ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Tuesday, 12 June 2018

யாரு நிவேதிதா காலா பார்த்த கதை!!!


நேற்று வீட்டில் காலா பார்த்தேன். ஒரு ஆஃப் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே. நேரத்திலேயே டிவிஐ ஆப் செய்திருப்பேன்.  தமிழ் டிவி சீரியலைப் போலவே இருந்தது. ரஞ்சித் பாவம் சின்ன பையர். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படியா பயன்படுத்துவது? அரை மணி நேரமாகியும் ஒரு சூப்பர் ஸ்டாரை திரையில் காண்பிக்கவில்லை  என்றால் அது என்ன படம்?  பொதுவாக ஹீரோக்கள் தான் டபுள் ஆக்‌ஷன் ரோல் செய்வார்கள்.. இதில் ஹீரோயின் டபுள் ஆக்‌ஷன் என்பதும் எரிச்சலைத்தந்தது. சிறிது நேரம் கழித்து சமயற்கட்டிலிருந்து வந்த மனைவி “என்னங்க படம் எப்டி இருக்கு?” என்றாள்
“அத ஏன் கேக்குற.. சீரியல் மாதிரி இருக்கு.. ரஞ்சித் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றேன்.
ஒரு முறை என்னையும் டிவியையும் உற்றுப்பார்த்த பின்னர் “மூதேவி… உண்மையிலயே அது சீரியல்தான்… காலான்னு நினைச்சி போதையில வாணி ராணிய அரை மணி பாத்துக்கிட்டுருக்க” என்றதும் அடித்த ஆஃப்பும் குபீரென இறங்கியது.
சமகாலத் தமிழ் நடிகர்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் Johnny Sins.  நடிப்பு என்றால் Danny D என்றே பலரும் நினைக்கிறார்கள்.  உண்மையில் Danny D விட Johnny Sins மிகப் பிரமாதமான நடிகர்.  அவர் திரையில் தோன்றினாலே நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு தோன்றும்.  இந்த அளவு screen presence நிறைந்த நடிகர் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே யாரும் இல்லை என்றே சொல்லலாம்.  அவர் விரல் அசைந்தால் அது நம் மனதை காந்தம் போட்டு இழுக்கிறது.  அதனால்தான் அத்தனை பேருக்கும் அவரைப் பிடிக்கிறது.  ஜப்பானில் கூட அவர் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்.  இது அவருக்குக் கிடைத்துள்ள வரம்.

நடிப்பு பற்றி பாடம் எடுக்கக் கூடிய என் நண்பர் ஒருவரிடம் இந்தக் கருத்தை நான் சொல்லிக் கொண்டிருந்த போது நண்பர் அதை ஆமோதித்தார்.  பிறகு அவர் ஒரு உதாரணம் சொன்னார்.  ஒரு நிகழ்வைப் பார்க்கும் போது Johnny Sins, Danny D இருவரின் முகபாவம் எப்படி இருக்கும் என்பதை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.  நிகழ்வு இதுதான்:  ஒரு பெண்ணின் மேலாடை கீழே விழுந்து விடுகிறது.  அதை இருவரும் பார்க்க நேர்கிறது.  நடிப்புதான்.  இப்போது அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், Danny D கண்களில் காமம் தெரியும்; Johnny Sins கண்களில் கருணை தெரியும்.  இதுதான் உச்ச நடிப்பு.  படுக்கை அறைக் காட்சியில் தான் காமம் தெரிய வேண்டும்.  மேற்குறிப்பிட்ட காட்சியில் கருணைதான் தெரிய வேண்டும்.  அதனால்தான் அவர் Porn Super ஸ்டார்.  ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரை ஒரு மல்லு” கங்கா ரேஞ்சுக்கு ரஞ்சித்தால் மட்டுமே ஆக்க முடியும்
படத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு நான் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பூராவுமே ரஜினி குழந்தைகளோடு அமர்ந்து அம்புலி மாமா கதைதான் பேசிக் கொண்டிருக்கிறார்.  ஒரு குஜாலான காட்சிகளோ பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளோ இல்லாததால் நமக்கு தலை வேதனையாக இருக்கிறது.
படத்தில் குறியீடு அது இது என்று பலரும் எழுதியிருந்தனர்.  ஒரு குறியீடு எழவும் இல்லை.  நானும் மூன்று முறை ரீவைண்ட் செய்து, ஸ்லோமோஷனில் நகர்த்தியும் பார்த்தேன். ஒண்றும் தேறவில்லை,
நானா படேகர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்றார்கள்.. ஆனால் அவர் பூனையைப்போல் வந்து செல்கிறார்.. என்று எழுதிக்கொண்டிருக்கையில் “நானா படேகர் படத்துல எந்த சீன்ல வர்றாருன்னு சொல்லு பாப்போம்” என்று கிச்சனிலிருந்து மனைவியின் குரல் வந்தது.
“அந்த சின்ன பையன் செத்து கெடக்கும்போது லூஸ் டீ ஷர்ட் போட்டுகிட்டு சொல்லு காலா.. சொல்லு காலான்னு சொல்ற குரூப்புல மொதல்ல நிப்பானே… அவன்ந்தானே நானா படேகரு…” என்றேன்..
இந்த முறை மனைவியின் குரல் வரவில்லை. மாறாக சூர்யா சுடும் புல்லட் வேகத்தில் ஒரு தோசைக் கரண்டி வந்து என் மூக்கைப் பதம் பார்த்தது.
பாடல்கள் படு தண்டம்.  இசை மகா மட்டம்.  எனக்கு சந்தோஷ் நாராயணன் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் வெறும் ஆட்கள் கத்துவதை மட்டுமே மியூசிக்காகப் போட்டிருக்கிறார். ரஜினி வரும் காட்சிகளிலெல்லாம் “ஹாய்… ஊய்.. தலைவா” என ஒரே சத்தம்.. இப்படியா படத்திற்கு மீசிக் போடுவது.
ரஞ்சித்திற்கு படமே எடுக்கத்தெரியவில்லை. முதலில் தம்பி மிஷ்கின் எடுத்த முகமூடி திரைப்படத்தைப் ஒரு பத்து இருபது முறை பாருங்கள். நடிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் யுத்தம் செய் “கன்னித்தீவு பொண்ணா” பாடலில் ஒருவர் ஆர்மோனியப் பெட்டி வாசிப்பார்… கை விரல்கள் கூட எப்படி நடிக்கும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
சினிமா எடுக்க வேண்டும் என்றால் தலித் இலக்கியம் மட்டும் படித்தால் பத்தாது. “எக்ஸைல்” என்றொரு புத்தகம் இருக்கிறது. அதை வாங்கி முதலில் படித்துத் தொலையுங்கள். அதன் பிறகு உயிரோடு இருந்தால் படம் எடுப்பதைப் பற்றி யோசியுங்கள்!!!

Thursday, 9 June 2016

இறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்!!!




கார்த்திக் சுப்பராஜ் சிறு வயதிலிருந்தே என்னுடைய சீரிய எழுத்துக்களின் வாசகர் என்பதாலும், நான் உதவி கேட்டு அக்கவுண்ட் நம்பரை பதிவிலிடும் போதெல்லாம் பத்து ரூபாய் ரீசார்ஜ் கார்டு வாங்கி போஸ்டில் எனக்கு இரண்டு மூன்று முறை அனுப்பியிருக்கிறார் என்ற காரணத்தினாலும் இறைவி வந்த முதல் நாளே பத்து ரூவாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு முதல் ரோவில் அமரச்  சென்றேன்.
ஒரே கும்மிருட்டு. எதோ ஒரு நாதாரி என்னுடைய சீட்டில் டிஸ்ஷு பேப்பரை வைத்து இடம் போட்டிருந்தான். ”த்தா.. துண்டு போட்டு இடம் பிடிக்க இது என்ன டவுன் பஸ்ஸாடா” என மனசுக்குள் திட்டியபடி அந்த டிஸ்ஷூ பேப்பரை எடுத்தெரிந்து விட்டு அந்த சீட்டில் அமர்ந்தேன். படம் ஆரம்பித்தது. பத்து நிமிடம் கூட ஆகவில்லை. எதோ கையையும் காலையும் கட்டி செப்டிக் டாங்க் உள்ளே போட்டது போல் இருந்தது. போன வாரம்தான் டாய்லெட்டில் அமர்ந்து பிட்டு பார்த்து கொண்டிருந்த போது தவறுதலாக என்னுடைய மொபைல் தவறி சிங்க்கிற்குள் விழுந்து செப்டிக் டேங்கிற்குள் சென்றுவிட்டது. விடுவேனா.. உள்ளே இறங்கி அரை நாள் செலவழித்தாலும் கிண்டி ஃபோனை எடுத்துவிட்டேன். என்ன ஒன்று, வெள்ளைக் கலரில் இருந்த என்னுடைய மொபைல் அன்றிலிருந்து தங்கக் கலரில் மாறிவிட்டது.
ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் செப்டிக் டேங்கில் ஒருவரை கட்டிப்போட்டால் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். படம் ஆரம்பித்ததிலிருந்து அதே உணர்வு. இருபுறமும் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவர்களும் மூக்கில் கைவைத்து மூடியபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் படம் மலக்கிடங்கு எஃபெக்ட்டைத்தான் கொடுத்திருந்திருக்கிறது. சற்று நேரத்தில் லைட் அடித்தபடி தியேட்டர் ஊழியர் ஒருவர் அந்தப்பக்கம் வர, “ஏன்பா.. படம் என்ன இவ்வளவு கேவலமா இருக்கு.. மலக்கிடங்குல இருக்க மாதிரி இருக்கு” என்றேன்.
மேலிருந்து கீழ் வரை ஒரு முறை டார்ச் அடித்து என்னை உற்றுப் பார்த்த அவன், “மலக்கிடங்கு மாதிரி இல்லை நாயே… மலக்கிடங்கு தான்.. போன ஷோவுல கொழந்தை ஒண்ணு இந்த சீட்டுல ஆயி போயி வச்சிருந்துச்சி… அதக் கழுவி விடுறதுக்குள்ள நஜக்குன்னு இந்த சீட்டுல வந்து உக்காந்து தேச்சிட்டு இப்ப மலக்கிடங்கு, செப்டிக் டேங்குன்னு சீனப்போட்டுக்கிட்டு இருக்கியா? நாதாரி உன் பத்துரூவாய வேணா தர்றேன்… வாங்கிட்டு கிளம்பு.. சீட்ட கழுவனும்” என்றான்.
டக்கென்று சுதாரித்துக்கொண்டு “அப்டியா.. அப்டி எதுவும் இல்லையே.. இட்ஸ் நைஸ் சுமல்… படம் சூப்பரா இருக்கு.. நீங்க போங்க..” என சமாளித்தபடி சீட்டில நன்றாக சாய்ந்து உட்கார்ந்தேன்.
கார்த்திக் சுப்பராஜ்ஜிகிர்தண்டாவித்தியாசமான கமர்ஷியல் சினிமா. ஆனால் இறைவி ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம்ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறதுஇறைவி’. (நான்கு மாதமாக கார்த்திக் சுப்பராஜிடமிருந்து ரீசார்ஜ் கார்டுகள் எதுவும் வருவதில்லை)
அருள் (எஸ்.ஜே. சூர்யா)  ஒரு சினிமா இயக்குனர்அவருடைய படம் ஒன்று வெளிவராமல் கிடக்கிறதுநமது எக்ஸைலைப் போன்ற உலக மகா காவியம்என்னைப்போல அவரே அதைப் பலமுறை சொல்லிக் கொள்கிறார்முழுநேரமும்காலையில் ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரைகுடித்துக் கொண்டு கிடக்கிறார்ஆனால் நம்மைப் போல ஓசிகுடியில்லாமல் சொந்தக் காசிலேயே குடிக்கிறார். அருளின் தம்பி ஜெகனும் (பாபி சிம்ஹா) நண்பன் மைக்கேலும் (விஜய் சேதுபதி) சேர்ந்து குடிக்கிறார்கள்குடி, குடி, குடியோ குடிபேசிக்கொண்டே இருக்கிறார்கள்.எந்த டீச்சர் எந்த பையனுடன் ஓடிப்போனாள், பக்கத்து வீட்டு ஆண்டிக்கும் எதிர்வீட்டு அங்கிளுக்கும் என்ன லிங்கு” என்பது போல   ஏதாவது அர்த்தபூர்வமாகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லைஎப்பப் பார்த்தாலும் அவர் எடுத்த சினிமாவைப் பற்றியே பேசுகிறார்கள். 
நண்பன் மைக்கேலுக்கு ஒரு காதலிஅவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லைநடந்து கொண்டிருப்பது என்ன 1960இப்போதெல்லாம்திருமணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்தல்என்பது சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் அது பற்றி ஏன் மைக்கேல் யோசிக்கவில்லைநான் கூட நிறைய பெண்களை என்னுடைய வசியப்பேச்சின் மூலமாக facebook chat இல் கவர்ந்திழுத்து ஃபேஸ்புக்கிலேயே லிவிங் டுகெதராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அட்லீஸ்ட் என்னிடமாவது யோசனை கேட்டிருக்கலாம். யோசனை என்ற விஷயத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  
என்னபோரடிக்கிறதா?  உண்மையைச் சொன்னால் பத்து நிமிடத்திலேயே நான் தியேட்டரை விட்டு வெளியே ஓடியிருப்பேன்.  அப்படிச் சென்றிருந்தால் குழந்தையின் ஆய் இல் உட்கார்ந்ததை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் எதுவும் நடக்காதது போல் கொஞ்சநேரம் சமாளித்து விட்டு இடைவேளையைப் பார்த்த பிறகு எழுந்து சென்றேன்.
சிலைத் திருட்டு பற்றி சினிமாவில் வரக் கூடாது என்று சொல்லவில்லை.  ஏதோ கடையில் போய் சிகரெட் வாங்குவதைப் போல சிலை திருடுவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதுதான் பிரச்சினை.  அட்லீஸ் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது போல கஷ்டம் என்பதை காண்பித்திருக்க வேண்டும்.  
தெளிவான மனநிலையில் இருக்கும் ஒருவனை திடீரென்று யாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் சேர்ந்து விட்டால அவனுக்கு எப்படி கிருக்கு பிடிப்பது போல இருக்குமோ அதே போல இருந்தது எனக்கும்.  இடைவேளை வந்தது.  மெல்ல எழுந்து கூட்டத்தில் அங்குமிங்கும் தேடினேன். முன்பு வந்து என் முகத்தில் லைட் அடித்து ”டிக்கெட் பணத்தை திருப்பி தருகிறேன்.. ஓடிவிடு” என்று கூறிய தியேட்டர் ஊழியனைக் கண்டுபிடித்து “இடைவேளையுடன் செல்கிறேன்.. அஞ்சு ரூவாய திருப்பிக் குடு” என்றேன். ஏற இறங்கப் பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் “டங்” என்று என் தலையில் ஒன்று வைத்தான். தலை பனியாரம் போல் வீங்கியது. இருந்தாலும் நான் விடுவதாக இல்லை. அவன் பின்னாலயே சென்றேன். என் மேலிருந்து வீசிய மலக்கிடங்கு செண்ட் சுமல் அவனுக்குப் பிடிக்கவில்லை போலும். மூக்கைப் பொத்திக்கொண்டு பாக்கெட்டிலிருந்த 5 ரூவாய் நாணயத்தை எடுத்து தூக்கி வீசினான். அதைக் கவ்விக்கொண்டே ”ஓடுற பஸ்லருந்து ஒரு ரூவா விழுந்தா கூட ஓடிவந்து எடுப்பாண்டா இந்த யாரு நிவேதிதா” என மனதில் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தேன்.
நானும் மிஷ்கினும் ஆறாவது ரவுண்டில் இலக்கியம் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பதை கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் மண்டையில் திடீரென்று கட்டையால் ஒரு போடு போட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? டபுள் நரகமல்லவா.. அப்படித்தான் இருந்தது எனக்கும்.
இறைவி பற்றி நான் எழுதியதைப் பலரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லைஏனென்றால் நான் எழுதியது எனக்கே புரியவில்லை. எழுதும்போது ஏழாவது ரவுண்டு. இரண்டாவது பாதியில் எந்தக் காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லை; எதுவுமே நம்பும்படியாக இல்லை என நினைத்த பொழுதுஏன்னா நீ ரெண்டாவது பாதியே பார்க்க வில்லை”  என என் மனசாட்சி  என் முகரையில் காரித் துப்பியது. 
fetish என்பதற்கு முழு உதாரணம்இறைவி.  யாரும் fetish படம் எடுப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை.  ஆனால் எடுக்கும்போது நல்லதா நான்கைந்து பிட்டு இருப்பது போல் எடுங்கள் என்றே கூறுகிறேன். சன்னி லியோன்களும், ராதிகா ஆப்டேக்களும் பெண்மைக்கு பெருமை சேர்க்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் பெண்ணியம்பெண்களைப் பெருமைப்படுத்தும் படம் என்று சொல்லப்படுவதுதான் கலாச்சார சீரழவின் அடையாளம்.

பின்குறிப்பு:  இறைவியை கடுமையாக விமர்சிப்பதால் பல கண்டனங்கள் வந்தனநேற்றுகூட பால் வாங்கப் போகும்போது தெருமுக்கில் இருந்த நாய் ஓடிவந்து பம்மில் கடித்து வைத்துவிட்டது.  ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நான் சூர்யா நடித்த 24 என்ற குப்பைக்கு விமர்சனம் எழுதவில்லை.  மாதா மாதம் 10 ரூவாய் ரீசார்ஜ் கார்டு வாங்கிக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் நான்கு மாதங்களாக என்னை கண்டுகொள்ளவே இல்லாததால் ஏற்பட்ட ஆதங்கத்திலேயே இந்த விமர்சனத்தை எழுதினேன். 


Comments are closed
Working time 9am - 7pm

Sunday holiday

Tuesday, 14 July 2015

Baahubali – The beginning (2015) Tamil, Telugu, Hindi, Kannada & Urdu!!!



‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா?  உத்தம வில்லனைப் போன்ற ஒரு உலகத் திரைக்கதை இந்தப் படத்தில் இருக்கிறதா? அல்லது தசாவதராத்தைப் போன்ற ஒரு கிராஃபிக்ஸ் அளவுகோலையாவது எட்டியிருக்கிறார்களா? பார்ப்போம்.

ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த டைட்டிலிலேயே ஒரு பெரிய குறையக் கண்டுபிடித்து விட்டேன். படம் போடுவதற்கு முன்பு ஆப்ரேட்டரிடம் சென்று “ஹலோ தெலுங்கில் பாஹூபலி.. தமிழில் ஏன் பாகுபலி என்று போஸ்டர் ஒட்டிருயிருக்கிறீர்கள்? பாஹூபலி என்றுதானே இருக்க வேண்டும். அப்படியென்றால் பறந்த தோள்களை உடையவன் என்று பொருள்” என்றேன்.  . ஏற இறங்கப் பார்த்தவர் “அகன்ற தோள்களுக்கு” ஏதோ ரைமிங்காகச் சொல்ல வாயெடுக்க, நான் வாயை மூடிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

முதலில் நான் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் – கடவுள் வாழ்த்து!!!

ஒரு திரைப்படம் நமக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதைத் தாண்டி, வெறும் கண்ணை மூடிக்கொண்டு சினிமா பார்க்காமல், ஒரு சினிமா ரசிகனாக அதில் கதை, திரைக்கதை, வசனம், குத்துப்பாட்டு, பிட்டு சீன், பக்கத்து இருக்கை ஃபிகர், ஸ்க்ரீனில் இருக்கும் ஓட்டை, இண்டர்வலில் திங்கும் முட்டை பப்ஸ், தியேட்டர் கக்கூஸ் க்ளீன்லினஸ் போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து அனைத்து விஷயங்களிலும் அந்தத் திரைப்படம் நம்மை குஷிபடுத்துகிறதா என்பதைப் பொறுத்தே நாம் அந்தப் படத்தின் தரத்தை சொல்ல வேண்டும். அப்படித்தான் பார்க்க வேண்டும். நானும் அப்படித்தான் பார்த்தேன். தா.. பக்கத்து சீட்டில் மொக்கை பீஸ் என்றதும் ஆரம்பத்திலேயே மூட் அவுட் ஆகிவிட்டேன்.

பாகுபலியின் முதல் காட்சியே படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காட்டிவிட்டது. ரம்யா கிருஷ்ணனை போர் வீரர்கள் வேடம் கொண்டு இருவர் துரத்தி வந்தனர். அப்பொழுதே கண்டுபிடித்துவிட்டேன். இது ஒரு ராஜா காலக் கதை தான் என்று. எதிர்பார்த்தது போலவே கடைசி வரைக்கும் எல்லா காட்சிகளுமே அந்த காலத்தில் நடப்பது போன்றே அமைக்கப்பட்டிருந்தது பெரும் வேதனை.

நமக்கும் ஆந்த்ராவுக்கும், ஹீரோ அடித்தால் வில்லன் இங்கு பத்தடி பறப்பது, அங்கு பதினைந்தடி பறப்பது என்பன போன்ற சிறு சிறு வித்யாசங்கள் இருந்தாலும், இன்றய கால கட்டத்தில் விட்டலாச்சாரியா டைப் படங்களை நம்மால் ரசிக்க இயலாத காரியம். தமிழ்ப் படங்கள் இதுபோன்ற மொக்கைகளிலிருந்து விடுபட்டு இன்று நேற்று நாளை போன்ற உலக்கபடங்களை ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் பாகுபலியை இந்தியாவின் ப்ரம்மாண்டம் என எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?  

தண்ணீருக்குள் தன் இஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. எப்படி தண்ணீருக்குள் ஒரு மனிதனால் நடக்க முடியும்?  அதுவும் அவள் பின்னால் இருக்கும் அருவி CG என்பது எனக்கு மட்டும் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. தியேட்டரில் மற்ற அனைவரும் அது என்னவோ ஒரிஜினல் அருவி என நம்பி வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். நான் படித்த காம ரூபக் கதைகள், எக்ஸைல் போன்ற புத்தக அறிவை வைத்தே அது CG என்பதை என்னால் மட்டும் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. ஒரிஜினல் தண்ணீருக்குள்ளே நடப்பதே முடியாத ஒன்று எனும்போது, CG செய்யப்பட்ட தண்ணீருக்குள் எப்படி ஒரு பெண்ணால் நடக்க முடியும்? இப்படி கொஞ்சம் கூட ஒன்றாத காட்சிகளுடனேயே பாகுபலி தொடங்குகிறது. இந்த ஒரு காட்சியிலிருந்தே படத்தின் மேக்கிங் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பது தெரிந்துவிடும்.  

”படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அதை எப்படிக் கற்பனை செய்துகொள்வது?” என்றேன் அருகிலிருந்தவரிடம். “ஏன் நாயே கதை புக்கா படிக்கிற? கற்பனை பன்னிக்கிறதுக்கு… அதான் எல்லாத்தையும் அதுலயே காமிக்கிறாய்ங்கல்ல… மூடிட்டு பாரு” என்றார். இவ்வளவு நேரம் கண்ணை மூடி கற்பனை செய்து கொண்டிருந்த என் அறிவுக்கண்ணை அதிகபட்சம் இரண்டே கெட்ட வார்த்தைகளிலேயே மடார் என்று திறந்து விட்டார்.  அந்த நிலப்பரப்பில் திடீரென பனி பெய்கிறது.. அட்லீஸ்ட் பனி பெய்யப்போகிறது என்றொரு வார்ங்க் கூட கொடுக்கவில்லை. இறுதியில் போர் நடக்கும் இடமே அது வரை வரவில்லை. ஏற்கனவே கண்பித்த இடத்தில் மட்டுமே போர் நடக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தானும் குழம்பி என்னையும் குழப்பியிருக்கிறார் ராஜமெளலி.

ஒரு புரட்சிக்காரியைச் சந்திக்கிறார் ஹீரோ. அப்படியே Game of thrones ஜான் ஸ்நோ யிக்ரிட்டை கோட்டைக்கு வெளியே சந்திக்கும் காட்சிகள் ஓடுகிறது. Game of Thrones என்றதுமே துவண்டு போயிருந்த நான் குஷியாகி எழுந்து உட்கார்ந்தேன். ”அப்பாடா அப்ப ஜான் ஸ்நோ, யிக்ரிட்டுக்கு இடையே நடக்கும் ஜலபுல ஜங்ஸும் வரும்” என மனதிற்குள் எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். தமன்னாவின் உடைகள் வேறு யிக்ரிட் மாதிரியே இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. ஆனால் நடந்தது என்ன? நான் நம்பியிருந்த ஒரு காட்சியும் என்னைக் கைவிட்டது.

அப்புறம் ஹீரோ அந்த நாட்டுக்கு மாறு வேடத்தில் செல்கிறார். அங்கிருக்கும் சுதந்திர தேவி போன்ற சிலையை அலேக்காகத் தூக்குகிறார். ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். கட்டப்பாவுடன் சண்டை போடுகிறார். சண்டையில் மண்டையில் கால் வைத்துக்கொள்கிறார். அப்போது வரும் காட்சிகள், இசை அனைத்துமே விட்டலாச்சாரியா காலத்தில் உள்ளவை. காட்சிகளுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அனிரூத்தையோ, ஹிப் ஹாப் தமிழாவையோ விட்டு லேட்டஸ்ட் ட்ரெண்டில் ஒரு ராப்பை பின்னனியில் போட்டு விட்டிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.

இந்த இடத்தில் அமரேந்திர பாகுபலி யார் என்பதை கிட்டப்பா.. ச்ச கட்டப்பா (எப்புடி என் காமெடி சென்ஸ்) விளக்குகிறார். ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. அதுவும் பழைய ஃப்ளாஷ்பேக். கதையே ராஜா காலத்தில் நடக்கிறது. ராஜா காலத்துக் கதையில் ஃப்ளாஷ்பேக் என்றால் அதைவிடப் பழைய கதையாகத்தானே இருக்கும்.

இத்துடன் கதையை முடித்துவிட்டால் படம் முடிந்துவிடுமல்லா? அதனால் வேண்டுமென்றே வலிய திணிக்கப்பட்ட போர்காட்சி. ரிட்டர்ன் ஆப் த கிங் படத்திலோ த டூ டவர்ஸ் படத்திலோ படத்தின் இறுதியில் வரும் போர்க் காட்சிகளுக்கு நல்ல பில்ட் அப்புகள் இருக்கும். அதனால் போர் செயற்கையாக இல்லாமல் இயற்கையாக இருக்கும். இது தெலுங்கு படம் என்பதால் மிகவும் செயற்கையாக இருக்கிறது.  அதில் காண்டால்ஃப் மந்திரங்களைச் சொல்லி மலைப்பாதைகளை உடைக்கும் போதோ, அரகோன் பேய்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதோ எதுவுமே செயற்கையாக தெரியாது. ஏனென்றால் படத்தின் ஜானர் அப்படி. ஆனால் இங்கு படத்தின் ஆரம்பத்திலேயே பிரபாஸ் மலையில் தாவுவதைக் காண்பித்து இப்படித்தான் படம் இருக்கப்போகிறது என்பதைக் காண்பித்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் இது தெலுங்குப் படம்.  நான் பீட்சா பர்க்கர் மட்டுமே சாப்பிடுகிறேன். ஹாலிவுட் படங்களை மட்டுமே அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பேன். 

அதுவுமில்லாமல் ஓரிரு வசனங்களிலேயே போரும் துவங்குகிறது. ட்ராய் படத்தில் போர் துவங்குவதற்கு “இவன் பொண்டாட்டிய அவன்  அழைச்சிட்டு பொய்ட்டான். அவன் பொண்டாட்டிய இவன் அழைச்சிட்டு பொய்ட்டான்” என்ற ஒரு வலுவான காரணம் இருக்கும். ஆனால் இங்கு எல்லாருடைய மனைவிகளும் அப்படியே இருக்கின்றனர். ஆனாலும் போர் துவங்குகிறது. என்ன கன்றாவி லாஜிக்கோ.

இவ்வளவு தான் பாகுபலி.

இதுவரை நான் எழுதியதைப்  பார்த்தாலே பாகுபலியின் பிரச்சனைகள், எனக்கு இருக்கும் ப்ரச்சனைகள், சாருவுக்கு இருக்கும் ப்ரச்சனைகள் என அனைத்தும் புரிந்துவிடும். பிரம்மாண்டம் மட்டுமே படத்தை காப்பாற்ற முடியும் என்ற ராஜமெளலியின் எண்ணம் எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாது என்பது இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்டைப் பார்த்தாலே தெரியும். மூன்று நாட்களில் வெறும் 166 கோடியை மட்டுமே கலெக்ட் செய்திருக்கிறது. போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத CG. தெலுங்குப் படங்களின் தரத்திற்கு இவை பரவாயில்லை. உத்தம வில்லன் படத்தில் படம் முழுவதுமே கமலை CG யில் தான் காண்பித்தார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அது எவ்வளவு தத்ரூபமாக இருந்தது? எனவே தமிழ்ப் படங்களின் செய் நேர்த்திக்கு பாகுபலி அருகில் கூட வராது.

ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும்? அது இடம்பெறும் காட்சிகள் எவ்வளவு தரமாக இருக்கவேண்டும்? ஒட்டுமொத்தமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் மனதுக்கு நெருக்கமாக எப்படி சொல்ல வரும் கதையை மாற்றுவது? Syd field இன் Screenplay யை படித்திருந்தாலே இதெல்லாம் தெரிந்துவிடும். ஆனால் ராஜமெளலி என்னும் மடையர் அந்தப் புத்தகைத்தையெல்லாம் கண்ணெடுத்தும் பார்த்திருக்க மாட்டார் போல. அட்லீஸ்ட் அதன் தமிழ் வெர்ஷனையாவது வாங்கி ஒரு முறை வாசித்திருக்கலாம்.

எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள் காட்சிகளைத் தவிற ஆங்கிலப்படங்களைப் போல ஒரு பெட்ரூம் சீனோ, அல்லது நல்ல ஒரு லிப் லாக் சீனோ வைக்க மாட்டார்கள் என்பதற்கு பாகுபலி ஒரு உதாரணம்.

போர்க்காட்சிகளின் போது கடுப்பாகி “நம்மாட்களுக்கு ஒரு புதிய மொழியை உருவாக்குவது அத்தனை எளிது என்ற எண்ணம்.  டால்கீன் உருவாக்கிய எல்விஷ் மொழியைப் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள சிக்கலான வார்த்தைகள் பற்றியும், அதற்கு எத்தனை காலம் ஆனது என்பது பற்றியும் இவர்கள் கொஞ்சமாவது படிக்கவேண்டும்” என்றேன் அருகிலிருந்தவரிடம். ”நாங்க ஏண்டா நடுராத்தி பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குப் போறோம்” என்றார் அவர். தா.. நா அதெல்லாம் படிச்சேன்ல.. இவனுங்க ஏண்டா படிக்க மாட்டேங்குறாங்க.. இல்லை அதைப் படிச்ச என்னிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல” என்று புலம்ப ஆரம்பித்ததும் அவர் கீழே குனிந்து செருப்பைப் பார்க்க நான் மறுபடியும் விமர்சன மோடுக்குத் திரும்பினேன். புதிதாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ‘தக்கிரி பிக்கிரி’ என்று வார்த்தைகளைப் போட்டு உருவாக்கலாம். ஆனால் அவர்கள் பேசியது என்னவென்று என்னைத் தவிற ஆடியன்ஸ் யாருக்குமே புரியவில்லை என்பது ராஜமெளலி அறிய வாய்ப்பில்லை.  ஆனால் அவைகளைப் படத்தில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாவிட்டால் பாஹுபலியில் வரும் மொழி போலத்தான் ஆகும்.  

மொத்தத்தில் பாகுபலி என்பது ஒரு அக்மார்க் தெலுங்குப் படம் என்ற யாருக்கும் தெரியாத உண்மையை இந்த மிக நீண்ட விமர்சனத்தின் முடிவாக அறிவிக்கிறேன். தமிழ் சினிமா பாகுபலியையெல்லாம் தாண்டி இன்று நேற்று நாளை என வேற லெவலில் சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ராஜா காலங்களில் நடைபெற்ற ஒரு பழைய கதையை இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் கொடுத்த ராஜமெளலியை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனை கோடியையும் இத்தனை வருடத்தையும் ராஜமெளலி வேஸ்ட் செய்து ஒன்றுக்கும் ப்ரோயஜனம் இல்லாத ஒரு மொக்கை படத்தை கொடுத்திருக்கிறார் என்பதே என் கருத்து.



1.   இந்தக் கட்டுரை நாலு பேராவது என்னைத் திட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் எழுதப்பட்டது. மற்றபடி ராஜமெளலிக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகறாரும் இல்லை. ஏனென்றால் என்னிடம் வாய்க்காலே இல்லை.

2.    இந்தப் படத்தில் வரும் கால கேயர்களுக்கும், டோத்ராக்கிகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தப் படத்தில் வரும் அந்த சீனுக்கும், இந்தப் படத்தில் வரும் இந்த சீனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுக்கும் இதுக்குமே ஒரு தொடர்பு இருக்கிறது. எங்க பக்கத்து வீட்டு அன்கிளுக்கும் ஆண்டிக்கும் இடையே கூட ஒரு தொடர்பு இருக்கிறது.

3.  Tale என்பதற்கு ஸ்பெல்லிங்க் கூடத் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஸ்பெல்லிங் தெரிந்தவர்களிடம் மாட்டினால் சினிமா முழிக்காது. லார்ட் ஆப் த ரிங்க்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்றவற்றைப் பார்த்தாலே Tale என்பதற்கு ஸ்பெல்லிங் தெரிந்து விடும். நானும் அதைப் பார்த்துத்தான் ஸ்பெல்லிங் கற்றுக் கொண்டேன். அப்படி லார்ட் ஆப்த ரிங்க்ஸ் பார்க்க முடியவில்லையென்றால் லார்டு ஆப் த ரிங்க்ஸைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி நான் எழுதிய ”லார்டு லபக்கு தாஸ்” என்ற மின் புத்தகத்தையாவது தரவிறக்கி படித்து ஸ்பெல்லிங் கற்றுக்கொள்ளுங்கள்.

படம் முடிந்த உடன் படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்த ஒருவனிடம் “You should come to BOFTA” என்றேன். அவன் கொஞ்சமும் யோசிக்காமல் ரைமிங்காக “அடிங்…….” எனக் கூற திரும்பிப் பார்க்காமல் வீடுவந்து சேர்ந்தேன்.




Saturday, 9 August 2014

சாப்பாட்டுக் கடை - "மொத்து" மெஸ்!!!



ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடையில் அடி வாங்கி. வழக்கமாய் காலை உணவு உண்ணும்போது  மட்டுமே வீட்டில் பூரிக் கட்டையால் அடி விழும். மதியம் அலுவலகத்தில் எவனிடமாவது உரண்டை இழுப்பதைப் பொறுத்தும் , இரவில் வீட்டிற்கு சரக்கை போட்டுவிட்டு லேட்டாக வருவதைப் பொறுத்தும் பூரிக்கட்டை, தோசைக்கரண்டி, ஈய்ய குண்டான் என விதவிதமான இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் அடி விழும்.  அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை அடி விழுவதை தவிர்ப்பதற்காக குடும்பத்துடன்  இருப்பதில்லை. சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், நான் என் வீட்டுக்கு பக்கத்திலுருக்கும் மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் போலவோ அல்லது பெண் வீட்டுக்காரர்  போலவோ சென்று சாப்பிட்டு சில சமயம் வசமாக மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அப்படி ஒரு  நாள் வீட்டில் எல்லோரும் வெளியே சென்ற போது , மதிய சாப்பாட்டிற்கு யாரை உசார் செய்யலாம் என்று  நினைத்துக் கொண்டே தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ்.

சைதாப்பேட்டை காவாயை தாண்டி, அந்த  தெரு முக்கில் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. நான் சிறு வயதில் குழந்தை  நட்சத்திரமாக அங்கு நிறைய முறை கூட்டத்தோடு கூட்டமாக சென்று சாப்பிட்டுவிட்டு நைஸாக சந்தில் பூந்து  எஸ்கேப்பாகி வந்திருக்கிறேன். கால மாற்றத்தில் சிக்கென்று சிறுத்தை குட்டியாக இருந்த உடம்பு, கருத்து  பெருத்த குட்டியாகிவிட்டதால், சந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் அவ்வளவு சுலபமாக பூந்து எஸ்கேப்  ஆக முடிவதில்லை. அப்படியே எஸ்கேப் ஆனாலும் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் என்னால்  ஓடவும் முடிவதில்லை. நூறு மீட்டர் தாண்டுவதற்குள் விரட்டிப் பிடித்து விடுகிறார்கள். இப்படி மதிய உணவை  பாதிக்கும் இத்தகைய காரணிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது மண்டபத்திற்கு அருகிலுள்ள மொத்து மெஸ்.


யாராவது சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஏமாற்றும் பட்சத்தில் மெஸ்ஸில் இருக்கும் அனைவரும் ஒன்றாய்  கூடி நன்றாக மொத்து மொத்து என மொத்தி அனுப்புவார்களாம். அதனாலேயே முத்து மெஸ் என்ற பெயர்  மாறி காலப் போக்கில் மொத்து மெஸ் என்றானது. நாம் வாங்காத அடியா. வழக்கம் போல நாம  போய்த்தான் பார்ப்போமே என்று அன்றைய காலையை ஆரம்பித்தேன். ஓப்பன் கிச்சன். உள்ளே விசாலமான  இடம். சின்னச் சின்ன டேபிள்களோடு சுத்தமாய் இருந்தது. இட்லி வடை, ஆர்டர் செய்தேன். இட்லிக்கு  ரெண்டு சட்னி, சாம்பார் என சைட் டிஷ். "வடகறி" கேட்டேன் காலியாகிவிட்டது என்றார்கள். வடகறி  இல்லையென்றால் என்ன? "சுப்ரமணியபுரம்" இருந்தால் கொடுங்கள் என்று என் சினிமா அறிவை வைத்து ஒரு  மொக்கை காமெடி செய்தேன். கல்லாவிலிருந்தவர் கடுப்பாகி போன வாரம் போட்ட மசால் வடையை என்  மண்டையை குறி வைத்து எறிய, வலது புற நெற்றியில் பட்டு மசால் வடை சைஸுக்கு புடைத்துவிட்டது.

இட்லி மிக மிருதுவாக  இருந்தது. வடை சைசில் சின்னதாய் இருந்தாலும் கிரிஸ்பி. அடுத்ததாய் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த  போது அந்தக் குரல் கேட்டது "டேய் நாயே உன் தட்டுல சாப்புடுறதா நெனைச்சி என் தட்டுல இருந்த  வடையையும் இட்லியையும் திண்ணுட்டடா சனியனே" என்று. லைட்டாக அசடு வழிந்துகொண்டே பக்கத்து  டேபிளுக்கு நகர்ந்தேன்.  உப்பலான பூரியை பக்கத்திலிருந்தவர் ஆர்டர் செய்திருக்க, நானும் பூரியென்றேன்.  கெட்டியான கிழங்காய் இல்லாமல், வெங்காயம் அதிகம் போட்டு கிழங்கோடு, கொஞ்சம் தளர இருக்கும்  கிழங்கு, காந்தல் இல்லாத எண்ணையில் பொரிக்கப்பட்டு  கிழங்கோடு சாப்பிடும்போது........ "உவ்வே" என்று  பக்கத்திலுருப்பவர் வாந்தி எடுத்துவிட்டு "த்தா... சாப்படாடா இது இத மனுசன் சாப்புடுவானா" என  கூறிவிட்டு கோபமாக எழுந்து சென்றார். ஆனால் நான் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அந்த  பூரியையும் கிழங்கையும் ரசித்து விமுங்கிக் கொண்டிருந்தேன். டிவைன்


மற்றொரு நாள் இரவு தோசையும், தோசை மாவு புளிக்காமல், நல்ல நைஸாக போட்டுக் கொடுத்தார்கள்.  அதை சாப்பிட்டுவிட்டு நைஸாக எஸ்கேப் ஆகப் பார்க்கும்போது சப்ளையர் பிடித்து விட்டான். வேறு  வழியில்லாமல் கொஞ்ச நேரம் மறுநாள் தோசைக்கு மாவாட்டிக் கொடுத்துவிட்டு வந்தேன்.  சப்பாத்தி, சென்னா சாப்பிட்டேன். சப்பாத்தி கொஞ்சம் ட்ரையாக இருந்தது. "ஏன் சப்பாத்தி ட்ரையா இருக்கு? ட்ரை வாஷ் பண்ணீங்களா?" என மாஸ்டரிடம் ஒரு காமெடியை அவிழ்த்து விட்டேன். பரோட்டா திருப்பிப் போட வைத்திருந்த சூடான கரண்டியை என் மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டார்.  மற்ற கடைகளில் மதியம் லஞ்ச் தான் இருக்கும் ஆனால் இங்கு மதிய நேரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஒரு நாள் ட்ரை செய்து பார்க்க வேண்டும். மிக முக்கியமான விஷயம். நல்ல விசாலமான இடம். காசு கொடுப்பவர்களுக்கு ஒரு பகுதி, காசு கொடுக்காமல் சாப்பிடுபவர்களை பிளந்து எடுக்க இன்னொரு தனிப் பகுதி என தர வாரியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். எவ்வளவு அடி விழுந்தாலும் வெளியில் தெரியாது. நாம் எப்பவும் போல டீசண்டாகவே திரியலாம். 

Wednesday, 6 August 2014

ஜிகிர்தண்டா- A review by யாரு நிவேதிதா!!!

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தாகமாக இருந்ததால் படக்கென்று குடித்துவிட்டென். இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. வாலிப வயதில் சகிலா படங்களுக்கு சென்றது. அதன் பிறகு அவ்வளவாக செல்வதில்லை.  எழுத நேரம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்  எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட பகுதி தவிற வெள்ளையாக இருந்த அனைத்து இடத்திலும் எழுதி வைத்து விட்டேன். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மண்டையில் நருக்கென்று கொட்டி விட்டு பேப்பரை வாங்கிச் சென்று விட்டார். தமிள் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும். எழுத்துக்கூட்டி படிக்க கொஞ்சம் நேரம் ஆகுமல்லவா?  ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்குள் முடித்து விடுவேன். ஏனென்றால்   ஆங்கிலக் கட்டுரைகளில் படத்தை மட்டும் பார்த்து விட்டு ஸ்கிப் செய்துவிடுவேன்

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? அங்கயவது எதாவது வேலை இருக்குமா என பார்ப்பதற்காகவே செல்கிறேன், அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி ஒருசில வார்த்தைகள்.  அந்தப் படம் பற்றி விரிவாக இன்னுமொரு ஆங்கிலப் பத்திரிக்கை கையில் கிடைக்கும் போது  மேற்கூறியது போல் எழுத இருக்கிறேன்.  என்ன விஷயம் என்றால், www.nandhimazhai.com இணைய இதழில் ஆகஸ்ட் 15 முதல் கேள்வி பதில் பகுதி தொடங்க உள்ளது.  வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் அளிக்கிறேன். த்தா, ங்கொம்மா என்று ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: q2yaaru@nndhimazhai.com


மற்றபடி ஜிகிர்தண்டா தமிழில் நான் பார்த்த மிகச் சிறந்த  இரண்டு படங்களில் மூன்றாவதாக வருகிறது.  முதல் ஆரண்ய காண்டம், இரண்டவது கோஹினூர் காண்டம்.  ஆனால் ஆரண்ய காண்டம் என்னைப்போன்ற மங்கினிகளுக்கான படமாக ஆகி விட்டது.  மக்கள் ரசிக்கவில்லை.  ஜிகிர்தண்டா  எல்லோரையும் வசீகரித்து விட்டது.  சினிமா பற்றிய என் கட்டுரைகள் ஒன்றை கூட படித்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால் தான் அவரால் இப்படிப்பட்ட சினிமா எடுக்க முடிந்திருக்கிறது.  ஜென் நவீனத்துவ சினிமா என்றால் இதுதான்.  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.  விரிவாக தினகரன்  பேப்பர் வந்ததும் அதில் எழுதுவேன்.  நண்பர்கள் தவற விடாமல் இந்தப் படத்தைப் பார்த்து விடும் படி  சிபாரிசு செய்கிறேன்.  நாயகன் வந்த போது மணி ரத்னம் ஒரு மகத்தான இயக்குனராக இந்திய அளவில்  தெரிய வந்தார்.  அதற்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்டாக கார்த்திக் சுப்புராஜ் தான் என்று மேஜர் சுந்தர்ராஜன்  சொன்னார்.  படம் பார்த்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் மேஜர் சுந்தர்ராஜனும் நானும் ஒரே செட்டு.

கேள்விகளை அனுப்புங்கள்.  கேள்வி பதில் தொடரின் தலைப்பு: அடி உதை கம்பம்.  முதல் கேள்வியே  அதகளமாக இருக்கிறது.  நந்திமழையில் விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் நாக்கை பிடிங்கிக் கொள்ளும் படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நம்ப முடியவில்லை.   மற்றவை நந்திமழையில்..



Comments are closed
Working time 9am - 7pm
Sunday holiday