ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 19 May 2012

மப்புக்காத்து-13

நாகரிகமுள்ள மனிதர்களோடு தான் இந்த பூமியில் வாழ வேண்டி இருக்கிறது. அவர்களை புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் திறமை அடங்கி இருக்கிறது. என் அம்மா என் வார்த்தை ஜாலத்தை கண்டு அடிக்கடி என்னிடம்  , தெருவில் ஓடுற சாக்கடையை  விட உன் வாய்ல தான்டா அதிகமா ஓடுதுன்னு சொல்லுவாங்க...முன்பு போல வார்த்தை  அள்ளி தெளிக்க முடியவில்லை, வயதானதால் வந்த பக்குவம் போல... த்தா....  வாய்ல முன்னாடி மாதிரி வரமாடேங்குது.. எந்த ..ம்மா சாபம் விட்டானோ..சரி அத விடுங்க...

நாங்கள் வசித்தது குப்பம் என்பதால் யாருக்கும் பட்டா கிடையாது... அதிகமான குடிசைகள் என்பதால் கதவுகள் இருக்காது. அதனால் யார் வேண்டுமானாலும் எந்த  வீட்டுக்குள்ளும் போய் சோற்றை திருடி திங்கலாம்... அதனால் சண்டைகள் அதிகமாக  நடக்கும். அப்போது கெட்டவார்த்தைகள் சரளமாக தெறிக்கும்... அதுவும் நான் இருக்கும் ஏரியா என்பதால் சற்று அதிகமாகவே தெறிக்கும். காலையில் நம்ம சோத்த திருடி தின்னுட்டு இப்ப நம்மளையே என்ன பேச்சு பேசுது பாருன்னு என்னை நிறைய பேர் வியப்போடு பார்பார்கள்.

அம்மா அடிக்கடி எனக்கு திருஷ்டி சுற்றி போட்ட காலமும் உண்டு. இனிமேல் இந்த ஏரியாவில் இருந்தால் ஏரியா கேட்டு போய் விடும் என்ற காரணத்தால் எல்லாரும் சேர்ந்து என்னை ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்து கவுன்சிலரிடம்  முறையிட்டனர். எத்தனை நாள்தான் ஒரே ஏரியாவில் திருடி திண்பது ஒரு சேஞ்சுக்கு  வேற ஏரியா போவோம் என்ற என் அம்மா வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேறு ஏரியா  செல்ல முடிவு செய்தோம். இந்த முடிவால் கவுன்சிலர் குடும்பம் என் அப்பா வார்த்தையிலிருந்து தப்பியது.

ஒரு வழியாக அடுத்த ஏரியாக்கு வந்தோம். பக்கத்துக்கு வீட்டுகாரங்க எங்கள மாதிரி இல்ல. எதோ நல்ல குடும்பம்னு சொல்லிகிட்டாங்க. ஒரு நாள்  காலைல எங்களுக்கும் எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கும் பிரச்சனை. அந்த பிரச்சனைக்கு காரணம் ஒரு கோவணம். எங்கள் வீட்டு கொடியில் காயப்போட்டிருந்த கோவணம் அவர்கள் கோடியில் போய் விழுந்ததுதான் சண்டைக்கான காரணம். போலிஸ் ஸ்டேஷன் வரை சென்று பொய் புகார் கொடுத்தார்கள், அதாவது நாங்கள் தான் அவர்களை விரட்டி அடிக்க அந்த கோவணத்தை அவர்கள் கொடியில் போட்டதாக  புகார் அளித்தார்கள்.

 ராசியான எங்கள் கோவணத்தை அவர்களுக்கு கொடுக்க நாங்க என்ன முட்டா.... யா?? கடைசியில் போலிஸ் எங்களை சமாதானபடுத்தி அனுப்பினார்கள். என் அப்பா மனம் வெறுத்து போனார். எத்தனையோ நாட்கள் அவர்கள் மாடியில் காயப்போட்டிருந்த வடகம் ,வத்தல், மாட்டுக்கு வாய்த்த கஞ்சி போன்றவைகளை திருடி தின்றபோதெல்லாம் பிரச்சனை இல்லை.அனால் இன்று ஒரு சின்ன கோவணதிர்காக இவ்ளோ பெரிய பிரச்சனையா என்று வருத்தப்பட்டார்.  

பிரச்சனையான நாள் முதல் அவர்கள் வடகம், வத்தல் ஏன் மாட்டுக்கு கஞ்சி ஊற்றுவதை கூட நிறுத்திவிட்டார்கள். இந்த சம்பவம் எங்களை பெரிதும் பாதித்தது.வெறுப்பில் இருந்த என் அப்பா ... த்தா.. நானும் எத்தனையோ வீட்ல திருடி தின்னுருப்பேன் அவைங்களும் கண்டுபுடிச்சு நாராசமா திட்டிட்டு அடுத்தநாள் வழக்கம் போல திருடி திங்க ஏதாச்சும் வச்சிருபாங்க. ஆனா இந்த ம்மா.. அவன் புத்திய காட்டிட்டான்  என்று மிகுந்த வருத்ததோடு சொன்னார். ஆனால் அவர்கள் இப்படி செய்திருக்க வேண்டியது இல்லை. அப்பாவை சமாதான படுத்துவதற்காக அம்மா . விடுங்க எல்லாத்தையும் நம்ம பாடிகார்ட் முனிஸ்வரன் இருக்கான்  அவன் பாத்துக்குவான் என்றார். எங்கள் கோவணத்து மேல் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு  என்று தெரியவில்லை.

கோவணம்... ஒரு சின்ன பிளாஷ்பேக்...

நான் என் அம்மா வயிற்றில் இருந்த நேரம் அது.. என்ன அம்மாவும் அப்பாவும் ஊர் சந்தைக்கு சென்றனர்.வழக்கம் போல் கைக்கு அகப்படும் பொருளுடன் வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள்  கண்ணில் முதலில் தென்பட்டது ஒரு துணி கடை. கூட்டம் அலை மோதியது. உள்ளே நுழைய கூட இடம் இல்லை . கடுப்பில் இருந்த என் அப்பா ..த்தா காசு கொடுத்து வாங்குறதுக்கு என்ன அலை அலையிருனானுங்க  பாரு  என்று என் அம்மாவிடம் சொன்னாராம் . அதை அடிக்கடி என் அம்மா என்னிடம் சொல்லி ரசிப்பார்.அடித்து பிடித்து உள்ளே சென்ற என் அப்பா வேட்டி ஒன்றை எடுத்து செல்ல முடிவு செய்தார்.  கடைக்காரன் பிஸியாக  இருந்த நேரம் பார்த்து லபக்கென்று ஒரு வேட்டியை உருவிவிட்டு வெற்றிக்களிப்போடு
 வெளியே சென்றார்.

திடீரென்று ரெண்டு பேர் வந்து என் அப்பாவை உள்ளே இழுத்து சென்றனர். கையிலிருக்கும் வேட்டி  நான் வாங்கியது . திருடியதில்லை என்று எவ்வளவோ போராடினார்.  கடைசியில் தான் தெரிந்தது அவர் உருவியது கடைக்காரன் காட்டிய வேட்டி இல்லை , கட்டியிருந்த வேட்டியை என்று. சூழ்நிலையை  உணர்ந்த என் அப்பா கடைசியில் வேறு வழி இல்லாமல் அந்த கடையில் ஏதாவது வாங்க வேண்டுமே என்று ஒரு துண்டு ஒன்றை வாங்கினார். பிறக்கபோகும் எனக்கு உபயோகப்படட்டும் என்று அதை வைத்திருந்தார்கள்.

நான் பிறந்தபோது துண்டாய்  இருந்தது நான் வளர்ந்த பின் கோவணமாக மாறியது. ஆதலால் என்னுடனே சேர்ந்து வளர்த்தது அந்த துண்டு. நாளடைவில் எங்கள் குடும்ப உருபினராகவே மாறியது.எங்கே துவைத்தால் சுருங்கி விடுமோ என்ற ஐயத்தால் இதனை ஆண்டுகளாக பத்திரமாக வெறுமனே காயபோட்டு மாட்டும் எடுப்போம்.அவ்ளோ அக்கறை அதன்  மீது எங்களுக்கு. நீங்கள் யாரும் அதை பார்த்தால் பழைய கோவணம் என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு அருமையாக இருக்கும். சிறு காலம் துவைக்காமல் விட்டதால் கொஞ்சம் வாசம் அடிக்கும். அதுவே பல பேருக்கு பொறமை.

 நாங்கள் பழைய ஏரியாவில் இருந்து இங்கு வந்ததுக்கு அந்த பொறாமையும் ஒரு காரணம்.இப்போ இந்த  பக்கத்துக்கு வீட்டுக்காரனும் அப்படியே அமைந்துவிட்டான். நான் கோவை சென்றவுடன் நானும் என் கோவணமும் பிரிய நேரிட்டது. அந்த துயரம் என்னால் தாங்க முடியவில்லை. தினமும் வீட்டுக்கு போன் செய்து கோவணம்  பற்றி தவறாமல் விசாரிப்பேன்.

எனக்கு ஆபிசில் கிடைத்த போனஸ் பணத்தை வைத்து புதுசாக ரெண்டு கோவணம் வாங்கியது , பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு மேலும் வயித்தெரிச்சலை உண்டாகியது.புயல் தாக்கியபோது துடித்துவிட்டேன். என் கோவணத்திற்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று. நல்ல வேலையாக யாருக்கும் தீங்கு நினைக்காத மனம் உள்ளதால் அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. நீண்ட நாள் பிறகு கோவையில் இருந்து  என் வீட்டுக்கு சென்றேன் எதிர் வீட்டுக்கு புதுசாக ஒரு பாய் ஆளுக வந்திருக்காங்க வந்தேனா பிரியாணி எடுத்து சாப்பிடலாம்னு சொன்னதும் ஆசையோடு சென்றேன்.

போன இடத்தில மாடிக்கு பொய் நம்ம கோவணத்தை பாப்போம் என்று ஆவலாக சென்ற எனக்கு இதயமே வெடித்தது போல் இருந்தது. ஆம்.. என் கோவணம் சுக்குநூறாக கிழிந்து கிடந்தது. அதை உத்து பார்த்து எதோ நாய் கடிச்சி போற்றுக்கும்பா என்று  நம்பகமானவர்கள் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது பக்கத்துக்கு வீட்டுக்காரன்  புதிதாக நாய் வாங்கியிருப்பதாக. எங்களை பழிவாங்க இந்த வழி தான் கிடைத்ததா அவனுக்கு??

ஒரு பாவமும் அறியாத அந்த கோவணம் என்ன தவறு செய்தது?

பாடிகார்ட் முனிஸ்வரன் பார்த்துக்கொண்டே தான் இருக்க போகிறானா??


10 comments:

கோவை நேரம் said...

ஹி ஹி ஹி,,,,

MANO said...

very nice writing.. keep it up

mano

Anonymous said...

அந்த லூசு தொல்லை தாங்க முடியவில்லை.

நாய் சேகர் said...

எங்கோமனம் பறக்குது.. அருமை
Mee read your post daily. why no post.
pls post. i no live, no read your post.
pls post. i no sleep, no read your post.

Yours..
Naai Seekar

Raj said...

இன்னைக்கு தான் புதுசா உங்க பதிவை படிக்கிறேன். கலக்குறீங்க ஆனா ஹாட் ஹாடர் படம் தான் வயத்தை கலக்குது. எல்லோரும் பார்த்து பரவசப்பட்ட கிரான்க் ஹய் வோல்டேஜ் படத்தின் கவர்ச்சி வில்லி படத்தை போடுமாறு தாள்மையுடன் வோன்டிகொல்கிறேன்

Anonymous said...

http://www.aceshowbiz.com/still/00004183/crank_high_voltage23.html

மௌனகுரு said...

வழக்கம் போல கலக்கல்.... ஆமா வாசகர் வட்டம் வாசகர் சதுரம் பத்தின பதிவு எப்போ வரும்

Anonymous said...

டியர் சாம்,
உங்க கோவணத்த நார் நாராக கிழித்த அந்த கருணையுள்ளம் கொண்ட கபோதிக்கு ஒருவேளை நாளை உதவி செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். கிடைத்தால் கண்டிப்பா செய்யுங்கள்.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான
ஒன்னுக்கு அடித்து விடல்"

அந்த சிச்சுவேசனல உங்க கோவணத்தை தூக்கிவிட்டுக்கிட்டு எதிராளியை ஒரு ஏளனப்பார்வை பார்க்கலாம். கண்டிப்பா நிறைவா இருக்கும். நான் அதை feel பண்ணியிருக்கிறேன்.

மற்றபடி, கோவணம் = நறுமணம் .
நறுமணத்தை சீண்டியவனுக்கு நறுமணமே பதிலடி கொடுக்கும்.

Your dear,
Townvaasi.

Anonymous said...

Jai Bakie Sekar

Anonymous said...

vasakar kaditham enge sir ?

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி