சார். சாம் மார்த்தாண்டன் ஒரு தனிநபர் இல்ல சார். இது ஒரு நாலு பேர் கொண்ட குழு சார். ஜெட்லிசேகர் கொடுத்த கெட்டவார்த்தை டார்ச்சர் தாங்காம நேத்து புதுசா மூணு பேரு எங்க குழுல சேர்ந்திருக்காங்க சார். Moral Police பண்றதுக்காக நாங்க எழுதலீங்க சார். எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார். அப்படி எழுதுறது மூலமா மக்களை சிரிக்க வைக்கிறது சார். மக்களும் கடந்த ஒருவாரமா நல்லாவே சிரிச்சாங்க சார்.
Spoof பண்றப்ப பிரபலமா இருக்குறதை தான் சார் இன்ஸ்பிரேஷன் எடுத்துக்க முடியும். ஓடாத ப்ளாகை எல்லாம் இன்ஸ்பிரேசன் எடுத்தா மக்களுக்கு காமடி புரியாது சார். உதாரணத்துக்கு 'தமிழ்படம்' பாத்தீங்கன்னா பிரபல படங்களை தான் கிண்டல் பண்ணிருப்பாங்க. ஓடாத படத்தை கிண்டல் பண்ணா 'தமிழ்ப்படம்' ஓடிருக்காது.
பக்கி-லீக்ஸ் என்னைக்குமே கெட்டவார்த்தைகளையும் மற்றவர்களை தரக்குறைவா விமர்சிப்பதையும் அலோ பண்ணாது சார். இங்க வெறும் சிரிப்புக்குதான் முக்கியத்துவம். ஜெட்லியை தினமும் படிக்கிற வாசகர்கள் கூட எங்களை பாராட்டிருக்காங்க சார். அந்த அளவுக்கு ஆரோக்கியமா தான் நாங்க எழுதுறோம். தனிமனித தாக்குதல் பண்ணவே மாட்டோம்.
சில பிரபல பதிவர்களே "எங்க போஸ்ட்டையும் கலாய்ங்க சாம். படிக்க ஆவலா இருக்கோம்"னு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாங்க சார். இதுக்கு மேல பக்கி-லீக்ஸ் தரத்தை பத்தி என்ன சார் சொல்லனும்?
ஆனா ஜெட்லி இன்னைக்கு வழக்கம்போல அவரோட பாணில எங்களை திட்டிருக்காரு சார்.கெட்ட கெட்ட வார்த்தையா போட்டு. ஏற்கனவே எங்க முதல் பதிவுல இருந்து கெட்ட வார்த்தையா, வெளியிட முடியாத அளவுக்கு கமண்ட் போட்டுட்டு இருந்தாரு சார். நேத்து உச்சகட்டமா யாரையோ மூணூ பேரை அவர் பயங்கரமா திட்டி எங்களுக்கு கமண்ட் போட்டிருந்தாரு சார். அது வெளியாகிருச்சு. அப்புறம் அந்த மூணு பேரும் எங்களை தொடர்பு கொண்டு கமண்ட் டெலிட் பண்ண சொன்னாங்க சார். பதறியடிச்சு போய் பாத்தா அவ்வளவு அசிங்கம் சார். அப்புறம் உக்காந்து எல்லாத்தையும் அழிச்சோம். நாங்க ஜெட்லி மேல கொஞ்சம் மரியாத வச்சிருந்தோம். அவரே கெடுத்துக்கிட்டாரு சார். இன்னைக்கு அவர் ப்ளாக்ல எங்களை திட்டிருக்காரு. அவர் பதிவுகளை எவ்வளவு அழகா spoof பண்ணிருக்கோம் அதுக்கு நல்ல மனசு உள்ளவங்கள் எல்லாம் பாராட்டுவாங்க ஆனா இவரு சும்மாவாச்சும் இருக்கலாம்ல சார். அதவிட்டுட்டு அசிங்கமா பேசி கேவலமா நடந்துக்குறாரு.
சரி விடுங்க. புதுசா இணைந்திருக்கும் மூன்று நண்பர்களை வரவேற்கிறோம். அவங்க ஏற்கனவே கலாய்ச்சவங்கதான். இந்த தடவ தனிமனித தாக்குதல் இல்லாம எழுதி கொடுக்க சொல்லிருக்கோம். நல்ல ஆரோக்கியமான நகைச்சுவையை ரசிக்கும் வாசகர்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும்.
ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. அதைவிட்டுட்டு அசிங்கமா பேசுனா என்ன சார் அர்த்தம்? அதே வார்த்தைய நாங்க சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் சொல்லுங்க...
உண்மையான பேரை சொல்லி எழுதலாமேனு கேக்குறாங்க. அப்படி சொன்னா எங்க மேல முன்முடிவு எடுத்துருவீங்க. அது வந்துருச்சுன்னா நகைச்சுவை எடுபடாது. அதான் சாம் மார்த்தாண்டன் மூலமா எழுதுறோம். எங்க ஆல்டர் ஈகோ தான் மார்த்தாண்டன். இனி முழு வேகத்தில் செயல்படுவான்.
(வாசகர்களுக்கு வேண்டுகோள்: கெட்ட வார்த்தை பின்னூட்டம் போடாதீங்க பாஸ். நேத்து ரொம்ப ஆயிருச்சு. அதான் மட்டுப்படுத்துதல் வச்சுட்டோம். புரிஞ்சுக்கோங்க. எங்களுக்கு கமண்ட் தேவையில்ல. நீங்க சிரிச்சாலே போதும். ஆரம்பிச்ச ஒரே வாரத்துல தினம் 3000 பேருக்கும் மேல படிக்குறீங்க, சிரிக்கிறீங்க. அது போதும் பாஸ். மிக்கநன்றி வாசகாஸ்!)
எழுதிக்கிழிப்பது மட்டுமல்ல நீ.. சிரிக்கத்தெரிந்தால் தான் நீ....

EVER YOURS...