ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Thursday, 19 July 2012

வெயில் - இது ஒரு சாம் மார்த்தாண்டன் சிறுகதை


நான் யார்..?? அதை ஏன்டா எங்ககிட்ட கேக்குற நாதாரி என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.. இருந்தாலும் ஒரு பிரபல பதிவாளராக உங்கள் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் கடமை என்னுடையது.தினமும் உங்கள் வாழ்க்கையில் லட்சக்கணக்கான நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களிடம் சென்று என்மேல் உள்ள பாசத்தின் காரணத்தினால் நீங்கதானா அவர்... அவர் நீங்கதான என்று கேட்டு தொந்தரவு செய்வதாக உளவுத்துறையிலிருந்து நம்பகமான செய்தி கிடைத்தது. என்னை காண விரும்புவோர் சென்னை கலெக்டர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உண்ட கட்டி வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் common man தான் நான். நான் உங்களோடு கலந்து தான் இருக்கிறேன். என்னை வெளியே தேடி அலைய வேண்டாம். நானே எங்காவது அலைந்து கொண்டுதான் இருப்பேன்.

சென்னை காசிமேட்டில் உள்ள ஜல்சா டாஸ்மாக்கில் தான் கணக்கு வைத்திருந்தேன்.அந்த ஏரியாவில் எனக்கு தீவிரவாத அச்சுரத்தல் இருந்த காரணத்தால் மிக பத்திரமாக, பாதுகாப்பாக கூடுவான்ச்சேரி ஏரியாக்கு 'குடி' பெயர்ந்தோம். இங்கே வந்தவுடன் எனக்கு quarter மேட்டர் problem இருந்தது. நான் account வைத்திருந்த ஜல்சா டாஸ்மாக்கில் எல்லோருக்கும் என்னமோ James Bond படத்தில் வரும் Casinoவில் வேலை செய்வதாக நினைப்பு. நான் கையில் காலி டம்பளருடன் எவ்வளவு நேரம் தொன்னாந்து நின்றாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நீண்ட நேரம் கழித்து கடையில் வேலைசெய்யும் சிறுவன்,ஓனரிடம்  'ண்ணா.. இந்த பெருச பாருண்ணா இன்னும் போகாம நிக்கிது என்று சொல்லுவான், ஓனர், "த்து.. சாவுகிராக்கி.. சனியன் இன்னைக்கும் ஒசி குடிக்கு glass ah  தூக்கிட்டு வந்து நிக்கிது பார்... த்தா.. சொரனையே இருக்காது போல இதுக்கு என்று சொல்லி கிளாஸ் கழுவுன தண்ணிரை மூஞ்சியில் ஊற்றுவார். mixing கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் சரி என்று adjust பண்ணிக்கொண்டு, அதை நக்கியபடியே வீட்டுக்கு போய் மட்டை ஆய்விடுவேன்.

இப்படியே நாளுக்கு நாள் அந்த கடையில் ஓசிகுடி குடித்தபடி என் வாழ்கை சென்றது. இப்போது புது ஏரியாக்கு குடி பெயர்ந்தாலும், குடிக்கு பழைய ஜல்சா டாஸ்மாக்கிற்கு தான் செல்ல வேண்டியிருந்தது.அதனால் இந்த ஏரியாவில் உள்ள புஸ் புஸ் ஒயின்ஸில் வைத்து கொள்ளலாம் என்று விசாரித்தேன். அந்த ஒயின்ஸ் ஓனர் . ' அது ஒன்னும் பிரச்சனை இல்ல சார் பழைய கடைல போய் account clearence லெட்டர் ஒன்னு வாங்கிட்டு வந்துருங்க பாத்து பண்ணிக்கலாம்ன்னு சொன்னார். நான் மனதுக்குள் நாசமா போச்சு.. இனி குடிச்சமாதிரிதான் என அலுத்துக்கொண்டே ரோட்டில் நடந்து சென்றேன். மணி பதினொன்றுதான் இருக்கும்,ஆனால் வெயில் போட்டு வாங்கியது. வரவர நம்ம ஊரு ரொம்ப கேட்டு போச்சு பகல்லயே வெயில் இந்த போடு போட்டால் ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் என்ன ஆட்டம் போடும்.பேசாமல் எல்லாத்தையும்  பகல்ல தூங்கிட்டு, ராத்திரில வேலைக்கு போக சொல்லணும்.

சிக்னலில் நின்று ரோட்டை பெராக்கு பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு கருப்பு நிற மாருதி ஆம்னி அமரர் ஊர்தி நின்று கொண்டு இருந்தது. உள்ளே வாழ வேண்டிய வயதுடைய ஒரு 85 வயது முதியவர் படுத்திருந்தார். பக்கத்தில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். நான் அந்த இறுதி ஊர்வலத்தில் இருந்த ஒருவரிடம், ' என்னங்க அநியாயம் இது, செத்தவன் ஒய்யாரமா படுத்துட்டு வரன் உயிருள்ளவன் வெளிய வெயிலில் நடந்து வரான். என்ன கொடுமை சார் இது என்றேன்.  

ஆம்னி வேனில் பின்னாடி கதவு இல்லாததால் அந்த வயதான பையனின் முகம் எனக்கு தெரிந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் விசிறி விட்டுக்கொண்டு இருந்தான். 'செத்தவனுக்கு என்ன வேர்க்கவா போகுது'..த்தா..லூசு பய புள்ளைகன்னு மனசுக்குள் சொல்லிக்கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றேன். வண்டிக்கு முன்னாடி ஒருவர் தீச்சட்டியுடன் சென்று கொண்டிருந்தார். ஏண்டா இங்க என்னா மாரியாத்தா திருவிழாவா நடக்குது, தீச்சட்டியோட வந்து நிக்கிற.. என்று கேட்க்க துடித்தது மனது.. ஆனால் ஒருவேளை திருவிழாவில் இருந்தவர் செய்தி கேட்டு அவசரமாக தீச்சட்டியோடு வந்துவிட்டாரோ எனவும் எண்ணம் தோன்றியது. ஒரு வேலை படைப்பாளியாக இருப்பதால் இப்படி பல்வேறு கோணங்களில் யோசிக்க தோன்றியது.

திடீரென்று ஒருவர் மாலையோடு ஓடிவந்தார்.. நானும் என் ரசிகராக இருப்பார், எனக்குதான் மாலையை போடா வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால் அந்த நபர் மாலையை வேனில் படுத்திருந்த வயதான இளைஞருக்கு போட்டார். என்ன உலகமடா இது.. ஒரு திறமையான பதிவாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இப்படி ஒரு பொனத்துக்கு கிடைத்ததை எண்ணி வியந்தேன். ம்மா..என்னடா மரியாதை தெரியாத பயலுகலா இருகிஙக.

ஆம்னி வேன் பக்கம் ஊர்வலமாக சென்றவர்கள் கூட்டம் அவ்வளவு ஒன்னும் இல்லை. சுமாராக தான் இருந்தது. ஒருவேளை ஞாயிற்றுகிழமை என்பதால் இருக்குமோ.??ஒருவேளை எல்லாரும் நம்ம 'தல' படத்துக்கு போய்விட்டார்களா. இல்லை இறந்ததை யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டார்களா.சரி அதனால் என்ன..நாமாவது கூட செல்லலாம் என்று பின்னாடியே சென்றேன். எனக்குள் பல கேள்விகள். என் ஆழ்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

அப்படியே நடந்துக்கொண்டு,யோசித்துக்கொண்டு போனதில் பழைய ஒயின்ஷாப் வாசலில் சென்றடைந்தேன். அவர் என்னை கண்டுபிடித்துவிட கூடாது என்ற காரணத்தால் வழக்கமாக நான் கடைக்கு செல்லுபோது எடுத்து செல்லும் கிளாசோடு செல்லாமல் use and throw glassodu சென்றேன். இருந்தும் அவர் என்னுடைய காந்த பார்வையை வைத்து நான்தான் என்று கண்டுபிடித்து , செம காண்டாயிட்டார்.. டேய். தம்பி..எடுடா அந்த வென்னீர.. இன்னைக்கு இவனை விடக்கூடாது என துரத்த ஆரம்பித்தார். நானும் ஓட்டம் பிடித்தேன். கடைசியில் ஒரு டீக்கடையில் இளைப்பாறினேன்.

தம்பி, ஒரு டீ போடுப்பா என்றேன். கடைகாரர்,' சாரி சார். கடை ஓனரோட அப்பா இறந்துட்டாரு அதுனால கடைய எடுத்து வைக்கிறோம் என்றார். பிறகுதான் எனக்கு தெரிந்தது வழியில் பார்த்த அந்த இறந்து போன முதிய இளைஞன் தான் அவர் என்பது. ஆகா.. இதைதான் உலகநாயகன் Chaos Theory என்று தசாவதாரம் படத்தில் என்று சொல்லி இருப்பார். உலகம் எவ்வளவு சிறியது என எண்ணி கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS

 

10 comments:

ஹாரி பாட்டர் said...

அண்ணா நீங்க யாரோ தெரியல்ல பட் பதிவு சூப்பர்.. உங்க பிளாக் தவறாமல் பார்பேன் ஆனால் சும்மா ஒரு fun spoof பண்ணி இருக்கிறேன்.. நேரம் இருந்தா பார்த்து செல்லுங்க..
http://ideasofharrypotter.blogspot.com/2012/07/blog-post_18.html

Vigna said...

அட..
//என்னங்க அநியாயம் இது, செத்தவன் ஒய்யாரமா படுத்துட்டு வரன் உயிருள்ளவன் வெளிய வெயிலில் நடந்து வரான். என்ன கொடுமை சார் இது//

Anonymous said...

WONDERFUL WRITING! KEEP IT UP!

Anonymous said...

புகழ்ச்சிக்காக சொல்லவில்லை... நிஜமாகவே பாலகுமாரனின் சாயல் உங்கள் எழுத்துக்களில் ஒளிர்கிறது... வாழ்த்துக்கள்...

Anonymous said...

sema spoof , really very fun..

விக்கியுலகம் said...

பின்னி பெடல் எடுக்கறதுங்கறதை இப்ப தான் பாக்குறேன்...நல்லா இருக்கு சார்!

வெளங்காதவன்™ said...

சாம் ஸ்டைலு மிஸ்ஸிங்கு.....

சப்பை said...

அண்ணே சப்பான் மொழில தமிழ் கத்துக்கனும் ரேட்டு எவ்ளோ?

சரோஜாதேவி வெறியன் said...

உங்க எழுத்துல சுஜாதா சாயல்தான் தெரியுது பாலகுமாரன் இல்ல, ஏமாந்துடாதீங்க

ராம்குமார் - அமுதன் said...

கெளப்புது :)) அய்யோ அம்மா... விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டிருக்கேன்....தொடர்ந்து எழுதுங்கள் :))

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி