ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Wednesday, 6 August 2014

ஜிகிர்தண்டா- A review by யாரு நிவேதிதா!!!

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தாகமாக இருந்ததால் படக்கென்று குடித்துவிட்டென். இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. வாலிப வயதில் சகிலா படங்களுக்கு சென்றது. அதன் பிறகு அவ்வளவாக செல்வதில்லை.  எழுத நேரம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்  எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட பகுதி தவிற வெள்ளையாக இருந்த அனைத்து இடத்திலும் எழுதி வைத்து விட்டேன். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மண்டையில் நருக்கென்று கொட்டி விட்டு பேப்பரை வாங்கிச் சென்று விட்டார். தமிள் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும். எழுத்துக்கூட்டி படிக்க கொஞ்சம் நேரம் ஆகுமல்லவா?  ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்குள் முடித்து விடுவேன். ஏனென்றால்   ஆங்கிலக் கட்டுரைகளில் படத்தை மட்டும் பார்த்து விட்டு ஸ்கிப் செய்துவிடுவேன்

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அங்கயவது எதாவது வேலை இருக்குமா என பார்ப்பதற்காகவே செல்கிறேன், அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி ஒருசில வார்த்தைகள்.  அந்தப் படம் பற்றி விரிவாக இன்னுமொரு ஆங்கிலப் பத்திரிக்கை கையில் கிடைக்கும் போது  மேற்கூறியது போல் எழுத இருக்கிறேன்.  என்ன விஷயம் என்றால், www.nandhimazhai.com இணைய இதழில் ஆகஸ்ட் 15 முதல் கேள்வி பதில் பகுதி தொடங்க உள்ளது.  வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் அளிக்கிறேன். த்தா, ங்கொம்மா என்று ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: q2yaaru@nndhimazhai.com


மற்றபடி ஜிகிர்தண்டா தமிழில் நான் பார்த்த மிகச் சிறந்த  இரண்டு படங்களில் மூன்றாவதாக வருகிறது.  முதல் ஆரண்ய காண்டம், இரண்டவது கோஹினூர் காண்டம்.  ஆனால் ஆரண்ய காண்டம் என்னைப்போன்ற மங்கினிகளுக்கான படமாக ஆகி விட்டது.  மக்கள் ரசிக்கவில்லை.  ஜிகிர்தண்டா  எல்லோரையும் வசீகரித்து விட்டது.  சினிமா பற்றிய என் கட்டுரைகள் ஒன்றை கூட படித்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால் தான் அவரால் இப்படிப்பட்ட சினிமா எடுக்க முடிந்திருக்கிறது.  ஜென் நவீனத்துவ சினிமா என்றால் இதுதான்.  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.  விரிவாக தினகரன்  பேப்பர் வந்ததும் அதில் எழுதுவேன்.  நண்பர்கள் தவற விடாமல் இந்தப் படத்தைப் பார்த்து விடும் படி  சிபாரிசு செய்கிறேன்.  நாயகன் வந்த போது மணி ரத்னம் ஒரு மகத்தான இயக்குனராக இந்திய அளவில்  தெரிய வந்தார்.  அதற்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்டாக கார்த்திக் சுப்புராஜ் தான் என்று மேஜர் சுந்தர்ராஜன்  சொன்னார்.  படம் பார்த்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் மேஜர் சுந்தர்ராஜனும் நானும் ஒரே செட்டு.

கேள்விகளை அனுப்புங்கள்.  கேள்வி பதில் தொடரின் தலைப்பு: அடி உதை கம்பம்.  முதல் கேள்வியே  அதகளமாக இருக்கிறது.  நந்திமழையில் விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் நாக்கை பிடிங்கிக் கொள்ளும் படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நம்ப முடியவில்லை.   மற்றவை நந்திமழையில்..Comments are closed
Working time 9am - 7pm
Sunday holiday

8 comments:

பயமோகன் said...

அன்பின் யா
பந்து தரிசனத்தின் ஆதார சுருதி நிலையே வெற்றிடங்களில் தன் உள்ளார்ந்த தத்துவ தரிசனங்களை கொட்டித்தீர்ப்பதல்ல. தாங்கள் தங்கள் அயலாரின் அயல் தேச பாஷையின் சஞ்சிகையில் செய்ததைப் போல அல்லாமல் பந்து ஞான மரபின் புனித ஆக்கங்களின் மகத்தான படைப்பின் மீதே படியெடுக்கும் நகலாய் மேலெழுத வேண்டும். இப்படி மேலெழுதுதலை தொடர்ந்து தசாப்தங்களுக்குச் செய்து வரும்போது தங்களின் ஆண்ம சுத்தி நிலை மேலெழும்.

ramesh said...

completely hilarious...hehehehh :) :) sema super ya...

Anonymous said...

அட்டகாசம் சாம். கலக்குங்க.

ராஜ் said...

நல்ல ஸ்பூப்.. :)

Arul Vino said...

Super funny review mass

Anonymous said...

//பந்து தரிசனத்தின் ஆதார சுருதி நிலையே///

ஹாஹா,.... செம்ம!!!

யாருநிவேதாவை இப்படி கலாஅச்சுபிட்டீங்கலே

யமுனா said...

யோவ்... :-)))

ராஜேஷ் said...

யாருப்பா பயமோகன்?சாருவின் அல்லக்கையே வெளியே வா!இல்ல வேப்பெல அடிக்கட்டுமா?

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி