ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday 6 September 2011

ஆண்வெஜ் பெண்வெஜ் 3நிமிடம் 30நொடி தாமதமாக (06/09/2011)


ஆல்பம்:

சென்னையில் மழைக்காலத்தில் மழை பெய்வது வியப்பாக உள்ளது. பெண்களூரில் ரெய்னி சீசனில் மழை பெய்வதாக பேசிக்கொண்டார்கள். இதுகுறித்து ஐநாசபைக்கு ட்வீட் செய்திருக்கிறேன். சென்னையை சரிசெய்கிறார்களா பார்க்கலாம்.
=============

மங்காத்தா படத்தைப் பத்தி இப்போதுதான் எழுதினேன்... அதற்குள் அதை வெங்கெட் பிரபு இயக்கி, அஜீத் நடித்து வெளியிட்டுவிட்டார்கள். மங்காத்தா படத்தைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா?
========

BBC சேனலின் செய்தி வாசிப்பாளர் அலக்ஜான்ட்ரியா எத்தனை முறை பதட்டத்தில் திக்கி தப்பாக செய்தி வாசித்தாலும்,ரசிக்கவே செய்கின்றேன். ஏனென்றால் அவர் சரியாக வாசித்தாலும் எனக்கு புரியாது.
==========


மிக்சர்: 

சென்னையில் பிசியான என் வீட்டு கூரையில் காக்கா ஒன்று கூடு கட்டியிருந்தது. "நிம்மதியா நான் உன்னை தூங்க கூட விடமாட்டேன்...நைட்ல கூட முழிச்சு வாசகர் கடிதம் எழுதுவேன்" என்றேன். காக்கை தலையில் ஆய் போய்விட்டு பரந்துவிட்டது. காக்கையே உன் சமத்து..
==========

சென்னையில் ராயப்பேட்டா அருகில் ஒரு ஓட்டலில் ப்ளாக் அண்ட் வைட் டிவி உள்ளது. அந்த டிவியில் கருப்பு வெள்ளை தவிர வேறு எந்த கலரும் வரவில்லை. ஓட்டல் முதலாளியிடம் சண்டை போட்டேன். ரெண்டு இட்லி கட்டிகொடுத்து வழியனுப்பினார்.
==========

வாசக நண்பர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை பெண்களூருவில் சந்தித்தேன். அவர் காசில் ஓசி டீ குடித்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. என் ரெஷ்யூம் கொடுத்தேன். கடலில் கப்பல் தள்ளும் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். நடக்கிறதா பார்க்கலாம்.
==========

நேற்று கடலூர் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் வாசக நண்பர் ராஜ்ஜை சந்தித்தேன். அவர் வாங்கி கொடுத்த பிரியாணியை ருசித்தபடியே பேசினோம். பின் பில் வந்தவுடன் லேசாக நிமிர்ந்து என்னை பார்த்தார். தலைதெறிக்க வெளியே ஓடிவந்து விட்டேன். வரவர உலகம், ரொம்ப கெட்டுவிட்டது.
==========

இந்த வாரம் பல வெளிக்கம்பனிகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொடுக்கும் பனி நிறைய இருப்பதால் எனக்கு என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. அடுத்தவாரம் முடிகிறதா பார்க்கலாம்.
==========

டவுன் பஸ்ஸில் கண்டக்டர் எழுதியிருந்ததைப் படித்ததும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதுவும் அவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதியிருந்ததுதான் ஹைலைட்.

அந்த செய்தி உங்களுக்காக

"டிக்கெட் எடுக்காத திருட்டுப்பயல்கள் வழியிலேயே இறக்கிவிடப்படுவார்கள்"

இதைப் படித்துவிட்டு பயங்கரமாக அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன்.
==========

இந்தவார சலனப்படம்:

நம்மூர் நடிகை காத்ரீனா கைப்பின் அண்ணன் மொகமது கைப் எப்படி கேட்ச் பிடிக்கிறார் பாருங்கள். லைவில்தான் அப்படி பிடித்தார் என்றால் ரீப்ளேவிலும் அதேபோல அவர் பந்தை பிடிப்பதுதான் ஹைலைட்.





==========
பிலாசபி பாண்டி

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை.

 ==================== ====================


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...

Sunday 4 September 2011

Mankatha (2011)/மங்காத்தா.. நால்வரில் மங்காத்தா யார்?... -ஜெட்லி சேகர்


அஜீத்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என் குறும்படங்களில் நடிக்க ஆவலாக இருப்பதாக கேள்விப்பட்டேன். முடிகிறதா பார்க்கலாம்.

ஜுராசிக் பார்க், லாஸ்ட் சாமுராய், பாட்ஷா போன்ற ஒரு சில அஜீத் படங்கள் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு டைப்பாய்டு ஜுரமே வந்து இருக்கின்றது... அப்போது ட்விட்டரில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அப்படி நான் என்ன எழுதிவிட்டேன்? எதோ என் மனதில் பட்டதை எழுதுகின்றேன். அதுக்கு இவ்வளவு ஆதரவா? (ஆரம்பிச்சுட்டான் டா! டேய் இது மங்காத்தா விமர்சனம்டா. அறிவிப்பு பில்ட் அப் இல்ல)

15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை பார்த்த போது  அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் காமடியாக இருக்கும். சொந்த காசில் டீ குடிப்பார். உழைத்து சம்பாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார். வாசகர்கள், ரசிகர்களிடம் கைமாத்து வாங்க கூடாது என்றெல்லாம் சொல்வார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். சில நேரங்களில்  அவருடைய பேச்சு அவ்வளவு ஸ்திரத்தன்மையாக இருக்காது. பேசும்போது நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவார். அவர் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.. இளையதிலகம் நடிகர் பிரபுவின் சித்தப்பா மகன் தான் இந்த வெங்கட் பிரபு.

====================

மங்காத்தா படத்தின் கதை என்ன??
                                                   
விநாயகம்(அஜீத்) ஒரு போலீஸ் ட்ரெஸ் போட்டு சுத்திக்கொண்டிருப்பவர். அறிமுக காட்சிக்காகவே தைக்கப்பட்ட போலிஸ் உடை அவருக்கு நன்றாக உள்ளது.

ஆங்.. எங்க விட்டேன்...??

நேற்று மன்மோகன்சிங் அனு உலை பாதுகாப்பு பற்றி பேசினார். இந்தியா போன்ற நாடு அனு என்ற பெண்ணின் வாழ்க்கைக்கு உலை வைப்பது  நன்றாக இருக்காது என அவருக்கு மெயிலி உள்ளேன். என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்க்கலாம்.

ரஜினியின் அடுத்த படம் ராணாவை இயக்க என்னை அழைத்து ட்வீட் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். நான் பக்கிராம் வயது55 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதால் முடியாது என சொல்லிவிட்டேன். கோபித்துக்கொண்டாரா. அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது நான் எப்பவுமே இப்படித்தான். நான் லோக்கல்.


மங்காத்தா என்ற பெண்ணுக்கும் அஜீத்துக்கும் கள்ளதொடர்பு ஏற்படுகிறது. அதை அர்ஜூன் முறியடிக்கிறார். அஜீத்தின் காதலுக்கு உதவும் நாலு நண்பர்கள் என்ன ஆகிறார்கள்? அஜீத் என்ன ஆகிறார்? அர்ஜூன் என்ன ஆனார்? என்பதுதான் மீதிக்கதை. எல்லாத்தையும் இங்கயே சொல்ல முடியாது தியேட்டரில் பார்த்துக்கோ. பிரிஞ்சதா?
====================================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில... 

                                                                
அஜீத் 40வயது கேரக்டரில் நடிப்பதால் இது அஜீத் 40 என்றுதான் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அஜீத்50 என விளம்பர படுத்தியுள்ளது வெங்கட் பிரபுவின் அனுபமின்மையை காட்டுகிறது.

அஜீத் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பை கழட்டி வைத்து லூயி ஃபிலிப் சட்டையையும், பீட்டர் இங்லாண்டு பேண்டையும் மாட்டிக்கொண்டு நடித்துள்ளார். அந்த முயற்சி பாராட்டத்தக்கது.
                                          
பில்லா இரண்டாவது பாகத்தில் நடித்த போது அந்த நெகட்டிவ் ஸ்டைல் பிடித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். மனிதர் பூந்து விளையாடி இருக்கின்றார்..வில்லன் கெட்டப் நன்றாகவே இருக்கின்றது. அதனால்தான் சவுண்ட் சென்னசார் கட் செய்து, 98 பிரேம்வில் ***** என்று சொல்ல முடிகின்றது. என்னதான் சென்சார் செய்தாலும் கெட்ட வார்த்தைகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு இடத்தில் அடியாள் ஒருவனை அஜீத் "ஜெட்லி சேகர்" என திட்டுகிறார். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார் அந்த அடியாள். அந்த இடமும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

                                           
படத்தில் த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என பல நடிகைகள் நடித்துள்ளார்கள். ஒவ்வொரு நடிகைக்கும் ஒருமுறை என்ற கணக்கில் இந்த படத்தை நான் 6முறை பார்ப்பேன். படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியது கடைசி வரைக்கும் மங்காத்தா திரிஷாவா, ஆண்ட்ரியாவா, அஞ்சலியா, லட்சுமிராயா என சொல்லாமலே படத்தை முடித்துவிட்டார் இயக்குனர். அடுத்த பாகம் எடுக்கப் போகிறார்கள் போல. பார்ப்போம்.

படம் முடிந்தவுடன் டைட்டில் கார்ட் போடும்போது என் குறும்படங்களில் நான் செய்த யுக்தியை வெங்கட் பிரபு காப்பியடித்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது
 ================================

தியேட்டர் டிஸ்கி...

சென்னை அப்போலோ ஆஸ்பிடல் ஆபரேசன் தியேட்டரில் இந்த படத்தைப் பார்த்தேன். நிறைய பேர் வாயில் துணி கட்டி வந்திருந்தார்கள். சிலர் கத்தி, கத்திரிக்கொளுடன் நின்றார்கள். படுத்துக்கொண்டே படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.

திருட்டு டிவிடியில் வழக்கமாக பார்த்துவிட்டு தியேட்டரில் பார்ப்பது கொடுமையாக இருந்தது.
சவுண்ட் சரியில்லை. பீப் பீப் பீப் என எதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏசி நல்ல குளிராக இருந்தது.

 ================ ================
பைனல் கிக்

இது சினிமா தியேட்டர் இல்ல நாயே, ஆபரேசன் தியேட்டர் என சொல்லி கம்பவுண்டர் என் பின்புறத்தில் கிக் செய்து வெளியே விரட்டினார். அதுவே என் பைனல் கிக்காக அமைந்தது.

 ================ ================

வோடாபோனில் ஒரு சிம் வாங்கினால் ஒரு சிம் ஃப்ரீ. உடனே முந்துங்கள். இந்த சலுகை சிறிது காலம் மட்டுமே.

--
Antony Disouza,
Area manager, Vodaphone.


======================
மிக்க சந்தோசமா அந்தோணி??
===


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...