மீண்டும் ஒருமுறை
என்னுடைய இனிமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முறை இன்னும் சுவாரஸ்யமாக 5 star ஹோட்டலில். 5 star hotel என்ன
சுவாரஸ்யம் இருக்க போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இரவில் கூட light
போடாத கஞ்சத்தனம், சமையல் செய்யும் போது கரை பிடிக்குமே என்ற அறிவு
இல்லாமல் வெள்ளை உடை அணிந்திருக்கும் சமையல் கார்கள், கல்யாண வரவேற்பில் மாப்பிள்ளை அணிந்திருப்பது போல கோட்
அணிந்து திரியும் சப்ளையர்கள். பாடல் கேசட் வாங்க வசதி இல்லாமல் வெறும் இசை
மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் டேப்ரெகார்டர்... இது போல் முகம் சுளிக்க வைக்கும் பல
விஷயங்கள் ஹோட்டலில் உள்ளது..
அதனால் தான் எப்பவும்
நான் அங்கு செல்வதே இல்லை. மேலும் அங்கு எவ்வளவு நேர்மையான ஆட்களாக இருந்தாலும்
அக்கௌன்ட் வைக்க விட மாட்டார்கள். தள்ளு வண்டி கடை, ஆயா கடை, தட்டி விலாஸ் போன்றவை தான் எப்பவுமே என் சாய்ஸ்.அதுவும் என் வீட்டருகில்
உள்ள ஒரு வண்டிக்கடை அண்ணன் வேர்க்க விருவிருக்க சுடும் தோசையின் சுவை
அலாதி...பழைய பாக்கியை அவர் கேட்க்கும் விதம் அதை கண்டுக்கொல்லாத மாதிரி நின்று
கொண்டு சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு முறை என் வாசகர்
ஒருவர் என்னை காணவந்தார். எப்போதும் என்னை பார்க்க வருபவர்களுடன் ஒரு வேலை உணவு
வாங்கி சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. அதற்கு காரணம் அவ்வளவு தூரத்திலிருந்து
என்னை காண வந்தவர்களுக்கு என்னுடன் சாப்பிடும் பாக்கியத்தை அளிக்க விரும்புவேன்.
பில்லை கூட அவர்களையே தர சொல்லுவேன், அப்போது தான் அவர்களுக்கு என்னை தொந்த்தரவு செய்தததாக தோனாது. இப்படி
தொலைநோக்கு பார்வையோடு நான் செயல்படுவதால் தான் உலகநாயகன் முதல் ஒபாமா வரை
என்னுடன் பழக ஆசை படுகிறார்கள்.
வழக்கம்போல் என்னை
சந்திக்க வந்த வாசகருக்கு அடப்பு போட்டு சாப்பிட அழைத்து செல்லுமாறு
கூறினேன்.தற்கு மேல் நடந்ததை கட்சியாக கூற விரும்பிக்றேன். படித்து ரசியுங்கள்
வாசகர்: 'சார் பக்கதுல buffet சாப்பிட
போவோம
நான் : அப்படினா
பூங்கொத்து தான?? என்ன சார் அத போய் யாரவது சாப்பிடுவாங்களா? நம்ம ஆய கடை பக்கத்துல இருக்கு வாங்க ஆளுக்கு
ரெண்டு இட்லியும் நாலு ஆப்பாயிலும் சாப்ட்டு கெளம்புவோம். அப்படியே வீட்டுக்கு
நாலு இட்லி பார்சல் வாங்கிக்கிறேன்.
வாசகர்: ஐயோ சார் அது
boque நான் சொல்றது buffe ஹோட்டல்ல போடுவாங்களே அது.
5 star ஹோட்டலில்
எனக்கு பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் ஆசைக்காக சென்றேன்.
star ஹோட்டலில்
( வாசகர் தன்
விருந்தாளி ஒருவரை சந்தித்து அவருடன் பேச சென்று விட்டார் )
நமக்கு தான் ஆகாதே.
சரி எதோ வந்துவிட்டோமே சாபிடாவிட்டால் அவர் மனது சங்கட படுமே என்று மனதை
திடபடுத்திகொண்டு ஆரம்பித்தேன்.
நான்: (டை கட்டிய
சர்வரிடம்) : ஏன் தம்பி buffe nu எதோ
சொல்றங்களே அப்படினா என்ன?
சர்வர்: சாப்பாடு
எவ்வளவு வேணாலும் எடுத்தக்கலாம். கட்டுப்பாடு கிடையாது.
நான்: அட தக்காளி..
நல்லா இருக்கே. சரி அப்போ ரெண்டு buffet பார்சல் பண்ணி கொண்டு வா.. தயிர் பச்சடி மறந்துறாத.. ஓடு..
சர்வர்(கோவமாக):
சார்.. அதெல்லாம் பார்சல் பண்ண முடியாது. இங்கேயே சாப்பிட மட்டும் தான்.
என்னாங்கடா உங்க
சட்டம் என்று அலுத்து கொண்டு தட்டை ஏந்திக்கொண்டு சென்றேன்.
நான்: டேய்.. த்தா...
என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. என் மேல ஒருத்தன் கை வச்சிட்டான். கூப்பிடுடா
மொதலாளிய.
மானேஜர்: என்ன சார்..
என்ன பிரச்சனை?
நான்: உங்க ஆளுதானடா
எவ்வளவு வேணாலும் எடுத்துக்க சொன்னான். அப்புறம் ஏன்டா இந்த மொட்ட என்ன அடிச்சான்?
மானேஜர்:
(விசாரித்துவிட்டு):(என்னிடம்): டேய் எவ்வளவு வேணா எடுத்துக்கனு சொன்ன நீ அவன்
தட்டுல இருந்து எடுப்பியா? மரியாதையா
பாத்திரத்தில இருந்து மட்டும் எடுத்துக்க.
(தண்ணி குடித்து உடலை
குலுக்கி சரி செய்துவிட்டு மீண்டும் பிரியாணி பக்கம் சென்றேன்.)
வந்து பார்த்தால்
டேபளில் நான் விட்டு சென்ற தட்டை காணவில்லை.
நான்: என்னடா ஹோட்டல்
நடத்துறீங்க.? வச்சிட்டு போன தட்ட
அதுக்குள்ளே எவனோ திருடிட்டான். அதுல நான் பாதி சாபிட்டு வச்சிருந்த 'நல்லி'ய காணோம்.
மறியாதைய கதவை மூடி
எல்லாரையும் செக் பண்ணு,இல்ல செம
காண்டு ஆயிருவேன்...
மானேஜர்: சாரி சார்..
நீங்க சாபிட்டு வச்சிட்டு போனத பாத்துட்டு தெரியாம மிச்சம் வச்சிடிங்கன்னு கிளீன்
பண்ணிட்டு போய்டாங்க. வேணும்னா இன்னொரு ப்ளேட்ல கொண்டு வர சொல்லவா சார்?
நான்: யோவ்.. என்ன
பாத்தா என்ன அடுத்தவன் மென்னு போட்டாத தின்கிற மாதிரி இருக்கா? ம்மா.. யாரு கிட்ட உங்க வேலைய காட்டுறிங்க?
மானேஜர்: ஐயோ.. இல்ல
சார். புதுசாதான் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்..
நான்: ஒஹ்.. அப்படியா?
சரி சரி... நல்லா பெரிய 'நல்லி'யா அள்ளி போட்டு கொண்டு வா..
சாப்பிட்டுவிட்டு
கப்போடு போனபோது..
சர்வர்: சார்.. deserts
அந்த பக்கம்.
நான்: யோவ் என்னைய
என்ன கேனப்பையனு நெனச்சியா? நம்ம
ஊர்ல ஏதுயா desert ?
சர்வர்: அந்த desert
இல்ல சார்.. ஐஸ்கிரீம் , சாலட் அந்த மாதிரி.
நான்: அடிங்... ம்மா.. ஏன் அத ஐஸ்கிரீம்னு தமிழ்ல சொல்ல
மாட்டியா? சரி..சரி..
மனிச்சிடேன். போ..
ஒரு வழியாக வேண்டா
வெறுப்பாக சாபிட்டு முடித்துவிட்டேன்.
(இன்னும் என்னுடன்
வந்த வாசகர் உள்ளே வரவில்லை)
சர்வர்: சார்..செக்.
நான் : யோவ்..இது
என்ன பேங்க்கா செக் கேக்குற ? என்னையா
ஹோட்டல் நடத்துற ? நான் நெனச்சா
உங்க ஹோட்டல் தலையெழுத்தையே மாத்திருவேன்.
மானேஜர்: சார். அவரு
பில் கேட்டாரு.
நான்: என்கிட்டயே
பில் கேக்குறியா? நான் பிரபல
ப்ளாக் பதிவாளர்.
மானேஜர் (கடுப்பாக) :
நீ சார் பதிவாளரா இருந்தாலும் பில் கொடுத்துதான் ஆகணும்.. மரியாதைய பணத்த எடு.
(ஒரு வழியாக வாசகர் வந்து பில் கொடுத்து என்னை காப்பற்றி
விட்டார்)
(வெளியே செல்லும்
போது)
வாசலில் கதவு திறந்து
விடுபவர்(தலை சொறிந்தபடி): சார்.. டிப்ஸ்??
நான்: உங்க ஹோட்டல்
எனக்கு சுத்தமா புடிக்கல... இருந்தாலும் உனக்காக டிப்ஸ் தரேன்.
கருவேப்பில்லை, மருதாணி , கொஞ்சம் களிமண் சேர்த்து அரைத்து தலைல தடவி மொட்டை
மாடில படு. இப்படி ஒரு வாரம் செஞ்சா முடி காடு மாதிரி வளரும்.
வாசலில் கதவு திறந்து
விடுபவர் : டேய்.. உனக்கு டிப்ஸ்னா என்னான்னு தெரியலைனா கூட பரவாயில்ல.. ஆனா நீயெல்லாம்
முடி வளர டிப்ஸ் கொடுத்தா பாதிய அதைதான் என்னால தாங்க முடியல.. ஓடி போயிரு இனிமே
இந்த பக்கம் எட்டி கூட பாக்காத. ஓடிரு...
16 comments:
உங்க பக்கம் லோடு ஆக மிக நீண்ட நேரம் எடுத்துக்குது....
உலவு கோடிங் எடுங்க....
waitinga ulavu-னு காட்டிகிட்டே இருக்கு...
இந்த பக்கம் லோடு ஆக சுத்தமாக அரை மணி நேரம்
எடுத்துக்கொண்டது....
நன்றி...
உண்மையிலே சிரிக்கிற மாதிரி இருந்தது......ரொம்ப நேரம் சிரிச்சேன்...
வரவர எது ஸ்பூப் எது ஒரிஜினலுன்னே தெரிய மாட்டேங்குது... இப்போல்லாம் பக்கி லீக்ஸ் படித்த பின்புதான் ஒரிஜினல் படிக்கிறேன்... பக்கி லீக்ஸ் படிக்கும்போது இதுவே இப்படி இருக்குதுன்னா ஒரிஜினல் எப்படி இருக்கும் என்ற மலைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை... ஜெய் ஜாக்கி...!
தம்பி! உங்க பதிவை நான் இப்பத்தான் படிக்கிறேன்...ஆனா இரண்டு பேரும் ஒரே மேட்டரை எழுதியிருக்கோம்...!நான் காப்பி பேஸ்ட் பண்ணல..எவனாவது என்னை காப்பி பேஸ்ட்டுன்னா டெரர்ராயிடுவேன் டெரர்...அகப்பைதான் வேற குழம்பு எடுத்த இடம் ஒரே சட்டிதான்!
இப்படிக்கு
சூனா பானா!
Onnume puriyalaye
ithukkellam source link tharamudiyuma?:)
நான் உகாண்டாவிலிருந்து சுசிமிசுபு எழதிறேன்,இந்த பதிவை எங்கள் ஜெட்லி பாணியில் எழுத தவறிவீட்டீர்,....மா இர்தற்காகவே உம்மேல் உஙாண்டா உயர்நீதி மான்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ரு தெரிவித்து கொல்கிறேன்.நன்றாக எழுத முர்ச்கிவும் ---சுசிமிசுபு,உஙாண்டா ரசிகர் மான்ற தலீவர்.
இந்த கமென்ட் பாக்ஸ் என் அறிவார்ந்த உலகத்தரம் வாய்ந்த பதிவுகளுக்கு உங்கள் கருத்து என்ன என்பதை நான் அறிந்து கொள்ளவே... இங்கே பதிவு இடுபவர்கள் தங்கள் ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ், இன்ஷூரன்ஸ் ஜெராக்ஸ், கடைசியா சலவைக்கு துணி போட்ட ரசீது, கரண்ட் பில், மளிகை லிஸ்ட் என எல்லாத்தையும் கொடுத்துவிட்டு போடவும்.
வாசகர் கடிதம் எழுதியது போல எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன். ஜெட்லி சேகரை மிகவும் தரக்குறைவாக கெட்ட வார்த்தைல எல்லாம் திட்றீங்க. அது வேணாம்பா... அதையெல்ல்லாம் ஜெட்லி மானி நானும் வெளியிட மாட்டேன்பா. அம்புட்டுதான்...
ஹஹஹஹா சரியான காமெடி சூப்பர் சூப்பர் நீங்க இன்னும் நெறைய ஸ்டார் ஹோடேல்கு போகணும் நாங்க நல்ல சிரிக்கணும்
செம.
//உங்க ஹோட்டல் எனக்கு சுத்தமா புடிக்கல... இருந்தாலும் உனக்காக டிப்ஸ் தரேன்.
கருவேப்பில்லை, மருதாணி , கொஞ்சம் களிமண் சேர்த்து அரைத்து தலைல தடவி மொட்டை மாடில படு. இப்படி ஒரு வாரம் செஞ்சா முடி காடு மாதிரி வளரும்.
//
Ultimate.
arumai... migavum rasithaen... :)
arumai... migavum rasitaen...:)
Hello..please give the link..I could not find the original in jetli's blog :)
சக்கர கட்டி இந்த பதிவை வலைச்சரத்தில் குட்டி காட்டியிருக்கிறார்..உஹூம் சுட்டி காட்டியிருக்கிறார். சரளமான நகைச்சுவை.
hey yen ya ippdai.. avarum eatho build up panitu iruntharu yen ippdai.....
நான் 'தி இந்து' தமிழ் செய்தித்தாளில் இந்த வலைப்பதிவை படித்தேன்... மிகவும் பிடித்தது.
Post a Comment
இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி