படம் எவ்வளவு தான் நன்றாக இருந்தாலும் படத்தில் எதிர்பார்த்த அளவு பிட்டுகள் இல்லாததால் படத்தை பார்க்கக் கூடாத படங்களின் வரிசையில் சேர்க்கிறேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  



பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS









Saturday 19 May 2012

மப்புக்காத்து-13

நாகரிகமுள்ள மனிதர்களோடு தான் இந்த பூமியில் வாழ வேண்டி இருக்கிறது. அவர்களை புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் திறமை அடங்கி இருக்கிறது. என் அம்மா என் வார்த்தை ஜாலத்தை கண்டு அடிக்கடி என்னிடம்  , தெருவில் ஓடுற சாக்கடையை  விட உன் வாய்ல தான்டா அதிகமா ஓடுதுன்னு சொல்லுவாங்க...முன்பு போல வார்த்தை  அள்ளி தெளிக்க முடியவில்லை, வயதானதால் வந்த பக்குவம் போல... த்தா....  வாய்ல முன்னாடி மாதிரி வரமாடேங்குது.. எந்த ..ம்மா சாபம் விட்டானோ..சரி அத விடுங்க...

நாங்கள் வசித்தது குப்பம் என்பதால் யாருக்கும் பட்டா கிடையாது... அதிகமான குடிசைகள் என்பதால் கதவுகள் இருக்காது. அதனால் யார் வேண்டுமானாலும் எந்த  வீட்டுக்குள்ளும் போய் சோற்றை திருடி திங்கலாம்... அதனால் சண்டைகள் அதிகமாக  நடக்கும். அப்போது கெட்டவார்த்தைகள் சரளமாக தெறிக்கும்... அதுவும் நான் இருக்கும் ஏரியா என்பதால் சற்று அதிகமாகவே தெறிக்கும். காலையில் நம்ம சோத்த திருடி தின்னுட்டு இப்ப நம்மளையே என்ன பேச்சு பேசுது பாருன்னு என்னை நிறைய பேர் வியப்போடு பார்பார்கள்.

அம்மா அடிக்கடி எனக்கு திருஷ்டி சுற்றி போட்ட காலமும் உண்டு. இனிமேல் இந்த ஏரியாவில் இருந்தால் ஏரியா கேட்டு போய் விடும் என்ற காரணத்தால் எல்லாரும் சேர்ந்து என்னை ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்து கவுன்சிலரிடம்  முறையிட்டனர். எத்தனை நாள்தான் ஒரே ஏரியாவில் திருடி திண்பது ஒரு சேஞ்சுக்கு  வேற ஏரியா போவோம் என்ற என் அம்மா வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேறு ஏரியா  செல்ல முடிவு செய்தோம். இந்த முடிவால் கவுன்சிலர் குடும்பம் என் அப்பா வார்த்தையிலிருந்து தப்பியது.

ஒரு வழியாக அடுத்த ஏரியாக்கு வந்தோம். பக்கத்துக்கு வீட்டுகாரங்க எங்கள மாதிரி இல்ல. எதோ நல்ல குடும்பம்னு சொல்லிகிட்டாங்க. ஒரு நாள்  காலைல எங்களுக்கும் எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கும் பிரச்சனை. அந்த பிரச்சனைக்கு காரணம் ஒரு கோவணம். எங்கள் வீட்டு கொடியில் காயப்போட்டிருந்த கோவணம் அவர்கள் கோடியில் போய் விழுந்ததுதான் சண்டைக்கான காரணம். போலிஸ் ஸ்டேஷன் வரை சென்று பொய் புகார் கொடுத்தார்கள், அதாவது நாங்கள் தான் அவர்களை விரட்டி அடிக்க அந்த கோவணத்தை அவர்கள் கொடியில் போட்டதாக  புகார் அளித்தார்கள்.

 ராசியான எங்கள் கோவணத்தை அவர்களுக்கு கொடுக்க நாங்க என்ன முட்டா.... யா?? கடைசியில் போலிஸ் எங்களை சமாதானபடுத்தி அனுப்பினார்கள். என் அப்பா மனம் வெறுத்து போனார். எத்தனையோ நாட்கள் அவர்கள் மாடியில் காயப்போட்டிருந்த வடகம் ,வத்தல், மாட்டுக்கு வாய்த்த கஞ்சி போன்றவைகளை திருடி தின்றபோதெல்லாம் பிரச்சனை இல்லை.அனால் இன்று ஒரு சின்ன கோவணதிர்காக இவ்ளோ பெரிய பிரச்சனையா என்று வருத்தப்பட்டார்.  

பிரச்சனையான நாள் முதல் அவர்கள் வடகம், வத்தல் ஏன் மாட்டுக்கு கஞ்சி ஊற்றுவதை கூட நிறுத்திவிட்டார்கள். இந்த சம்பவம் எங்களை பெரிதும் பாதித்தது.வெறுப்பில் இருந்த என் அப்பா ... த்தா.. நானும் எத்தனையோ வீட்ல திருடி தின்னுருப்பேன் அவைங்களும் கண்டுபுடிச்சு நாராசமா திட்டிட்டு அடுத்தநாள் வழக்கம் போல திருடி திங்க ஏதாச்சும் வச்சிருபாங்க. ஆனா இந்த ம்மா.. அவன் புத்திய காட்டிட்டான்  என்று மிகுந்த வருத்ததோடு சொன்னார். ஆனால் அவர்கள் இப்படி செய்திருக்க வேண்டியது இல்லை. அப்பாவை சமாதான படுத்துவதற்காக அம்மா . விடுங்க எல்லாத்தையும் நம்ம பாடிகார்ட் முனிஸ்வரன் இருக்கான்  அவன் பாத்துக்குவான் என்றார். எங்கள் கோவணத்து மேல் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு  என்று தெரியவில்லை.

கோவணம்... ஒரு சின்ன பிளாஷ்பேக்...

நான் என் அம்மா வயிற்றில் இருந்த நேரம் அது.. என்ன அம்மாவும் அப்பாவும் ஊர் சந்தைக்கு சென்றனர்.வழக்கம் போல் கைக்கு அகப்படும் பொருளுடன் வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள்  கண்ணில் முதலில் தென்பட்டது ஒரு துணி கடை. கூட்டம் அலை மோதியது. உள்ளே நுழைய கூட இடம் இல்லை . கடுப்பில் இருந்த என் அப்பா ..த்தா காசு கொடுத்து வாங்குறதுக்கு என்ன அலை அலையிருனானுங்க  பாரு  என்று என் அம்மாவிடம் சொன்னாராம் . அதை அடிக்கடி என் அம்மா என்னிடம் சொல்லி ரசிப்பார்.அடித்து பிடித்து உள்ளே சென்ற என் அப்பா வேட்டி ஒன்றை எடுத்து செல்ல முடிவு செய்தார்.  கடைக்காரன் பிஸியாக  இருந்த நேரம் பார்த்து லபக்கென்று ஒரு வேட்டியை உருவிவிட்டு வெற்றிக்களிப்போடு
 வெளியே சென்றார்.

திடீரென்று ரெண்டு பேர் வந்து என் அப்பாவை உள்ளே இழுத்து சென்றனர். கையிலிருக்கும் வேட்டி  நான் வாங்கியது . திருடியதில்லை என்று எவ்வளவோ போராடினார்.  கடைசியில் தான் தெரிந்தது அவர் உருவியது கடைக்காரன் காட்டிய வேட்டி இல்லை , கட்டியிருந்த வேட்டியை என்று. சூழ்நிலையை  உணர்ந்த என் அப்பா கடைசியில் வேறு வழி இல்லாமல் அந்த கடையில் ஏதாவது வாங்க வேண்டுமே என்று ஒரு துண்டு ஒன்றை வாங்கினார். பிறக்கபோகும் எனக்கு உபயோகப்படட்டும் என்று அதை வைத்திருந்தார்கள்.

நான் பிறந்தபோது துண்டாய்  இருந்தது நான் வளர்ந்த பின் கோவணமாக மாறியது. ஆதலால் என்னுடனே சேர்ந்து வளர்த்தது அந்த துண்டு. நாளடைவில் எங்கள் குடும்ப உருபினராகவே மாறியது.எங்கே துவைத்தால் சுருங்கி விடுமோ என்ற ஐயத்தால் இதனை ஆண்டுகளாக பத்திரமாக வெறுமனே காயபோட்டு மாட்டும் எடுப்போம்.அவ்ளோ அக்கறை அதன்  மீது எங்களுக்கு. நீங்கள் யாரும் அதை பார்த்தால் பழைய கோவணம் என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு அருமையாக இருக்கும். சிறு காலம் துவைக்காமல் விட்டதால் கொஞ்சம் வாசம் அடிக்கும். அதுவே பல பேருக்கு பொறமை.

 நாங்கள் பழைய ஏரியாவில் இருந்து இங்கு வந்ததுக்கு அந்த பொறாமையும் ஒரு காரணம்.இப்போ இந்த  பக்கத்துக்கு வீட்டுக்காரனும் அப்படியே அமைந்துவிட்டான். நான் கோவை சென்றவுடன் நானும் என் கோவணமும் பிரிய நேரிட்டது. அந்த துயரம் என்னால் தாங்க முடியவில்லை. தினமும் வீட்டுக்கு போன் செய்து கோவணம்  பற்றி தவறாமல் விசாரிப்பேன்.

எனக்கு ஆபிசில் கிடைத்த போனஸ் பணத்தை வைத்து புதுசாக ரெண்டு கோவணம் வாங்கியது , பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு மேலும் வயித்தெரிச்சலை உண்டாகியது.புயல் தாக்கியபோது துடித்துவிட்டேன். என் கோவணத்திற்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று. நல்ல வேலையாக யாருக்கும் தீங்கு நினைக்காத மனம் உள்ளதால் அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. நீண்ட நாள் பிறகு கோவையில் இருந்து  என் வீட்டுக்கு சென்றேன் எதிர் வீட்டுக்கு புதுசாக ஒரு பாய் ஆளுக வந்திருக்காங்க வந்தேனா பிரியாணி எடுத்து சாப்பிடலாம்னு சொன்னதும் ஆசையோடு சென்றேன்.

போன இடத்தில மாடிக்கு பொய் நம்ம கோவணத்தை பாப்போம் என்று ஆவலாக சென்ற எனக்கு இதயமே வெடித்தது போல் இருந்தது. ஆம்.. என் கோவணம் சுக்குநூறாக கிழிந்து கிடந்தது. அதை உத்து பார்த்து எதோ நாய் கடிச்சி போற்றுக்கும்பா என்று  நம்பகமானவர்கள் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது பக்கத்துக்கு வீட்டுக்காரன்  புதிதாக நாய் வாங்கியிருப்பதாக. எங்களை பழிவாங்க இந்த வழி தான் கிடைத்ததா அவனுக்கு??

ஒரு பாவமும் அறியாத அந்த கோவணம் என்ன தவறு செய்தது?

பாடிகார்ட் முனிஸ்வரன் பார்த்துக்கொண்டே தான் இருக்க போகிறானா??


Tuesday 28 February 2012

சீசன் 2 விரைவில்.....

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க









விரைவில்.....  பக்கி லீக்ஸில்


Monday 9 January 2012

ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ் 10/1/2012 (05+)

இப்போது தான் போன வருட புத்தாண்டுக்கு சரக்கடித்து விட்டு போலீஸிடம் பட்டக்ஸில் அடி வாங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 2012 புத்தாண்டு வந்து வந்து விட்டது. வாங்கிய அடியில் நான்கு நாட்கள் மல்லாக்க படுக்க முடியவில்லை. நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிப்பது?
----------------------------------------------------------------------------------------------------

தானே புயல் தானே வந்து தானே சென்றிருக்கிறது. fishermen கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து மீடியாக்கள் சொல்லி வருகின்றன. ஆனால் மீனவர்கள்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து.
-----------------------------------------------------------------------------------------------------

எங்கள் பக்கத்து வீட்டில் சாணி தெளித்து சரிசெய்து வைத்த வாசலை தானே புயல் நாஸ்தி பண்ணிவிட்டு சென்றதால் சித்ரா அக்கா சோகமாக இருந்தாள். நான் அப்போது சென்று "பிம்பிளிக்கா பிய்யாப்பீ..." என்று கேலி செய்தேன். இன்னும் கொஞ்சம் சாணியை  கரைத்து மூஞ்சில் உற்றி விட்டார். உப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கின்றது என்று கூறினேன். நாளைக்கு வா உப்பு போட்டு ஊற்றுகிறேன் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
----------------------------------------------------------------------------------------------------------
எப்போது புயல் வந்தாலும் எங்கள் ஊர் கடலூரே அதிகம் பாதிக்கப்படும். ஏனென்றால் எங்கள் ஊரில் புயல் வரும் போது வேகமாக காற்று அடிக்கும். புயல் அடிக்கும் போது எங்கள் வீட்டில் உள்ள பேனை ஆப் செய்து விட்டு ஜன்னலை திறந்து வைத்தால் காற்று நன்றாக வரும் என்று சொல்லியிருந்தேன். பேனை ஆப் செய்தார்களா என தெரியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் ஒயர் புயலில் எங்காவது அருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை ஒயர் இல்லாத செல்போன் வாங்க வேண்டும் என்பது இந்த புயலின் மூலம் நான் கற்றுக் கொண்ட புத்தி கொள்முதல்.
---------------------------------------------------------------------------------------------------------

கடலூரில் இருக்கும் என் நண்பர் சபாசுக்கு போன் செய்தேன். மச்சி கடலூர் எப்படி இருக்கின்றது என்று கேட்டேன். கடலூரை மிக்ஸியில் போட்டு ஆட்டியது போல் இருக்கு.எல்லா மரமும் முறிஞ்சி கெடக்கு.. எங்க வீட்டு கூரை எல்லாம் பறந்து விட்டது" என்றான். "ஹையா... ஜாலி:" என்றேன். செருப்பால அடி நாயே... மூடிகிட்டு போன வைடா என்றான். நான் பொத்திக்கொண்டு வைத்துவிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------

மாயன் காலண்டரை பற்றி படித்து இருக்கிறேன். இந்த காலண்டரை எழுதியவர் மாயன் படத்தில் நடித்த நடிகர் நாசர் என்பது பலருக்கு தெரியாது. அவர் என் நண்பர். இந்த வருட பொங்கலன்று எனக்கு முக்கியமான வேலை இருப்பாதால் பொங்கலை வேறு தேதிக்கு மாற்றி தருமாறு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் யாருக்கும் தெரியாமல் மாயன் காலண்டரில் பொங்கல் பண்டிகையை மார்ச், அல்லது ஏப்ரலுக்கு மாற்றி தருவதாக கூறியுள்ளார். மிக்க நன்றி நாசர்.

----------------------------------------------------------------------------------------------------


இவர் கூட ஒர்க் பண்ண வேண்டும் என்பது எனக்கு சின்ன வயசிலிருந்து ஆசை. ஆனால் இவர் இப்போது தான் பீல்டுக்கு வந்திருக்கிறார். முக்கியமாக காக்க காக்க சூர்யா கெட்டப்பில் வெளியாகியிருக்கும் இவர் போட்டோ சான்சே இல்லாத ரகம். பட் இவர் கூட ஒரு படத்திலாவது ஒர்க் செய்தால் பிறவி பயனை அடைந்ததற்கு சமம்.
----------------------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாளுக்கு முன்பு பெய்த மழையிலேயே சென்னையின் சாலைகள் சரியாகாத நிலையில் இப்போது புயல் வேறு. காலையில் வண்டியை ஒட்ட முடியவில்லை. காற்று எதிர்த்திசையில் தள்ளுகிறது. கிண்டியிலிருந்து போருர் செல்ல இருந்த என்னை காற்று எதிர் திசையில் தள்ளி ஸ்பென்சர் ப்ளாசா வரை கொண்டு சென்று விட்டது. உடனே மூளையை உபயோகித்து, ஸ்பென்சரிலிருந்து சென்ரலுக்கு வண்டியை ஒட்ட தொடங்கினால் காற்று எதிர் திசையில் அடித்து போரூருக்கு போய்விடலாம் என்று விரட்டினேன். சென்ட்ரல் வந்துவிட்டது.

------------------------------------------------------------------------------------------------
காலையில் மனைவியை ட்ராப் செய்ய வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னல் போட்டார்கள். நான் ப்ரேக் அடித்து சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டேன். நல்ல வேளை வண்டியில் ப்ரேக் இருந்தது. இல்லாவிட்டால் மாமாவிடம் மாட்டி  இருப்போம். நன்றி கடவுளே...

------------------------------------------------------------------------------------------------------
பிலாசபி பாண்டி:
எவன் ஒருத்தன் நான் லோக்கலு லோக்கலு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றானோ அவன்கிட்ட உசாரையா உசாரு.




----------------------------------------------------------------------------------------

இந்த வார (எடிட் செய்யப்படாத) வாசகியின் கடிதம் 



மை டியர் மார்த்தாண்ட சாம், 
தங்கள் வாசகர் கடிதப்போட்டி அறிவிப்பை கண்ட உற்சாகத்தில்  தருமியை விட சொல்லொண்ணா படபடப்பில் வீதியெங்கும் ஓடோடி உறுமினேன். நான்  வலைப்பூ எதுவும் வைத்திருக்கவில்லை. ஜெட்லி பதிவை நித்தம் படிக்கையில் தானாகவே ரெண்டு முழம் மல்லிப்பூ என் காதில் லான்ட் ஆகிவிடுகிறது.  உங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இதோ என் வாசகர் 'கடி'தம்:

 -- சீனத்து ஜெட்லி போதிதர்மன் அருளால் ஜெட்லி சேகரின் முதல் பெண் வாசகி ஆயி (கணினி தானாகவே இடாலிக் பாண்டுக்கு மாற்றிவிட்டது. நான் எதுவும் செய்யவில்லை) இன்றோடு 45 வருடம் 1 நாள் பூர்த்தி ஆகிவிட்டது. நான் வசிப்பது எத்தியோப்பியாவில். தொழில்:உ(டான்சர்). ஆதாரம்: http://www.youtube.com/watch?v=-1yrons-RRE.    

-- உலகம் என் பப்லு குட்டி ஜெட்லியை 1000 சொன்னாலும், ஆயி,ரம் (கணினி பிரச்னை. மன்னிக்கவும்) பதிவிட்ட அபூர்வ சிகாமணியாக எங்கள் நொந்த'கும்'மாரன்  ஆனது சரித்திரம். 
-- மைனஸ் நான்காம் நூற்றாண்டிலேயே ரெட் ஒன் கேமராவை தோலில் சுமந்து தொளில் செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. அசோக்குமார், ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் என ஏகப்பட்ட ஆட்கள் வந்து சென்றாலும், எனக்குள்  ஏதோ ஒரு உறுத்தல். பெண்களை எசகுபிசகான ஆங்கிளில் 'எக்ஸ்ட்ரா ஆடுநரியாக' படம் பிடிக்க ஒருவரும் இன்னும் பிறக்கவில்லையா என்று பிலடெல்பியா பிருந்தாவனத்தில் குத்த வைத்துக்கொண்டு நொந்த நேரத்தில் என் தோலை பிசைந்து ஆறுதல் சொன்னது ஒரு உள்ளம். எஸ். ஹீ இஸ் ஜெட்லி சேகர்.

-- 2008 ஏப்ரல் 14 ஆம் தேதி.  என் மடியில் அவர் அமர, அவர் மடியில் மடிக்கணினி அமர, அமரர் சுஜாதாவிற்கு சமர்பணம் செய்து முதல் பதிவை இட்டார். சமர் பணம் என்பது உங்க நாட்டு கரன்சி பெயரா என்று கேட்டதற்கு லேசாக சிரித்துவிட்டு 'இனி பிலை இண்றி எழுதுகிறேன்' என  தமிழ்ப்புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று (அவர்) நெஞ்சைத்தொட்டு சத்தியம் செய்தார். அது என் நெஞ்சை தொட்டது. அந்த பதிவிற்கு முதல் கமன்ட் போட்டவர் தி டர்டி கேர்ல் சில்க் ஸ்மிதா. நம்பாவிடில் செக் செய்துகொள்க. 

-- தெற்காசியா வந்தபோது ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்றேன். தாமஸ் அல்வா எடிசன் யூஸ் செய்த கேமரா கண்ணடியின் சிறு பகுதியை வீட்டு வாசலில் தொங்க விட்டிருந்தார். அதில் சூரிய ஒளிபட்டு எதிர்வீட்டு ஜிகிடியின் பெட்ரூமில் ரிப்ளக்ட் ஆகும் வண்ணம் ஆங்கிள் வைத்திருந்தார் என் செல்லம். வாட் எ கிரியேட்டி வெட்டி. தட் இஸ் ஜெட்லி!!

-- அவருடைய ப(டை)ப்புகளில் என்னை சிந்திக்க வைத்த டாப் 5 பட்டியல்:

    
     
   அவதாரில் வொர்க் செய்த டெக்னீசியன்களை விட அதிக எண்ணிக்கையில்  
   ஜெட்லியை பாராட்டிய உள்ளங்கள்(இன்றுவரை அவரை ஓட்டுகிறார்கள் 
   என்று தெரியாமல் இருக்கும் பப்லு குட்டி...உன்ன நெனச்சா எனக்கு அழுகை 
   பீறிட்டு வருது)  
      

    ஜெட்லி படைப்பு.. களவாடிய பொழுதுகள்:  
-- ஆயிரம் பதிவு கண்டபின்னும் தனது ஸ்டைலை மாற்றாத மின்சார கண்ணா. ஐ லவ் யூ. ஒன்பதாவது சென்னை உலக பட விழாவிற்கு எனக்கும் 'அலை'ப்'பூ' விடுத்துள்ளார் ஜெட்லி. 

--முதல் சென்னை என்றால் பெண்களூர் மார்க்கத்தில் எளிதாக  வந்துவிடுவேன்.  ஏழாவது சென்னைக்கு எப்படி வருவது என்று ஈமெயிலில் போன் செய்து கேட்டேன். நீ அங்கேயே இருடி ங்கோத்தா.  நான் கைபர் கணவாய் வழியா வந்து உன்னை கூட்டி போறேன்னு சொன்ன அவரோட பாசத்துக்கு முன்னால எவனுமே நிக்க முடியாது சாம்.  

-- இனியும் எங்க பப்லுவை எதிர்த்து அனானி, யுனானி மாதிரி ஆட்கள் கிளம்பினால் அவர்களை அடித்து விரட்ட என் பாய் ப்ரெண்ட்ஸ் பன்னி பண்டாரம், பூன மணி(ஜி), சாரப்பாம்பு, மாட்டு ரவி ஆகியோரை ஏவி விடுவேன் என உச்சரிக்கிறேன். 
-- தற்போது என் 'தொழிலை' முற்றிலுமாக 'துறந்து' விட்டு ஜெட்லிதாசி எனும் பெயர் மாற்றம் செய்துகொண்டேன். அவரின் முதல் பதிவான சமர்பணம் முதல் அன்மைப்பதிவான ஒன்பதாவது சென்னை பட விழா வரை அனைத்து பதிவுகளையும் தஞ்சாவூர் கல்வெட்டில் பதிய முனைப்புடன் வேலை செய்ய துவங்கி விட்டேன். 

-- அதுவரை 'இந்த மலைய உடச்சது எவன்டா. இந்த 'ஜெ'னா 'சே'னா நாலு நாள் ஊர்ல இல்லைங்கிற கொழுப்பா. கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்' என்று அலப்பறை செய்யாமல் இருக்குமாறு ஜெட்லியை உருகி மருகி கேட்டுக்கொள்கிறேன். 

இவள்,

ஜெட்லிதாசி 
1000, ஒம்*ல வீதி
அட்டிஸ் அபபா (http://en.wikipedia.org/wiki/Addis_Ababa)
எத்தியோப்பியா - 1000,1000,1000.



----------------------------------------------------------------------------------------------------

மன்னிக்கவும் ஜெட்லிதாசி.. எனக்கு திருமணம் ஆகிவிட்டது

விடை பெறுகிறான் சாம் மார்த்தாண்டன்



இதுவே சாம் மார்த்தாண்டனின் கடைசி பதிவு. சாம் மார்த்தாண்டன் பதிவுகளால் ஜெட்லி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மெண்டலி மெண்டல் ஆகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியில் மீசையில் மண் ஒட்டாதவாறு நடந்து கொண்டு இரவு வீட்டில் பக்கெட் கணக்கில் குமுறிக் குமுறி அழுகின்றாராம். இவரால் கீழ்பாக்கம் ஏர்வாடி போன்ற இடங்கள் கெட்டுவிடக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் பதிவுகள் நிறுத்தப்படுகின்றன. மற்ற வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஜெட்லி இடுகைகளுக்கும், சாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெட்லிக்கு மன நிம்மதி கிடைக்க ஆண்டவனை பிரத்தித்து விடை பெறுவது உங்கள் சாம் மார்த்தாண்டன்.

ஆதரவளித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சாம் மார்த்தாண்டனின் நெஞ்சார்ந்த  நன்றிகள்.


நனைப்பதல்ல நீ !!
துவைத்து காய போடுவதே நீ !!!