அஜீத்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என் குறும்படங்களில் நடிக்க ஆவலாக இருப்பதாக கேள்விப்பட்டேன். முடிகிறதா பார்க்கலாம்.
ஜுராசிக் பார்க், லாஸ்ட் சாமுராய், பாட்ஷா போன்ற ஒரு சில அஜீத் படங்கள் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு டைப்பாய்டு ஜுரமே வந்து இருக்கின்றது... அப்போது ட்விட்டரில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அப்படி நான் என்ன எழுதிவிட்டேன்? எதோ என் மனதில் பட்டதை எழுதுகின்றேன். அதுக்கு இவ்வளவு ஆதரவா? (ஆரம்பிச்சுட்டான் டா! டேய் இது மங்காத்தா விமர்சனம்டா. அறிவிப்பு பில்ட் அப் இல்ல)
15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை பார்த்த போது அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் காமடியாக இருக்கும். சொந்த காசில் டீ குடிப்பார். உழைத்து சம்பாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார். வாசகர்கள், ரசிகர்களிடம் கைமாத்து வாங்க கூடாது என்றெல்லாம் சொல்வார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். சில நேரங்களில் அவருடைய பேச்சு அவ்வளவு ஸ்திரத்தன்மையாக இருக்காது. பேசும்போது நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவார். அவர் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.. இளையதிலகம் நடிகர் பிரபுவின் சித்தப்பா மகன் தான் இந்த வெங்கட் பிரபு.
மங்காத்தா படத்தின் கதை என்ன??
விநாயகம்(அஜீத்) ஒரு போலீஸ் ட்ரெஸ் போட்டு சுத்திக்கொண்டிருப்பவர். அறிமுக காட்சிக்காகவே தைக்கப்பட்ட போலிஸ் உடை அவருக்கு நன்றாக உள்ளது.
ஆங்.. எங்க விட்டேன்...??
நேற்று மன்மோகன்சிங் அனு உலை பாதுகாப்பு பற்றி பேசினார். இந்தியா போன்ற நாடு அனு என்ற பெண்ணின் வாழ்க்கைக்கு உலை வைப்பது நன்றாக இருக்காது என அவருக்கு மெயிலி உள்ளேன். என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்க்கலாம்.
ரஜினியின் அடுத்த படம் ராணாவை இயக்க என்னை அழைத்து ட்வீட் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். நான் பக்கிராம் வயது55 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதால் முடியாது என சொல்லிவிட்டேன். கோபித்துக்கொண்டாரா. அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது நான் எப்பவுமே இப்படித்தான். நான் லோக்கல்.
மங்காத்தா என்ற பெண்ணுக்கும் அஜீத்துக்கும் கள்ளதொடர்பு ஏற்படுகிறது. அதை அர்ஜூன் முறியடிக்கிறார். அஜீத்தின் காதலுக்கு உதவும் நாலு நண்பர்கள் என்ன ஆகிறார்கள்? அஜீத் என்ன ஆகிறார்? அர்ஜூன் என்ன ஆனார்? என்பதுதான் மீதிக்கதை. எல்லாத்தையும் இங்கயே சொல்ல முடியாது தியேட்டரில் பார்த்துக்கோ. பிரிஞ்சதா?
====================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
அஜீத் 40வயது கேரக்டரில் நடிப்பதால் இது அஜீத் 40 என்றுதான் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அஜீத்50 என விளம்பர படுத்தியுள்ளது வெங்கட் பிரபுவின் அனுபமின்மையை காட்டுகிறது.
அஜீத் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பை கழட்டி வைத்து லூயி ஃபிலிப் சட்டையையும், பீட்டர் இங்லாண்டு பேண்டையும் மாட்டிக்கொண்டு நடித்துள்ளார். அந்த முயற்சி பாராட்டத்தக்கது.
பில்லா இரண்டாவது பாகத்தில் நடித்த போது அந்த நெகட்டிவ் ஸ்டைல் பிடித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். மனிதர் பூந்து விளையாடி இருக்கின்றார்..வில்லன் கெட்டப் நன்றாகவே இருக்கின்றது. அதனால்தான் சவுண்ட் சென்னசார் கட் செய்து, 98 பிரேம்வில் ***** என்று சொல்ல முடிகின்றது. என்னதான் சென்சார் செய்தாலும் கெட்ட வார்த்தைகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு இடத்தில் அடியாள் ஒருவனை அஜீத் "ஜெட்லி சேகர்" என திட்டுகிறார். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார் அந்த அடியாள். அந்த இடமும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.
படத்தில் த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என பல நடிகைகள் நடித்துள்ளார்கள். ஒவ்வொரு நடிகைக்கும் ஒருமுறை என்ற கணக்கில் இந்த படத்தை நான் 6முறை பார்ப்பேன். படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியது கடைசி வரைக்கும் மங்காத்தா திரிஷாவா, ஆண்ட்ரியாவா, அஞ்சலியா, லட்சுமிராயா என சொல்லாமலே படத்தை முடித்துவிட்டார் இயக்குனர். அடுத்த பாகம் எடுக்கப் போகிறார்கள் போல. பார்ப்போம்.
படம் முடிந்தவுடன் டைட்டில் கார்ட் போடும்போது என் குறும்படங்களில் நான் செய்த யுக்தியை வெங்கட் பிரபு காப்பியடித்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது
================================
தியேட்டர் டிஸ்கி...
சென்னை அப்போலோ ஆஸ்பிடல் ஆபரேசன் தியேட்டரில் இந்த படத்தைப் பார்த்தேன். நிறைய பேர் வாயில் துணி கட்டி வந்திருந்தார்கள். சிலர் கத்தி, கத்திரிக்கொளுடன் நின்றார்கள். படுத்துக்கொண்டே படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.
திருட்டு டிவிடியில் வழக்கமாக பார்த்துவிட்டு தியேட்டரில் பார்ப்பது கொடுமையாக இருந்தது.
சவுண்ட் சரியில்லை. பீப் பீப் பீப் என எதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏசி நல்ல குளிராக இருந்தது.
================ ================
பைனல் கிக்
இது சினிமா தியேட்டர் இல்ல நாயே, ஆபரேசன் தியேட்டர் என சொல்லி கம்பவுண்டர் என் பின்புறத்தில் கிக் செய்து வெளியே விரட்டினார். அதுவே என் பைனல் கிக்காக அமைந்தது.
================ ================
வோடாபோனில் ஒரு சிம் வாங்கினால் ஒரு சிம் ஃப்ரீ. உடனே முந்துங்கள். இந்த சலுகை சிறிது காலம் மட்டுமே.
--
Antony Disouza,
Area manager, Vodaphone.
======================
மிக்க சந்தோசமா அந்தோணி??
===
பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.
பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....
EVER YOURS...
29 comments:
கலககிட்டிங்க தலைவா
Super Super
அனு உலை மேட்டர், அஜித் 50, தியேட்டர் சீன் எல்லாமே சூப்பர்,
”பிரிஞ்சிதா” உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா????
super thaliva
////சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி ஆபரேசன் தியேட்டரில் இப்படத்தை பார்த்தேன்//// எப்டிய்யா இப்டி யோசிக்கிறீங்க)))))). கலக்கல் சிரிப்பு.
ஜெட்லி சேகர் பற்றி மட்டுமே பதிவுகள் எழுதி வரும் உங்களை கண்டிக்கின்றேன். ஜெட்லி சேகருக்கு எவ்விதத்திலும் குறைந்தவரில்லை தண்ணி அடிக்க சாரி தண்ணி குடிக்க சங்கம் தொடங்கிய யூத் சங்கர் அவர்கள். தமிழ் திரையுலகின் விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் யூத் சங்கர் பற்றி நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உங்கள் பதிவுகளை தமிழ் திரையுலகமே புறக்கணிக்கும். எச்சரிக்கை.
சூப்பர் ...நல்ல காமெடி ....
kalakal nadathunga
Avaroda oru posta eththana thadavai vasippeeenga?
mudiyala..vendam..azhuthuduruven
என்னய்யா இது இந்த குத்து குத்துறீங்க முடியல முடியல...ஹிஹி!
குத்துங்க எசமான் குத்துங்க............
உண்மையிலேயே சாம் செம்ம சிரிப்பு .. ஜட்டி சேகரே இத படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான் ... ஹா ஹா ஹா ..
hahahhaah அருமை நண்பா. செம சிரிப்பு.
superb, இது அதை விட நன்றாக இருக்கிறது..ஹா..ஹா..ஹா. கலக்குங்க தலைவா. எல்லோரையும் தான்.
"அஜீத் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பை கழட்டி வைத்து லூயி ஃபிலிப் சட்டையையும், பீட்டர் இங்லாண்டு பேண்டையும் மாட்டிக்கொண்டு நடித்துள்ளார். அந்த முயற்சி பாராட்டத்தக்கது."
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க?
நேன் எலுத்வதை நிருத போரேன். நீன்க்க ரொம்ப கலாய்க்கிரீங்க.
மக்கள்: ஓ.. நீங்க பண்றது பேரு எழுதுறதா சார்?
நான் நிஜமாவே அலுதுடுவேன் ஆமா....
நிறுத்துங்கடா வலிக்குது....
என்ன பிரிஞ்சதா...
ஈரோட்டில் நடந்த கல்யாணத்துக்கு போனேன்..பேருந்து நிலையத்தை விட்டு வெளிய வந்து அபிராமி தியேட்டர் பக்கம் இருக்கும் சிக்னல் கடைசி வரை போனேன்.. அதே போல ஆக்ஸ்பேர்டு ஓட்டல் சிக்னல்வரை போய் பார்த்தேன்.. எங்கேயும் கிப்ட் விற்கும் கடை இல்லை.... செல்போன், செல்போன், செல்போன்,கடைகள்தான்.. ச்சே அப்படி என்னதான் இந்த ஈரோடு பயள்ளைங்க பேசுதுங்களோ???
இந்த இரண்டு வாரத்தில் ஒரு நம்பிக்கை துரோகம்... Who is that culprit ?
எங்கள் தானைத்தலைவன் உண்மைத்தமிழன் போல உங்களால் எழுத முடியுமா? முயற்சியாவது பண்ண முடியுமா? இப்பவே ஆரம்பிச்சுடுங்க அப்பத்தான் ரெண்டு மாசத்துலயாவது எழுதி முடிக்க முடியும்
நக்கல்- ல உங்கள மிஞ்ச ஆளே கிடையாதுன்னு நினைக்கிறேன்...
சிரிப்பு தானா வருது - படிச்சாக்கா...........
/////ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். /////
சார் ரேட்டு எவ்வளவுன்னு சொல்லிட்டீங்கன்னா டீல் முடிச்சிடலாம்
ஹா ஹா ஹா செம விமர்சனம்.சான்ஸ் இல்ல படத்த விட இது நல்லா இருக்குங்கன்னோவ்!!சூப்பர் நக்கல் சூப்பர் லொள்ளு!!சாம் ராக்ஸ்!
hi sam,
i sent a mail to id mydearmarthaandan@rediffmail.com
regarding your review.
By
-jetli A/C
ஏங்க தமிழ்நாட்டில் வாழ பழக அப்படின்னு ஒரு பதிவு வேண்டும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்.... நீங்க எழுதுறீங்களா இல்லை அவரை எழுத சொல்லவா?
my point of view u can't beat "ஜெட்லி சேகர்" for movie review.....
see listed below what are the points u missed ????
திரிஷாவும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றார்...திரிஷாவின் கைகளையும், கால்களையும் சக்தி சரவணணின் கேமரா குளோசப்பில் காண்பிக்கும் போது வயது முதிர்வு அதில் தெரிகின்றது..
ஆண்ட்ரியா.. நடித்து இருக்கின்றார்... அவரின் மிக்கிமவுஸ் பல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.ஆனால் நாலு சீனில் வருவதைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அஞ்சலி நடித்து இருக்கின்றார்.. நன்றாகவும் இருக்கின்றார்...வெங்கட் பிரபு டீமில் வைபவ் மட்டும் கொடுத்து வைத்தவர் போல....
லட்சுமிராய் நன்றாக நடித்து இருக்கின்றார்.. காட்டியும் இருக்கின்றார்.. தன் திறமை முழுவதையும்.. ஆனால் இந்திய சென்சார் போர்டு ஏன் இருக்கின்றது என்ற கோபம் லட்சுமிராய் அணிந்து இருந்த பிகினிகளுக்கு இருக்கின்றது.
now u can see the difference between ''Sam and Jetli"
still u r not satisfied, i have more points
அஜீத் போடும் பிளான் செமை... பிரேம்ஜி அமரன் பார்ட் கலகல..
அஜீத் பிளான் போடுவதாக காட்டும் அந்த மாண்டேஜ் ஷார்ட்ஸ் எல்லாம் அருமை..
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் அருமை..முக்கியமாக அந்த மாண்டேஜ் ஷாட்ஸ்..
படத்தின் பெரிய குறை... யுவனின் பாடல்கள்..
படத்தின் கடைசி டைட்டில் கார்டு ஷாட்டுகளை மிஸ் செய்யவேண்டாம்..
என்னை போலவே வெங்கட் பிரபுவுக்கு சரக்கு அதிகமாகி மறுநாள் தலைவலித்து இருக்க வேண்டும்..அந்த வேதனையை படம் மழுக்க காட்சியாக வைத்து இருக்கின்றார்.
படம் கன்பார்ம் ஆனதும் டிரைலர் வெளியிட்ட படம்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அர்ஜுன் எவிஎம்மின் சங்கர் குரு படத்தில் நடித்தார்.. இன்னும் போலிசாக நடித்துக்கொண்டு இருக்கின்றார்...இந்த படத்திலேயும் போலிசாக நடித்து இருக்கின்றார்...ரிட்டயர்மென்ட ஸ்டேஜில் இருக்கின்றார்..
பைனல் டைட்டில் கார்டு முழுமையாக போடாமல் பாதியிலே கட் செய்து விட்டார்கள்.. அப்படி என்ன மயிறு டைம் சேவ் செய்ய போறாங்களோ??
so now u can think about ur review,
செம நக்கல்
ஏன் என்று தெரியாமல் சிரித்து ரொம்ப நாள் ஆச்சு ரொம்ப தேங்க்ஸ் மச்சி
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி