இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் இன்று ஆபிஸ் சென்ற உடன் வயிற்று போக்கு என்று சொல்லி மேனேஜரை ஏமாற்றி விட்டு கிளம்பி விட்டேன். (எண்டா உனக்கு வெக்கமா இல்லையானு கேக்க கூடாது). ஈரோடு பதிவர் நண்பர் வெட்டி வீலாயுதமும் அவரது ஆபீசில் காலில் தலைவலி என்று பொய் சொல்லி அவரது மேனேஜரை ஏமாற்றிவிட்டு வந்திருந்தார். பிறகு இருவரும் படம் பார்க்க கிளம்பினோம்.
ரஜினிக்கு ஜனா அஜித் போல் ஒரு ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தப்பு இல்லை. அதற்கு ஸ்க்ரிப்ட் நன்றாக அமைந்தால் மட்டும் பத்தாது. அதற்கு விஜயின் அர்பணிப்பு, பாடி மேயிண்டனன்சில் விஜய டி ராஜேந்தரின் உழைப்பு, நகுலனனைப்போல் பல வருட அனுபவம் இதெல்லாம் தேவை.
ஜனா படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து வந்திருக்கும் படம் தான் பாட்ஷா. (என் டீ அடிக்கவில்லை என்று கேட்க கூடாது) படத்தில் ஹீரோ முதல் பாதியில் மிக அமைதியாக இருக்கிறார் (ஏன் அவரு ஊமையான்னு கேக்க கூடாது) பின்னர் இடைவேளையில் தங்கச்சியை வில்லன் ரேப் செய்ய ட்ரை பண்ணும் போது ஹீரோவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து சண்டை போடுகிறார். பின்னர் பிளாஷ் பேக்கில் ஹீரோ ஒரு பெரிய நல்லது செய்யும் தாதா என்பது தெரிய வருகிறது. (ரொம்ப புது ஸ்டோரி ). அட போங்கப்பா எத்தனை படம் இதே மாதிரி பாக்குறது? இந்த படம் ஜனா, பகவதி, அரசு போன்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதை அப்பொழுதே கண்டுபிடித்து விட்டேன்.
நான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு அசிஸ்டன்ட் ஆகா ட்ரை செய்து கொண்டு இருப்பதால் இது போன்ற விஷயங்களை உடனே கண்டுபிடித்து விடுவேன்.( பல வருசமா நீ ட்ரை மட்டும் தானடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேக்கக் கூடாது)
படத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் நக்மா.. கும் என்று இருக்கிறார். அவருக்காக மட்டுமே குடுத்த காசு தகும். அதுவும் ஸ்டைலு ஸ்டைலுதான் பாட்டில் அவரது costume மிக பிரமாதம். நான் ரசித்து ரசித்து பார்த்தேன். இன்னும் ஒரு ஹீரோயினை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ரகுவரன் சுமாரான வில்லனாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவரை பார்த்தல் வில்லன் போன்றே தோன்ற வில்லை. அவரும் படத்தில் டபுள் ஆஷனில் நடித்து இருக்கிறார். அவர் நக்மாமை ரேப் செய்வது போல் ஒரு சீனை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்:
1 . மாணிக்கம் அண்ணன் இந்த பணத்த குடுத்துட்டு வர சொன்னாரு
2 தங்கசிக்கு கண்ணாலம் வச்சிருக்கேன் கண்டிப்பா வந்துருங்க
3 . ரஜினி: "come" ya
நக்மா: coming ya
4. எனக்கு சண்டைன்னாலே பயம்
5 . யாருடா இந்த இந்திரனுக்கு அரஸ்டு வாரண்டு குடுத்த ஆம்புள?
6 . இனிமேயும் எங்களால பொறுக்க முடியாது
7 . நாம வச்ச bomb ah பாட்ஷா எடுத்துட்டான்
8 . ரகுவரன் : "சலாம் அலைக்கும்" பாட்ஷா பாய்
ரஜினி : "அலைக்கும் அஸ்ஸலாமு" ஆண்டனி
9 . சொல்லுங்க ... சொல்லுங்க.. சொல்லுங்க.... நீங்க யாரு... நீங்க யாரு... நீங்க யாரு?
10 . "என் பொண்டாட்டி புள்ளைய கொன்னது யாரு? "
டைரக்டர் கைதட்டல் பெறும் இடங்கள்:
1 . டைட்டில் போடும் பொது தமிழிலும் இங்கிலீசிலும் மாற்றி மாற்றி போட்டது புதுமை .
2 . ரஜினியின் தங்கச்சியையும் அழகான பெண்களாக தெரிவு செய்ததற்கு ஸ்பெசல் கைதட்டல்
3 . கோயிலில் இருந்து எடுத்த பாமை ரஜினியை கரைக்டாக தண்ணிக்குள் தூக்கி வீச செய்ததற்கு
4 . படத்தில் ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நக்மாவுக்கு கொடுத்ததற்கு
.5 ரஜினியின் நண்பன் சிங்கை கொன்று sentimentilum பூந்து விளையாடியதற்கு
இயக்குனரிடம் சில கேள்விகள்:
1 . இந்த படத்துக்கு ரஜினிய என் ஹீரோவா போட்டீங்க?
2 . நக்மா மொத சீன்ல எதுக்கு செகப்பு கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வராங்க?
3 . யுவரானிய ஆனதராஜ் தள்ளிவிடும் பொது ஏன் யுவராணி விழுகுறாங்க?
4. உங்க வீட்டுல இன்னிக்கு என்ன கொழம்பு?
5. ரஜினி பாம்பெயிலருந்து சென்னைக்கு டிரைன்ல வந்தாரா இல்ல ப்ளைட்ல வந்தாரான்னு படத்துல நீங்க காமிக்கவே இல்ல.
7. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?

இந்தப் படம் எல்லா சென்டர்களிலும் தியேட்டரில் ஓடும். மற்ற அனைத்து சென்டர்களிலும் இரண்டரை மணி நேரம் ஓடும். இந்தப் படத்தை நான் KTV தியேட்டரில் பார்த்தேன்.
இந்த படம் A சென்டரில் 2 .30 மணி நேரம் ஓடும்
B மற்றும் C சென்டர்களிலும் 2 .30 மணி நேரமே ஓட வேண்டும். ஒரு பாடலை கட் செய்தால் 2 .25 மணி நேரம் ஓடும்
எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் - அஃக்மார்க்
கே.பி கமெண்ட் - பாரத் மாதா கீ ஜே.
கே.பி கமெண்ட் - பாரத் மாதா கீ ஜே.
37 comments:
ரசிச்சு படிச்சு சிரிச்சேன் நண்பரே!
மூன்றாம் கோணம் வலை பத்திரிக்கை
awesome... u just made my day... keep rocking
nallaa irukku...vaalththukkal
தலைப்பை உஏன் மாற்றினீர்கள்...? (நக்மா கவர்ச்சி + ரகுவரன் கிளர்ச்சி)
asathal
கலக்கல் ....
:))
அசத்தல் பகடி. கீப் இட் அப்
இது (இவர்) உங்களுக்கு சரியா வரல தலைவரே.. அவர் ஸ்டைல இன்னும் நீங்க கத்துக்கணும்.. கன்னி முயற்சிக்காக பாராட்டலாம்.. (நான் ரொம்ப எதிர்பார்க்கறேனோ..?)
அப்பறம் நீங்க இந்த புர்ச்சி பத்தில்லாம் பேசமாட்டீங்களா?
வழக்கம் போல சூப்பரு
:))))))) செம!
/7. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?//
சத்தம் போட்டு சிரித்து.. ஆபீஸ்ல எல்லாரும் திரும்பி பார்த்து ..
same ஆய்ருச்சு sam .
தூள்..அடிச்சு கிளப்புங்க பாசு..............
முடியல! அடங்கோ...
இன்னும் மசாலா சேர்த்திருக்கலாம்//இன்னைக்கு உங்க வீட்ல என்ன குழம்பு//விழுந்து விழுந்து சிரித்தேன்.சாமா,கொக்கா?
//ஜெட்லி: பிட்டு பட விமர்சகனா வேல பாக்குறேன்.
கவுண்டர்: இன்னும் கொஞ்ச நாள் அதையே பண்ணு.. அவங்களே வந்து உன்ன கூட்டிகிட்டு போவாங்க...
//
அடிக்குற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டும்
The Best Comedy Post in this year..:-))) Sema...:-))
fantatsic.........keep rocking.......
ha ha ha
Ha. . Ha . . Ha . . Really superb comedy
உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்ச்சேன். பவுன்ஸ் ஆவுது. சரியான மெய்ல் ஐடி சொல்லுங்களேன்..
-ஃப்ரெண்ட்.
ஏம்பா ஏன்?இன்னும் நல்லா படிச்சு முன்னேறணும்!
தல.. இந்த முன்னாள் பதிவர்களை எல்லாம் கணக்கில் வைக்க மாட்டீங்களா?
அப்படின்னா.. இந்த ‘ஹாலிவுட் பாலா’-ன்னு ஒன்னு எய்தி எய்தி கடைசில ப்லாகை அழிச்சிட்டு ஓடிடுச்சி.
வேணும்னா அதையும் எழுதுங்க. அது ஆளே செம காமெடி பீஸூ.
இப்ப அது ஏரியாலதான் சுத்திகிட்டு திரியுதாம்... கண்ட கண்ட பேர்ல கமெண்ட் போட்டுகிட்டு.
எதுனா பாத்து பண்ணுங்க. :)
nice comedy
ayya rasa!!!!!!!! where is சைபர் க்ரைம் ஆபீசில் ஜெட்லி?
நல்ல முயற்சி.... இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு பகடியாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
அண்ணே இந்த தமிழ்நாட்டில வாழ பழகன்னு ஒரு பதிவு கேட்ட நியாபகம்?
ரொம்ப நாள் ஆச்சு, இந்த மாதிரி சிரிச்சு!
முடியல :)
யோவ சூப்பரா இந்த மாதிர் எல்லா பழைய படங்களையும் விமர்சனம் பண்ணுங்க..நான் நல்லா சிரிச்சு மாமாங்கம் ஆச்சு!!நீங்க அதை செய்யுறீங்க!!
thoranam thonga vittirukkalaam. irunthaalum sara vedi thaan.
ஹாஹாஹா செம.... சென்னியார் அளவுக்கு படங்கள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் :)
hahhhhhhhhhhhhhhaaa roflllllllllll
அட்ரா சக்க !! ;)
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி