ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.
Showing posts with label sam anderson. Show all posts
Showing posts with label sam anderson. Show all posts

Wednesday, 25 July 2012

yaarukku Yaaro-2012 /யாருக்கு யாரோ..தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.

சமிபத்தில் யாருக்கு யாரோ என்ற படம் வந்தபோது ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்..அதே படத்தை என் ரசனை அலைவரிசையில் ஓரளவு ஒத்துபோகும்  (அது என்ன ஓரளவு என்கிறிர்களா?? என் போன்ற பன்முக பதிவாளர்க்கு நிகராக சிந்திக்க யாராலும் முடியாது என்பது உலகம் அறிந்தது தானே ) christopher Nolan,  மணிரத்னம், ராஜமவுலி, அணில் கும்ப்ளே போன்ற இயக்குனர்கள் மிக வற்புறுத்தி, நீங்கள் கண்டிப்பாக அந்த படத்தை பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் அது அந்த வளரும் கலைஞர்களுக்கு சிறந்த  விருதாகவும், விமர்சனமாகவும் அமையும் எனக் கேட்டுக்கொண்டனர். 

 இப்படி தான் சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ஒரு புதுமுக இயக்குனர் "ஒரு படம் இயற்றினேன்  அந்த படத்திற்கு அங்கு போதுமான வரவேற்ப்பு இல்லை நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று என்னிடம் உதவி கேட்டு வந்தார். அந்த படத்தை பார்க்காமலே வெறுமனே அந்த இயக்குனரின் முகத்தை மட்டுமே பார்த்து அந்த படம் எப்படி இருக்கும் என்ற கணிப்பில் நான் ஒரு விமர்சனம் எழுதி வெள்ளை மாளிகைக்கு போஸ்ட் செய்தேன். இத்தனைக்கும் அப்போது நான் பிரபலபதிவர் கூட இல்லை வெறும் லோக்கலாகத்தான் இருந்தேன். அப்புறம் என்ன அந்த படம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. ஹ்ம்ம்ம்.... அந்த படம் பெயர் Terminator,  இயக்குனர் பெயர் ஜேம்ஸ் காமிராமேன். நான்கூட கேட்டேன் காமிராமேன் என பெயர் வைத்துகொண்டு ஏன் இயக்குனராக ஆன அப்பாவியான இளைஞர் அவர். அதனால்தான் இன்றுவரை அவர் எந்த படம் எடுத்தாலும் அந்த படத்தின் முதல் ஷோக்கு டிக்கெட் அனுப்பி வைத்துவிடுவார். நான்தான் படம் பார்பதற்காக பாரின் போகனுமா என்று இருந்துவிட்டேன். இப்படி நிறைய பேர் என்னால் முன்னேறி இருக்கின்றனர்.  பிரபல பதிவரான எனக்கு இதெல்லாம் என்ன பெருமையா...கடமை.. சரி.. கழுதைய பத்தோட பதினொன்னா போயிட்டு போது என அந்த யாருக்கு யாரோ படத்தை பார்க்க முடிவு செய்தேன்.

ஒரு நாள் என்னை நானே free ஆக்கிக்கொண்டு தியேட்டர்க்கு சென்றேன். அங்கே வேறு எதோ போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். நான் வாட்ச்மேனை அழைத்து "என்னப்பா , யாருக்கு யாரோ படம் போஸ்டர் ஒட்டாம வேற எதோ ஒட்டிருகிங்க." என கேட்டேன் அதற்க்கு அந்த வாட்ச்மேன்," இல்ல சார் அந்த படம் ஓடல,அதான் வேற படம் போட்ருக்கோம் என்றார். எனக்கு செம டென்ஷன் ஆயிருச்சு, "த்தா.. என்னடா நெனச்சிருக்கிங்க.. நல்ல படம் ஓடலன்னு நீங்க எப்படிடா சொல்லலாம். நான் நெனச்சா என் எழுத்து மூலம் ஓடாத படத்தை ஓட வைப்பேன் , ஓடுற படத்தை உக்கார வைப்பேன்"என்றேன். வாட்ச்மேன் குழப்பமாக, "அது இல்ல சார், அந்த படம் இந்த தியட்டரில் ஓடல, வேற தியேட்டர்ல ஓடுமா இருக்கும். நல்ல பாருங்க"ன்னு சொன்னார். எனக்கு இது மேலும் கடுப்பை கெலப்பியது. ''ம்மா.. அது எப்படிடா அந்த தியேட்டர்ல ஓடுற படம் உங்க தியேட்டர்ல மட்டும் ஓடாதா.. த்தா மரியாதையா உங்க மேனேஜரை கூப்பிடு நான் பேசிக்கிறேன்'' என்றேன். மேனேஜர் என்னைபார்த்து முறைச்சபடி, "த்தா கிறுக்கு நாயே ஓடி போயிரு, எங்க அந்த படம் ஓடுதோ அங்க போய் பாரு" என்று சொல்லி கன்னத்தில் பளார் என்று ஒன்னு விட்டார். நான் கன்னத்தை தடவியபடியே அந்த படம் ஓடும் தியேட்டர்க்கு வந்து சேர்ந்தேன். வரவர இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது.

ஒருவழியாக அந்த திரைப்படத்தை இன்று காலை பத்து மணி ஷோவில் எஸ்டர்டே நைட் பார்த்தேன். படம் முடிந்த பின் என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். எப்படி இப்படிபட்ட ஒரு அற்புதமான படைப்பு  மக்களுக்கு பிடிக்காமல் தோல்வியை சந்தித்தது என்று. எந்த திரைப்படத்தையும் நான் அவ்வளவு எளிதாக பாராட்டிவிட மாட்டேன். உதரனத்திற்க்கு இப்போது வெளிவந்த நான் ஈ திரைப்படத்தை எல்லாரும் ஆஹா ஒஹோ என புகழ்கின்றனர்.ஆனால் எனக்கென்னவோ அது புடிக்கவில்லை.அது எப்படி அவ்வளவு பெரிய மனிதனின் உயிர் ஈ முட்டைக்குள் போகும். முட்டையை சுற்றி ஒரு ஓட்டை கூட இல்லையே. படத்தில் இப்படி நிறைய ஓட்டைகள். ஆனால் இந்த யாருக்கு யாரோ படம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. I just enjoyed it..!! யாருக்கு யாரோவை ஒன்றி பார்த்தபோது ஒன்பாத்ரூம் வந்தது. இதைவிட என்னவேண்டும் ஒரு நல்ல படத்தில்?

யாருக்குயாரோ ஒன்லைன்:


சாம் ஆண்டர்சன் என்ற அழகான, அறிவான  கார் விஞ்ஞானிக்கு காதல் வந்தால் என்ன ஆகும்? இதுதான் ஒன்லைன்.

யாருக்கு யாரோ கதை:
வாவ்.. அசத்தி இருக்கிறார்கள். பின்னி இருக்கிறார்கள். புதுமுகங்கள் அவ்வளவு அனுபவசாலிகளாக நடித்திருக்கிறார்கள். சாம் ஆண்டர்சன் டான்ஸில் பின்னி எடுக்கிறார். அதுவும் "ராசாத்தி" என அவர் உருகி பாடி ஆடும் போது என் காதல் காலங்கள் நினைவுக்கு வந்தன.

                                                     

சாம் ஒரு கார் விஞ்ஞானி. அவரை இரண்டு பிகர்கள் காதலிக்கிறார்கள். ஆனால் காரில் ஏற்கனவே மூன்று பேர் இருப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. பின் காதலர்கள் இணைந்தார்களா? காரில் இடம் கிடைத்ததா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


சுவாரசியங்களில் சில:
டிக்கெட் வாங்கமல் வழக்கமாக கூட்டத்தோடு கூட்டமாக தியேட்டருக்குள் நுழையும் நான் இந்த படத்துக்கு கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கவேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். உலகசினிமா பலவற்றை கரைத்துகுடித்த எனக்கே தமிழகத்தில் இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது. முதல்முறையாக டிக்கெட் எடுத்து படம் பார்த்தது சுவாரசியமாக இருந்தது. சரி இந்த படத்தை இப்போது எழுத என்ன காரணம்? எனக்கும் வேலை இல்லை உங்களுக்கும் வேலை இல்லை. அதைவிட என்ன பெரிய காரணம் இருந்துவிட போகிறது? படத்தில் அங்கங்கே சில சொதப்பல்கள் இருந்தாலும் டைட்டிலில் யாருக்கு யாரோ என போட்டது புதுமையாக இருந்தது. வழக்கமாக ஆங்கில படங்களில் மட்டுமே சாம், ஹேரி என பெயர்கள் இருக்கும். முதல்முறையாக தமிழ்படத்தில் அப்படி பெயரை பார்த்தவுடன் இயக்குனரின் திறமையை நினைத்து பிரமித்துவிட்டேன். ஹீரோயின் இரண்டுபேரும் த்ரிஷாவுக்கும், டாப்ஸிக்கும் டப் பைட் கொடுப்பார்கள். என் கண்டுபிடிப்பான ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டில் அவர்கள் இடம்பெறப்போகும் காலம் வெகுதூரம் இல்லை. யெஸ் தே டிசர்வ் இட்!


                                           


பைனல் கிக்:
இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். முதல் 20நிமிடம் போனதே தெரியவில்லை. ஏனெனில் நானே இருபது நிமிடம் கழித்துதான் போனேன். இந்த சக்கையான படத்தை மொக்கையான படம் என சிலர் சொன்னார்கள்.  அவர்கள் அறிவு அவ்வளவுதான். ஓரு நாயகன் உதயமாகிறான்..!! கண் கலங்கிவிட்டது