ஆல்பம்:
பெண்களூரில் இன்று நானும் சில வாசக நண்பர்களும் பேன்டா குடித்தோம். பேன்டா ஆரஞ்சு நிறத்தில் இருந்தது எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. யார் 'பேன்டா'லும் மஞ்சளாக தானே இருக்க வேண்டும்... ஏன் பேண்டா ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது என்று சிந்தித்தபடியே காசு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தேன்...
====================
ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆனதை ஒட்டி 'ஜெ' இன்று ட்விட்டரில் என்னை விருந்துக்கு அழைத்தார். என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு ஒரே முதல்வர் தான், அது முதல்வன் அர்ஜூன் தான் எனச் சொல்லிவிட்டேன்...
====================
'அன்னா'ஹஜாரே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 'தங்கச்சி'ஹஜாரே உண்ணாவிரதம் இருந்திருந்தால் எனக்கு உடன்பாடு இருந்திருக்கும்.
====================
சென்னையில் நேற்று நல்ல மழை பெய்ததால் பெண்களூரில் எல்லாரும் நன்றாக நனைந்தோம். ஆனால் பெண்களூரில் பயங்கர வெயில். ஐ லவ் யூ ரஸ்னா....
====================
அணு உலை பாதுகாப்பு பற்றி பிரதமர் பேசியிருந்தார். கோவை டிஎம்டி கம்பிகள் பயன்படுத்தி வேலி அமைத்து அணுஉலைகளை பாதுகாக்கலாம் என அவருக்கு கூகிள் பஸ்ஸில் செய்தி அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார் என பொருத்திருந்து பார்க்கலாம்.
====================
மிக்ஸர்:
நேற்று ஈரோடுக்கு ஒரு காதுகுத்திற்கு சென்றிருந்தேன். குழந்தையின் காதில் அந்த ஆசாரி ஓங்கி குத்தியதை பார்க்க பாவமாக இருந்தது. உடனே கிளம்பிவிட்டேன். வழியில் ஒரு சிறுவன் குச்சியை வைத்து அடித்து அடித்து டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். டயர் பஞ்சர் ஆகியிருந்தது. பஞ்சர் ஆன இடத்தை படத்தில் குறியிட்டு காட்டியுள்ளேன். அவனிடம் "நான் பஞ்சர் ஓட்டித் தருகிறேன் தம்பி" என்று கூறினேன். "உன் மொகரைய பாத்தா சரி இல்ல. நீ திருடிட்டு ஓடிருவ" என்றான். அந்தப் பையனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. பின் அவனிடன் என் ஈமெயில் ஐடியையும், பால்கார்டு நம்பரையும் கொடுத்துவிட்டு உன் அப்பாவை விட்டு எனக்கு போன் செய்யச் சொல் எனக் கூறிவிட்டு அவனிடம் டயர் வண்டியை பிடிங்கி படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். ஒருவழியாக பெண்களூர் வந்து சேர்ந்தேன்.
====================
பல வாசகர்கள் லோக்பால் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என கேட்கிறார்கள். நான் லோக்கல் பால் குடிப்பதில்லை. ஆவின் பால் மட்டுமே..அதுவும் வேறு யாராவது வாங்கி கொடுத்தால் தான் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டேன்..
====================
வாசகர் கடிதம்:
அன்புள்ள மகன் முருகேசனுக்கு உன் அம்மா எழுதுவது. நல்லா இருக்கியா? காசு அனுப்ப சொன்னெனெ ஏன் அனுப்பல? இங்க உன் மனைவி மகள் எல்லாம் நல்லா இருக்காங்க. நீ எப்ப வர்ற? எம்.ஜி.ஆரு செத்துப் போயிட்டாருனு சொல்றாங்களே உண்மையா? அவரு நமக்கு தெய்வம் மாதிரி. உடம்ப பாத்துக்க... அடிக்கடி எழுது..
இப்படிக்கு,
உன் அம்மா,
கருப்பாயியம்மாள்,
19/2/1985
.........................................
அன்பின் முருகேசன். நன்றி. எம்.ஜி.ஆரை நான் சந்தித்தபோது அவர் முதல்வராக இருந்தார். என்னை சந்திக்கவேண்டும் என டிவிட் அனுப்பியிருந்தார். பின் பல வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் போய் பார்த்தேன். சாண்வெஜ் நாண்வெஜ் பற்றி பலநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவிடம் "இவர் தான் சாம். பிரபல பிட்டு எழுத்தாளர்" என அறிமுகபடுத்தினார். அப்போதுதான் தெரிந்தது அவர் பக்குவப்பட்டவர் என்று. பின் அவரை நான் பார்க்கவில்லை. அவரை அடுத்தமுறை பார்த்தால் கேளுங்கள் அவர் ஏன் கலர் படங்களில் அதிகமாக நடிக்கமாட்டேன் என்கிறார் என்று. இன்னும் ஜெயாடிவியில் ப்ளாக் அண்ட் வைட் படங்களையே தான் போடுகிறார்கள். அவரை இனியாவது கலர் படங்களில் நடிக்க சொல்லுங்கள்... ஜெயலலிதாவுடன் மட்டுமே நடிக்காமல் த்ரிஷா, அசின் என ஹீரோயின்களை மாற்றி நடித்தால் படம் இன்னும் நன்றாக ஓடும்....
மறந்து போய் கடிதத்தின் முடிவில் உங்கள் அம்மாவின் கையெழுத்தை போட்டுவிட்டீர்கள்... பரவாயில்லை.. நன்றி...
பிலாசபி ஆண்டி:
செருப்படியில் நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. நமக்கு செருப்படி தான் முக்கியம்.
====================
இந்த வார நிழற்படம்:
இவர்கள் சொந்த காசில் டீ குடித்தது காமடியாக இருந்தது. உடனே க்ளிக்கிவிட்டேன். இந்த படம் என் கைவண்ணம்.
==================== ====================
பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.
பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....
EVER YOURS...
27 comments:
super thalai
வரிக்கு வரி.... அசத்தல் !! அருமை !! இன்னும் நிறைய எழுதவும் !!
குறிப்பு : அறிவுப்பு பலகையை ஏன் தூக்கிவிட்டீர்கள் ?
மீண்டும் அதை வைக்கவும் . அல்லது அதை தனி பதிவாகவாது வைக்கவும் !!
engal anbu annan - videevelli - rathathin ratham - jetli sekarai neengal evlovu thaan kutharthamai paesinaalum avaru osi thanni thaan kudippaar osi saapadu thaan saapiduvaar enbathai paerumaiaaga engae sollikkolgiraen
so amusing....hilarious...i cannot stop laughing..u have a gift in kalaichifying..In Murugesan letter, had to added the date as 30/2/1985 wud have been more funnier..keep rocking..
நீங்க கலக்குங்க பாஸ்...
Super
ஒரே பதிவில் இவ்வளவு அறிவு சார்ந்த விஷயங்களா
தாங்க முடியல்லே.
pottu thakku
இன்று தான் பக்கி லீக்ஸ் படிக்கிறேன். எப்படி இப்படி?.சூப்பர் விளம்பரங்கள்.படித்துட்டு விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து என் பசங்க அம்மாக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு பதறிட்டாங்க.வரிக்கு வரி நக்கல்.எந்த ஊரு நீங்கள்?காட்டேரி கோவிந்தன் வில்லேஜ் ஆளா?
பதிவ படிச்சுட்டு இருக்கும்போது சிரிச்ச சிரிப்பை பார்த்துட்டு வீட்ல உள்ளவங்கலாம் கம்யூட்டரை வந்து எட்டி பார்க்கிறாங்கப்பா!!!!.பெண்களுர்லேர்ந்து ஆண்களுர் எத்தனை மைல்ங்க? இத விட்டிடீங்களே:)))keep rocking!!!!
தங்கச்சி'ஹஜாரே .....
சான்சே இல்ல! கலக்குறிங்க
இதற்கும் பழய போண்டா மாதவனை பற்றிய பகடி பதிவுகளுக்கும் சம்பந்தமில்லை என்று நம்புகிறேன்
ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் அப்டேட் பண்ணுங்க தலைவரே...
"ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆனதை ஒட்டி 'ஜெ' இன்று ட்விட்டரில் என்னை விருந்துக்கு அழைத்தார். "
எனக்கு கரகாட்டக்காரன் படத்துல நம்ப கவுண்டர் சொல்லுறதுதான் எனக்கு ஞாபகம் வருது
http://www.youtube.com/watch?v=OdNcsxx1uHI&feature=related
மறுக்கா கேட்கறேன். வாசகர் கடிதம் எழுத மெய்ல் ஐடி தர மாட்டீங்களா? ஒரு மெய்ல் அனுப்ச்சேன் உங்க தளத்துல உள்ள 2 ஐடிக்கும். ஒரு ரிப்ளையும் இல்லை.
’அவரை’ப் பார்த்தாவது வாசகர்களை மதிக்கக் கத்துக்கோங்க.
சூப்பர் தலைவா. இத இதைதான் எதிர்ப்பார்க்கிறோம்
@மொக்கை நண்பன்
mydearmarthaandan@rediffmail.comக்கு மெயில் அனுப்புங்கள்.
mmmmmmm aarambeenga. anbulla aayaavukku............
சூப்பர் சாம். main picture "சைபர் க்ரைம் ஆபீசில் ஜெட்லி" காக இரண்டு வாரமாக காத்திருக்கிறேன்.
//சாம் மார்த்தாண்டன் said...
@மொக்கை நண்பன்
mydearmarthaandan@rediffmail.comக்கு மெயில் அனுப்புங்கள்.//
கிழிஞ்சுடும்.
இதுலயும் அந்தாள் மாதிரியே மக்கா இருக்கீங்க..
யோவ்.. அதுக்குத்தான்யா அனுப்பினேன்.. பதில் இல்லைங்கறேன்..
தல..தல எல்லாரும் ஓடியாங்க..ஜெட்லியோட பேட்டி சன் நியுஸ்ல ஒடிட்டு இருக்கு, இந்த லிங்கை பாருங்க http://www.youtube.com/user/jackiesekar#p/a/u/2/vrvOhOYtSBM
என்ன கொடுமை சார் இது?? ஜெட்லியோட மூனு படமுமே சர்வதேச குறும்பட விழாவுக்கு தேர்வு செய்யபட்டிருக்குது!!!! யாருங்க அந்த நடுவர்??? http://www.youtube.com/user/jackiesekar#p/a/u/2/vrvOhOYtSBM
கற்பனை திறன் அருமை !!!
நல்லா இருக்கு கற்பனை
Waiting for your next post!! :)
சீக்கிரம் தல
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்
idly sekar valga
இன்று தான் பக்கி லீக்ஸ் படிக்கிறேன். padu kalaaippu. will read other posts. how did I miss ur blog? continue ur gud work. I wanted to write abt him. you did well.
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி