ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday 10 February 2014

சாம் மார்த்தாண்டன் பதில்கள் - கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!!!


வாசகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. ஏன் சாண்வெஜ் வரவில்லை ஏன் அது வரவில்லை இது வரவில்லை என்று  அடிக்கடி ட்விட்டரில் போன் செய்கிறார்கள். அதனால் இடைவிடாத வாசகர் கடிதம் எழுதும் பணி இருப்பினும் என் எழுத்தை மூச்சாக சுவாசிக்கும் வாசகர்களுடன் பேச சிறிது நேரம் ஒதுக்கலாம்  என்று நினைத்திருக்கின்றேன். அதற்காக சாம் மார்த்தாண்டன் பதில்கள் என்னும் புதிய பகுதியை ஆரம்பித்து வாராவாரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு என்னிடத்தில் எதேனும் கேட்கவேண்டும் என்றால் கேளுங்கள் அதற்காக நான் கேட்பது போல் த்தா..ங்கொம்மா என்று கேட்டுவிடாதீர்கள்.. டீசண்டான கேள்விகளுக்கு சாம் மார்த்தாண்டன் பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை mydearmarthaandan@rediffmail.com முக்கோ இல்லை கமெண்டிலோ தெரிவிக்கவும்.

நாக்கை புடிங்கிக் கொள்வது போல் சிறந்த கேள்வி கேட்பவருக்கு என்னுடைய வாசகர் கடிதங்கள் அடங்கிய ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.  மேலும் உங்கள் செலவிலேயே எனக்கும் சேர்த்து டீ நகர் சலீம் பாய் கையேந்தி பவனில் ஒரு ட்ரீட்டும் கொடுக்கப்படும்.


EVER EVERS

சாம்  மார்த்தாண்டன்

கப்புக்காத்து /30- கூரை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

மயிலாப்பூருக்கும் மந்தவெளிக்கும் இடைப்பட்ட இடத்தில் பணக்காரர்கள் மட்டுமே போக முழுத்தகுதியும் பெற்ற இடத்தில் இருக்கிறது அந்த பப்ளிக் டாய்லெட்.

டாய்லெட் என்று சொன்னால் அவர்கள் மனது காயப்படும் என்பதால் செமி இண்டிபெண்டண்ட் கக்கூஸ் அது. செக்யூரிட்டி, லிஃப்ட் கண்கானிப்பு கேமராக்கள், காற்று வருவதற்கு சுற்றிலும் ஓட்டைகள் என்று சகல வசதிகளும் இருக்கின்றது. அங்கே கக்கா போகும் பிள்ளைகள் அத்தனை பேரும் தண்ணி வரவில்லை என்றால் கூட வெளியே சொல்லாமல் “ஷிட்” என்று சொல்லிவிட்டு பேப்பரில் துடைத்துப் போட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.


மாதம் மெயிண்டனன்ஸ் மட்டும் எப்படியும் 50 ரூபாய் நிச்சயம் இருக்கும். உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டால் எதிர் கக்கூசில் தண்ணி வராமல் “தண்ணி தண்ணி “ என்று கதறினால் கூட கதவை வெடுக்கென்று சாத்திவிட்டு கேனில் தண்ணி போடும் அண்ணனுக்கு போன் செய்வார்கள். நாற்றத்தில் மயக்கமானவனை தண்ணி போடும் அண்ணன் வந்து தூக்கும் போது தண்ணிக்கு போன் செய்ததே நாந்தான் என்று பெருமையாக பீத்திக் கொள்வார்கள்.


அப்படிப்பட்ட இடத்தில் தான் அந்த பெண்மணியை சந்தித்தேன். அவருக்கு அறுபது வயது ஆக இன்னும் 1,95,210 நாட்கள் தேவையாக இருக்கின்றது. தனியாய் இருக்கிறார். அவர் எப்போதும் போகும் கக்கூஸ் உள்பக்கம் படி இருப்பது போன்ற டூயூ ப்ளக்ஸ் கக்கூஸ். ஒரு 5000 ஸ்கொயர்பீட்டாவது இருக்கும்.  ஒரு வெஸ்டர்ன் சிஸ்டம் ஒரு இண்டியன் சிஸ்டம், ஒரு பண்டில் டிஸ்சு பேப்பர் என்று அசத்தலாய் இருக்கின்றது. உள்ளேயே ஓவன், ப்ரட் டோஸ்டர், ஏசி, டபுள் டோர் ஃப்ரிட்ஜ் என்று ஒரு ஹைடெக் கக்கூஸுக்கு தேவையான அனைத்தையும் அங்கே காண முடிந்தது.

அப்படிப்பட்ட கக்கூசையும் அந்த முதிய பெண்மணியையும் என் ஊர்காரர்கள் பார்த்து இருந்தால் ”கட்டையில போற வயசில த்தா… கிழவி எப்புடி அனுபவிக்குது பாரு.. “ என்று சர்வ நிச்சயமாக சொல்லியிருப்பார்கள்.


இந்து பத்திரிக்கையை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கிழித்து யூஸ் செய்வதால் சரோஜா தேவி அவர் நாக்கில் அராபியில் பூந்து விளையாட கட்டளை இட்டுவிட்டார் போல. பின்னி பெடலெடுக்கின்றார். ஆனால் கடைசியில் போகும் போது தான் தெரிந்தது அவர் பேசியது அராபி இல்லையாம். ஆங்கிலமாம்.

 நான்கு பிள்ளைகள் ஆனாலும் அனாதையாக இந்த டூப்ளக்ஸ் கக்கூசில்  அவர் இருக்கின்றார் என்ற தகவல்  என்னை வியப்பில் ஆழ்த்தியது... அவர் பேச பிரியபடுகின்றார் என்பது என்னிடம்  பேசிய சில வினாடிகளில் என்னால் உணர முடிந்தது...


என்னிடம் பெண்கள் அதிகம்  பேசிக்கொண்டு இருக்க பிரியப்படுவார்கள்... காரணம் நான் பேசும்போது அடிக்கடி “த்தா” “ங்கொம்மா” என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவது அவர்கட்கு மிகவும் பிடிக்கும். மேலும் என்னுடைய கர்லிங் ஹேர்ஸ்டைல் பொதுவாகவே ஆண்டிகளுக்கு மிகவும் விருப்பம்.   மேலும் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு எதுவும் தெரியாது.

 முக்கியமாக அவர் தனிமை அவரை  நிறைய பேச வைக்க துடித்தது... அது கண்களில் தெரிந்தது... வெளியில் வேலை எதுவும் இல்லாததால் கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்து ஆண்டியை கரெக்ட் செய்து லஞ்ச்சை ஆண்டி வீட்டிலேயே முடித்து விட முடிவு செய்தேன்.

 எவரிடமாவது கொட்டி விட கிடைத்த சந்தர்ப்பமாய் அந்த பெண்மனி என்னிடத்தில் கொட்டத் துவங்கினார். பிறகென்ன நடுமண்டையில் கொட்டியதால் மண்டையில் கொய்யாப்பழம் வைத்ததைப் போல வீங்கி விட்டது.


வலியைப் பொறுத்துக் கொண்டு நல விசாரிப்புகளை துவங்க அவர் குஜாலானார்

தென் மாவட்டத்து பக்கம் சொந்த ஊர்.... வயசுக்கு வரும் முன்னே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க....14 வயசுல வயசுக்கு வந்தேன் 23வயசுக்குள்ள பத்துக்குழந்தை... என்று சொன்னதும் எனக்கு கடுப்பு தலைக்கேறியது.. த்தா… உனக்கு மட்டும் வயசுக்கு வர்றதுக்கு முன்னாலயே கல்யாணமா… எனக்கெல்லாம் வயசுக்கு வந்து 30 வருஷம் கழிச்சி தான் கல்யாணம் பண்ணி வச்சாய்ங்க” என்று மனதிற்குள்ளேயே என் பாதரை திட்டிக் கொண்டேன்.   

எங்க வீட்டுக்காரர் தங்கம்... என்னை கையில வச்சி ஏந்திக்குவார்.... கல்யாணத்துக்கு பிறகும் படிக்க சொன்னார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்” என்றவுடன் டக்கென்று “ஏன் படிச்சிருக்க வேண்டியது தானே?” என்று கேட்டேன் அதற்கு அந்த ஆண்டி ” டேய் மெண்டல் நான் தான் கல்யாணத்துக்கு முன்னாலயே படிக்கலையே.. கல்யாணம் பண்ணப்புறம் எந்த ஸ்கூல்லடா சேத்துக்குவாய்ங்க… “ என்று அன்போடு பதிலளித்தார்.

”வீட்டுக்காரருக்கு மத்திய அரசு உத்தியோகம்...  காசை எப்படி செலவழிக்கலாம்ன்னு தெரியாத அளவுக்கு  பணம்...”  என்றார். ”என்னது காசை எப்படி செலவழிக்கலாம்னு தெரியலையா.. த்தா.. டெய்லி ரெண்டு பிட்டு சிடி கடையில காசு குடுத்து வாங்குனா காசு தானா செலவழிஞ்சிட்டு போகுது” என்றேன் . கையில் வைத்திருந்த சப்பாத்தி கட்டையால் ஏற்கனவே வீங்கிப்போயிருக்கும் என் நடுமண்டையில் நறுக்கென்று ஒண்று வைத்தார்… நான் காமெடிக்காக சொன்னேன் என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்தேன்.

அவரு ஆராயச்சியாளர்  நிறைய படிச்சிக்கிட்டே இருப்பாரு.. ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட்டுல வேலை... சென்னையிலதான் வேலை இருந்தாலும் இந்தியா முழுக்க சுத்துவார் என்றார்.  அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இடையிடையே நானும் பேச வேண்டும் என்பதற்காக “உங்க ஹஸ்பண்ட் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்டுல தான் வேலை பாத்தாரா ஆண்டி.. நான் கூட பன்னெண்டாவதுல ஆர்க்கியாலஜி குரூப் தான் எடுத்து படிச்சேன்.. “ என்றவுடன் அசிங்கமாக தெருநாயைப் பார்ப்பது போல கேவலமாக என்னை ஒரு பார்வை பார்த்தார்.  

 டெல்லிக்கு மாத்தலாகி  போனோம்   ஆத்துக்காரருக்கு பெரிய பொசிஷன். 15வது மாடில வேலை..  தனி வீடு தனி காரு தனி கக்கூஸ்னு டெல்லி வாழ்க்கை நல்லாவே போச்சு....  
நிறைய  பொஸ்தகம் எழுதி இருக்கார்....பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து நீங்க எழுதிய புத்தம் எல்லாம் இந்தியாவோட சொத்துன்னு சொல்லி கை குலுக்கி வாழ்த்தும் போது... ரொம்ப பெருமையா இருக்கும்... ” என்றவுடன் நானும் காலரை நிமித்திக் கொண்டு ”நான் கூட நிறைய பொஸ்தகம் எழுதிருக்கிறேன்” என்றேன். அவர்கள் ஆர்வமாக என்ன புஸ்தகம் ? என்றார். லைட்டாக தலையை சாய்த்து ஒரு பக்கம் கண்ணடித்து “இஸ்ஸ்க்… அந்த புத்தகம் தான் அனைத்து பஸ் ஸாண்டு கடையிலயும் கிடைக்கும்… ஜெட்லி கதைகள்னு கேளுங்க” என்றேன். அவர் முகம் ரத்த சிவப்பாக மாற, மறுபடி மண்டையை பிளக்கப் போகிறார் என்று இரண்டு கையாலும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். ஆனால் இந்த முறை தலையை குறிவைக்காமல் என் மூக்கில் சப்பாத்திக்கட்டை பாய்ந்து குபுக்கென்று ரத்தம் பீறிட்டு அடித்தது.


எனக்கு எங்க வீட்டுக்காரர் பென்ஷன் மட்டுமே 35 ஆயிரம் ரூபாய் மாசம் வருது.. என்று அவர் பேச்சைத் தொடர “ஆண்டி ரொம்ப பசிக்குது சாப்டுகிட்டே பேசுவோமே… என்ன லஞ்ச் இன்னிக்கு நம்மாத்துல” என்றேன். வேகமாக உள்ளே போனவர் அலுமினிய குண்டான் ஒன்றில் எதையோ எடுத்து என் முன்னர் டொங் என வைத்தார். உள்ளே பார்த்தால் குண்டான் நிறைய பழைய சோறு. ”த்தா.. கஷ்டப்பட்டு கதை கேட்டது பழையது தானா” என்று கடுப்பாகிவிட்டேன். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொண்டால் இதுவும் போய் விடுமே என்று ருசித்து சாப்பிடுவது போல் குண்டானை மல்லாத்தினேன்.

ரொம்ப நன்றி உங்க கிட்ட பேசினதுல.. என் வீட்டுல இருந்த பாரமே இறங்கிருச்சி. ஒரு வாரமா அந்த பழியத யார்ட்ட கொட்டுறதுன்னு தவிச்சிகிட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க… ரொம்ப சந்தோஷம் என்றார்.  அப்படியே ஒரு ஃபில்டர் காப்பி கிடைக்குமா என்று கேட்டேன். வாசலில் இருக்கும் செருப்பை அவர் ஓரக்கண்ணால் பார்க்க நான் உசாராகிக் கொண்டு விடை பெற்றேன்.

செருப்பு போடும் போது அங்குள்ள சவுண்டு சிஸ்டத்தில் “ ஏ நாயே நாயே… நீ எந்த ஊரு நாயே.. தெரு முனையில் இருக்கும் பேயே..” என்ற பாடல் துல்லியமாகக் கேட்க அந்த ஆண்டி இந்த பாடலை வேண்டுமென்றே எனக்காக தேடிப்பிடித்து போட்டிருக்கிறார் என்பதை தெரிந்தும் தெரியாதது போல்


பிரியங்காவுடன்,

ஜெட்லி


நனைப்பது அல்ல நீ!!

துவைத்து காயப்போடுவதே நீ!!!




comments


//அப்படிப்பட்ட கக்கூசையும் அந்த முதிய பெண்மணியையும் என் ஊர்காரர்கள் பார்த்து இருந்தால் ”கட்டையில போற வயசில த்தா… கிழவி எப்புடி அனுபவிக்குது பாரு.. “ என்று சர்வ நிச்சயமாக சொல்லியிருப்பார்கள்.//

மிகவும் அருமையான வரிகள்.. எங்கள் ஊரில் கூட இப்படி மிகவும் டீசண்டாகத் தான் பேசுவோம். ரொம்ப நாளுக்கு பிறகு இது போன்ற டீசண்டான வார்த்தைகளை கேட்கிறேன்


It’s a beautiful awesome wonderful article.

Someone please explain what he has written… I don’t know tamil

Regards,
Somu

 I dont have words to express this... 

த்தா.. செமயா இருக்கு


மிகவும் நெகிழ வைத்த பதிவு..  இருங்க படிச்சிட்டு வர்றேன்.


Hard to digest..  I ate one unlimited meals with two tantoori chicken.


உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

மேலும் விபரங்களுக்கு பூஜ்ஜியத்தை அமுக்கவும்


Jetli,

Inspiring act. You are service minded. That palayasoru eating was mind  blowing