ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 12 June 2018

யாரு நிவேதிதா காலா பார்த்த கதை!!!


நேற்று வீட்டில் காலா பார்த்தேன். ஒரு ஆஃப் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே. நேரத்திலேயே டிவிஐ ஆப் செய்திருப்பேன்.  தமிழ் டிவி சீரியலைப் போலவே இருந்தது. ரஞ்சித் பாவம் சின்ன பையர். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படியா பயன்படுத்துவது? அரை மணி நேரமாகியும் ஒரு சூப்பர் ஸ்டாரை திரையில் காண்பிக்கவில்லை  என்றால் அது என்ன படம்?  பொதுவாக ஹீரோக்கள் தான் டபுள் ஆக்‌ஷன் ரோல் செய்வார்கள்.. இதில் ஹீரோயின் டபுள் ஆக்‌ஷன் என்பதும் எரிச்சலைத்தந்தது. சிறிது நேரம் கழித்து சமயற்கட்டிலிருந்து வந்த மனைவி “என்னங்க படம் எப்டி இருக்கு?” என்றாள்
“அத ஏன் கேக்குற.. சீரியல் மாதிரி இருக்கு.. ரஞ்சித் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றேன்.
ஒரு முறை என்னையும் டிவியையும் உற்றுப்பார்த்த பின்னர் “மூதேவி… உண்மையிலயே அது சீரியல்தான்… காலான்னு நினைச்சி போதையில வாணி ராணிய அரை மணி பாத்துக்கிட்டுருக்க” என்றதும் அடித்த ஆஃப்பும் குபீரென இறங்கியது.
சமகாலத் தமிழ் நடிகர்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் Johnny Sins.  நடிப்பு என்றால் Danny D என்றே பலரும் நினைக்கிறார்கள்.  உண்மையில் Danny D விட Johnny Sins மிகப் பிரமாதமான நடிகர்.  அவர் திரையில் தோன்றினாலே நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு தோன்றும்.  இந்த அளவு screen presence நிறைந்த நடிகர் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே யாரும் இல்லை என்றே சொல்லலாம்.  அவர் விரல் அசைந்தால் அது நம் மனதை காந்தம் போட்டு இழுக்கிறது.  அதனால்தான் அத்தனை பேருக்கும் அவரைப் பிடிக்கிறது.  ஜப்பானில் கூட அவர் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்.  இது அவருக்குக் கிடைத்துள்ள வரம்.

நடிப்பு பற்றி பாடம் எடுக்கக் கூடிய என் நண்பர் ஒருவரிடம் இந்தக் கருத்தை நான் சொல்லிக் கொண்டிருந்த போது நண்பர் அதை ஆமோதித்தார்.  பிறகு அவர் ஒரு உதாரணம் சொன்னார்.  ஒரு நிகழ்வைப் பார்க்கும் போது Johnny Sins, Danny D இருவரின் முகபாவம் எப்படி இருக்கும் என்பதை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.  நிகழ்வு இதுதான்:  ஒரு பெண்ணின் மேலாடை கீழே விழுந்து விடுகிறது.  அதை இருவரும் பார்க்க நேர்கிறது.  நடிப்புதான்.  இப்போது அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், Danny D கண்களில் காமம் தெரியும்; Johnny Sins கண்களில் கருணை தெரியும்.  இதுதான் உச்ச நடிப்பு.  படுக்கை அறைக் காட்சியில் தான் காமம் தெரிய வேண்டும்.  மேற்குறிப்பிட்ட காட்சியில் கருணைதான் தெரிய வேண்டும்.  அதனால்தான் அவர் Porn Super ஸ்டார்.  ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரை ஒரு மல்லு” கங்கா ரேஞ்சுக்கு ரஞ்சித்தால் மட்டுமே ஆக்க முடியும்
படத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு நான் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பூராவுமே ரஜினி குழந்தைகளோடு அமர்ந்து அம்புலி மாமா கதைதான் பேசிக் கொண்டிருக்கிறார்.  ஒரு குஜாலான காட்சிகளோ பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளோ இல்லாததால் நமக்கு தலை வேதனையாக இருக்கிறது.
படத்தில் குறியீடு அது இது என்று பலரும் எழுதியிருந்தனர்.  ஒரு குறியீடு எழவும் இல்லை.  நானும் மூன்று முறை ரீவைண்ட் செய்து, ஸ்லோமோஷனில் நகர்த்தியும் பார்த்தேன். ஒண்றும் தேறவில்லை,
நானா படேகர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்றார்கள்.. ஆனால் அவர் பூனையைப்போல் வந்து செல்கிறார்.. என்று எழுதிக்கொண்டிருக்கையில் “நானா படேகர் படத்துல எந்த சீன்ல வர்றாருன்னு சொல்லு பாப்போம்” என்று கிச்சனிலிருந்து மனைவியின் குரல் வந்தது.
“அந்த சின்ன பையன் செத்து கெடக்கும்போது லூஸ் டீ ஷர்ட் போட்டுகிட்டு சொல்லு காலா.. சொல்லு காலான்னு சொல்ற குரூப்புல மொதல்ல நிப்பானே… அவன்ந்தானே நானா படேகரு…” என்றேன்..
இந்த முறை மனைவியின் குரல் வரவில்லை. மாறாக சூர்யா சுடும் புல்லட் வேகத்தில் ஒரு தோசைக் கரண்டி வந்து என் மூக்கைப் பதம் பார்த்தது.
பாடல்கள் படு தண்டம்.  இசை மகா மட்டம்.  எனக்கு சந்தோஷ் நாராயணன் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் வெறும் ஆட்கள் கத்துவதை மட்டுமே மியூசிக்காகப் போட்டிருக்கிறார். ரஜினி வரும் காட்சிகளிலெல்லாம் “ஹாய்… ஊய்.. தலைவா” என ஒரே சத்தம்.. இப்படியா படத்திற்கு மீசிக் போடுவது.
ரஞ்சித்திற்கு படமே எடுக்கத்தெரியவில்லை. முதலில் தம்பி மிஷ்கின் எடுத்த முகமூடி திரைப்படத்தைப் ஒரு பத்து இருபது முறை பாருங்கள். நடிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் யுத்தம் செய் “கன்னித்தீவு பொண்ணா” பாடலில் ஒருவர் ஆர்மோனியப் பெட்டி வாசிப்பார்… கை விரல்கள் கூட எப்படி நடிக்கும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
சினிமா எடுக்க வேண்டும் என்றால் தலித் இலக்கியம் மட்டும் படித்தால் பத்தாது. “எக்ஸைல்” என்றொரு புத்தகம் இருக்கிறது. அதை வாங்கி முதலில் படித்துத் தொலையுங்கள். அதன் பிறகு உயிரோடு இருந்தால் படம் எடுப்பதைப் பற்றி யோசியுங்கள்!!!

7 comments:

Anonymous said...

சாருவோட அல்லக்கை
நித்தியிடம் பிள்ளை வரம் வாங்கிய பக்த கோடி கருந்தேள் ராஜேஷ் என்ன விமர்சனம் தருவார் ?

Anonymous said...

தமிழில் வந்த ஒரே ஒரு உலக படம்

கோவில்பட்டி வீரலட்சுமி மட்டும்தான்

வரலாறு முக்கியம்

யாஸிர் அசனப்பா. said...

////எக்ஸைல்” என்றொரு புத்தகம் இருக்கிறது. அதை வாங்கி முதலில் படித்துத் தொலையுங்கள். அதன் பிறகு உயிரோடு இருந்தால் படம் எடுப்பதைப் பற்றி யோசியுங்கள்!!!/////

mass bro

Anonymous said...

pinni pedal edunga ..

Unknown said...

எமோஷன்ஸ் பத்தலை......இன்னும் அங்கங்க வெடிச்சிரிப்பை கொடுத்திருக்க வேண்டும்.. சாருவின் மீது இருந்த பலமான மரியாதை சரியத்தொடங்கிவிட்டது. அந்தாளுக்கு என்ன தான் வேண்டுமாம்?!?

Unknown said...

இதை நான் என் Facebook பக்கத்தில் பகிர்ந்துக்கொள்கிறேன்.

Johnkennday said...

Excellent, laughing hard. Thanks.

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி