ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday, 3 December 2011

ஜெட்லி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் வாசகர் கடிதப்போட்டி-2011

சென்ற நூற்றாண்டில் நான் யாருக்கோ அலை பேசிய போது "நான் உங்கள் வாசகன்" என்னும் பொறி காதில் விழ, வாசகர் கடிதம் என்ற ஒரு பகுதியை என் பதிவில் ஒதுக்கி, அதற்கு  நேரமும் ஒதுக்கி இடைவிடாமல் நானே எழுதி வருகிறேன்.

அது போக 75 வருடங்களுக்கு முன்னால் நான் எங்கள் வீட்டு வெஸ்டர்ன் டாய்லெட்டில் உக்காந்து கன நேரம் யோசித்த போது, தோன்றிய ஐடியாதான் வாசகர் கடித போட்டி.நமக்கு நாமே வாசகர் கடிதம் எழுதி களைத்து போவதை விட, இதை ஒரு போட்டியாக வைத்து பரிசும் வழங்கினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததன் விளைவுதான் இந்த வாசகர் கடிதப்போட்டி. இதற்காக ஒவ்வொரு வருடமும் தாங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி.

சென்ற வருட போட்டி பதிவுலகில் சிறு சலசலப்பை உண்டு பண்ணியது என்றே கூறலாம்.  வந்து சேர்ந்த வாசகர் கடிதங்களின் எண்ணிக்கையில், முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுப்பதே பெரும் பாடாகிவிட்டது. ஏனென்றால் மொத்தம் இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுக்க நடுவர்கள் கிட்ட தட்ட திணறிப் போய்விட்டனர் என்றே கூறலாம். கடைசியில் அந்த இரண்டு கடிதங்களை எழுதிய எனக்கே மூன்று பரிசுகளையும்  தந்துவிட்டார்கள்

சென்ற முறை போட்டியின் விதி முறைகள் கடுமையாக இருந்தது எனவும், அவை இந்த  முறை எளிமையாக்கப்பட வேண்டும் எனவும் பலர் டிவீட்டரில் எனக்கு போன் செய்தனர்.அடுத்த கடிதப்போட்டி எப்போது எப்போது எனவும் சில நண்பர்கள் ஆவலுடன் என்னிடம் பஸ்ஸில் (MTC) கேட்டிருந்தனர்.

எனவே வருடம் ஒரு முறை இந்த வாசகர் கடித போட்டி வைக்க வேண்டும் என முடிவு  செய்தேன். இதோ 125 ம் ஆண்டு வாசகர் கடித போட்டியின் அறிவிப்பு..

முன்னதாக ஒரு கூடுதல் தகவல். சமீபத்தில் "டுபாகூர்களால் டுபாகூர்களுக்காக" என்ற கேப்சனுடன் இயங்கி வரும் உடான்ஸ் (www.odanz.com) என்னும் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியைஅறிவீர்கள். அதன் உரிமையாளர் DTH சங்கரும் முனைப்போடு இந்த வாசகர் கடித போட்டியை  உடான்ஸுடன் இணைந்து நடத்தும் படி கேட்டுக்கொண்டார்.அதன்படி உடான்ஸ் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியுடன் இணைந்து இந்த வாசகர் கடித போட்டியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஆங்காங்கே இருக்கும் பொது மக்களும், பக்த கோடிகளும் பெருந்திரளாக வந்து  விழாவை சிறப்பித்து தருமாறு தங்கள் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்

-ஜெட்லி



இதோ வாசகர் கடிதப்போட்டிக்கான விதிமுறைகள்:


1. வாசகர் கடிதம் எழுதும் நபர் குறைந்த பட்சம் 45 ஆண்டுகளாவது ஜெட்லியின் வாசகராக இருந்திருக்க வேண்டும்.

2.உங்கள் கடிதத்தை வெளியிடுமாறு நீங்கள் கெஞ்சுவது போன்ற வரிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

3. முக்கியமான ப்ரச்சனைகளுக்கு உதாரணமாக, முல்லை பெரியாறு அணை ப்ரச்சனை, கூடங்குளம் உலை ப்ரச்சனை போன்றவற்றை பற்றி ஜெட்லி எழுதிய பதிவுகளை அரசு பின்பற்றினால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்பது போலான வரிகள் இருப்பின் 15 மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்படும்.

4.அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றுவர தங்களிடம் ஒரு டிக்கெட் extra வாக இருக்கின்றது (இல்லாவிட்டாலும்) எனவும், அதில் பயணம் செய்ய  ஜெட்லியை நீங்கள் அழைப்பது போலவும் எழுதியிருக்க வேண்டும். (கவலை வேண்டாம் ஜெட்லி கண்டிப்பாக அதை மறுத்து விடுவார்)

5. ஜெட்லியின் செண்டிமெண்ட் பதிவுகளை படித்துவிட்டு தாங்கள் கதறி கதறி அழுபவராக இருக்க வேண்டும். ஒருவேளை போலியாக தாங்கள் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்று விட்டால், பரிசளிக்கும் போது அந்த செண்டிமெண்ட் பதிவுகளை படித்துக் காட்டி தங்களுக்கு அழுகை வருகிறதா என்பது சோதிக்கப்படும்.

6. அனானிகளை திட்டி, ஜெட்லியை ஊக்கப்படுத்தும் விதமான வரிகள் கண்டிப்பாக இரண்டாவது இடம்பெற வேண்டும்.

7. வாசர் கடிதத்தின் களம் நகைச்சுவை செண்டிமெண்ட் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் வாசகர் கடிதம் நகைச்சுவையாக இருக்கவேண்டும்.

8. வலைப்பூ  வைத்திருக்கும் பதிவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, குஷ்பூ போன்றவற்றை வைத்திருக்கும் நபர்கள் கூட பங்குபெறலாம்.

9. நீங்கள் எழுதும் வாசகர் கடித்ததிற்கு மேல் "வாசகர் கடிதப்போட்டி-2011" என்று அடைப்பு குறிக்குள் இட வேண்டும். அடைப்புக்குறி இல்லாத கடிதங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள பட மாட்டாது.

10. வாசகர் கடித போட்டி-2011ற்கான புகைப்படத்தை தங்கள் வலைப்பதிவின் எதாவது ஒரு ஓரத்தில் போட்டுக்கொள்ளுதல் உசிதம். அதற்கு தனியாக மதிப்பெண்கள் உண்டு

11.ஒருவர் அதிக பட்சமாக 3020 வாசகர் கடிதங்கள் எழுதலாம்.

12. இந்த வாசகர் கடிதம் உங்கள் கற்பனையில் உருவானது அல்ல எனவும், உண்மையின் வெளிப்பாடே எனவும், வேறு எந்த பதிவருக்கும் இந்த வாசகர் கடிதம் அனுப்பப்பட வில்லைஎன்ற உறுதிமொழியையும் mydearmarthaandan@rediffmail.com க்கு speed courier இல் அனுப்பி விடவும்

13.மேலும் உங்கள் கடிததின் தொடுப்பை உடான்ஸ் திரட்டியில் உள்ள வாசகர் கடிதப்போட்டி 2011 என்ற வகையீட்டில் இணைக்கப்படல் வேண்டும். ஒருவேளை உடான்ஸில் "வாசகர் கடித போட்டி-2011" என்ற வகையீடு இல்லாவிட்டால் ,அந்த பெயரில் ஒரு வகையீட்டினை உருவாக்கி பின் அதில் இணைக்க வேண்டும்

14. வெற்றி பெறும் கடிதங்கள் பக்கி லீக்ஸில் வெளியிடப்படுவதோடு அல்லாமல் தின கரன், தின தந்தி, தினமலர், ராணி, குமுதம் போன்ற இதழ்களிலிலும் வெளியிடப்படும்.

15. கடிதங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 15. அண்டார்டிகா நேரப்படி இரவு 12 மணி.


வாழ்த்துக்கள்.

16 comments:

துரைடேனியல் said...

Mokkai Thilagam nu ungalukku pattame kodukkalam Sago.

துரைடேனியல் said...

Tamilmanam vote 2.

Anonymous said...

அந்த ரோஜாப்பூ மல்லிப்பூ குறிப்பா குஷ்பூ வெச்சிருக்கிறவங்க வாசகர் கடிதத்தை ஒரு சிசி போட இயலுமா ஹி ஹி.

Unknown said...

ங்கொய்யால காலங்காத்தால விழுந்து விழுந்து சிரிக்க வெக்கிறீங்க பாஸ்!
இப்படிக்கு,
ஒரு(பெயர் சொல்ல விரும்பாத) வாசகன்

நாய் நக்ஸ் said...

Wow...!!!!!!!!!

Mohamed Faaique said...

///சென்ற வருட போட்டி பதிவுலகில் சிறு சலசலப்பை உண்டு பண்ணியது என்றே கூறலாம். வந்து சேர்ந்த வாசகர் கடிதங்களின் எண்ணிக்கையில், முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுப்பதே பெரும் பாடாகிவிட்டது. ஏனென்றால் மொத்தம் இரண்டு கடிதங்கள் வந்திருந்தன////

ROCKS

சாம் ஆண்டர்சன் said...

ASK கேள் (வாசகர் கடிதப்போட்டி-2011) முதல் கடிதம்

Unknown said...

:-)

கலக்கல் வழக்கம் போல....

சாம் ஆண்டர்சன் said...

எனது வாசகர் கடிதம் அடித்துவிட்டு எனக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொல்கிறேன்

ASK கேள் (வாசகர் கடிதப்போட்டி-2011) முதல் கடிதம்

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

good. :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

சூப்பர் :)))))))))

வடக்குபட்டி ராமசாமி said...

எப்படி இருந்தாலும் நான்தா கெலிக்க போறேன்!இப்பவே பரிச கொடுங்க!

rishvan said...

semma... mokkai thaan... nadathunga... www.rishvan.com

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html

இவரு பெரிய வெண்ணை said...

ஜெட்லி நினைத்து இருந்தால் நாள் முழுவதும் குடித்து விட்டு சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான கேரளா பெண்களை அனுபவித்து இருக்கலாம். குளிர் கால விடுமுறையில் மகாபலிபுரம் லாட்ஜ்களில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 21ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த சகிலா படங்களும் அதன் பால் மகிழ்ந்த மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்.. அதனால் தான் எந்நேரமும் அவர்களுக்காக பதிவு எழுதி அரசியல் அறிவு புகட்டி வருகிறார். நீங்கள் ஏன் அவரை பற்றி இப்படி தர குறைவாக எழுதுகிறீர்கள் ??

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி