ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday 21 May 2012

கஹானி-2012/ உலக சினிமா/ இந்தியா/ தமிழ்நாடு/கடலூர்/ பின் கோடு 607001

 கஹானி... இந்த படத்தை பற்றி எல்லாரும் விமர்சனம் செய்து விட முடியாது. இந்த படத்தை புரிந்து கொள்ளவதற்கும், விமர்சிப்பதற்கும் என்னை போல் சிலருக்குதான் திறமை உள்ளது பலபேர் கேட்டுக் கொண்டதால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எழுதுகிறேன். என்னது கஹானி படத்தை இப்போதான் பார்த்தீர்களா என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது? என்ன செய்வது இடையிரா எழுத்து பணியால் நேரமே இல்லை. ஷாருக்கான் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் , பக்கத்துக்கு வீட்டு LKG பையனுக்கு ஹோம்ஒர்க் , போன்ற கடமைகள் என் கற்பனையை கட்டி போட்டு விட்டன.

கஹானி படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் அந்த படத்தின் போஸ்டர் என்னை ஒன்னும் ஈர்க்கவில்லை. படம் வெளியான நாள் முதல் ஒரே போஸ்டரை ஒட்டி இருந்தார்கள். இருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் sujoy ghosh, நான் குறும்படம் எடுத்த பொது இயக்குனர் மணிரத்னம் சிபாரிசுடன் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த பையன். இருந்தாலும் நான் அப்போது இருந்த ஆக்சன் மூட் காரணமாக அந்த பையனை நிராகரித்து விட்டேன். அதனாலேயே அவன் இன்று பாலிவுட் படம் எடுக்க முடிந்தது. (என்னிடம் பணியாற்றி இருந்தால் ஹாலிவுட் படம் கூட எடுத்திருக்கலாம்).

படம் வெளியானவுடன் sujoy ghosh என்னிடம் வந்து நீங்கள் படம் பார்த்து விமர்சனம் எழுதினால் தான் அது தரமாக இருக்கும். மற்ற மீடியா விமர்சனங்களை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தார். சரி கழுதைய... ஒரு விமர்சனம் எழுதி தொலைவோம் என்று முடிவு செய்தேன்.

அதுமட்டும் இல்லாமல் படத்தில் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. அவன் இவன் படத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் ஆடியதற்கே கஷ்டபட்டார் என்ற போது , கஹானி படத்தில் வித்யா பாலன் படம் முழுக்க பெண்ணாக நடித்திருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. சான்சே இல்லை. வித்யா பாலன் அசத்தியிருக்கிறார்.அவ்வை ஷண்முகி படத்தில், ஷன்முகியாக நடித்தவரை விட இவர் சிறப்பாக ஜொலிக்கவில்லை என்றாலும் வித்யா பாலனுக்கு இது ஒரு நல்ல முயற்சி.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் ஒன்லைன் :

கஹானி ஒரு முழு நீள ஹிந்தி படம்.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் கதை என்ன??


கல்கத்தா ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்தில் காணமல் போன கணவரை தேடி வருகிறார் vidhya bhagci (வித்யா பாலன்). அது என்ன பேரு வித்யா பஜ்ஜி?? மிளகாய் பஜ்ஜி , அப்பள பஜ்ஜி என்று? இப்படி எல்லாமா பெயர் வைப்பார்கள்? பஜ்ஜி என்றவுடன் நினைவுக்கு வருகிறது , நான் தினமும் ஆபிசில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு ஆயா பஜ்ஜி சுட்டு விப்பார்கள். ஒரு நாள் பஜ்ஜி வாங்க சென்றேன் , காசு கொண்டு செல்ல மறந்துவிட்டேன். கடைசியில் ஆயா காலை பிடித்து , கையை பிடித்து கெஞ்சியும் பார்த்தேன்.. பாட்டி மசியவில்லை... கிழவி அசந்த நேரம் பார்த்து ஒரு பஜ்ஜியை லபக் என்று கவ்விக்கொண்டு ஓடினேன்.. உடனே பாட்டி, பஜ்ஜி சுடும் எண்ணையில் ஒரு கரண்டியை மோண்டு மொகரையில் ஊற்றிவிட்டார்..அன்றைக்கு பஜ்ஜி திண்ணும் பழக்கத்தை விட்டவன் இன்றும் தொடர்கிறேன்.

எங்கேயோ போய்டேன் பாருங்க. எங்க விட்டேன் ? ஆங்..

கணவனை தேடி வரும் வித்யா பாலன் அப்படியே பெண் வேடத்தில் அசத்தியிருக்கிறார். கணவன் தங்கியிருந்த இடம், சாப்பிட்ட உணவங்கம் போன்ற இடங்களில் தேடுகிறார். இந்த இடங்களில் அவர் தேடியதற்கு பதில் அவர் தொலைந்த இடத்தில் தேடி இருந்தால் படம் முடிந்திருக்கும். படத்தை இழுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்திருக்கிறார் அனுபவம் இல்லாத இயக்குனர்.

படத்தின் சுவாரசியங்களில் சில:



வித்யா பாலன் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார்.. ஒரு சில இடங்களில் ஓரிரு தமிழ் வார்த்தைகளை பேசி டச் செய்கிறார். எனக்கு புரிந்த அந்த ஓரிரு வார்த்தைகளை வைத்தே குத்துமதிப்பாக கதை இதுவாகத்தான் இருக்கும் என கணித்துவிட்டு விமர்சனமும் எழுதிவிட்டேன்.

லண்டனில் இருந்து தொலைபேசியில் கணவனிடம் பேசிய வித்யா , தங்கியிருந்த இடம் , பொம்மை போன்றவற்றை பற்றி பேசியிருக்கிறார். அனால் முக்கியமான விஷயமான அவர் தொலைந்த இடத்தை கேட்கவில்லை , கேட்டிருந்தால் தேடல் சுலபமாக முடிந்திருக்கும்.

அதே போல் படத்தில் ஆங்காங்கே சிறு நெருடல்கள் உள்ளன. வித்யா பாலனுக்கு உதவும் போலிஸ் அதிகாரி வெள்ளை நிறத்தில் யுனிபார்ம் அணிந்திருக்கிறார். அவர் மட்டும் அல்ல ஒட்டுமொத்த காவல்துறையே அப்படிதான் யுனிபார்ம் அணிந்திருகிரார்கள். இது காவல் துறைக்கே ஏற்பட்ட கலங்கம்.

மேலும் வித்யா தங்கி இருக்கும் விடுதியில் ஹீட்டர் வேலை செய்யவில்லை , கேப் வசதி , இண்டர்காம் வசதி இல்லை. இது போன்ற ஒரு விடுதியில் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் நடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களை கூட அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக க்ளைமாக்ஸில் திருவிழா கூட்டத்தில் மூணாவது வரிசையில் நாலாவதாக நின்றிருந்த பெண்மணியின் அசத்தலான நடிப்பு... வரே வா




பேக்கு போல கொலைசெய்ய வரும் கொலைக்காரனை பார்க்கும் போது செம காமெடியாக இருந்தது... ஒரு நிமிடம் என்னை நானே திரையில் பார்ப்பது போன்ற உணர்வு. அருமையான செலெக்ஷன்.
                                                                                                                                                                 
கிளைமாக்ஸீல் கற்பிணி வித்யாபாலன் வில்லனை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது  அவசரமாக ஒண்ணுக்கு முட்டியாதால் பாத்ரூமுக்கு சென்று விட்டேன்..  திரும்பி வரும்போது வித்யாபாலன் flat ஆன வயிறுடன் இருந்தார்.. வேகமாக ஓடியதால் வழியிலேயே ப்ரசவம் ஆகியிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.. பிரசவம் ஆன கையோடு வித்யாபாலன் மறுபடியும் எழுந்து ஓடினார். பிரசவமான பெண்ணால் எப்படி உடனே ஓட முடியும்இவ்வளவு அருமையான படம் எடுத்த டைரக்டர் இவ்வளவு பெரிய  லாஜிக் மிஸ்டேக்கை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.  கடைசிவரை குழந்தையை காட்டுவார்கள் என்று காத்திருந்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.


படக்குழுவினர் விபரம்.

Music by : Music director
Produced by : Producer
Directed by  : Director
Edited by  : Editor
Written by : Writer
Acted by  : Actors 
             &
Distributed by : Distributors


படத்தை திருட்டு டிவிடி யில் பார்த்தவர்கள்   : ஜெட்லி சேகர் & கோ
திருட்டு விசிடியை வாடகைக்கு ஓசியில் தந்தவர்  :  பஜன்லால் சேட், பர்மா பஜார்
சவுண்ட் எபெக்ட் : கலைஞர் அரசின்     வண்ண  தொலைக்காட்சி



பைனல் கிக் :


எப்பாடு பட்டாவது படத்தை பார்த்து விட வேண்டும் என்ற காரணத்தால் நிறைய வாசகர் கடிதம் எழுதி அதில் வந்த வருமானத்தின் மூலம் சென்னை மூலக்கடை பஜன்லால் சேட் வைத்திருக்கும் பஹுத் குஷி திருட்டு சிடி கடையில் வாங்கி குடும்பத்தோடு பார்த்தோம். நீங்களும் வாங்கி பாருங்கள்.படம் பார்த்து நான் பஜன்லால் இடம் சென்று சிடியை தூக்கி எரிந்து, "என்னையா படம் முழுக்க ஹிந்தியில் பேசுகிறார்கள்" என்று கேட்டேன் அதற்க்கு பஜன்லால் சேட் வாயிலிருந்த பீடாவோடு என் மூஞ்சியில் புளிச்சென துப்பினார். அதுவே பினால் கிக்காக அமைந்தது.

படம் எவ்வளவு தான் நன்றாக இருந்தாலும் படத்தில் எதிர்பார்த்த அளவு பிட்டுகள் இல்லாததால் படத்தை பார்க்கக் கூடாத படங்களின் வரிசையில் சேர்க்கிறேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  



பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS









16 comments:

Anonymous said...

super...

Unknown said...

ஆண்புள்ள் ஆயா,

ஆஸ் ஆய்யாம் சர்பிங் பிரம் பீவர் அய் னீட் டூ வாசாகார் காடிதம்ஸ். பிலீஸ் டு நீட்புல். கால் இன் டுவிட்டர்.

Anonymous said...

டியர் சாம் ,
இப்ப தான் முதல் முறையா ஒரு ஹிந்தி படத்தோட விமர்சனத்தை உங்க தளத்துல படிக்கிறேன்.
நீங்க ஏன் மலையாள படங்களை பத்தி எழுதக்கூடாது ?. மலையாளிகளோடு நமக்கு எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நிறைய நல்ல எதார்த்தமான பழைய மலையாள பிட் படங்கள் இருக்கின்றன.
Please try them.

Anonymous said...

நாளை மறுநாள் தான் ஒபாமா டுவிட்டர்ல் கஹானி படத்தின் விமர்ச்சனத்தை எழுதும்படி உங்களிடம் கேட்டார். அதற்குள் எழுதிவிட்டீர்களே!!
இதற்காக மன்மோகன் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது தந்தால் தயவு செய்து ஏற்றுகொள்ளுங்கள், சாம்.

// இடையிராஎழுத்து பணியால் நேரமே இல்லை.//

அவ்ளோ வாசகர் கடிதமா எழுதுறீங்க ???

// பக்கத்துக்கு வீட்டு LKG பையனுக்கு ஹோம்ஒர்க் ,போன்ற கடமைகள்//

LKG கோம் வொர்க் அவ்ளோ ஈசியா சாம் ?

//கஹானி ஒரு முழு நீள ஹிந்தி படம்.//

என்னது அது ஒரு நீள படமா? உண்மையை சொல்லுங்கள் சாம், அது ஒரு நீல படம் என்று நினைத்து தானே நீங்கள் பார்த்தீர்கள்/

//எங்க விட்டேன் ?//

பாட்டி பஜ்ஜி சுடும் போது ...

//வித்யா பாலனுக்கு உதவும் போலிஸ் அதிகாரி வெள்ளை நிறத்தில் யுனிபார்ம் அணிந்திருக்கிறார்.//

என்ன சாம்.... வித்யா என்ன நிற உள்ளாடை அணிந்திருப்பார் என்று வர்ணனை செய்வீர்கள் என்று ஆவலாக படித்தால் .....வழக்கமான காம நெடியே இல்லாமல் ஒரு விமர்ச்சனம் ...

Anonymous said...

சூப்பர் அப்பு...

திமுகவிடம் வாங்கிய காசுக்கு அவர் கூவறது பற்றி எழுதுங்க...

Anonymous said...

திமுக காசு கொடுக்கற அளவுக்கு அது ஒர்த் இல்லைன்ங்கன்னா. காசு கொடுக்க மாட்டாங்களான்னு இது ஓவரா கூவி பாக்குது.

Anonymous said...

தலை
ஓடுற பஸ்ஸில் சிறுநீர் கழித்ததை கலாய்ச்சு ஆப்பு அடிங்க

Anonymous said...

பரவாயில்லை.....உங்க ஸ்டையில் நக்கல் கம்மி..

முட்டாள் பையன் said...

பரவாயில்லை.....உங்க ஸ்டையில் நக்கல் கம்மி.

உண்மைத்தமிழன் said...

அடப்பாவிகளா..!

திருட்டுப் பயலுக லிஸ்ட்டுல என் பேரை ஏண்டா சேர்த்து வைச்சிருக்கீங்க..! மொதல்ல என் பேரை லிஸ்ட்ல இருந்து தூக்குங்கடா..! நானெல்லாம் எதா இருந்தாலும் முகத்துக்கு நேராதான் பேசுவேனாக்கும்..! இடியட்ஸ்.. பூல்ஸ்.. பக்கோடாஸ்..!

Unknown said...

அடப்பாவிகளா..!

திருட்டுப் பயலுக லிஸ்ட்டுல என் பேரை ஏண்டா சேர்த்து வைச்சிருக்கீங்க..! மொதல்ல என் பேரை லிஸ்ட்ல இருந்து தூக்குங்கடா..! நானெல்லாம் எதா இருந்தாலும் முகத்துக்கு நேராதான் பேசுவேனாக்கும்..! இடியட்ஸ்.. பூல்ஸ்.. பக்கோடாஸ்..!

Unknown said...

உண்மைத்தமிழன். இன்னொரு இடத்திலையும் உம்ம பேரு ஆப்டுகிச்சு :-) .. இங்க பாருங்க - http://padhivar.blogspot.com/

Anonymous said...

ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்...
அவர் சொல்லுவாரே “பொது கழிப்பிடத்தில் ஆய் போய்விட்டு கழுவுவது எப்படி?” அப்படிங்கிற பதிவு. அப்பறம், காலம் ஒட்டத்தில் காணாமல் போனதுன்னு ‘வழுக்கை விழுதல்” அப்படிங்கிறது எல்லாம் எழுதுங்கண்ணா...

nirvana said...

Super , pls continue up with the Good work . You should continue your good work untill that nai sekar stops. Manasula avanuku periya MGR nu nenaipu.

"ராஜா" said...

இவர்களில் சாம் மார்த்தாண்டன் யார்? இந்த லிஸ்டி ரஜினி கமல் கருணாநிதி ஜெயலலிதா இவர்களின் பெயரை சேர்க்காமல் அண்ணனை அவமானபடுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்...

அண்ணன் ரேஞ்சிக்கு இன்னைக்கு அவருக்கு போட்டி இந்த நாலு பேரு மட்டும்தான்...

காப்பிகாரன் said...

wowwwwww super

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி