ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday, 10 February 2014

சாம் மார்த்தாண்டன் பதில்கள் - கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!!!


வாசகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. ஏன் சாண்வெஜ் வரவில்லை ஏன் அது வரவில்லை இது வரவில்லை என்று  அடிக்கடி ட்விட்டரில் போன் செய்கிறார்கள். அதனால் இடைவிடாத வாசகர் கடிதம் எழுதும் பணி இருப்பினும் என் எழுத்தை மூச்சாக சுவாசிக்கும் வாசகர்களுடன் பேச சிறிது நேரம் ஒதுக்கலாம்  என்று நினைத்திருக்கின்றேன். அதற்காக சாம் மார்த்தாண்டன் பதில்கள் என்னும் புதிய பகுதியை ஆரம்பித்து வாராவாரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு என்னிடத்தில் எதேனும் கேட்கவேண்டும் என்றால் கேளுங்கள் அதற்காக நான் கேட்பது போல் த்தா..ங்கொம்மா என்று கேட்டுவிடாதீர்கள்.. டீசண்டான கேள்விகளுக்கு சாம் மார்த்தாண்டன் பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை mydearmarthaandan@rediffmail.com முக்கோ இல்லை கமெண்டிலோ தெரிவிக்கவும்.

நாக்கை புடிங்கிக் கொள்வது போல் சிறந்த கேள்வி கேட்பவருக்கு என்னுடைய வாசகர் கடிதங்கள் அடங்கிய ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.  மேலும் உங்கள் செலவிலேயே எனக்கும் சேர்த்து டீ நகர் சலீம் பாய் கையேந்தி பவனில் ஒரு ட்ரீட்டும் கொடுக்கப்படும்.


EVER EVERS

சாம்  மார்த்தாண்டன்

7 comments:

IlayaDhasan said...

Ads are very creative...

vadivel said...

starts 1..2..3.

Bagawanjee KA said...

மார்த்தாண்டன் நம்ம ஊரு ,சாம் எந்த நாடு ?
த ம 1

பஜன்லால் சேட் said...

உங்கள் கூந்தல் அழகின் ரகசியம்?

பக்கிராம் படத்தை இயக்க தூண்டுகொல் என்ன?

அடிக்கடி த்தா த்தா ன்னு சொல்லலன்னா லோக்கல் லிஸ்ட்ல செக்க மாட்டாங்களா?

உங்களை படைப்பாளியாக உணர வைத்த தருணம் எது?

கீ போர்டு நடனத்தை கண்டுபிடித்த உங்களுக்கு ஆஸ்கார் தரவில்லை என்னும் கவலை உள்ளதா?

பஜன்லால் சேட் said...

பக்கிராம் வயசு 65 குறும்படத்தை க்ரைம் திரில்லர் ஜெனரில் சேர்க்கலாமா?

Anonymous said...

பார்த்தே தீரவேண்டிய படத்தை பாக்கட்டி என்ன ஆகும்.

-Raja

சக்கர கட்டி said...

சாம் ஓட்டு யாருக்கு

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி