செவ்வாய் என்றால் திங்களுக்கு அடுத்து வருவது. அதனால் பொதுவாகவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காது. அங்கு தண்ணி இல்லை என்ற ஆச்சரியமான விஷயத்தை கேட்டு 'திடுக்' என ஆடிப்போனேன். என்னடா சாம் இது செவ்வாயில் 'வாய்' இருந்தும் தண்ணி இல்லையே. இதைத்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ என எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் அந்த செவ்வாய் கிரக பதிவர் எனக்கு ஃபோன் செய்து அழுதார்.
அந்த செவ்வாய் கிரக பதிவரின் பெயர் ரீமாசென் (கீதா என்ற உண்மையான பெயரை அவர் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் ரீமாசென் என பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரீமாசென் ஒரு ஐ.டி கம்பனி இருக்கும் எட்டு மாடி கட்டிடத்தில் வேலை செய்யவில்லை. அதற்கு அருகில் இருக்கும் ஒரு டீ கடையில் 'டீ லீடர்' (Tea leader)ஆக வேலை செய்கிறார். அவரது கணவர் அடிக்கடி வேலை விஷயமாக புதன் கிரகம் சென்றுவிடுவதால் பெரும்பாலும் பெண்பதிவர் ரீமாசென் டீ கடையே கதி என இருந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த டீ கடைக்கு அருகில் இருக்கும் இட்லி கடையில் வேலை செய்யும் சேதுபதியின் (அவர் மிகவும் கொடுமையானவர் என்பதால் அவர் பெயர் மாற்றபடவில்லை) வீடு ரீமாசென்னின் வீட்டுக்கு அருகிலேயே இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ரீமாசென்னை டீ கடையில் ட்ராப் செய்துவிட்டு ரீமாசென்னின் கணக்கில் ஓசி டீ குடிப்பதை சேதுபதி தன் வழக்கமாக வைத்துள்ளார். சரி சேதுபதியும் இட்லி லீடராக பணிபுரிவதால் டீசண்டானவர் தானே என நினைத்து ரீமாசென்னும் இதை அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் ரீமாசென்னின் பிராஜக்ட் மானேஜர் விஷால் (கோவிந்தனின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் விஷால் என மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் ரீமாசென்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். முதலில் கண்டிக்க நினைத்த ரீமாசென் பின் தன் டீ-லீடர் பதவி பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்திருக்கிறார்.
சில நாட்கள் கழித்து விஷால் ஒருபடி மேலே சென்று ரீமாசென்னின் வீட்டுக்கே சென்றுவிட்டார். ஆனால் அன்று செவ்வாய்கிழமை என்பதால் புதன் கிரகத்துக்கு செல்லாமல் செவ்வாய் கிரகத்திலேயே இருந்திருக்கிறார் ரீமாசென்னின் கணவர் சுரேஷ். ஆனால் இது விஷாலுக்கு தெரியாது. ஆனால் இது ரீமாசென்னுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்துவிட்டது.
விஷால் மெல்ல படியேறியிருக்கிறார். டக் டக் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருக்கிறார். கதவு அருகில் வந்து தட்ட போகும்போதுதான் 'அதை' பார்த்திருக்கிறார் விஷால். பின் (அதை) காலிங் பெல்லை அமுக்கியிருக்கிறார். நிமிடங்கள் ஓடின. மீண்டும் அமுக்கினார். நிசப்தம்.
கதவு திறக்கப்பட்டது. பார்த்தால் ரீமாசென்னின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரீமாசென் ஓடிவந்து அழுதுகொண்டே கணவரை கட்டிக்கொண்டு பேசினார், "இவர் தாங்க என் பிராஜக்ட் மாஸ்டர். என்கிட்ட எப்பவுமே தவறா நடந்துக்குறாரு" என சொல்லி கதறியிருக்கிறார். ஏன் சாம் இப்படிலாம் கூட நடக்குமா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
ஒருநிமிடம் சுரேஷ் கண்ணிமைக்காமல் விஷாலை பார்த்திருக்கிறார். பின், "ஏம்பா விஷால். பாக்க வாட்டசாட்டமா இருக்கியே தவறா நடக்காம நேரா நடக்க கூடாதாப்பா?" எனக்கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு மனம் திருந்திய விஷால் பின் சனி கிரகத்துக்கு மாற்றல் ஆகிபோய்விட்டாராம்.
ஆனால் சனி கிரகத்தில் இன்னும் விஷால் தவறாக தான் நடக்கிறாராம். ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தை சேர்ந்த அந்த பெண்பதிவர் நிம்மதியாக தன் குழந்தைகளுடன் வசிக்கிறாராம்.
நாம் கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள்:
1) பதிவின் பெயர் சீரியசா இருக்கேனு உள்ள வந்து பாத்துரக்கூடாது. பாத்தவன் வாழ்க்கைல தான் 'திடுக்' சோகம் வந்துரும்!
2)இதில் வந்த சேதுபதிக்கும் இந்த பதிவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சும்மா ஒரு பத்தி எக்ஸ்ட்ரா ஆகட்டுமே என சேர்த்துவிட்டேன்.
3)இதே கதையை நான் திருப்பியும் பதிவா போட்டா நீங்க கண்டுக்க கூடாது. ஒருநாளைக்கு முப்பது பதிவு போடுறதுனால தவறு நடக்குறது இயல்பு.
4) இதே செய்தியை நீங்க ஜூ.வி, ஆ.வி, குமுதம் ரிப்போர்ட்டர்ல படிச்சிருக்கலாம். ஆனா அப்படி காசு கொடுத்து மூணு புக்கு வாங்குறதுக்கு பதிலா இங்க வந்தீங்கன்னா அதே செய்திய இலவசமா படிச்சுக்கலாம்.
டிஸ்கி: நடுவில் வரும் படங்களுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் பதிவுக்கும் பதிவுக்குமே சம்பந்தமில்லை!
22 comments:
பதிவில் இருக்குற மேட்டர் புரியாதவர்கள் கீழே உள்ள இரண்டு சுட்டிகளை படித்துவிட்டு வரவும்...
http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_8049.html
http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_3321.html
ஏன் சார்??? பதிவின் மூலமா நல்ல விசயத்ததானே செய்ராரு..... அத போயி காமெடி பண்ணி இருக்கீங்க???
வச்சி காமெடி பண்ண வேற நிறைய ஆழுங்க இருக்காங்களே!!!!
போட்டு தாங்குங்க பாஸ் ....
படித்து சிரித்தேன் .. அதன் பிறகுதான் அந்த பதிவுகளை படித்தேன்..
இதை நிச்சியமாக சி.பி.செந்தில்குமார் தவறாக எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன் .......
அவரும் இதை ரசித்து இங்கு கமண்ட்டு போடுவார் என்று எதிர்பார்கிறேன் ...............
சூரியனுக்கு யாருமே போகமாட்டேங்கறேங்களே ஏன்
முடிந்தால் கேபிளை கிண்டல் செய்ங்க..
/சூரியனுக்கு யாருமே போகமாட்டேங்கறேங்களே ஏன்/
ஞாயிறில எல்டீலாருக்கும் லீவுங்கிறதால எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருந்திருவாங்க!
"சாம்" ஐ சனிக்குப் போகுமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்!நன்றி,வணக்கம்!
அஞ்சா சிங்கம் said...
இதை நிச்சியமாக சி.பி.செந்தில்குமார் தவறாக எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன் .......
அவரும் இதை ரசித்து இங்கு கமண்ட்டு போடுவார் என்று எதிர்பார்கிறேன.////அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன!
where is next post as " sam in cyber crime office" as you promised
அந்த போலீஸ் கட்ட பஞ்சாயத்து செஞ்ச விஷயத்தை மறந்துடீங்க.
Ha . . Ha . . Ha . Sema comedy . .
Ha . . Ha . . Ha . Sema comedy . .
அடுத்த போஸ்ட்டை போடுங்க சாம், நம்ம காமேடி பீஸ் இருக்கும் போது தலைப்புக்கு பஞ்சமா?
கடைசி இடம்.
ஆவிஎம்மின் தயாரிப்பு. காக்கா ஹிட்டிற்கு பிறகு யதார்த் நடிப்பில் வரும் படம். புது இயக்குனர், சொன்ன கதையில் மிகவும் பிடித்துப் போய் உடனடியாய் படம் செய்ய ஆரம்பித்ததாய் சொன்னார்கள். அப்படி என்ன கதை என்று பார்ப்போமா?
யதார்த் பெயர் பொடிக்குஞ்சு. அவன் ஒரு கல்லூண்டி ரவுடி. தன் நண்பனின் சிகரேட்டில் கைவைத்ததால் அவன் சிகரேட்ட்டை பிடிங்கி விட்டு போடாவான்,. அதைப் பற்றி அவனுடய அம்மா எதையும் கேட்பதில்லை. காவாலியாய் இருக்கிறான் என்றால் அடுத்து என்ன நடக்கும் நல்ல அழகான, படிச்ச பொண்ணு பின்னாடி அவன் சுத்துவான், அப்புறம் அவ சுத்துவா. அதான் நடக்குது. இவங்க காதலுக்கு அவளோட அப்பனாத்தா ஒத்துக்க மாட்டாங்க.. அப்புறம் அவங்க எப்படி சேர்ந்தாங்கன்னுதானே கதை இருக்கணும். அதுவும் இருக்கு. நடுவுல பருத்திவீரன், சுப்ரமணியபுரம், இரண்டு வில்லன்க, அவனோட அண்ணன் பெரிய ரவுடி, கேட்டா அவரு வீரராம். சரி விடுங்க இதான் கதை. இதுல என்னத்த கண்டுபுட்டாங்கன்னு ஆவிஎம்மு படமெடுத்தாங்கன்னு தெரியலை
எனக்கு தான் படம் எடுக்க யாரும் வாய்பு கொடுங்க மாட்டேங்கறாங்க.நானும் அது நொல்லை இது நொட்டைன்னு இங்க கூவிக்கிட்டே இருக்கேன். எவனும் மதிக்ககூட மாட்டேங்கறான். நான் சென்ஸ்.
எனக்கு தான் படம் எடுக்க யாரும் வாய்பு கொடுங்க மாட்டேங்கறாங்க.நானும் அது நொல்லை இது நொட்டைன்னு இங்க கூவிக்கிட்டே இருக்கேன். எவனும் மதிக்ககூட மாட்டேங்கறான். நான் சென்ஸ்.
யதார்தின் கேரக்டர் என்னை போல சும்மா உதார் விடும் பார்ட்டியா? இல்லை நிஜமாகவே காமேடி பீஸா என்பதே குழப்பமாய் வைத்திருக்கிறார்கள். சுத்தமான அப்படாக்கர் தொப்பை மாமா போல என்னை யாராச்சும் அங்கிள்ன்னு சொன்னா எப்படி கோவம் வருது ஆனா படத்தில் அப்படி யாரும் சொல்ல கூடாது ஆமாம். நானும் விமர்சனத்தில் அரைகுறை ஆங்கிலத்தில் ஏதாச்சும் அரைகுறையாக எழுதுவுவேன்.யாராச்சும் ஏதாவது சொன்னா விழுந்தடிச்சு பின்னோட்டத்தில் திட்டுவேன்ம்
இயக்குநர் என் கதையில் எடுத்த குறும்படங்களில் அடிக்கடி பார்க்கிறார் போலும். குறும்படம் போட்ட யு டூப் காரண்ணே என் காலை புடிச்சி அழுவுறான். அப்படியும் நாம் அசறுவுமா? சைக்கிள் கேப்பில் மெகா சீரியலில் நடிச்சு தமிழக மக்களை குஷி படுத்துறோமே. என்ன நாம நடிப்பது எடுப்பது எல்லாம் மொக்கைதான்.. ஆனா அடுத்தவன் எது செய்தாலும் அது நொட்டை நொல்லை அதான நம்ம பாலிஸி
நானு குறும்படம் எடுத்த பின்னாடி சாம் வீடியோக்கு மேல உலக தமிழர்கள் எல்லாம் என்னோட குறும்படத்தை பார்த்துதான் சிரிச்சு சிரிச்சு கவலையை மறக்கிறாங்களாம்.. சோ சாட் அது சீரியஸ் படம் தானே எதுக்கு பொதுமக்கள் சிரிக்கனும்.என்னை பார்த்தா காமேடியா இருக்கா டிவைன். அதுவும் நானு சோக வேசம் போட்டு மேகா சீரியல்லில் வந்தா குழந்தைங்க எல்லாம் கைகொட்டி சிரிக்குதாம்..டிவைன். எல்லாத்துக்கு காரணமாகிய வாசகர்களான உங்களுக்கு மிக்க நன்றி.,
யார்கிட்ட நான் யார் தெரியுமா? அந்த காலத்துல நானும் என் பக்கத்து வூட்டு ஒயரில் ஓட்டையை போட்டு உலக சினிமா பார்த்தவன். எனக்கு யாராச்சும் வாய்ப்யு கொடுக்க்லன்னா இத போல விமர்ச்னம் எழுதுவேன் மொக்கையாக குறும்படம் எடுப்பேன் கலைதுறையை நான் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்.
ஒயர் சோப்ளாங்கி- உயிரில்லாமல்
sam, உங்க கூட்டம் பயந்துப்போய்விட்டதா...சைபர் கிரைமில்......என்ற பதிவுக்காக waiting
traffic rank 989 super improvement...I wish you in top 10 soon
sam, உங்க கூட்டம் பயந்துப்போய்விட்டதா...சைபர் கிரைமில்......என்ற பதிவுக்காக waiting///
சார்.. இப்படிலாம் உசுப்பிவிடனும்னு அவசியம் இல்ல சார். குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அசைண்மெந்த் கொடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் பொறுங்க சார்! ஹிஹி! :-))
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி